+1 Public Exam March 2019 Important Creative Questions and Answers

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 170
    64 x 2 = 128
  1. தரையில் ஒரு புள்ளியிலிருந்து ஓர் மரத்தின் உச்சியானது 60˚ ஏற்றக் கோணத்தில் தோன்றுகிறது. மரத்திற்கும் அப்புள்ளிக்கும் இடைப்பட்ட தூரம் 50 m எனில் மரத்தின் உயரத்தைக் காண்க.

  2. ஒரு கோளின் மீது ரேடார் துடிப்பினை செலுத்தி 7 நிமிடங்களுக்குப் பின் அதன் எதிரொளிக்கப்பட்ட துடிப்பு பெறப்படுகிறது. கோளுக்கும் பூமிக்கும் இடையேயான தொலைவு 6.3 × 1010m எனில் ரேடார் துடிப்பின் திசைவேகத்தைக் கணக்கிடுக.

  3. ஒரு செவ்வகத்தின் நீளம் மற்றும் அகலம் முறையே (5.7 ± 0.1) cm மற்றும் (3.4 ± 0.2) cm எனில் செவ்வகத்தின் பரப்பை பிழை எல்லையுடன் கணக்கிடுக.

  4. கீழ்க்கண்ட எண்களை குறிப்பிட்ட இலக்கத்திற்கு முழுமைப்படுத்துக.
    248337 ஐ 3 இலக்கம் வரை

  5. விண்மீன்களின் தொலைவை km இல் அளவிடாமல் ஒளியாண்டு அல்லது பர்செக் அலகில் குறிப்பிடுவது சிறந்தது, ஏன்?

  6. அலகு என்றால் என்ன?

  7. ஒரு பரிமாண இயக்கம் என்றால் என்ன?எ.கா தருக.

  8. அளவீடு செய்தலில் பிழைகளின் வகைகள் யாவை?

  9. ஒளிச் செறிவிற்கான S.I அலகு யாது? வரையறு?

  10. அழுத்தத்தின் வழி நிலை அலகினைக் குறிப்பிடுக:

  11. கொடுக்கப்பட்ட \(\overrightarrow{A}=2\hat{i}+4\hat{j}+5\hat{k}\) மற்றும் \(\overrightarrow{B}=\hat{i}+3\hat{j}+6\hat{k}\) வெக்டர்களின் ஸ்கேலர் பெருக்கல் \(\overrightarrow{A},\overrightarrow{B}\) மற்றும் \(\overrightarrow{A},\overrightarrow{B}\) இன்  எண்மதிப்புகளையும் காண்க. மேலும் கொடுக்கப்பட்ட இவ்விரண்டு வெக்டர்களுக்கு இடைப்பட்ட கோணத்தின் மதிப்பு என்ன?

  12. பொருளொன்றை செங்குத்தாக கீழ் நோக்கி எறியும்போது அது எவ்வகையான முடுக்கத்தினைப் பெறும்?

  13. எரிபொருளொன்று 30o எரிகோணத்தில் எறியப்படுகிறது. அதன் ஆரம்பத்திசை வேகம் 5 ms-1 எனில் ஏறிபொருள் அடைந்த பெரும உயரம் மற்றும் கிடைத்தள நெடுக்கத்தைக் கணக்கிடுக.

  14. இரண்டு வெக்டர்களின் ஸ்கேலர் பெருக்கல் பற்றி சிறுகுறிப்பு வரைக.

  15. சீரான முடுக்கம் என்றால் என்ன?

  16. எறிபொருளின் திசைவேகங்கள் யாது?

  17. கடந்த தொலைவு இடப் பெயர்ச்சி வேறுபடுத்துக.

  18. பனிக்கட்டி மீது நடக்கும் போது நெருக்கமாக அடி எடுத்து வைக்க வேண்டும் ஏன்?

  19. பொருள் மீது செயல்படும் விசையின் திசையைக் கொண்டு இயக்கத்திசையைக் கூற முடியுமா?

  20. படத்தில் காட்டப்பட்டுள்ள கவணிற்கு (கல்லெறி கருவி) லாமி தேற்றத்தை பயன்படுத்தி இழு கயிற்றின் இழுவிசையைக் காண்க?

  21. தனித்த பொருளின் விசைப்படம் என்பது பற்றி குறிப்பு வரைக. 

  22. நியூட்டனின் இரண்டாம் விதி எதைச் சார்ந்தது?

  23. 10 kg, 7 kg மற்றும் 2 kg நிறையுள்ள மூன்று கனச்செவ்வகப் பொருட்கள் ஒன்றை ஒன்றுத் தொடுமாறு உராய்வற்ற மேசை மீது வைக்கப்பட்டுள்ளன. 50 N விசையானது, கொடுக்கப்பட்ட நிறைகளில் கனமான நிறை மீது செயல் படுத்தப்படுகிறது எனில், அமைப்பின் முடுக்கத்தைக் கணக்கிடுக. 

  24. கயிற்றுடன் கட்டப்பட்ட ஒரு வாளியில் உள்ள நீர் 0.5 m ஆரமுள்ள செங்குத்து வட்டத்தை சுற்றி சுழற்றப்படுகிறது. இயக்கத்தின்போது நீரானது வாளியில் இருந்து சிந்தாமல் இருக்க அடிப்புள்ளியில் இருக்கவேண்டிய சிறும திசைவேகத்தைக் கணக்கிடுக. (g = 10 m s-2)

  25. இயற்பியலில் வேலையின் வரையறையானது பொதுக்கருத்திலிருந்து எவ்வாறு  மாறுபடுகிறது என்பதை  விளக்குக.

  26. 20 kg நிறை கொண்ட ஒரு துப்பாக்கி குண்டு  5 kg நிறையுள்ள ஊசல் குண்டில் மோதுகிறது  ஊசலின் நீரையின் மையம் 10 cm செங்குத்துத் தொலைவு உயருகிறது.துப்பாக்கி குண்டு ஊசலில் பொதிந்துவிட்டால் அதன் தொடக்க வேகத்தைக் கணக்கிடுக

  27. சராசரித் திறன் வரையறு.

  28. ஆற்றலின் முக்கியமான அம்சம் யாது? [அ] ஆற்றல் மாறா விதி: வரையறு.

  29. படத்தில் காட்டியுள்ளவாறு 70 g நிறையுள்ள ஒரு பொருள் 50cms-1 வேகத்தில் நகரும் போது மாறுபட்ட விசைக்கு உட்படுகிறது. விசை செயல்படுவது நிறுத்தப்பட்டவுடன் பொருளின் வேகம் என்ன?

  30. மரம் வெட்டப்படும் போது, மரமானது வெட்டி வீழ்த்த வேண்டிய திசையின் பக்கமே வெட்டப்பட வேண்டியது ஏன்?

  31. தீக்குச்சி ஒன்றை விரல் நுனியில் சமன் செய்வதைவிட மீட்டர் அளவுகோள் ஒன்றை அதே போல் சமன் செய்வது எளிமையாக இருப்பது ஏன்?

  32. கீழ்கண்ட கூற்று தவறு எனக் காட்ட ஓர் உதாரணம் தருக "ஏதேனும் இரு விசைகள் ஒன்றிணைந்து ஒரே தொகுபயன் விசையாக ஒரு பொருளின் மீது செயல்படும் போது, விசை ஒரே விளைவைக் கொடுக்கும்".

  33. ஈர்ப்பின் மையம் என்றால் என்ன?

  34. சூழல் காற்றின் வேகம் அதிகமாக இருப்பது ஏன்?

  35. வலக்கை விதியின் மூலம் திருப்பு விசையை வரையறு.

  36. கெப்ளரின் விதிகளைக் கூறு.

  37. ஈர்ப்பு புலத்தின் மேற்பபொருந்துதல் என்றால் என்ன?

  38. செயற்கை துணைக்கோளின் ஆற்றல் அல்லது எந்த ஒரு கோளின் ஆற்றல் எதிர்குறியுடையதாக இருப்பது ஏன்?

  39. புவியானத்து தன்னைத்தானே சுற்றி வருகிறது என்பதை எவ்வாறு நிரூபிப்பாய்?

  40. நியூட்டன் ஈர்ப்பியல் கொள்கையின் முக்கியத்துவம் யாது?

  41. கெப்ளரின் விதிகள் செயற்கைத் துணைக் கோள்களுக்குப் பொருந்துமா? ஏன்?

  42. மீட்சி எல்லைக்குள் தகைவினால் A,B மற்றும் C என்ற கம்பிகளில் உருவான நீட்சித்திரிபுகள் படத்தில் காட்டப்பட்டுள்ளது. சமமான பளு செலுத்தப்பட்டதாகக் கொண்டு கம்பிப் பொருள்களின் மீட்சிப் பண்புகளை விவாதிக்கவும். மீட்சிக் குணகங்களை ஏறுவரிசையில் எழுதுக. 

  43. பாய்ஸன் விகிதத்தை வரையறு.

  44. நீட்டப்பட்ட கம்பியின் மீட்சி நிலை ஆற்றலுக்கான கோவையை எழுதுக.

  45. முற்றுத்திசைவேகம் - வரையறு.

  46. பாய்மத்தின் அடர்த்தி வரையறு.  

  47. ஒரு மோல் வரையறு.

  48. உள்ளுறை வெப்பம் வரையறு. அதன் அலகைத் தருக.

  49. நிலை மாறிகள் என்றால் என்ன? எடுத்துக்காட்டுகள் தருக.

  50. அளவுச்சார்பற்ற மாறிகள் மற்றும் அளவுச்சார்புள்ள மாறிகள் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

  51. மோலார் தன்வெப்ப ஏற்புத்திறன் அடிப்படையில் அக ஆற்றல் மாறுபாட்டை தருக.

  52. வெப்ப இயந்திரம் வரையறு.

  53. உள்ளுறை வெப்பத்தின் மூன்று வகைகள் யாவை? அவை யாவை?

  54. அழுத்தத்தின் நுட்பமான தோற்றம் பற்றி விளக்குக?

  55. சராசரி மோதலிடைந்தூரத்திற்கான கோவையை எழுதி அதனை வரையறு.

  56. இயக்கவியற்கொள்கை என்பது யாது?இது ஏன் பயன்படுத்தப்படுகிறது

  57. சீரலைவு மற்றும் சீரற்ற அலைவு இயக்கம் என்றால் என்ன? இரு உதாரணங்கள் தருக

  58. ஆரம்ப கட்டம் (epoch) என்றால் என்ன?

  59. திணிப்பு அதிர்வுகளை வரையறு. எடுத்துக்காட்டு தருக

  60. தனிச் சீரிசை இயக்கத்தில் திசைவேகம் என்பது யாது?

  61. வெவ்வேறு மதிப்புகளுக்கு y = x - a என்ற கோட்டினை வரைக.

  62. குறுக்கலை என்றால் என்ன? ஓர் எடுத்துக்காட்டு தருக.

  63. அலைகளின் குறுக்கீட்டு விளைவு என்றால் என்ன?

  64. அன்றாட வாழ்வில் அலைகளின் பயன்பாடுகளை கூறுக?

  65. 14 x 3 = 42
  66. இயற்பியல் அளவுகளின் வகைகளை விவரி:

  67. முக்கிய எண்ணுருக்கள் -வரையறு.

  68. தொழில் நுட்பவியல் என்பது யாது? இயற்பியலும், தொழில் நுட்பவியலும் இணைந்து எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன?

  69. இயற்பியலின் பிரிவுகள் எத்தனை வகைப்படும் அவை யாவை?

  70. ஒரு கொள்கலனில் உள்ள திரவத்தின் ஆரம்ப மற்றும் இறுதி வெப்பநிலைகள் முறையே 75.4 \(\pm \) 0.5°C மற்றும் 56.8 \(\pm \) 0.2°C எனில் திரவத்தின் வெப்பநிலைத் தாழ்வைக் கணக்கிடுக.

  71. இடப்பெயர்ச்சி மற்றும் கடந்தத் தொலைவை வரையறு.

  72. போலி விசை என்றால் என்ன?

  73. திருப்பு விசையை உருவாக்காத விசைகளுக்கான நிபந்தனை யாது?

  74. இரட்டையின் திருப்புத்திறனை வரையறு.

  75. சீரான நிறை அடர்த்தி கொண்ட திண்மத்தண்டின் நிலைமத் திருப்புத்திறனை அதற்கு செங்குத்தாகவும் ஏதேனும் ஒரு முனையின் வழியே செல்லும் அச்சைப்பொருத்து காண்க.

  76. ஒரு சோப்புக்குழியின் படலத்தின் பரப்பை 50cm2 லிருந்து 100cm2 க்கு அதிகரிக்க செய்யப்பட்ட வேலை 2.4×10−4 J எனில் சோப்புக் கரைசலின் பரப்பு இழுவிசையைக் கணக்கிடுக.

  77. வாயுக்களின் இயக்கவியற் கொள்கைக்கான எடுகோள்கள் யாவை?

  78. வாயுக்களின் சராசரி மோதலிடைந்ததூரத்திற்கான கோவையை வருவி.

  79. ஒரு தனி ஊசலின் நீளம் அதன் தொடக்க நீளத்திலிருந்து 44% அதிகரிக்கிறது எனில் தனிஊசலின் அலைவுநேரம் அதிகரிக்கும் சதவீதத்தை கணக்கிடுக.

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 இயற்பியல் முக்கிய கூடுதல் வினாக்கள் மற்றும் விடைகள் ( 11th Standard Physics Public Exam March 2019 Important Creative Questions and Answers )

Write your Comment