Loading [MathJax]/extensions/AssistiveMML.js



All Chapter 2 Marks

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 03:30:00 Hrs
Total Marks : 206
    Answer All The Following Question:
    103 x 2 = 206
  1. கோவேறுகழுதை (Mule) ஏன் மலட்டுத்தன்மை உடையதாக உள்ளது? 

  2. பயன்தரும் பாக்டீரியாவை நோயூக்கி பாக்டிரீயாவிலிருந்து வேறுபடுத்துக.     

  3. மெத்தனோஜன்கள் என்பவை எவை?

  4. ஹேலோஃபைல்கள் என்பவை யாவை?

  5. மீன்களில் காணப்படும் காற்றுப் பைகளின் பண்புகளைக் குறிப்பிடுக.

  6. ஊர்வன உயிரிகள் நிலவாழ்க்கை வெற்றிக்கான அவற்றின் பண்புகளின் பங்கீடு யாது?

  7. குருத்தெலும்பு மீன்களில் காணப்படும் செதில்கள் யாவை?

  8. தொகுதி பிளாட்பெல்மின்தஸின் ளார்வாக்களின் பெயரினை எழுதுக.

  9. வெள்ளை அடிப்போஸ் திசுவைப் பழுப்பு அடிப்போஸ் திசுவிலிருந்து வேறுபடுத்து.

  10. இரத்தம் ஏன் தனித்துவமான இணைப்புத்திசு என்றழைக்கப்படுகிறது?

  11. சுரப்பு எபிதீலியம் என்பது யாது?

  12. அடர்வான சீரான இணைப்புத்திசுவின் பயன்கள் யாவை?

  13. மண்புழுக்கள் எவ்வாறு சுவாசிக்கின்றன?

  14. அலரி தசையின் வேலைகளை விளக்கவும்.

  15. தவளைகள் மாறு வெப்பநிலை விலங்குகள் என அழைக்கப்பட காரணம் யாது?

  16. கிளைடெல்லம் என்பது யாது? அதன் வேலை யாது?

  17. சிறுகுடலில் மட்டும் உறிஞ்சிகள் உள்ளன. ஏன் இரைப்பையில் இல்லை?

  18. இரைப்பை உட் சுவரில் காணப்படும் செல்களையும் அதன் சுரப்புகளைக் கூறு.

  19. இரைப்பைப்பாகு என்பது யாது?

  20. தட்டைப் புழு, மண் புழு, மீன், இறால், கரப்பான் பூச்சி மற்றும் பூனை ஆகியவற்றின் சுவாச உறுப்புகளின் பெயர்களைக் கூறு. 

  21. மூச்சுக்குழாயில் காற்று செல்லும் வழியில் எதிர்ப்புத்திறன் மிகவும் குறைவு ஏன்? ஏதேனும் இரண்டு காரணங்களைக் கூறு.

  22. வரையறு: மூச்சுக்காற்று அளவு (Tidal volume - TV).

  23. ஆக்ஸிஜன் சிவப்பணுக்கள் மற்றும் பிளாஸ்மா மூலம் எந்த அளவுகளில் கடத்தப்படுகிறது ? ஏன்? 

  24. மிட்ரல் வால்வு மற்றும் அரைச்சந்திர வால்வுகளை வேறுபடுத்துக.

  25. வலது வென்ட்ரிக்கிள் சுவர், இடதுவென்ட்ரிக்கிள் சுவரை விட மெல்லியது. ஏன்?

  26. நீர் மற்றும் சிறு மூலக்கூறுகளின் இரத்த நுண்நாளச் சுவர்களின் வழியாக திசுத் திரவத்திற்குள் எவ்வாறு செல்கிறது?

  27. இதயத்திலிருந்து வெளியேறும் இரத்த அளவு என்பது யாது?

  28. ஹோமியோமிரஸ் மற்றும் ஹெட்டிரோமிரஸ் லைக்கென்களை வேறுபடுத்து

  29. பயிர் சுழற்சி மற்றும் கலப்புப்பயிர் முறைகளில் உழவர்கள் லெகூம் வகை தாவரங்களைப் பயிரிடுவது ஏன்?

  30. ஸ்ட்ரெப்டோமைசிஸ் எனும் மண்வாழ் ஆக்டினோ பாக்டீரியம் உருவாக்கும் உயிர் எதிர்ப் பொருட்களைக் கூறு.

  31. முழு உடலி பூஞ்சைகள் என்பவை யாவை?

  32. ஆஞ்சியோஸ்பெர்ம்களுக்கும், ஜிம்னோஸ்பெர்ம்களுக்கும் இடையே காணப்படும் பொதுவான இரண்டு பண்புகளை எழுதுக

  33. பிரையோஃபைட்களின் கருவுறுதலுக்கு நீர் அவசியம் என்ற கருத்தை ஏற்கிறாயா? உனது விடையை நியாயப்படுத்துக.

  34. வித்தகத் தாவர சந்ததியில் முதல் செல் எது?

  35. வெளிப்புற ஃபுளோயம் சூழ் சைபனோஸ்டீல் என்பது யாது?

  36. பக்க வேர்கள் ஏன் அகத் தோன்றிகளாக வளர்கின்றன?

  37. ஓர் நடு நரம்பமைவுக்கும் பல நடு நரம்பமைவுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை கூறு.

  38. ஒரு காய்ப்புத் தாவரங்கள் என்பவை யாவை?

  39. ஒளிசார் பரவிலை அமைவு என்றால் என்ன?

  40. பூவடிச்செதிலுடைய , பூக்காம்புச்செதிலற்ற இருபால்மலர் , முழுமையான ஐந்தங்க மலர் , தனித்த புல்லிவட்டம், தனித்த அல்லிவட்டம், மேல்ம ட்டச் சூலகப்பை , கொண்ட மலரின் மலர் சூத்திரத்தினை எழுதுக.

  41. கீழ்கண்டவற்றிற்கு கலைச்சொற்கள் தருக
    அ) ஒரு வளமற்ற மகரந்தத்தாள்
    ஆ) மகரந்தத்தாள்கள் ஒரு கட்டாக இணைந்த மகரந்தத்தாள்கள்
    இ) அல்லி இதழ்களுடன் இணைந்திருத்தல்

  42. கீழ் மட்டச் சூலகப்பை என்பது யாது? எடுத்துக்காட்டு தருக.

  43. கனி என்றால் என்ன?

  44. இருவிதையிலைகளையும் கோப்பை வடிவப் பூத்தளத்தையும் கொண்ட தாவரங்களை  எவ்வாறு வகைப்படுத்துவாய்

  45. தாவரத் தொகுப்பு புத்தகம் என்பது யாது?  

  46. குர்திநீர்ச்சார் வகைப்பாடு அல்லது ஊநீர் வகைப்பாடு என்பது யாது?     

  47. கட்ட வேறுபடுத்தும் நுண்ணோக்கியின் முக்கியத்துவத்தைக் கூறுக.

  48. புரோட்டோபிளாச கோட்பாட்டைக் கூறுக.

  49. லைசோசோம்கள் எதிலிருந்து உருவாகின்றன.    

  50. குரோமோசோமின் சாட்டிலைட் பகுதியின் முக்கியத்துவம் யாது?    

  51. மறைமுக செல்பகுப்பின் முக்கியத்துவத்தில் ஏதேனும் மூன்றினை எழுதுக.

  52. மைட்டாசிஸ் எப்பொழுதெல்லாம் நடைபெறுகிறது?

  53. வரையறு: செல் சுழற்சி

  54. உயிருள்ள திசுக்களில் சிறு மூலக்கூறுகளின் எடையை க் கொண்ட கரிமச் சேர்மங்களை வரை ப்ப டம் வாயிலாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இது எந்தப் பிரிவைச் சார்ந்தவை என்று கண்டுபிடித்து அதிலுள்ள “X” என்ற வெற்றிடத்தில் பொருத்துக.

    பிரிவு சேர்மம்
    கொலஸ்டிராஸ்  குவானைன்
    அமினனோ  அமிலம் NH2
    நியூக்ளியோடைடு அடினைன்
    நியூக்ளியோசைடு யூராசில்
  55. நைட்ரோஜீனஸ் காரம் மற்றும் கனிம வேதியியலில் பயன்படும் காரத்தை வேறுப்படுத்துக

  56. எவ்வாறு இரண்டு அல்லது ஒற்றை சாக்கரைடுகள் இணைந்து ஒரு இரட்டை சாக்கரைடுவை உருவாக்குவது என்பதை வேதி வினை மூலம் காண்பி.

  57. ஒரு நியூக்ளியோடைடின் அமைப்பை படம் வரைந்து பாகம் குறி?

  58. சிறுநீரகத்திற்கு இரத்தத்தை எடுத்துச்செல்லும் இரத்தக்குழாய் எது?எடுத்து செல்லப்படும் இரத்தம்,தமனி இரத்தமா?அல்லது சிரை இரத்தமா?

  59. சிறுநீரகப்பணிகளை நெறிப்படுத்தும் மூன்று ஹார்மோன்கள் யாவை?

  60. அமோனியா நீக்கிகள் பற்றி குறிப்பு எழுதுக.

  61. நிலவாழ் விலங்கினங்களில் நீர் எவ்வாறு சேமிக்கப்படுகிறது?

  62. மனித எலும்புகளில் இணைக்கப்படாத எலும்பு எது?

  63. டெட்டனி எவ்வாறு ஏற்படுகிறது?

  64. எலும்புத் தசையின் வரித்தன்மைக்கு காரணமானது எது?

  65. புறச்செவித் துளை எந்த கபால எலும்பில் காணப்படுகிறது?

  66. குருட்டுப்புள்ளி எனப்படுவது எது?ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது?  

  67. மனிதரில் கார்னியா மற்றும் சிகிக்சை பொதுவாக நிராகரிக்கப்படுவதில்லை.ஏன்?  

  68. தண்டுவட நரம்பின் செயல்பாடுகள் எப்படி உள்ளது?

  69. இருமுனை நியூரான்கள் என்பது யாது? 

  70. உடல் சமநிலைப் பேணுதல் (ஹோமியோஸ்டாசிஸ்) பற்றி எழுதுக. 

  71.  கோலி சிஸ்டோ கைனின் (CCK) பணிகளைக் குறிப்பிடுக. 

  72. வேதியமைப்பு அடிப்படையில் ஹானோன்கள் எவ்வாறு பிரிக்கப்படுகின்றன?

  73. குளுக்ககான் ஏன் ஹைபர்கிளைசீமிக் ஹார்மோன் என அழைக்கப்படுகிறது?

  74. அரக்குப்பூச்சிகள் வளரும் ஏதேனும் இரண்டு மரங்களின் பெயர்களைக் கூறு

  75. தேனீக்களின் மூவகைச் சமூகக் கட்டமைப்பின் பெயர்களைக் கூறு 

  76. ஊட்டப்பொருள் படல தொழில் நுட்பம்-குறிப்பு எழுதுக.

  77. மண்புழுக்கள் பற்றி சார்லஸ் டார்வினின் கூற்று யாது?

  78. ஸ்கிலிரன்கைமா மற்றும் டிரக்கீடுகள் ஏன் இறந்த செல்களாகக் காணப்படுகிறது?

  79. கூட்டுத்திசு என்றால் என்ன?

  80. இடியோபிளாஸ்ட்கள் என்பது யாது?

  81. தாவரவியலில் படி கட்டை என்பது என்ன?

  82. மர வயதியில் என்றால் என்ன?

  83. மரக் கால நிலையில் என்பது யாது?

  84. வளைப்பட்டை என்பது யாது?எடுத்துக்காட்டு தருக.

  85. நன்கு நீரூற்றினாலும், மண்ணில் உள்ள அதிகப்படியான உப்பு அடர்வினால் தாவரம் வாடுகிறது.விளக்கு 

  86. தரச சர்க்கரை இடைமாற்றக் கொள்கையில் பாஸ்பாரிலேஸ் நொதி எவ்வாறு இலைத்துளையினைத் திறக்கிறது?

  87. ஆற்றல் சாரா கடத்தல் என்றால் என்ன?

  88. பிளாஸ்மோஸைசிஸின் முக்கியத்துவம் யாது?

  89. தாவரம் A சாட்டைவால் நோய், தாவரம் B சிற்றிலை நோய் அறிகுறிகள் கொண்டுள்ளது. AB யின் கனிமக் குறைபாட்டினைக் கண்டறிக.

  90. நைட்ரஜன் நிலைநிறுத்தத்தில் நைட்ரோஜினேஸ் நொதியின் பங்கினை விவரி?

  91. காற்றூடக வளர்ப்பு பற்றி எழுதுக 

  92. அம்மோனியாவாதல் என்றல் என்ன?

  93. ஒரே அளவிலான மற்றும் சம இலை பரப்பு கொண்ட அவரை தாவரத்தை இரு பிரிவுகளாக (அ மற்றும் ஆ) பிரித்து ஒரே நிலையில் வளர்க்கப்படுகிறது. அ பிரிவு தாவரங்களுக்கு 400 முதல் 450 nm அலை நீளமுள்ள ஒளியும், ஆ பிரிவு தாவரங்களுக்கு 500 முதல் 550 nm அலை நீள ஒளியும் வழங்கப்படுகிறது.

  94. அதிகமான ஒளியும், அதிக ஆக்ஸிஜன் செறிவும் காணப்படும் போது எவ்வகை வழித்தடம் தாவரங்களில் நடைபெறும் காரணங்களை ஆராய்க.   

  95. பைக்கோபிலின்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

  96. கார்பன் டை ஆக்ஸைடு பற்றி எழுதுக.

  97. சதைப்பற்றுள்ள தாவரங்களில் சுவாச ஈவு மதிப்பு பூஜ்யம்.ஏன்?  

  98. கிளைக்காலைசிஸ் என்றால் என்ன?

  99. காற்றிலா சுவாசித்தலின் பண்பினை எழுதுக.

  100. வறட்சி நிலையில் தாவரங்கள் எதிர்கொள்ளும் சேயலியல் விளைவுகள் யாவை?       

  101. உயிர்சார் நெருக்கடியின் செயல் நுட்பங்களை விளக்குக.   

  102. மூப்படைதலின் வகைகளை எழுதுக.    

  103. வளர்ச்சி இயங்கியல் என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு உயிரியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Biology All Chapter Two Marks Important Questions 2020 )

Write your Comment