அரையாண்டு மாதிரி வினாத்தாள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70

    பகுதி - I

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

    15 x 1 = 15
  1. எந்த வகைப்பாட்டு கருவி டாக்சான் பற்றிய முழுவிவரங்களைக் கொண்டுள்ளது?

    (a)

    வகைப்பாட்டுத் திறவுகோல் 

    (b)

    ஹெர்பேரியம் 

    (c)

    தாவரம் 

    (d)

    மோனோஃகிராப்   

  2. தவளையை காணப்படும் சுவாச உறுப்பு

    (a)

    செவுள்கள்

    (b)

    தோல்

    (c)

    வாய்க்குழி

    (d)

    இவை அனைத்தும்

  3. கீழ்க்கண்டவற்றுள் எதன் புறப்பரப்பில் இது இருப்பது அல்லது இல்லாமையால் இரத்த வகைகள் உருவாகிறது.

    (a)

    வெள்ளையணுக்களின் புறப்பரப்பில் ஆன்டிஜென் இருப்பது (அ) உள்ளதால்

    (b)

    சிவப்பணுக்களின் புறப்பரப்பில் ஆன்டிபாடி இருப்பது

    (c)

    சிவப்பணுக்களின் புறப்பரப்பில் ஆன்டிஜென் இருப்பது

    (d)

    வெள்ளையணுக்களின் புறப்பரப்பில் ஆன்டிபாடி இருப்பது

  4. கிளைக்கோகேலிக்ஸ் எனப்படுவது பாக்டிரீயாவின்.  

    (a)

    செல் சுவர் 

    (b)

    வெளியுறை 

    (c)

    நுண்சிலும்பு 

    (d)

    ஃபிம்ரியெ    

  5. வாஸ்குலத் தொகுப்புடைய பூவாத்தாவரங்கள் -எவை?

    (a)

    தாலோஃபைட்டா 

    (b)

    பிரையோஃபைட்டா

    (c)

    டெரிடோஃபைட்டா

    (d)

    ஸ்பெர்மெட்டோஃபைட்டா 

  6. பூஞ்சையின் பாலிலா இனப்பெருக்க நிலை எனப்படும்  

    (a)

    அனாமார்∴ ப் 

    (b)

    டீலோமார்∴ ப்  

    (c)

    இன்டெக்ஸ் ∴பங்கோரம்  

    (d)

    மைக்கோ வங்கி 

  7. நட்சத்திர இழையற்ற பகுப்பு மைட்டாசிஸ்சின் சிறப்புப் பண்பு______.

    (a)

    கீழ்நிலை விலங்குகள்

    (b)

    உயர்நிலை விலங்குகள்

    (c)

    உயர்நிலைத் தாவரங்கள்

    (d)

    அனைத்து உயிருள்ள உயிரினங்கள்

  8. புரதத்தில் காணப்படும் பல்வேறு பிணைப்புகள் பற்றி கூறப்பட்டுள்ளவைகள் அனைத்தும் சரியானது.இதனை தவிர 

    (a)

    நீர் வெறுக்கும் பிணைப்பு புரதத்தின் அமைப்பைத் தக்க வைக்க உதவுகிறது.

    (b)

    டைசல்ஃபைடு பிணைப்புகள், அமினோ அமிலங்களுக்கிடையே காணப்பட்டு ஓர் இணைப்பு பாலத்தினை அமைக்கின்றன.

    (c)

    அயனிப்பிணைப்பு புரதத்தை வெப்பப்படுத்தும் போது துண்டிக்கப்பட்டுவிடுகிறது.

    (d)

    ஹைட்ரஜன் பிணைப்புகள் புரத மூலக்கூறின் முப்பரிமாண வடிவத்தை நிலைப்படுத்துகின்றன.

  9. ஜக்ஸ்டா மெடுல்லரி நெஃப்ரான்களில் ஹென்லே வளைவுக்கு இணையாக நீண்ட நாளத்தை உருவாகியுள்ளன . இதற்கு _______ என்று பெயர்.

    (a)

    புற நுண்குழல் இரத்த நாளங்கள்

    (b)

    வாசா ரெக்டா

    (c)

    ஆர்னித்தைன் சுழற்சி

    (d)

    கிளாமருலஸ்

  10. தடித்த இழைகளிலுள்ள புரதம் ______.

    (a)

    மையோசின்

    (b)

    ஆக்டின்

    (c)

    பெக்டின்

    (d)

    லியூசின்

  11. A,B என்ற இரு செல் வகைகளில் படங்களை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்ந்தெடு.

    (a)

    செல் A என்பது குச்சி செல்.இது விழித்திரையின் அனைத்துப் பகுதியிலும் காணப்படுகிறது.   

    (b)

    செல் A  என்பது கூம்புசெல் இது ஃபோவியாவின் (மஞ்சள் தானத்தின்) மையப்பகுதியில் செறிவாக உள்ளது.    

    (c)

    செல் A யானது செறிவான ஒளியில் நிறப்பார்வையுடன் தொடர்புடையது.  

    (d)

    செல் A யானது செறிவான ஒளியை உணரக்கூடியது. 

  12. விரும்பத்தக்க பண்புகளைக் கொண்ட விலங்குகளைப் பெருக்கும் இன்னொரு முறை _____ ஆகும்.

    (a)

    சிற்றினங்களுக்கிடையே கலப்பினம் செய்தல்

    (b)

    செயற்கை விந்துதூட்டம்

    (c)

    பல அண்ட வெளியேற்ற கரு மாற்ற தொழில் நுட்பம்

    (d)

    பால் பண்ணை

  13. உயிர்த்துடிப்பு கோட்பாட்டை வெளியிட்டவர் __________.

    (a)

    J.C 

    (b)

    காட்லெவிஸ்கி 

    (c)

    ஸ்ட்ராஸ்பர்கர் 

    (d)

    ஸ்டீபன் ஹேல்ஸ் 

  14. உணவூட்டடத்தில் ஓம்புயிர் தாவரத்தை முழுமையாக தன்  வாழ்க்கையாக ஒட்டுண்ணி சாந்திருக்கும் அத்துடன் _____ எனும் உறிஞ்சு உறுப்பை உருவாக்குகிறது.

    (a)

    ஹாஸ்டோரியம் 

    (b)

    கூட்டுயிர் 

    (c)

    சல்பர் டை ஆக்ஸைடு 

    (d)

    ரைபோசோம் 

  15. ஒளிச்சேர்க்கையில் நடைபெறும் வினை _______.

    (a)

    பாஸ்பரிகரணம் 

    (b)

    ஆக்ஸிஜனேற்றம் 

    (c)

    ஒடுக்கம் 

    (d)

    ஆக்ஸிஜனேற்றம், ஒடுக்கம் 

  16. பகுதி - II

    எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 24க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    6 x 2 = 12
  17. வகைப்பாட்டியல் சேர்க்கப்பட்டுள்ள இடைநிலை படிநிலைகளைக் குறிப்பிடுக.

  18. ஆண் தவளை புணர்ச்சிக்காக எவ்வாறு பெண் தவளையைக் கவர்கின்றது?

  19. வலது வென்ட்ரிக்கிள் சுவர், இடதுவென்ட்ரிக்கிள் சுவரை விட மெல்லியது. ஏன்?

  20. இனப்பெருக்கம் செய்யாத உயிரினங்களின் பெயரினைத் தருக.ஏன் அவைகள் இனப்பெருக்கம் செய்வதில்லை?

  21. பக்க வேர்கள் ஏன் அகத் தோன்றிகளாக வளர்கின்றன?

  22. புரோட்டோபிளாச கோட்பாட்டைக் கூறுக.

  23. இருவாழ்வி மற்றும் முதிர் உயிரிகள் வெளியேற்றும் நைட்ரஜன் கழிவுப்பொருட்கள் யாவை?

  24. இலைத்துளையின்  அமைப்பு பற்றி எழுதுக.

  25. அலுமினியம் நச்சுத்தன்மை என்றால் என்ன?

  26. பகுதி - III

    ஏதேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 33க்கு கட்டாயமாக விடை அளிக்கவும்.

    6 x 3 = 18
  27. எளிய எபிதீலியத்திசு வகைகள் யாவை?

  28. கடல் மட்டத்திற்கு மேல் அதிக உயரத்தில் நீண்டநாள் வாழ ஒருவரின் உடல் எவ்வாறு சரிசெய்துகொள்கிறது?

  29. நம் நாட்டில் காணக்கூடிய சில முக்கியத் தொல்லூயிர் எச்சம் மிகுந்த பகுதிகளைக் குறிப்பிடு.

  30. சூல் ஒட்டுமுறையின் வகைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  31. அண்மை சுருள் நுண்குழல் பகுதியில் மீள உறிஞ்சப்பட்ட பொருட்கள் எம்முறையில் கடத்தப்படுகின்றன எனப் பொருத்துக.

    அ) Na+ -எளிய ஊடுருவல்
    ஆ) குளுக்கோஸ் -முதன்மை செயல்மிகு கடத்தல்
    இ) யூரியா -மறைமுக செயல்மிகு கடத்தல்
    ஈ) பிளாஸ்மா -இணை செயலியக்கம் 
    உ) நீர் -உயிரணு உட்கவர்தல்
    ஊ) புரதங்கள் -புரத வழி ஊடுருவல்
  32. மூளையின் வென்ட்ரிக்கிள்கள் பணிகளைக் குறிப்பிடுக.

  33. வாஸ்குலக் கேம்பியத்தின் அமைப்பினை வரையறு?

  34. EMP வழித்தடத்தில் பாஸ்பரிகரணம் மற்றும் ஃபாஸ்பேட் நீக்கம் ஆகிய வினைகளில் ஈடுபடும் நொதிகளை எழுதுக.  

  35. ஒளிக்காலத்ததூண்டல் பற்றி எழுதுக.      

  36. பகுதி - IV

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    5 x 5 = 25
    1. C3 மற்றும் C4 தாவரங்களின் வேறுபாட்டினை எழுதுக.

    2. தாவர வளர்ச்சி ஹர்மோன்களின் பண்புகளை எழுதுக.   

    1. கலப்பு வகை மஞ்சரி என்பது யாது? அதன் வகைகளை படத்துடன் விளக்கு.

    2. முத்து வளர்ப்பு பற்றி எழுதுக?

    1. பெருங்குடலின் அமைப்பை படத்துடன் விளக்கு.

    2. ஹைபர்கிளைசீமியா மற்றும் ஹைபோகிளைசீமியா - வேறுபடுத்துக.       

    1. எளிய எபிதீலிய திசுக்களை படம் வரைந்து பாகம் குறி

    2. கீழ்க் கொடுக்கப்பட்டுள்ள படத்திற்கு பாகங்களை குறிக்கவும். படம்

    1. தொகுதி : ஆஸ்கெல் மின்தஸின் பண்புகளைக் கூறு.

    2. மண்புழுவின் பெண் இனப்பெருக்க மண்டலத்தை படத்துடன் விளக்கு.

*****************************************

Reviews & Comments about 11th உயிரியல் அரையாண்டு மாதிரி வினாத்தாள் ( 11th Biology Half Yearly Model Question Paper )

Write your Comment