All Chapter 3 Marks

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 156
    Answer All The Following Question:
    52 x 3 = 156
  1. கணக்கியலின் பிரிவுகளை சுருக்கமாக கூறுக.

  2. நவீன வணிக உலகில் கணக்காளரின் பங்களிப்பு பற்றி விளக்குக.

  3. கணக்கியலின் பணிகளை விளக்குக.

  4. கீழ்க்காணும் குறுங்கட்டுரையைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும். கணக்கியல் வணிகத்தின் மொழியாகும். ஒரு மொழியின் முக்கியமான பணி. அது தகவல் தொடர்புக்கு உதவுவதாக இருக்க வேண்டும் கணக்கேடுகளில் பதிவு செய்யப்பட்ட நிதித் தகவல்களிலிருந்து, வணிக நிறுவனங்களின் செயல்பாட்டுத் திறன் மற்றும் நிதிநிலைப் பற்றிய தகவல்களைப் பெறலாம். பயனீட்டாளர்களுக்கு இத்தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
    (i) கணக்கியல் தகவல்களை பயன்படுத்தும் ஏதேனும் இரண்டு புறபயனீட்டாளர்கள் யாவர்?
    (ii) கணக்கியல் தகவல்களை பயன்படுத்தும் ஏதேனும் இரண்டு அகப்பயனீட்டாளர்கள் யாவர்?
    (iii) ஏன் அவர்களுக்கு அந்த கணக்கியல் தகவல்கள் தேவைப்படுகிறது?

  5. ‘ஒரு வணிக நிறுவனம் தொடர்ச்சியாக நடைபெற வேண்டும்’ – இந்த வாக்கியத்தை அடிப்படையாகக் கொண்ட கணக்கியல் கருத்தை விளக்குக.

  6. கணக்கியல் தரநிலைகள் குறித்து சிறு குறிப்பு வரைக.

  7. அடக்கவிலை கருத்து குறித்து விளக்குக.

  8. அடக்கவிலைக் கருத்துகளின் குறைபாடுகள் யாவை?

  9. பின்வருவனவற்றை ஆள்சார் கணக்கு, சொத்து கணக்கு மற்றும் பெயரளவு கணக்கு என்று வகைப்படுத்துக
    (அ) முதல்
    (ஆ) கட்டட ம்
    (இ) உள் ஏற்றிச் செல் செலவு
    (ஈ) ரொக்கம்
    (உ) தள்ளுபடிப் பெற்றது
    (ஊ) வங்கி
    (எ) கொள்முதல்
    (ஏ) சந்துரு
    (ஐ) கொடுபட வேண் டிய கூலி.

  10. கணக்கியல் சமன்பாட்டினை நிரப்புக

     (அ)   சொத்துகள்    =    முதல்    +    பொறுப்புகள் 
       ரூ 1,00,000   =  ரூ 80,000 + ?
     (ஆ)  சொத்துகள்  = முதல்  + பொறுப்புகள் 
      ரூ 2,00,000 = ? + ரூ 40,000
    (இ) சொத்துகள்  = முதல்  + பொறுப்புகள் 
      ? = ரூ 1,60,000 + ரூ 80,000
  11. குறிப்பேட்டின் நன்மைகள் யாவை?

  12. தேவை எனக் கருதும் இடத்தில் சரியானப் பதிவைத் தருக:

    (i) தொழில் முதல் இட்டது:  
      முதல் க/கு [கணக்கு]
        ரொக்க க/கு  
    (ii) ரொக்க கொள்முதல்:  
      ரொக்க க/கு
        விற்பனை க/கு  
    (iii) எழுத்துருக்கு ஊதியம் வழங்கியது:  
      ஊதியம் க/கு
        ரொக்க க/கு  
    (iv) கழிவு பெற்றது:  
      கழிவு க/கு
        ரொக்க க/கு  
  13. நடவடிக்கைகள் குறிப்பேட்டிலிருந்து பேரேட்டிற்கு எவ்வாறு எடுத்தெழுதப்படுகின்றது?

  14. பேரேட்டுக் கணக்கின் இருப்புகட்டுதலின் வழிமுறையை விளக்குக.

  15. முரளி என்பவரது ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட இருப்புகளிலிருந்து 31.3.2017 அன்றைய இருப்பாய்வினை தயாரிக்கவும்

    விவரம் ரூ விவரம் ரூ
    விற்பனை 35,000 தணிக்கைக் கட்டணம் 1,000
    வட்டி செலுத்தியது 350 நகர நுழைவு வரி 8,000
    உள் திருப்பம் 2,500 நிலம் 90,000
    தேய்மானம் 2,400 முதல் 60,000
    அலுவலக வாடகை 2,000 வங்கி மேல்வரைப்பற்று 11,250
  16. இருப்பாய்வு தயாரிப்பதின் நோக்கங்கள் யாவை?

  17. இருப்பாய்வு தயாரிக்கும் முறைகளை விளக்குக.

  18. அனா மத்துக் கணக்கு என்றால் என்ன? அது எப்பொழுதும் தோற்றுவிக்கப்படுகிறது?

  19. கொள்முதல் ஏட்டின் படிவத்தினை தருக.

  20. சிறு குறிப்பு வரைக
    (அ) மாற்றுச்சீட்டில் மேலெழுதுதல்
    (ஆ) மாற்றுச்சீட்டை தள்ளுபடி செய்தல்

  21. மாற்றுச் சீட்டின் தன்மைகள் யாவை?    

  22. பின்வரும் நடவடிக்கைகளை 2017 கொள்முதல் ஏட்டில் பதிவு செய்யவும்.

    ஜனவரி 1 சுமத்தியிடம் சரக்கு வாங்கியது ரூ. 17,800
    ஜனவரி 8 சரண்யாவிடம் அறைக்கலன் வாங்கியது ரூ.12,200
    ஜனவரி 21 தேவியிடம் கொள்முதல் செய்தது ரூ. 12,200
  23. சில்லறை ரொக்க ஏட்டில் முன் பண மீட்பு முறையின் பொருளை விளக்குக.

  24. எதிர்ப் பதிவை உதாரணத்துடன் விளக்குக.

  25. சில்லறை ரொக்க ஏடு எவ்வாறு இருப்பு கட்டப்படுகிறது?

  26. சில்லறை ரொக்க ஏட்டிலிருந்து எடுத்தெழுதல் பற்றி குறிப்பு வரைக.

  27. வங்கிச் சரிகட்டும் பட்டியல் தயாரிப்பதற்கான மூன்று காரணங்களைத் தருக

  28. கீழ்காணும் விவரங்களிலிருந்து டிசம்பர் 31, 2017-ம் நாளுக்குரிய வங்கிச் சரிக்கட்டும் பட்டியல் தயார் செய்து, வங்கி அறிக்கையின் படியான இருப்பினைக் கண்டறிக

      விவரம்  
    i) ரொக்க ஏட்டின் படி மேல்வரைப்பற்று 10,000
    ii) செலுத்திய காசோலை இன்னும் வரவு வைக்கப்படாதது 5,000
    iii) விடுத்த காசோலை இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படாதது 1,000
    iv) வங்கியால் வாடிக்கையாளரிடமிருந்து நேரடியாகப் பெற்றது 500
    v) வங்கி பற்றுவைத்த மேல்வரைப்பற்று மீதான வட்டி 1,000
    vi) வங்கியால் தவறுதலாக பற்று வைக்கப்பட்ட தொகை  300
  29. பின்வரும் விவரங்களைக் கொண்டு , 31 டிசம்பர் 2016 - க்கான  உதயம் நிறுவனத்தின்  வங்கி செல்லேட்டில்  காணக்கூடிய  இருப்பினைக் காணக்கிடவும்.
    1.31 டிசம்பர்  2016 ரொக்க  ஏட்டின்படி  வங்கிமேல்வரைப்பற்று  ரூ 63,400
    2. 31  டிசம்பரில் முடியும் 6 மாதத்திற்கான மேல்வரைப்பற்று  மீதான வட்டி  ரூ 1,600 செல்லேட்டில்  பதிவு செய்யப்பட்டுள்ளது.
    3. வங்கிக் கட்டணம் ரூ300 செல்லேட்டில் பதியப்பட்டுள்ளது.
    4. ரூ 11,680 மதிப்பு கொண்ட காசோலை  விடுக்கப்பட்டும்  டிசம்பர்  31 வரை பணமாக்கப்பதவில்லை.
    5. ரூ 21,700 மதிப்புள்ள  காசோலைகள்  வங்கியில் செலுத்தப்பட்டு  . இன்னும் வசூலாகவில்லை.
    6. வங்கி வசூலித்த முதலீடுகள்  மீதான வட்டி  ரூ 12,000 வரவு வைக்கப்பட்டுள்ளது.                                               

  30. ரொக்க ஏட்டின் வங்கிப் பத்தி மற்றும் வங்கி அறிக்கையிலுள்ள பதிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. விடுபட்ட தகவல்களை கண்டறிந்து, வங்கி அறிக்கைகளை மீண்டும் எடுத்து எழுதவும்.
     

    ரொக்க ஏடு
    (வங்கிப் பத்தி) 
    நாள் விவரம் ரூ. நாள் விவரம் ரூ.
    2017     2017    
    அக். 1 இருப்பு கீ/கொ 20,525 அக், 8 கமலா க/கு 12,000
    18 ராம் க/கு 6,950 26 மகேஷ் க/கு 9,740
    19 விற்பனை க/கு 450 28 மாலா க/கு 11,780
      (ரவி)   30 சம்பளம் க/கு 720
    20 கழிவு க/கு 200 31 இருப்பு கீ/கு 1,695
      (கலா)        
    20 நிர்மலா க/கு 7,810      
        35,935     35,935
    வங்கி அறிக்கை
    நாள் விவரம் பற்று
    எடுப்புகள்
    ரூ.
    வரவு
    வைப்புகள்
    ரூ.
    இருப்பு
    பற்று/
    வரவு ரூ.
    1.10,17 இருப்பு கீ/கொ     ---
    9.10.17 --------- 12,000   8525 வ
    19.10.17 ராம்   ----- 15475 வ
    25.10.17 ராம்   450 ----
    26.10.17 ----------- 9,740   6185 வ
    27.10.17 கலா   200 ---
    28.10.17 ராஜன் (சம்பளம்) ------   5665 வ
  31. அனாமத்துக் கணக்குப் பற்றிக் குறிப்பு எழுதவும்

  32. கீழ்க்காணும் பிழைகள் கணக்காளரால் இருப்பாய்வு தயாரித்த பின் கண்டறியப்பட்டன. அனாமத்துக் கணக்கு உள்ளது. அவற்றைத் திருத்தம் செய்யவும்.
    (அ) ரொக்க ஏட்டின் பற்றுப் பக்கம் உள்ள தள்ளுபடிப் பத்தியின் கூட்டுத்தொகை ரூ.1,180 இன்னும் பேரேட்டில் எடுத்து எழுதப்படவில்லை.
    (ஆ) அறிவுச் செல்வனிடமிருந்து கடனுக்கு ரூ.600 க்கு சரக்கு வாங்கியது பேரேட்டில் அவரது கணக்கின் பற்றுப் பக்கத்தில் எடுத்து எழுதப்பட்டுள்ளது.
    (இ) ரொக்க ஏட்டின் வரவரவுப் பக்கம் உள்ள தள்ளுபடிப் பத்தியின் கூட்டுத்தொகையில் ரூ.400 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.
    (ஈ) விற்பனைத் திருப்ப ஏட்டின் கூட்டுத்தொகையான ரூ.570 இருமுறை பேரேட்டில் எடுத்து எழுதப்பட்டுள்ளது.
    (உ) முகிலுக்கு ரூ.87-க்கு கடனுக்கு சரக்கு விற்றது பேரேட்டில் அவர் கணக்கில் ரூ.78 என எடுத்து எழுதப்பட்டுள்ளள்ளது.

  33. கணக்கியலின் பல்வேறு நிலைகளில் நிகழும் பிழைகளை எழுதுக.

  34. இருப்பாய்வு தயாரிக்கும் முன் பிழைகளைக் கண்டறிய செய்ய வேண்டியன யாவை? 

  35. தேய்மானம் நீக்க வேண்டியதன் நோக்கங்கள் யாவை?

  36. நேர்க்கோட்டு முறையில் தேய்மான விகிதம் காண்க
    இயந்திரம் வாங்கிய விலை ரூ. 80,000
    முதலாக்கம் செய்ய வேண்டிய செலவுகள் ரூ. 20,000
    எதிர்நோக்கும் இறுதி மதிப்பு ரூ. 4,000
    எதிர்நோக்கும் பயனளிப்பு காலம் : 4 ஆண்டுகள்

  37. தேய்மானத் தொகையை நிர்ணயிக்கும் காரணிகள் யாவை?

  38. நேர்க்கோட்டு முறையில் தேய்மான விகிதம் காண்க.

    இயந்திரத்தின் அடக்கவிலை  ரூ. 2,30,000
    நிறுவுவதற்கான செலவுகள்  ரூ. 20,000
    பயனளிப்புக் காலம்  10 ஆண்டுகள் 
    ஏறி மதிப்பு  ரூ. 50,000
  39. முதலினச் செலவு மற்றும் வருவாயினச் செலவு வேறுபடுத்தவும்.

  40. முதலின வரவு மற்றும் வருவாயின வரவு வேறுபடுத்தவும்.

  41. முதலினா மற்றும் வருவாயினச் செலவுகளைத் தீர்மானிக்கும் கருதுகோள்கள் யாவை?

  42. வருவாயினச் செலவின் இயல்புகள் யாவை?

  43. கீழ்க்காணும் தகவல்களிலிருந்து விற்பனைத் தொகையைக் காணவும்

    விவரம் ரூ
    தொடக்கச் சரக்கிருப்பு 20,000
    நிகர கொள்முதல் 70,000
    நேரடிச் செலவுகள் 10,000
    இறுதிச் சரக்கிருப்பு 30,000
    மொத்த இலாப விகிதம் (விற்பனையில்) 20%
  44. சொத்துகள் மற்றும் பொறுப்புகளை குழுப்படுத்துதல் மற்றும் ஒழுங்குப்படுத்துதல் என்றால் என்ன?

  45. 2. இருப்பு நிலைக் குறிப்பின் இயல்புகள் யாவை?.                                                                     

  46. பொறுப்புகளின் வகைகளை எழுதுக..                                            

  47. இறுதிக் கணக்குகள் தயாரிக்க வேண்டியதன் தேவை யாது?

  48. வாராக்கடன், வாரா ஐயக்கடன் ஒதுக்கு மற்றும் கடனாளிகள் மீது தள்ளுபடி ஒதுக்கு குறித்த கணக்கியல் செயல்பாடுகள் பற்றி விவரி.

  49. 2015 மார்ச் 31 ஆம் நாளைய இருப்பாய்வின்படி சம்பளம் கொடுத்தது ரூ 1,50,000, மார்ச் 2005 க்கான சம்பளம் ரூ4,000 இன்னமும் கொடுபடவில்லை. உரிய சரிக்கட்டுப்பதிவு தந்து இவை இறுதிக் கணக்குகளில் எவ்வாறு இடம் பெறும் எனக் காட்டுக.   

  50. 31.3.2016 அன்றை இருப்பாய்வு ரூ 40,000 காப்பீட்டு முனைமம் செலுத்தியாக காட்டியது முன்கூட்டிச் செலுத்திய காப்பீட்டு முனைமம் ரூ 5,000.
    சரிகட்டுப்பதிவு தந்து இவ்விவரம் இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டுக.    

  51. கீழ்க்கண்ட அட்டவணை உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கீழ்க்காணும் வினாக்களுக்கான விடையை கண்டறியவும்.

      A B C D E F G H I J
    1 550 156     852 584 TAX 573 GST 1234
    2 340 1285 468 584 268 222 CASH BRS STOCK DEBT

    (அ) எண்கள் மட்டுமே கொண்ட அறைகள் எத்தனை?
    (ஆ) ஏதேனும் ஒரு மதிப்பைக் கொண்டிருக்கும் அறைகளின் எண்ணிக்கையை கணக்கிடவும்.
    (இ) 1000 க்கு மேல் மதிப்பு கொண்டுள்ள அறைகளின் எண்ணிக்கையை கணக்கிடவும்.

  52. கீழே கொடுக்கப்பட்டுள்ள தரவுகளிலிருந்து குறைந்தபட்ச வசூலாக ரூ. 500 ஐ ஏதேனும் ஒரு நாளில் எட்டிய விற்பனைப் பிரிைவ கண்டுபிடிக்கவும்.

    Counter Day 1 sales Rs Day 2 sales Rs 
    Ground floor 600 600
    First floor 850 300
    Second floor 350 400

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Accountancy All Chapter Three Marks Important Questions 2020 )

Write your Comment