மாதிரி வினாத்தாள் பகுதி I

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70

    பகுதி - I

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

    15 x 1 = 15
  1. தனிமம் X ன் ஐசோடோப்புகளின் இயைபு பின்வருமாறு அமைகிறது. 200X=90%, 199X = 8 %, 202X = 2 % இயற்கையில் கிடைக்கும் தனிமம் X ன் தோராய அணு நிறை மதிப்பு

    (a)

    201 u

    (b)

    202 u

    (c)

    199 u

    (d)

    200 u

  2. காலத்தைச் சார்ந்து அமையாத ஷ்ரோடிங்கர் அலைச் சமன்பாடானது

    (a)

    \(\hat { H } \)ψ = Eψ

    (b)

    \({ \nabla }^{ 2 }\Psi +\frac { 8{ \pi }^{ 2 }m }{ { h }^{ 2 } } (E+V)\Psi =0\)

    (c)

    \(\frac { { \partial }^{ 2 }\Psi }{ { \partial x }^{ 2 } } +\frac { { \partial }^{ 2 }\Psi }{ { \partial y }^{ 2 } } +\frac { { \partial }^{ 2 }\Psi }{ { \partial z }^{ 2 } } +\frac { 2m }{ { h }^{ 2 } } (E-V)\Psi =0\)

    (d)

    இவை அனைத்தும்

  3. Mg-ன் IE1 மற்றும் IE2 முறையே 179 மற்றும் 348 kcal mol-1 ஆகும். Mg → Mg2+ + 2e- என்ற வினைக்கு தேவைப்படும் ஆற்றல்

    (a)

    +169 kcal mol-1

    (b)

    - 169 kcal mol-1

    (c)

    + 527 kcal mol-1

    (d)

    - 527 kcal mol-1

  4. ஆர்த்தோ நைட்ரோபீனால் மற்றும் பாரா நைட்ரோ பீனாலில் காணப்படும் H- பிணைப்புகள் முறையே,

    (a)

    மூலக்கூறுகளுக்கிடையேயான H- பிணைப்பு மற்றும் மூலக்கூறினுள் நிகழும் H- பிணைப்பு

    (b)

    மூலக்கூறினுள் நிகழும் H-பிணைப்பு மற்றும் மூலக்கூறுகளுக்கிடையேயான H- பிணைப்பு

    (c)

    மூலக்கூறினுள் நிகழும் H- பிணைப்பு

    (d)

    மூலக்கூறினுள் நிகழும் H- பிணைப்பு மற்றும் H-பிணைப்பு இல்லை.

  5. தவறான கூற்றைக் கண்டறியவும்

    (a)

    உலோக சோடியம் ,கரிம பண்பறி பகுப்பாய்வில் பயன்படுத்தப்படுகிறது.

    (b)

    சோடியம் கார்பனேட் நீரில் கரையக்கூடியது, மேலும் இது கனிம பண்பறி பகுப்பாய்வில் பயன்படுத்தப்படுகிறது.

    (c)

    சால்வே முறையில் பொட்டாசியம் கார்பனேட்டை தயாரிக்க முடியும்

    (d)

    பொட்டாசியம் பைகார்பனேட் அமிலத் தன்மை உடைய உப்பு

  6. விரிவடைதல் குணகத்தின் மதிப்பு தோராயமாக ________ க்கு சமம்.

    (a)

    1/273

    (b)

    1/373

    (c)

    1/473

    (d)

    1/173

  7. 'q' அளவு வெப்பத்தை உறிஞ்சி 'W' அளவு வேலையைச் செய்தால் அக ஆற்றலில் ஏற்படும் மாற்றம் 

    (a)

    H

    (b)

    P\(\triangle\)V

    (c)

    V

    (d)

    E

  8. Fe (OH)3 (s) ⇌ Fe3+(aq) + 3OH(aq), என்ற வினையில் OH- அயனியின் செறிவு ¼ மடங்காக குறைந்தால், Fe3+ன் சமநிலைச் செறிவானது

    (a)

    மாறாது

    (b)

    ¼ மடங்காக அதுவும் குறையும்

    (c)

    4 மடங்காக அதிகரிக்கும்

    (d)

    64 மடங்காக அதிகரிக்கும்

  9. பின்வருவனவற்றை பொருத்துக.

      பிணைப்பு வகை   பிணைப்பு நீளம் Å
    A C-H 1 1.09
    B C-C 2 1.54
    C C-N 3 1.47
    D C-O 36 1.43
    (a)
    A B C D
    1 2 3 4
    (b)
    A B C D
    2 3 1 4
    (c)
    A B C D
    3 2 1 4
    (d)
    A B C D
    4 3 2 1
  10. பின்வருவனவற்றை பொருத்துக.

      சேர்மத்தின் வகை   வினைசெயல் தொகுதி
    A சயனேட் 1 -OCN
    B ஐசோ சயனேட் 2 -NCO
    C தயோ சயனேட் 3 -SCN
    D ஐசோ தயோ சயனேட் 4 -NCS
    (a)
    A B C D
    1 2 3 4
    (b)
    A B C D
    2 1 3 4
    (c)
    A B C D
    1 4 2 3
    (d)
    A B C D
    4 1 2 3
  11. -I விளைவினை காட்டுவது

    (a)

    -Cl

    (b)

    -Br

    (c)

    both (a) and (b)

    (d)

    -CH3

  12. கூற்று (A): நீராவி மாற்றியமைத்தல் செயல்முறை மூலம் தொழிற்சாலையில் அதிக அளவு H2 வாயுவை ஹைட்ரோ கார்பனிலிருந்து பெறலாம்.
    காரணம் (R): மீத்தேனிலிருந்து H2 வாயு உருவாக்கும் முறையானது நீராவி மாற்றியமைத்தல் செயல்முறை எனப்படுகிறது.

    (a)

    (A) மற்றும் (R) இரண்டும் சரி, (R) ஆனது (A) விற்கான சரியான விளக்கம்

    (b)

    (A) மற்றும் (R) இரண்டும் சரி, (R) ஆனது (A) விற்கான சரியான விளக்கம் அல்ல

    (c)

    (A) சரி, (R) தவறு

    (d)

    (A) மற்றும் (R) இரண்டும் தவறு

  13. பின்வரும் சேர்மங்களுள் எச்சேர்மமானது OH- அயனியாயால் கருக்கவர்பொருள் பதிலீட்டு வினைக்கு உட்படும் போது சுழிமாய்க் கலவையைத் தரும்,
    i)  \({ CH }_{ 3 }-\underset { \overset { | }{ { C }_{ 2 }{ H }_{ 5 } } }{ CH } -{ CH }_{ 2 }Br\)

    (a)

    (i)

    (b)

    (ii) and (iii)

    (c)

    (iii)

    (d)

    (i) and (ii)

  14. குடிநீரில் உள்ள லெட் மாசுக்களின் அளவு எவ்வளவு இருப்பின் அது கல்லீரலை பாதிக்கிறது?

    (a)

    500 ppm க்கு மேல் 

    (b)

    500 ppm க்கு மேல் 

    (c)

    45 ppm க்கு மேல் 

    (d)

    450 ppm க்கு மேல் 

  15. நீரின் உறை நிலைத்தாழ்வு மாறிலி மதிப்பு 1.86 K Kgmol-1. 45 கிராம் நீரில், 5g Na2SO4 ஐ கரைக்கும்போது, உறைநிலையில் ஏற்படும் தாழ்வு 3.64oC. Na2SO4 இன் வாண்ட் ஹாஃப் காரணி மதிப்பு

    (a)

    2.5

    (b)

    2.63

    (c)

    3.64

    (d)

    5.50

  16. பகுதி - II

    எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 24க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    6 x 2 = 12
  17. கிராம் சமான நிறை வரையறு.

  18. டாபரீனர் வகைப்பாட்டின் குறைபாடுகள் யாவை?

  19. NH3 ஆனது, 15ம் தொகுதியில் உள்ள பிற தனிமங்களின் ஹைட்ரைடுகளைக் காட்டிலும் அதிக உருகுநிலை மற்றும் கொதிநிலையைக் கொண்டுள்ளது – விளக்குக

  20. பெரிலியம் மற்றும் நைட்ரஜன் ஆகியவை ஏறத்தாழ பூஜ்ய எலக்ட்ரான் நாட்ட மதிப்பை பெற்றுள்ளன. ஏன்?

  21. வாயுக்களின் வேதித்தன்மை எத்தகையதாக இருப்பினும் அனைத்து வாயுக்களுக்கும் எந்நிலையில் பாயில் விதி பொருந்தும்?

  22. பல்வேறு மேலும் வினைகளைப் பற்றிய ஆய்வு முடிவுகளில் அடிப்படையில் நிறைத்தாக்க விதியினை உருவாக்கியவர்கள் யார்?

  23. 2-பியூட்டீனை எடுத்துக்காட்டாக்க் கொண்டு வடிவ மாற்றியங்களை விளக்குக.

  24. ஹைட்ரோ ஹேலஜன் நீக்கவினையை இவ்வாறும் அழைக்கப்படுகிறது?

  25. எதிர் சவ்வூடு பரவலின் பயன்கள் யாவை?

  26. பகுதி - III

    எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 33க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    6 x 3 = 18
  27. KOH கிராம் சமான நிறையை கணக்கிடுக.

  28. பௌலி தவிர்க்கைத் தத்துவத்தினைக் கூறு

  29. இரண்டாம் வரிசை தனிமங்களின் முரண்பட்ட பண்புகளில் ஏதேனும் இரண்டினைக் குறிப்பிடுக.

  30. (n-1) d2, ns2 (இங்கு n =5) என்ற எலக்ட்ரான் அமைப்பினை நிறைவு செய்யும் தனிமம் தனிமைவரிசை அட்டவணையில் பெற்றுள்ள இடத்தினைக் கண்டறிக.

  31. NH3, H2O மற்றும் HF ஆகியவற்றை அவற்றின் ஹைட்ரஜன் பிணைப்புத் தன்மையின் ஏறு வரிசையில் வரிசைப்படுத்துக. தங்களது வரிசைப்படுத்தலுக்கான அடிப்படையினை விளக்குக.

  32. கார உலோக ஹாலைடுகள் அனைத்தும் அயனிப்படிகங்களாகும். எனினும் லித்தியம் அயோடைடு சகப்பிணைப்புப் பணப்பை காட்டுகிறது.

  33. மோட்டார் வாகன ஓட்டி பிரேக்கினை உபயோகிக்கும் போது பயணிகள் முன்பக்கமாக விழுவார்கள். ஆனால் ஹீலியம் பலூன் வண்டியின் பின்பக்கமாகத் தள்ளப்படும்.ஏன்?

  34. ஒரு சுற்றுச் செயல் முறையில், ஒரு மோல் நல்லியல்பு வாயு போடப்பட்ட வரிசையின் மாற்றங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. செயல்முறையின் பெயர்\(A \rightarrow B\), \(B \rightarrow C\)மற்றும் \(C \rightarrow A\)

  35. N2O2(g) \(\rightleftharpoons \) 2NO2(g)
    373Kல், மேற்கண்டுள்ள வினைக்கு KC = 0.21. கொடுக்கப்பட்ட நேரத்தில் N2O4 மற்றும் NO2 ஆகியவற்றின் செறிவுகள் முறையே 0.125 mol dm-3 மற்றும் 0.5 mol dm-3 என கண்டறியப்பட்டது. இவ் விவரங்களிலிருந்து வினை நிகழும் திசையினை நாம் பின்வருமாறு தீர்மானிக்க இயலும்.

  36. பகுதி - IV

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    5 x 5 = 25
    1. ஆரப்பங்கீட்டு சார்பை தக்கச் சான்றுடன் விளக்குக.

    2. பாலிங் முறையினை பயன்படுத்தி பொட்டாசியம் குளோரைடு படிகத்தில் உள்ள Kமற்றும் Cl அயனிகளின் அயனி ஆரங்களை கணக்கிடுக. கொடுக்கப்பட்டுள்ள தரவு dk+ - cl- =3.14 Å

    1. தொழில் முறையில் ஹைட்ரஜன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? 

    2. காரமண் உலோகங்களின் பின்வரும் வேதிப் பண்புகளைப் பற்றி எழுதுக.
      (i) ஹாலஜன்களுடன் வினை
      (ii) ஹைட்ரஜனுடன் வினை

    1. பின்வரும் நிபந்தனைகளில் ஒரு வாயு நல்லியல்பு பண்பினை பெறுகிறதா அல்லது நல்லியல்பு பண்பிலிருந்து விலகிச் செல்கிறதா என விவரி?
      அ) மாறா வெப்ப நிலையில் அது மிகச்சிறிய கனஅளவிற்கு அழுத்தப்படும் போது 
      ஆ) மாறா கனஅளவில் அதன் வெப்பநிலையை உயர்த்தும் போது 
      இ) சமவெப்ப மற்றும் சமகன அளவு நிலையில் அதிக அளவு வாயு சேர்க்கப்படும் போது 

    2. 00C வெப்பநிலையில் 1 மோல்பனிக்கட்டி நீராக உருகும்போது நிகழும் என்ட்ரோபி மாற்றத்தை கணக்கிடுக. பனிக்கட்டியின் மோலார் உருகுதல் வெப்பமதிப்பு 6008 J mol-1

    1. 1atm NO மற்றும் 1atm O2 ஐ தொடக்க செறிவுகளாகக் கொண்ட NOன் வளிமண்டல ஆக்சிஜனேற்ற வினை.
      2NO(g) + O2(g) ⇌ 2NO2(g)
      ஆய்ந்தறியப்படுகிறது. சமநிலையில், ஆக்சிஜனின் பகுதி அழுத்தம் 0.52atm எனில் இவ்வினைக்கான Kpன் மதிப்பைக் காண்க.

    2. வேதிப்பிணைப்பு பற்றிய கோசல் -லூயிசின் அணுகுமுறையை விவரி.

    1. 0.1688 g எடையுள்ள சேர்மத்தில் உள்ள நைட்ரஜனின் சதவீதத்தினை கணக்கிடுக. டூமாஸ் முறையில் பகுப்பிற்கு உட்படும்போது 140C 758 mm Hg ல் 31.7 ml ஈரமான நைட்ரஜனை தந்தது.

    2. பென்சீனில் எலக்ட்ரான் கவர் பதிலீட்டு வினை நடைபெறுகிறது. ஆனால் சேர்க்கை வினைகள் நடைப்பெறுகின்றன ஏன்?

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு வேதியியல் மாதிரி வினாத்தாள் பகுதி I (11th Standard Chemistry Model Question Paper Part I)

Write your Comment