பொது தேர்வு மாதிரி வினாத்தாள் ஜூன் 2020

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 67

    பகுதி - I

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

    15 x 1 = 15
  1. இணைதிறன் மூன்று கொண்ட உலோகத் தனிமத்தின் சமான நிறை 9g.eq-1 அதன் நீரற்ற ஆக்ஸைடின் மூலக்கூறு நிறை

    (a)

    102 g

    (b)

    27 g

    (c)

    270 g

    (d)

    78 g

  2. M2+ அயனியின் எலக்ட்ரான் அமைப்பு 1s22s22p63s23p63d6 அதன் அணு நிறை 56 எனில் M என்ற அணுவின் அணுக்கரு பெற்றிருக்கும் நியூட்ரான்களின் எண்ணிக்கை

    (a)

    26

    (b)

    22

    (c)

    30

    (d)

    24

  3. A மற்றும் B ஆகிய தனிமங்களின் எலக்ட்ரான் அமைப்பு முறையே 1s2, 2s2, 2p6, 3s2 மற்றும் 1s2, 2s2, 2p6, 3s2,3p5 ஆகும்.இவ்விரு தனிமங்களுக்கிடையே தோன்றும் அயனி சேர்மத்தின் மூலக்கூறு வாய்பாடு.

    (a)

    AB

    (b)

    AB2

    (c)

    A2B

    (d)

    எதுவும் இல்லை

  4. டிரிட்டியம் உட்கருகொண்டுள்ளது--------

    (a)

    1p +0n

    (b)

    2p +1n

    (c)

    1p +2n

    (d)

    இவற்றில் ஏதும் இல்லை

  5. RbO2 சேர்மம் ஒரு

    (a)

    சூப்பர் ஆக்சைடு மற்றும் பாரா காந்தத் தன்மை கொண்டது

    (b)

    பெராக்சைடு மற்றும் டையாகாந்தத் தன்மை கொண்டது

    (c)

    சூப்பர் ஆக்சைடு மற்றும் டையாகாந்தத் தன்மை கொண்டது

    (d)

    பெராக்சைடு மற்றும் பாரா காந்தத் தன்மை கொண்டது

  6. பின்வருவனவற்றை பொருத்துக.

    A 1 atm 1 6894.76 pa
    B 1 mm Hg 2 105 pa 
    C 1 bar 3 133.322 pa
    D 1 psi 4 101325 pa
    (a)
    A B C D
    1 2 3 4
    (b)
    A B C D
    2 3 4 1
    (c)
    A B C D
    3 4 2 1
    (d)
    A B C D
    4 3 2 4
  7. திட்ட கட்டிலா ஆற்றல் மாற்றம் \(\triangle G^o\)ஆனது சமநிலை மாறிலி kp உடன் கொண்டுள்ள தொடர்பு 

    (a)

    \(\triangle G^o =- RT \ In \ K_p\)

    (b)

    \(k_p =({e \over RT})\triangle G^o\)

    (c)

    \(k_p ={-\triangle G \over RT} \)

    (d)

    \(k_p ={\triangle G \over RT} \)

  8. கீழ் கண்டவற்றில் எது சரியான கூற்று அல்ல?

    (a)

    சமநிலையில் உள்ள ஒரு அமைப் பிற்கு Qவின் மதிப்பு எப்போதும் சமநிலை மாறிலியை விடகுறைவாக இருக்கும்.

    (b)

    இரு பக்கத்திலிருந்தும் சமநிலையினை அடையலாம்.

    (c)

    வினையூக்கியானது முன்னோக்கு மற்றும் பின்னோக்கு வினைகளை சம அளவில்
    பாதிக்கும்.

    (d)

    வெப்ப நிலையினை பொருத்து சமநிலை மாறிலி மதிப்புகள் மாறுபடும்.

  9. பின்வருவனவற்றின் ஏதன் எலக்ட்ரான்களை இணைதிற கூட்டில் பெற்றுள்ள எலக்ட்ரான் இரட்டையாக குறிப்பிடப்படுகிறது? 

    (a)

    N

    (b)

    C

    (c)

    O

    (d)

    He

  10. தாவரம் மற்றும் பூக்களிலிருந்து பெறப்படும் அத்தியாவசிய எண்ணெய்களை பிரித்தெடுக்க பயன்படுவது

    (a)

    படிகமாக்குதல்

    (b)

    வாலை வடித்தல்

    (c)

    பின்ன வாலை வடித்தல்

    (d)

    நீராவி வாலை வடித்தல்

  11. பின்வருவனவற்றுள் கருக்கவர் பொருளாக செயல்படாதது எது?

    (a)

    ROH

    (b)

    ROR

    (c)

    PCl3

    (d)

    BF3

  12. கூற்று (A): நீராவி மாற்றியமைத்தல் செயல்முறை மூலம் தொழிற்சாலையில் அதிக அளவு H2 வாயுவை ஹைட்ரோ கார்பனிலிருந்து பெறலாம்.
    காரணம் (R): மீத்தேனிலிருந்து H2 வாயு உருவாக்கும் முறையானது நீராவி மாற்றியமைத்தல் செயல்முறை எனப்படுகிறது.

    (a)

    (A) மற்றும் (R) இரண்டும் சரி, (R) ஆனது (A) விற்கான சரியான விளக்கம்

    (b)

    (A) மற்றும் (R) இரண்டும் சரி, (R) ஆனது (A) விற்கான சரியான விளக்கம் அல்ல

    (c)

    (A) சரி, (R) தவறு

    (d)

    (A) மற்றும் (R) இரண்டும் தவறு

  13. அசிட்டோன் \(\xrightarrow[ii)H_2O/H^{-1}]{i)CH_3MgI }X\),இங்கு X என்பது

    (a)

    2-புரப்பனால்

    (b)

    2-மெத்தில்-2-புரப்பனால்

    (c)

    1-புரப்பனால்

    (d)

    அசிட்டோனால்

  14. பின்வருவனவற்றை பொருத்துக.

      அடுக்குகள்   காணப்படுபவை
    A அடிவெளிப் பகுதி 1 O2+
    B அடுக்கு மண்டலம் 2 O3
    C மத்திய அடுக்கு 3 e-
    D வெப்ப அடுக்கு 4 CO2
    (a)
    A B C D
    1 2 3 4
    (b)
    A B C D
    3 2 1 4
    (c)
    A B C D
    4 2 1 3
    (d)
    A B C D
    4 3 2 1
  15. 200ml புரத நீர்க் கரைசலானது, 1.26g புரதத்தை கொண்டுள்ள து. 300K வெ ப்பநிலை யில், இந்த கரைசலின் சவ்வூடுபரவல் அழுத்த மதிப்பு 2.52 × 10–3 bar என கண்ட றியப்பட்டுள்ளது. புரதத்தின் மோலார் நிறை (R = 0.083 L bar mol–1 K–1)

    (a)

    62.22 Kg mol–1

    (b)

    12444g mol–1

    (c)

    300g mol–1

    (d)

    இவற்றில் ஏதுமில்லை

  16. பகுதி - II

    எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 24க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    6 x 2 = 12
  17. H2SOன் சமான நிறையைக் கண்டறி.

  18. லோதர்   மேயர் வகைப்பாட்டினை எழுதுக.

  19. 0oCல் உள்ள ஒரு பனிக்கட்டி, 0oCல் உள்ள திரவ நீரில் வைக்கப்படும்போது மூழ்குகிறது – ஏன்?

  20. பெரிலியத்தின் முரண்பட்ட பண்பிற்கு காரணம் என்ன?உன் பதிலை விளக்குக.

  21. அமுக்கத்திறன் காரணி வரையறு. 

  22. CH3COOCH3 (aq) + H2O (aq) ⇌ CH3COOH (aq) + CH3OH(aq) என்பது எச்சமநிலைக்கு எடுத்துக்காட்டு?

  23. டுமாஸ் முறையை பயன்படுத்தி நைட்ரஜனை அளவிடும்போது, 0.35g கரிமச்சேர்மமானது 150oC மற்றும் 760mm Hg அழுத்தத்தில் 20.7mL நைட்ரஜனை தருகிறது. அச்சேர்மத்தில் காணப்படும் நைட்ரஜனின் சதவீதத்தினைக் காண்க.

  24. ஹேலோ அரீன்களின் கார்பன் அணுவின் இனக்கலப்பு நிலை என்ன?

  25. கரைசல் என்பது யாது? அதன் பகுதிப் பொருட்கள் யாவை? எ.கா தருக.

  26. பகுதி - III

    எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 33க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    6 x 3 = 18
  27. கீழ்கண்ட சேர்மங்களில் உள்ள ஆக்சிஜனின் ஆக்சிஜனேற்ற எண்ணைக் காண்க.
    (i) நீர்
    (ii) ஹைட்ரஜன் பெராக்சைடு
    (iii) KO2
    (iv) OF2

  28. காலத்தைச் சார்ந்து அமையாத ஷ்ரோடிங்கர் அலைச்சமன்பாட்டினை சுருக்கமாக விளக்குக.

  29. அயனியாக்கும் ஆற்றல் மற்றும் எலக்ட்ரான் நாட்டத்தினை பாதிக்கும் காரணிகளுள் முக்கியமான ஒரு காரணி அணுவின் எலக்ட்ரான் அமைப்பு - விளக்குக.

  30. மெண்டலீஃபின் ஆவர்த்தன அட்டவணையில் உள்ள முரண்பாடுகளை எடுத்துக்காட்டுடன் விளக்கு.

  31. ஹைட்ரஜன் பெராக்சைடு ஒரு ஆக்சிஜனேற்றியாகவும், ஆக்சிஜன் ஒடுக்கியாகவும் செயல்படுகிறது. இக்கூற்றினை தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் நிரூபிக்க

  32. தனிமவரிசை அட்டவணையின் முதல் தொகுதியில் காணப்படும் தனிமங்கள் கார உலோகங்கள் எனப்படுகின்றன.அவற்றின் வேதிப்பண்புகளை பட்டியலிடு.

  33.  ஒரு வாயு 15oCயில் 1atm அழுத்தத்தில் பெற்றுள்ள கனஅளவு 2.58 dm3வெப்பநிலை 38oCயாக 
    1atm அழுத்தத்தில் உயர்ந்தால் அதன் கனஅளவு அதிகரிக்குமா? எனில் அதன் இறுதி
    கனஅளவைக் கணக்கிடு

  34. 128.0 கிராம் ஆக்ஸிஜனை 00C லிருந்து 1000C க்கு வெப்பப்படுத்துமபோது \(\triangle \)U மற்றும் H மதிப்புகளை கணக்கிடுக. தோராயமாக Cv மற்றும் Cp மதிப்புகள் முறையை 21 J mol-1K-1 மற்றும் 29 J mol-1K-1 [வேறுபாடானது 8 J mol-1K-1 இது தோராயமாக R மதிப்பிற்குச் சமம். 

  35. NH3, N2 மற்றும் H2 ஆகியனவற்றின் சமநிலைச் செறிவுகள் முறையே 1.8x10-2M, 1.2x10-2M மற்றும் 3x10-2M. N2 மற்றும் H2விலிருந்து NH3 உருவாகும் வினைக்கு சமநிலை மாறிலியின் மதிப்பினைக் காண்க.

  36. பகுதி - IV

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    5 x 5 = 25
    1. ஹைட்ரஜன் அணுவில் உள்ள எலக்ட்ரான் ஒன்றின் திசைவேகத்தினை அளவிடுவதில் ஏற்படும் நிச்சயமற்றத் தன்மையினை கணக்கிடுக. (முதல் வட்டப்பாதையில் போர் அணு ஆறாம் 0.592 Å) வட்டப்பாதையில் உலா எலக்ட்ரானின் நிலையினை அவ்வட்டப்பாதை ஆரத்தில் 0.5% துல்லியமாக, கண்டறிய இயலும் எனக் கருதுக.

    2. திரைமறைப்பு விளைவு என்றால் என்ன?

    1. ஹைட்ரஜன் பிணைப்பு என்றால் என்ன? மூலக்கூறுக்கு இடைப்பட்ட மற்றும் மூலக்கூறினுள் நிகழும் ஹைட்ரஜன் பிணைப்பை விளக்குக.  

    2. கார உலோகச் சேர்மங்கள் ஆக்சைடுகள் மற்றும் ஹைட்ராக்சைடுகள் பற்றி விரிவாக எழுது.

    1. 300K ல் 525g ஆக்சிஜன் மற்றும் 65.1g CO2 அடங்கியுள்ள தொட்டியில் கலவையின் மொத்த அழுத்தம் 9.21 atm. கலவையிலுள்ள ஒவ்வொரு வாயுவின் பகுதி அழுத்தங்களை கண்டறிக.

    2. வினைகளின் தன்னிச்சை தன்மை மீது வெப்ப நிலையின் விளைவை எடுத்துக்காட்டுடன் விவரி.

    1. 5000C ல், \({ Ca }{ CO }_{ 3 }(s)\rightleftharpoons CaO(S)+{ CO }_{ 2 }(g)\) என்ற வினையில் CO2ன் பகுதி அழுத்தம்
      1.017 × 10–3 atm ஆகும். இவ்வினை யில் 6000Cல், KP க்கான மதிப்பினை கணக்கிடுக. இவ்வினையின் \(\triangle\)H 181KJ mol-1 மேலும் கொடுக்கப்பட்டுள்ள வெப்பநிலை எல்லையில் இதன் மதிப்பு மாறுவதில்லை.

    2. N2+ - ன் பிணைப்பு நீளமானது M2-ன் பிணைப்பு நீளத்தைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் NO+ ன் பிணைப்பு நீளமானது NO வைக் காட்டிலும் குறைவு. ஏன்?

    1. பின்வருவனவற்றை விளக்குக.
      (i) பிஷர் அமைப்பு வாய்ப்பாடு
      (ii) சாஹார்ஸ் அமைப்பு வாய்ப்பாடு
      (iii) நீயூமன் அமைப்பு வாய்ப்பாடு

    2. கீழ்கண்ட வினையின் வினைவிளைப் பொருட்கள் A மற்றும் B யைக் கண்டறி.

*****************************************

Reviews & Comments about 11 வது வகுப்பு வேதியியல் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் ஜூன் 2020 (11th Standard Chemistry Public Exam Model Question Paper June 2020)

Write your Comment