11th Biology- Important 1 mark Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 01:30:00 Hrs
Total Marks : 268

    Answer all the questions

    268 x 1 = 268
  1. ஒத்த பண்புகளின் தரத்தைப் பெற்ற உயிரினக்குழு _______ ஆகும்.

    (a)

    சிற்றினம் 

    (b)

    வகைப்பாட்டுத் தொகுதி 

    (c)

    பேரினம் 

    (d)

    குடும்பம் 

  2. கீழ்க்கண்டவற்றுள் எது சமதரத்தில் இல்லை.

    (a)

    பிரைமேட்டா  

    (b)

    ஆர்த்தோப்டீரா   

    (c)

    டிப்டிரா  

    (d)

    இன்செக்டா   

  3. எந்த வகைப்பாட்டு கருவி டாக்சான் பற்றிய முழுவிவரங்களைக் கொண்டுள்ளது?

    (a)

    வகைப்பாட்டுத் திறவுகோல் 

    (b)

    ஹெர்பேரியம் 

    (c)

    தாவரம் 

    (d)

    மோனோஃகிராப்   

  4. கிளாடோகிராம் என்பது கீழ்க்கண்ட பண்புகளைக் கொண்டுள்ளது.    

    (a)

    உடற்செயலியல் மற்றும் உயிர்வேதியியல் 

    (b)

    பரிணாமப் பண்புகள் மற்றும் மரபுவழிப்  பண்புகள் 

    (c)

    பல்லுயிர் தன்மை மற்றும் இனத்தொடர்பு தொகுப்பமைவு 

    (d)

    மேற்குறிப்பிட்ட ஏதுமில்லை 

  5. மூலக்கூறு வகைப்பாட்டின் கருவியில் இது அடங்கியுள்ளது. 

    (a)

    டி.என்.ஏ & ஆர்.என்.ஏ         

    (b)

    மைட்டோகான்டிரியா மற்றும் எண்டோ பிளாசவலை     

    (c)

    செல்சுவர் மற்றும் பிளாஸ்மா புரோட்டின் 

    (d)

    மேற்கூறிய அனைத்தும் 

  6. யூகேரியா என்பது இதனை உள்ளடக்கியது ________ 

    (a)

    சையனோபாக்டீரியா

    (b)

    யூகேரியோட்டுகள்

    (c)

    மெத்தனோஜென்கள்

    (d)

    யூபாக்டீரியா

  7. வகைப்பாட்டில் குடும்பம் என்பது பல்வேறு _______ உள்ளடக்கியது.

    (a)

    சிற்றினம்

    (b)

    வரிசை

    (c)

    பேரினம்

    (d)

    தொகுதி

  8. முப்பெயரிடும் முறையில் காணப்படுவது.

    (a)

    தொகுதி

    (b)

    வரிசை

    (c)

    துணை சிற்றினம்

    (d)

    டாட்டோனைமி

  9. குரோமிஸ்டா உலகம் இவ்வுலக வகைப்பாட்டில் காணப்படுகிறது.

    (a)

    மூவுலக வகைப்பாடு

    (b)

    ஐந்துலக வகைப்பாடு

    (c)

    ஆறுஉலக வகைப்பாடு

    (d)

    ஏழுஉலக வகைப்பாடு

  10. ஆர்க்கிபாக்டீரியம் எது?     

    (a)

    அசட்டோபாக்டர்  

    (b)

    எர்வினீயா  

    (c)

    டிரிப்போனிமா   

    (d)

    மெத்தனோ பாக்டீரியம் 

  11. கடல் சாமந்தி சார்ந்துள்ள தொகுதி _______.

    (a)

    புரோட்டோசோவா   

    (b)

    போரிஃபெரா   

    (c)

    சீலென்டிரேட்டா     

    (d)

    எகினோடெர்மேட்டா    

  12. பெரிட்டிமாவில் இடப்பெயர்ச்சி இதன் உதவியுடன் நடைபெறுகிறது. 

    (a)

    வளையத் தசைகள் 

    (b)

    நீள் வாட்டுத்தசைகள் மற்றும் சீட்டாக்கள்  

    (c)

    வளையத்தசைகள், நீள்வாட்டுத்தசைகள் மற்றும் சீட்டாக்கள்   

    (d)

    பாரபோடியா   

  13. எத்தொகுதி உயிரிகளின் புறச்சட்டகம்  கைட்டினாலான கியூட்டிகிளைக் கொண்டுள்ளது?      

    (a)

    வளைத்தசைப் புழுக்கள்

    (b)

    துளையுடலிகள் 

    (c)

    கணுக்காலிகள் 

    (d)

    முட்தோலிகள் 

  14. சரியான இணையைத் தேர்ந்தெடுத்துப் பொருத்துக.

    வரிசை – I வரிசை – II 
    (p) நத்தை  (i) பேய் மீன்
    (q) டென்டாலியம்  (ii) கைடான்
    (r) கீட்டோபிளூரா (iii) ஆப்பிள் நத்தை
    (s) ஆக்டோபஸ் (iv) தந்த ஓடு (Tusk shell)
    (a)
    P Q R S
    ii  iii iv
    (b)
    P Q R S
    iii iv  ii 
    (c)
    P Q R S
    ii  iv  iii 
    (d)
    P Q R S
    i ii iii iv
  15. கீழ்க்கண்ட எத்தொகுதியில் முதிர் உயிர்கள் ஆரசமச்சீரமைப்பையும், லார்வாக்கள் இருபக்க சமச்சீரமைப்பையும் கொண்டுள்ளன?

    (a)

    மெல்லுடலிகள்

    (b)

    முட்தோலிகள்

    (c)

    கணுக்காலிகள்

    (d)

    வளைத்தசைப் புழுக்கள்

  16. முழுமையான செரிமான மண்டலம் என்பது

    (a)

    உயிரினங்கள் ஒரேயொரு வெளிப்புறத்துளையைப் பெற்றிருப்பது

    (b)

    தட்டைப்புழுக்களில் காணப்படுகிறது

    (c)

    வாய் மற்றும் மலத்துளைகளை காணப்படுகிறது.

    (d)

    ஒரே துளை வாயாகவும், மலத்துளைத்தியாகவும் செயல்படுகிறது.

  17. கீழ்க்கண்ட தொகுதியை அதில் காணப்படும் விலங்குகளின் பண்புகளோடு சரியாக பொருத்தவும்.

      தொகுதி கழிவு நீக்க உறுப்பு
    I கணுக்காலிகள் a. தொண்டை சுரப்பி
    II பிளாட்டிஹெல்மின்தஸ் b. நெஃப்ரீடியம்
    III மெல்லுடலிகள் c. பச்சை சுரப்பி
    IV ஆஸ்ஹெல்மின்தஸ் d. சுடர் செல்கள்
    (a)
    I II III IV
    a b c d
    (b)
    I II III IV
    b c a d
    (c)
    I II III IV
    c d b a
    (d)
    I II III IV
    d a b c
  18. டினிடியா என்பது மெல்லுடலிகளில் காணப்படும் _______ உறுப்பு ஆகும்.

    (a)

    கழிவுநீக்க

    (b)

    சுவாச

    (c)

    செரிமான

    (d)

    இனப்பெருக்க

  19. மாறும் உடல் வெப்பநிலையைக் கொண்டுள்ள விலங்குல வகுப்பு இதுவல்ல

    (a)

    பாலூட்டிகள்

    (b)

    மீன்கள்

    (c)

    ரெப்டிலியா

    (d)

    இருவாழ்விகள்

  20. வலசை போதல் மற்றும் பெற்றோர் பராமரிப்பு இவ்வகுப்பு விலங்குகளில் அதிகம் காணப்படுகிறது.

    (a)

    பாலூட்டிகள்

    (b)

    பறப்பன

    (c)

    ரெப்டிலியா

    (d)

    இருவாழ்விகள்

  21. கனசதுர வடிவ எபிதீலியத்தின் முக்கியப்பணி_______.

    (a)

    பாதுகாப்பு

    (b)

    சுரப்பு

    (c)

    உறிஞ்சுதல்

    (d)

    ‘ஆ’ மற்றும் ‘இ’

  22. குறு இழை கொண்ட எபிதீலியம் காணப்படும் இடம் _______.

    (a)

    தோல்

    (b)

    செரிப்புபாதை

    (c)

    பித்தப்பை

    (d)

    மூச்சுக்குழல்

  23. இணைப்புத்திசுவின் தளப்பொருளில் காணப்படும் நாரிழை யாது?

    (a)

    கொல்லாஜன்

    (b)

    ஏரியோலார்

    (c)

    குருத்தெலும்பு

    (d)

    குழல் வடிவ நாரிழை

  24. திசுக்களுக்கிடையில் பொருட்கள் கசிவதைத் தடுக்கும் அமைப்பு _______.

    (a)

    இறுக்கமான சந்திப்புகள்

    (b)

    ஒட்டும் சந்திப்புகள்

    (c)

    இடைவெளி சந்திப்புகள்

    (d)

    மீள் தன்மை சந்திப்புகள்

  25. பிறந்த குழந்தைகளில் உடல் நடுக்கம் ஏற்படுத்தாமல் வெப்ப உற்பத்தி செய்து உடல் வெப்பம் அதிகரிப்பது எதன் மூலம்?

    (a)

    வெள்ளைக் கொழுப்பு

    (b)

    பழுப்புக் கொழுப்பு

    (c)

    மஞ்சள் கொழுப்பு

    (d)

    நிறமற்ற கொழுப்பு

  26. பொய் அடுக்கு எபிதீலியத்தில் ஓரடுக்கு செல்களால் ஆன் எபிதீலியம் பல அடுக்குகள் செல்கள் கொண்ட எபிதீலியம் போன்று காட்சியளிப்பதற்கு காரணம்.

    (a)

    பல அடுக்குகள் கொண்ட எபிதீலியத்தில் சில அடுக்குகள் மறைந்து போவதால்

    (b)

    செல் அடுக்குகள் வெவேறு மட்டத்தில் காணப்படுவதால்

    (c)

    செல்களில் உலா உட்கருக்கள் வெவ்வேறு மட்டங்களில் காணப்படுவதால்

    (d)

    செல்களும் உட்கருக்களும் வெவேறு மட்டங்களில் காணப்படுவதால்

  27. நாளமில்லா சுரப்பிகளுக்கு எடுத்துக்காட்டு

    (a)

    எண்ணெய் சுரக்கும் சுரப்பி

    (b)

    ஹார்மோன்களை சுரக்கும் சுரப்பி

    (c)

    நொதிகளை சுரக்கும் சுரப்பி

    (d)

    மெழுகினை சுரக்கும் சுரப்பி

  28. கொரட்டின் நிரம்மிய வகை கூட்டு எப்பிதீலியம் இங்கு காணப்படுகிறது.

    (a)

    உணவுக்கு குழல்

    (b)

    எபிடெர்மிஸ்

    (c)

    வாய்

    (d)

    பெண் இனப்பெருக்க உறுப்பு

  29. பொருத்துக

      எபிதீலியம்   பண்பு
    (அ) தூண்வடிவ எபிதீலியம் a கனசதுர வடிவ தூண் வடிவ ஓரடுக்கு செல்கள்
    (ஆ) எளிய எபிதீலியம் b வட்ட மற்றும் நீள்வட்ட உட்கருவை செல்லின் அடிப்பகுதியில் கொண்டுள்ளது
    (இ) இடைநிலை எபிதீலியம்  c ஓரடுக்கு செல்களால் ஆனது
    (ஈ) சுரப்பு எபிதீலியம் d இவ்வகை எபிதீலியம் நீட்சியடையவும் தளரவும் செய்து உறுப்புகளை பாதுகாக்கிறது.
    (a)
    b a d c
    (b)
    d b c a
    (c)
    a c b d
    (d)
    b c d a
  30. தவறான ஜோடியை கண்டுபிடி

    (a)

    எலும்பு - எரித்ரோசைட்

    (b)

    குருத்தெலும்பு - காண்ட்ரோசைட்

    (c)

    அடிபோஸ் - திசு

    (d)

    திரவ இணைப்புத் திசு - இரத்தம்

  31. மண்புழுக்கள் உயிர்வாழ, தன் வலுவான தசைகளால் பூமியைத் துளைத்துச் செல்கின்றன.அப்போது கரிமப் பொருட்களையும் மண்ணையும் உட்கொண்டு உடலுக்குத் தேவையான உணவூட்டப் பொருட்களை எடுத்துக்கொள்கின்றன.இந்நிலைலையில், மண்புழுவின் இருமுனைகளும் சமமாக மண்ணை உட்கொள்கின்றன என்பது சரியா? தவறா?

    (a)

    சரி

    (b)

    தவறு

  32. தவளையின் வாய்க்குழி சுவாசம் _______.

    (a)

    நாசித் துளைகள் மூடியிருக்கும் போது அதிகரிக்கிறது.

    (b)

    நுரையீரல் சுவாசத்தின் போது நிறுத்தப்படுகிறது.

    (c)

    பறக்கும் ஈக்களைப் பிடிக்கும்போது அதிகரிக்கிறது.

    (d)

    வாய் திறந்திருக்கும்போது நிறுத்தப்படுகிறது.

  33. தவளையின் சிறுநீரகம் _______.

    (a)

    ஆர்க்கிநெஃப்ராஸ்

    (b)

    புரோநெஃப்ராஸ்

    (c)

    மீசோநெஃப்ராஸ்

    (d)

    மெட்டாநெஃப்ரோஸ்

  34. கீழ்வருவனவற்றுள் தவறான கூற்றைத் தேர்வு செய்யவும்

    (a)

    மண்புழுவில் ஒரு இணை ஆண் இனத்துளை உள்ளது

    (b)

    மண்புழுவின் இடப்பெயர்ச்சிக்கு நுண்முட்கள் பயன்படுகின்றன.

    (c)

    மண்புழுவின் உடற்சுவரில் வட்டத்தசைகள் மற்றும் நீள்தசைகள் உள்ளன.

    (d)

    டிப்ளோசோல் எனப்படுவது மண்புழு குடலின் ஒருபகுதியாகும்

  35. கீழ்வருவனவற்றுள் கரப்பான் பூச்சியின் உணர்வு உறுப்பு எது?

    (a)

    உணர் நீட்சிகள், கூட்டுக்கண்கள், மேல்தாடைநீட்சிகள், மலப்புழைத்தண்டுகள்

    (b)

    உணர்நீட்சிகள், கூட்டுக்கண்கள், மேல்தாடைநீட்சிகள் மற்றும் டெக்மினா

    (c)

    உணர்நீட்சிகள், ஓம்மட்டிடியா, மேல்தாடை நீட்சிகள், ஸ்டெர்னம் மற்றும் மலப்புழை நீட்சி

    (d)

    உணர்நீட்சிகள், கண்கள், மேல்தாடை நீட்சிகள் மற்றும் நடக்கும் கால்களின் டார்ஸஸ் பகுதி மற்றும் காக்சா

  36. மண்புழுவில் கருமுட்டை கூட்டை உருவாகும் சுரப்பி செல்கள் இங்கு காணப்படுகிறது.

    (a)

    பெரிஸ்டோமியம் 

    (b)

    புரோஸ்டோமியம்

    (c)

    கிளைடெல்லம்

    (d)

    பைஜிடியம்

  37. மண்புழுவின் மூளை எனப்படுவது

    (a)

    தொண்டைமேல் நரம்பு செல்

    (b)

    தொண்டை கீழ் நரம்பு செல் திரள்கள்

    (c)

    தொண்டை சூழ் இணைப்பு நரம்புகள்

    (d)

    மைய நரம்பு மண்டலம்

  38. கோனோபோபைஸிஸ் என்பது இதில், இனப்பெருக்கைத்துளையை சுற்றியுள்ள ஸ்கிளிரைடுகளாகும்

    (a)

    ஆண் பூச்சியில் மட்டும்

    (b)

    பெண் பூச்சியில் மட்டும்

    (c)

    இனம் உயிரிகளில் மட்டும்

    (d)

    ஆண் மற்றும் பெண்பூச்சிகளில்

  39. கீழ்கண்டவற்றில் உள்ள தவறான ஜோடியை கண்டுபிடிக்கவும்.

    (a)

    கார்டோடொனல் உணர்விகள் - காற்று மற்றும் நிலா அதிர்வுகள்

    (b)

    வெப்ப உணர்விகள் - காலின் முதல் நான்கு கணுக்கால்

    (c)

    தொடு உணர்விகள் - அரைவைத்தாடை நீட்சிகள்

    (d)

    நுகர்ச்சி உணர்விகள் - உணர்கொம்பு நீட்சி

  40. தவளையின் முன்பகுதியிலிருந்து மற்றும் பின்பகுதியிலிருந்து வரும் இரத்தத்தை பெறுவது _____ 

    (a)

    வலது ஆரிக்கிள்கள்

    (b)

    சைனஸ் வினோஸஸ்

    (c)

    இடது ஆரிக்கிள்

    (d)

    வென்ட்ரிகிள்

  41. கைம் (இரைப்பைப்பாகு) என்பது……..?

    (a)

    கொழுப்பைக் கொழுப்புத் துகள்களாக மாற்றும் செயல்

    (b)

    கிளிசராலில் உள்ள/மைசெல் பொருட்களை கொழுப்புத்துகள்களாக மாற்றும் செயல்

    (c)

    இரைப்பை நீர் மூலம் ஓரளவு செரித்த அமில உணவை உருவாக்குதல்

    (d)

    நடுக்குடல் பகுதியில் முழுமையாக  நெரித்த உணவு நீர்மதை உருவாக்குதல்

  42. சிறுகுடலில் செயல் மிகுகடத்தல் நிகழ்ச்சி மூலம் எது உட்கிரகிக்கப்படுகின்றது.

    (a)

    குளுக்கோஸ்

    (b)

    அமினோ அமிலங்கள்

    (c)

    சோடியம்அயனிகள்

    (d)

    மேற்கூறிய அனைத்தும்

  43. கிளிசரால், கொழுப்பு அமிலம் மற்றும் மோனோ கிளிசரைடுகளை உட்கிரகிப்பது_______.

    (a)

    குடல் உறிஞ்சியிலுள்ள நிணநீர் நாளங்கள்

    (b)

    இரைப்பை சுவர்

    (c)

    பெருங்குடல்

    (d)

    குடலுறிஞ்சியில் உள்ள இரத்த நுண் நாளங்கள்.

  44. கீழ் உள்ளனவற்றுள் பொருந்தாத இணை எது?

    (a)

    பிலிரூபின் மற்றும் பிலிவிரிடின்-சிறுகுடல் நீர்

    (b)

    ஸ்டார்ச்சை நீராற் பகுத்தல்-அமைலேஸ்கள்

    (c)

    கொழுப்பு செரித்தல்-லிபேஸ்கள்

    (d)

    உமிழ்நீர் சுரப்பி-பரோடிட்

  45. சரியான இணைகளை உருவாக்குக

    வரிசை –I வரிசை –II
    P) லிபேஸ் i) ஸ்டார்ச்
    Q)பெப்சின் ii) காசின்
    R) ரென்னின் iii) புரதம்
    S) டயலின் iv) லிபிட்
    (a)
    P Q R S
    iv  ii iii
    (b)
    P Q R S
    iii iv  ii i
    (c)
    P Q R S
    iv  iii ii i
    (d)
    P Q R S
    iii ii iv i
  46. உணவை விழுங்கும் செய்யலின்போது, மூச்சுக்குழலுக்குள் உணவு சென்றுவிடாமல் தடுப்பது.

    (a)

    கல்லட் 

    (b)

    கிளாஸ்டிஸ்

    (c)

    எப்பிகிளாட்டிஸ்

    (d)

    டான்சில்கள்

  47. சரியானவற்றைப் பொறுத்துக.

    வ. எண் வரிசை I   வரிசை II
    1 கணையம் a. வார்டனின் நாளம் 
    2. மேலண்ணச் சுரப்பி b. பர்தோலின் நாளம்
    3. நாவடிக் சுரப்பி c. ஸ்டென்சன் நாளம்
    4. கீழ்த் தாடை சுரப்பி d. விர்தங் நாளம் 
    (a)
    1 2 3 4
    d c b a
    (b)
    1 2 3 4
    a c d b
    (c)
    1 2 3 4
    d b a c
    (d)
    1 2 3 4
    e a b d
  48. 1. பெச்சினோஜன் \(\overset { X }{ \longrightarrow } \) பெப்ஸின்
    2. டிரிப்ஸினோஜன் \(\overset { Y }{ \longrightarrow } \) டிரிப்ஸின்
    3. கைமோடிரிப்ஸினோஜன் \(\overset { Z }{ \longrightarrow } \) கைமோடிரிப்ஸின் 

    (a)
    X Y Z
    உமிழ் நீர் இரைப்பைபாகு லிப்பேஸ் 
    (b)
    X Y Z
    HCl  என்டிரோகைனேஸ் டிரிப்ஸின்
    (c)
    X Y Z
    சுக்ரேஸ் நியூக்ளியேஸ் ரென்னின்
    (d)
    X Y Z
    ட்ரிப்ஸின் கார்பாக்ஸி பெப்டிடேஸ் அமைலேஸ்
  49. முன் சிறுகுடலில் காணப்படும் உணவின் அமில காரத்தன்மை

    (a)

    pH 1.5

    (b)

    pH 7.8

    (c)

    pH 5

    (d)

    pH 8.8

  50. பித்தக் கற்கள் எதனால் ஆனது?

    (a)

    பித்த உப்புகள்

    (b)

    பித்த நிறமிகள்

    (c)

    பித்த நீர்

    (d)

    கொலஸ்டிரால்

  51. எலும்பிடைத் தசைகள்  இதனிடையே அமைந்துள்ளன.

    (a)

    முதுகெலும்புத் தொடர் 

    (b)

    மார்பெலும்பு 

    (c)

    விலா எலும்புகள் 

    (d)

    குரல்வளைத் துளை 

  52. புகைபிடித்தலினால் கீழ்க்கண்ட எந்தப் பொருள் வாயு பரிமாற்ற மண்டலத்தினை பாதிக்கிறது.

    (a)

    கார்பன் மோனாக்சைடு மற்றும் புற்றுநோய் காரணிகள்

    (b)

    கார்பன் மோனாக்சைடு மற்றும் நிக்கோடின்

    (c)

    புற்றுநோய் காரணிகள் மற்றும் தார்

    (d)

    நிக்கோடின் மற்றும் தார்

  53. பத்தி I இல்நோய்களும் பத்தி II இல் அதற்கான அறிகுறிகளும் தரப்பட்டுள்ளன. சரியான இணையைத் தேர்ந்தெடு

    பத்தி- I பத்தி-II
    P) ஆஸ்துமா i) அடிக்கடி உருவாகும்
    மார்புசளி
    Q) எம்ஃபைசீமா ii) காற்று நுண்ணறைகளில்
    வெள்ளையணுக்கள் குழுமுதல்
    R) நிமோனியா iii) ஒவ்வாமை
    (a)
    P Q R
    iii ii i
    (b)
    P Q R
    iii i ii
    (c)
    P Q R
    ii iii i
    (d)
    P Q R
    ii i iii
  54. சரியான இணையைத் தேர்ந்தெடு

    பத்தி- I பத்தி-II
    p) உட்சுவாசத்திறன் உட்சுவாசத்திற்குப்பிறகு வலிந்து
    சுவாசிக்கப்படும்
    காற்றின் அதிகப்பட்ச கொள்ளளவு
    q) வெளிச்சுவாசத்திறன் ii.வெளிச்சுவாசத்திற்குப்
    பிறகு நுரையீரலில் உள்ள
    காற்றின் கொள்ளளவு
    R) உயிர்ப்புத்திறன்
    அல்லது முக்கியத்திறன்
    iii.வெளிச்சுவாசத்திற்குப்
    பிறகு உள்ளிழுக்கப்படும்
    காற்றின் கொள்ளளவு
    S) FRC உட்சுவாசத்திற்குப் பிறகு
    வெளி யேற்றப்படும்
    காற்றின் கொள்ளளவு
    (a)
    P Q R S
    i ii iii iv
    (b)
    P Q R S
    ii iii iv i
    (c)
    P Q R S
    ii iii i iv
    (d)
    P Q R S
    iii iv i ii
  55. சரியான இணையைப். தேர்ந்தெடு

    பகுதி - I பகுதி - II
    (P) மூச்சுக் காற்று அளவு i. 1000 முதல் 1100 மி.லி. வரை
    (Q) எஞ்சிய கொள்ளளவு ii. 500 மி.லி.
    (R) வெளிச்சுவாச
    சேமிப்புக் கொள்ளளவு
    iii.2500 முதல் 3000 மி.லி. வரை
    (S) உட்சுவாச சேமிப்புக்
    கொள்ளளவு
    iv.1100 முதல் 1200 மி.லி. வரை
    (a)
    P Q R S
    ii  iv i iii
    (b)
    P Q R S
    iii ii iv i
    (c)
    P Q R S
    ii iv iii i
    (d)
    P Q R S
    iii iv i ii
  56. கூற்று: உதரவிதானத்தின் வட்டத்தசைகள் சுருங்குவதால் உட்சுவாசம் நடைபெறுகிறது.
    காரணம்: உதரவிதானம் மார்பறையையும் வயிற்றறையும் பிரிக்கிறது.  

    (a)

    கூற்றும் சரி காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

    (b)

    கூற்றும் சரி காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை.

    (c)

    கூற்று சரி காரணம் தவறு.

    (d)

    கூற்று தவறு காரணமும் தவறு

  57. திசுக்களில் CO2 ன் பகுதி அழுத்தம் _________________ மி,மீ பாதரசம்.

    (a)

    45

    (b)

    40

    (c)

    90

    (d)

    0.3

  58. இதனுடன் O2 இணைவதில்லை.

    (a)

    ஆக்ஸிஹீமோகுளோபின் 

    (b)

    கார்பாக்ஸி ஹீமோகுளோபின்

    (c)

    கார்பமினோ ஹீமோகுளோபின் 

    (d)

    மெட் ஹீமோகுளோபின்

  59. ஹீமோகுளோபினோடு O2 பிணைக்கபடுவதை ஒழுங்கு படுத்துவது.

    (a)

    ஹீமோகுளோபினின் நான்கு இரும்புப் பகுதி 

    (b)

    ஆக்ஸிஜனின் அளவு

    (c)

    ஆக்ஸிஜனின் பகுதி அழுத்தம்

    (d)

    முகுளம்

  60. ஒரு மனிதன் கடலின் ஆழத்திற்குச் செல்லும் போது அவனுடைய இரத்தத்தில் கலக்கும் வாயு எது? 

    (a)

    ஹைட்ரஜன்

    (b)

    நைட்ரஜன்

    (c)

    ஆக்ஸிஜன் 

    (d)

    கார்பன்-டை-ஆக்சைடு

  61. இரத்த உறைதலில் பங்கேற்கும் பிளாஸ்மா புரதம் எது?

    (a)

    குளோபுலின்

    (b)

    ஃபைப்ரினோஜன்

    (c)

    அல்புமின்

    (d)

    சீரம் அமைலேஸ்

  62. நிணநீர் நிறமற்றுக் காணப்படுவதன் காரணம் ______.

    (a)

    இரத்த வெள்ளையணுக்கள் இல்லாததால்

    (b)

    இரத்த வெள்ளையணுக்கள் இருப்பதால்

    (c)

    ஹீமோகுளோபின் இல்லாததால்

    (d)

    இரத்தச் சிவப்பணுக்கள் இல்லாததால்

  63. இரத்தச்சிவப்பணுக்களின் புறப்பரப்பில் A மற்றும் B ஆன்டிஜன்கள் உள்ள ஒரு நபர் எந்த இரத்த வகுப்பைச் சார்ந்தவர்?

    (a)

    A

    (b)

    B

    (c)

    AB

    (d)

    O

  64. நினைவிழந்த நிலையில் உள்ள ஒரு நோயாளி அவசரச் சிகிச்சைப் பிரிவிற்குக் கொண்டு செல்லப்பட்டு, உடனடியாக இரத்தம் செலுத்த வேண்டிய நிலையில் உளளார். ஏனெனில் அவரின் இதற்கு முந்தைய அவரின் மருத்துவத் தகவல்களைத் தெரிந்துகொள்ளவோ , அல்லது தற்போது இரத்த வகையை ஆராயவோ  நேரமில்லாத நிலையில், எந்த வகை இரத்தம் அவருக்குக் கொடுக்கப்படலாம்?

    (a)

    A-

    (b)

    AB

    (c)

    O+

    (d)

    O-

  65. ஒரு நோயாளியின் இதயத்திலிருந்து வெளியேற்றப்படும் இரத்த அளவு 7500மிலி/ நிமிடம், வீச்சுக்கொள்ளவு 50 மிலி எனில் அவரது நாடித்துடிப்பு வீதம் (துடிப்பு/நிமிடம்) எவ்வளவு?

    (a)

    50

    (b)

    100

    (c)

    150

    (d)

    400

  66. இரத்தச் சிவப்பணுக்கனுக்குள் உள்ளும் புறமும் O2 எளிதாக ஊடுருவிச் செல்வதற்கான காரணம்

    (a)

    சிவப்பணுக்களின் சைட்டோபிளாசத்தினுள் ஹீமோகுளோபின் கரைந்த நிலையில்  காணப்படுவதால் 

    (b)

    சிவப்பணுக்களின் இருபுறமும் குழிந்த தன்மையுடையதால் 

    (c)

    சிவப்பணுக்களில் உட்கரு, மைட்டோகாண்டிரியா போன்ற செல் நுண்ணுறுப்புகள் காணப்படாததால் 

    (d)

    சிவப்பணுக்கள் அதிகமான ஹீமோகுளோபினை தன்னகத்தே கொண்டுள்ளதால் 

  67. சிவப்பணுக்கள் உற்பத்திக்குத் தேவையான எரித்ரோபாய்டின் எனும் ஹார்மோனை சுரப்பது _____ 

    (a)

    எலும்பு மஜ்சை  

    (b)

    கல்லீரல் 

    (c)

    தண்டு செல்கள் 

    (d)

    சிறுநீரகம் 

  68. இந்த இரத்தச் செல்கள் எலும்பு மஞ்சையில் வேறுபாடடைந்து உருவாகின்றன.

    (a)

    இரத்தச் சிவப்பணுக்கள் 

    (b)

    இரத்தத் தட்டுகள் 

    (c)

    பிளேட்டுலெட்டுகள் 

    (d)

    இரத்த வெள்ளையணுக்கள் 

  69. அனோஸ்டாமோசிஸ் என்பது 

    (a)

    நுண்தமனி இரத்தக்குழாய்களும், நுண் சிறைகளும் இணைவது 

    (b)

    கீழ் பெருஞ்சிரையும் மேல் பெருஞ்சிரையும் இணைவது 

    (c)

    நுரையீரல் தமனியும் நுரையீரல் சிரையும்  இணைவது 

    (d)

    சில இடங்களில் தமனிகள் இணைந்து பிரிவதற்குப் பதிலாக ஒன்றாக இணைவது 

  70. டையஸ்டாலிக் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு காரணம் 

    (a)

    அரிக்கிள்கள் சுருங்குவதால் 

    (b)

    வெண்டரிக்கிள்கள் சுருங்குவதால்

    (c)

    அரிக்கிள்கள் தளர்வடைவதால்  

    (d)

    இதயத்தின் அறைகள் தளர்ச்சியடையும் போது 

  71. பின்வருவனவற்றுள் வைரஸ்களைப் பற்றிய சரியான கூற்று எது?

    (a)

    வளர்சிதை மாற்றத்தைக் கொண்டுள்ளன

    (b)

    நிலைமாறும் ஒட்டுண்ணிகளாகும்

    (c)

    DNA அல்லது RNA- வை கொண்டுள்ளன

    (d)

    நொதிகள் காணப்படுகின்றன

  72. கிராம் நேர் பாக்டீரியங்களைப் பற்றிய தவறான கூற்றைக் கண்டறிக

    (a)

    டெக்காயிக் அமிலம் காணப்படுவதில்லை

    (b)

    செல்சுவரில் அதிகளவு பெப்டிடோ  கிளைக்கான் உள்ளது.

    (c)

    செல்சுவர் ஓரடுக்கால் ஆனது.

    (d)

    லிப்போபாலிசாக்கராக்கரைட்கள் கொண்ட செல்சுவர்

  73. ஆர்க்கிபாக்டீரியம் எது?

    (a)

    அசட்டோபாக்டர்

    (b)

    எர்வினீயா

    (c)

    டிரிப்போனிமா

    (d)

    மெத்தனோ பாக்டீரியம்

  74. நீலப்பசும் பாசிகளோடு தொடர்புடைய சரியான கூற்று எது?

    (a)

    நகர்வதற்கான உறுப்புகள் இல்லை.

    (b)

    செல்சுவரில் செல்லுலோஸ் காணப்படுகிறது 

    (c)

    உடலத்தைச் சுற்றி மியூசிலேஜ் காணப்படுவதில்லை

    (d)

    ஃபுளோரிடியன் தரசம் காணப்படுகிறது.

  75. சரியாகப் பொருந்திய இணையைக் கண்டறிக

    (a)

    ஆக்டீனோமைசீட்கள் - தாமதித்த வெப்புநோய்

    (b)

    மைக்கோ பிளாஸ்மா-கழலைத் தாடை நோய்

    (c)

    பாக்டீரியங்கள்- நுனிக்கழலை நோய்

    (d)

    பூஞ்சைகள்- சந்தனக் கூர்நுனி நோய்

  76. பொருத்து: தாவரங்கள் அதில் காணப்படும் பாலிலிலா  இனப்பெருக்க முறையோடு பொருத்துக.

    வ.எண்   தாவரங்கள்  இனப்பெருக்க முறை 
    I.  ஸ்பைரோஸகரா   a.புரோட்டோனிமா 
    II.  பிளனேரியா   b.துண்டாதல்  
    III.   ஆஸ்பர்ஜில்லஸ்     c.மீளுருவாக்கம்    
    IV.  மாஸ்கள்  d.கொனிடியங்கள்      
    (a)

    I.b, II.d, III.a, IV. c

    (b)

    I.a, II.c,III.b,IV.d 

    (c)

    I.c, II.d, III.b, IV. a

    (d)

    I.b, II.c, III.d, IV.a

  77. பசுங்கணிகத்தில் பச்சையம் a  மற்றும்  பச்சையம் c யைக் கொண்ட பாசிகள் இப்பிரிவின் கீழ் வைக்கப்படுள்ளது. 

    (a)

    தாவரங்கள் 

    (b)

    ஆர்க்கி பாக்டிரீயா 

    (c)

    குரோமிஸ்டா 

    (d)

    புரோட்டிஸ்டா 

  78. பாக்டீரியாவை உயிர்எதிர் பொருட்களிலிருந்து பாதுகாப்பது

    (a)

    பிளாஸ்மிட்

    (b)

    ஃபிம்ரியே

    (c)

    கிளைக்கோகேலிக்ஸ்

    (d)

    பாலிசோம்

  79. பாலை தயிராக மாற்றும் பாக்டீரியம் எது?

    (a)

    லாக்டோபேசில்லஸ் லாக்டிஸ்

    (b)

    லாக்டோபேசில்லஸ் அசிடோஃபோபஸ்

    (c)

    லாக்டோபேசில்லஸ் பல்கேரிக்கஸ்

    (d)

    ஸ்ட்ரெப்கோகாக்கஸ் லாக்டிஸ்

  80. மழைக்குப்பின் மன்வாசனைக்கு காரணமான ஜியோஸ்மின் எனும் எளிதில் ஆவியாகக்கூடிய கூட்டுப் பொருட்களை  உருவாக்குவது. 

    (a)

    சயனோ பாக்டீரியா

    (b)

    ஆக்டினோபாக்டீரியா

    (c)

    மைக்கோபிளாஸ்மா

    (d)

    ஆர்க்கிபாக்டீரியா

  81. எப்பிரிவு தாவரம் ஓங்கிய கேமீட்டக தாவர சந்ததியைக் கொண்டது?

    (a)

    டெரிடோஃபைட்கள்

    (b)

    பிரையோஃபைட்கள்

    (c)

    ஜிம்னோஸ்பெர்ம்கள்

    (d)

    ஆஞ்சியோஸ்பெர்ம்கள்

  82. டெரிடோஃபைட்களில் கேமீட்டக தாவர சந்ததியைக் குறிப்பது ______.

    (a)

    முன்உடலம்

    (b)

    உடலம்

    (c)

    கூம்பு

    (d)

    வேர்த்தாங்கி

  83. ஒரு ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரத்தின் ஒற்றைமடிய குரோமோசோம் எண்ணிக்கை 14 எனில் அதன் கருவூண் திசுவில் உள்ள குரோமோசோம் எண்ணிக்கை ______.

    (a)

    7

    (b)

    14

    (c)

    42

    (d)

    28

  84. ஜிம்னோஸ்பெர்ம்களில் கருவூண் திசு உருவாவது ______.

    (a)

    கருவுறுதலின் போது

    (b)

    கருவுறுதலுக்கு முன்

    (c)

    கருவுறுதலுக்குப் பின்

    (d)

    கரு வளரும் போது

  85. இந்த வகை வாழ்க்கை சுழற்சி உயிரிகளில் வித்தகத் தாவர நிலை (2n) ஒங்கி காணப்பட்டு ஒளிச்சேர்க்கை திறன்பெற்று சார்பின்றி வாழ்கின்றன.

    (a)

    இரட்டைமடிய கேமீட் உயிரி

    (b)

    ஒற்றை இரட்டை மடிய கேமீட்  உயிரி

    (c)

    ஒற்றை மடிய கேமீட்  உயிரி

    (d)

    இரட்டை ஒற்றை மடிய கேமீட்  உயிரி

  86. தவறான ஜோடியைக் கண்டுபிடி.

    (a)
    வ.எண் பாசிகளின் பெயர் பசுங்கணிகத்தின் வாழிடம் 
    1. கேரா    வட்டு வடிவம்
    (b)
    வ.எண் பாசிகளின் பெயர் பசுங்கணிகத்தின் வாழிடம் 
    2. ஊடோகோனியம்  வலைப்பின்னல் வடிவம் 
    (c)
    வ.எண் பாசிகளின் பெயர் பசுங்கணிகத்தின் வாழிடம் 
    3. சைக்னீமா  நட்சத்திர வடிவம்
    (d)
    வ.எண் பாசிகளின் பெயர் பசுங்கணிகத்தின் வாழிடம் 
    4. யூலோத்ரிக்ஸ்  சுருள் வடிவம் 
  87. வாஸ்குலத் தொகுப்புடைய பூவாத்தாவரங்கள் -எவை?

    (a)

    தாலோஃபைட்டா 

    (b)

    பிரையோஃபைட்டா

    (c)

    டெரிடோஃபைட்டா

    (d)

    ஸ்பெர்மெட்டோஃபைட்டா 

  88. டெரிடோஃபைட்களில், நீரைக் கடத்துவது டிரக்கீடுகள் ஆகும். ஆனால் இத்தாவரத்தில் சைலக்குழாய்கள் நீரைக்   கடத்துகின்றன.

    (a)

    ஈகுவிசிட்டம் 

    (b)

    செலாஜினெல்லா  

    (c)

    லைக்கோபோடியம் 

    (d)

    மார்சீலியா   

  89. துணை செல்கள் இந்தாவரப் பிரிவில் காணப்படவில்லை?

    (a)

    ஆஞ்சியோஃபெர்ம்

    (b)

    ஜிம்னோஸ்பெர்ம் 

    (c)

    டெரிடோஃபைட்கள்  

    (d)

    பூஞ்சைகள் 

  90. வேர்கள் என்பவை ______.

    (a)

    கீழ்நோக்கியவை, எதிர் புவி நாட்டமுடையவை, நேர் ஒளி நாட்டமுடையவை

    (b)

    கீழ்நோக்கியவை, நேர் புவி நாட்டமுடையவை, எதிர்ஒளி நாட்டமுடையவை

    (c)

    மேல்நோக்கியவை, நேர் புவி நாட்டமுடையவை, எதிர்ஒளி நாட்டமுடையவை

    (d)

    மேல்நோக்கியவை, எதிர் புவி நாட்டமுடையவை, நேர் ஒளி நாட்டமுடையவை

  91. கீழ்கண்டவற்றில் பல்காய்ப்புத் தாவரம் எது?

    (a)

    மாஞ்சிஃபெரா

    (b)

    பாம்புசா

    (c)

    மியூசா

    (d)

    அகேவ்

  92. பிரையோஃபில்லம், டயாஸ்கோரியா – எதற்கு எடுத்துக்காட்டு

    (a)

    இலை மொட்டு, நுனி மொட்டு

    (b)

    இலை மொட்டு, தண்டு மொட்டு

    (c)

    தண்டு மொட்டு, நுனி மொட்டு

    (d)

    தண்டுமொட்டு, இலைமொட்டு

  93. கீழ்கண்டவற்றில் சரியான கூற்று எது?

    (a)

    பைசம் சட்டைவம் தாவரத்தில் சிற்றிலைகள் பற்றுக்கம்பியாக மாறியுள்ளன

    (b)

    அடலான்ஷியா தாவரத்தில் நுனி மொட்டு முட்களாக மாறியுள்ளது.

    (c)

    நெப்பந்தஸ் தாவரத்தில் நடு நரம்பு மூடியாக மாறியுள்ளது.

    (d)

    ஸ்மைலாக்ஸ் தாவரத்தில் மஞ்சரி அச்சு பற்றுக்கம்பியாக மாறியுள்ளது.

  94. தவறான இணையைத் தேர்ந்தெடு

    (a)

    மியூஸா – ஓர் நடு நரம்பு

    (b)

    லாப்லாப் – முச்சிற்றிலைஅங்கைக்கூட்டிலை

    (c)

    அகாலிஃ பா – இலை மொசைக்

    (d)

    அலமாண்டா – மூவிலை அமைவு

  95. குழல்தண்டு இத்தாவரத்தில் காணப்படுகிறது. குழல் தண்டு தெளிவான கணுக்களையும், இலை உறைகளால் சூழப்பட்ட, உள்ளீடற்ற கணுவின் பகுதிகளைக் கொண்ட தண்டாகும்

    (a)

    சவுக்கு

    (b)

    வில்வமரம்

    (c)

    பாக்குமரம்

    (d)

    மூங்கில்

  96. உருளைக்கிழங்கில் கண்கள் எனப்படுவது

    (a)

    நுனிமொட்டு

    (b)

    கோணமொட்டு

    (c)

    கணுக்கள்

    (d)

    கணுவிடைப்பகுதிகள்

  97. தாவரத்தின் தண்டு கிளைதலை நிர்ணயிப்பது எது?

    (a)

    நுனி ஆக்குத்திசுக்கள்

    (b)

    இடையாக்கு திசுக்கள்

    (c)

    பக்க ஆக்குதிசுக்கள்

    (d)

    நிரந்தர திசுக்கள்

  98. லிக்யூல் எனப்படுவது

    (a)

    பெரும்பாலான இருவித்திலைத் தாவரங்களின் இலையடிப்பகுதியில் பக்கத்திற்கு ஒன்று அல்லது இரண்டு வளரிகளைக் குறிக்கிறது

    (b)

    ஒரு வித்திலைத் தாவரத்தில் இலையடிப் பகுதிக்கும், இலைப்பரப்பிற்கும் இடையில் உள்ள துணை வளரியைக் குறிக்கிறது

    (c)

    இலையின் கோணத்தில் காணப்படும் வளரியைக் குறிக்கிறது

    (d)

    இலையடிப் பகுதியில் உள்ள இலையடிச் செதில்களைக் குறிக்கிறது

  99. அங்கை வடிவ இணைப்போக்கு -விரி நரம்பைவிற்கான எடுத்துக்காட்டு.

    (a)

    மூங்கில்

    (b)

    பனை

    (c)

    கல்வாழை

    (d)

    இஞ்சி

  100. வெக்ஸில்லரி இதழமைவு இந்தக் குடும்பத்தின் பண்பாகும்.

    (a)

    ஃபேபேஸி

    (b)

    ஆஸ்ட்ரேஸி

    (c)

    சொலானேசி

    (d)

    பிராஸிக்கேசி

  101. இணைந்த சூலக இலைகள் கொண்ட சூலகவட்டம் இவ்வாறு அழைக்கப்படும்.

    (a)

    இணையாச் சூலகஇலை சூலகம்

    (b)

    பல சூலகஇலை சூலகம்

    (c)

    இணைந்த சூலகஇலை சூலகம்

    (d)

    மேற்கூறிய எதுவுமில்லை

  102. திரள்கனி இதிலிருந்து உருவாகிறது.

    (a)

    பல இணையாச் சூலகஇலை சூலகப்பை

    (b)

    பல இணைந்த சூலகஇலை சூலகப்பை

    (c)

    பல சூலகஇலை சூலகப்பை

    (d)

    முழு மஞ்சரி

  103. ஒரு மஞ்சரியில் மலர்கள் பக்கவாட்டில் அடி முதல் நுனி நோக்கிய வரிசையில் அமைந் திருந்தால், இளம் மொட்டு _____.

    (a)

    அண்மையிலிருக்கும்

    (b)

    சேய்மையிலிருக்கும்

    (c)

    இடைச்செருகப்பட்டிருக்கும்

    (d)

    எங்குமிருக்கும்

  104. உண்மைக்கனி என்பது _____.

    (a)

    மலரின் சூலகப்பை மட் டுமே கனியாக உருவாவது

    (b)

    மலரின் சூலகப்பை மற்றும் புல்லிவட்டம் கனியாக உருவாவது

    (c)

    மலரின் சூலகப்பை, புல்லிவட்டம் மற்றும் பூத்தளம் கனியாக உருவாவது

    (d)

    மலரின் அனைத்து வட்டங்களும் கனியாக உருவாவது

  105. சைம் வகை மஞ்சரியில் காணப்படாத பண்பு எது? 

    (a)

    மஞ்சரி அச்சு வரம்புடைய வளர்ச்சியுடையது.

    (b)

    மலர்தல் மையம் நோக்கியது.

    (c)

    முதிர் மலர்கள் மஞ்சரி அச்சின் நுனியில் காணப்படும். 

    (d)

    மலர்கள் அடி நோக்கிய வரிசையில் அமைந்திருக்கும்.

  106. சிறுகதிர் மஞ்சரியில் லெம்மா எனப்படுவது __________ ஆகும்.

    (a)

    பூக்காம்புச் செதில் 

    (b)

    மஞ்சரி அடிச்செதில்  

    (c)

    பூவடிச்செதில் 

    (d)

    நிறமற்ற பூவிதழ்கள் 

  107. ஆண்மலர்கள், பெண்மலர்கள் மற்றும் இருபால் மலர்கள் ஒவ்வொன்றும் தனித்தனித் தாவரங்களில் காணப்படுவது___________ எனப்படும்.

    (a)

    ஆண்-பெண் இருபால் மலர்த்தாவரங்கள் 

    (b)

    ஆண் -இரு பால் மலர் தனித்தாவரங்கள் 

    (c)

    முப்பால்மலர்த்தனித்தாவரங்கள் 

    (d)

    பெண்இருப்பால் மலர்த்தனித்தாவரங்கள் 

  108. வ.எண்  பகுதி I  பகுதி II 
    பொல்லினியம்  மகரந்தக் கம்பிகளும், மகரந்தப்பைகளும் முழுமையாக
    இணைந்து இருக்கும்.
    II  சிஞ்சினிசஷியஸ்  மகரந்தத்தூள்கள் ஒன்றாக இணைந்து ஒரே தொகுப்பாக
    காணப்படும்.
    III  சினான்ட்ரஸ்  மகரந்தத் தாள்களுடன் சூல் முடி இணைந்து உருவாகுவது. 
    IV  கைனோஸ் பீஜியம்  மகரந்தக் கம்பிகள் இணையாமல் தனித்தும், மகரந்தப் பைகள்
    இணைந்தும் காணப்படும்.
    (a)

    I. a, II.d, III.c, IV.b 

    (b)

    I. d, II.c, III.b, IV.a 

    (c)

    I. b, II.d, III.a, IV.c 

    (d)

    I. c, II.b, III.a, IV.d

  109. பொய்க்கனியான பலாவில் உண்ணும் பகுதி, மலரின் __________ ஆகும்.

    (a)

    சூற்பை 

    (b)

    பூத்தளம் 

    (c)

    பூவிதழ்கள் 

    (d)

    பூவடிச் செதில்கள் 

  110. முதன்மை வகைக்காட்டு காணப்படாத போது  அசலற்ற தொகுப்பிலிருந்து பெறப்படட்  மாதிரி பெயர்ச்சொல் இவ்வாறு அறியப்படுகிறது

    (a)

    ஹோலோடைப் 

    (b)

    நியோடைப்

    (c)

    ஐசோடைப்

    (d)

    பாராடைப்

  111. மரபுவழி வகைப்பாடு எதனைப் பிரதிபலிப்பதால் மிகவும் விரும்பத்தக்க வகைப்பாடாக உள்ளது.

    (a)

    ஒப்பீட்டு உள்ளமைப்பியல்

    (b)

    உற்பத்தி செய்யப்பட்ட பூக்களின் எண்ணிக்கையை

    (c)

    ஒப்பீட்டு செல்லியல்

    (d)

    பரிணாம உறவுமுறை

  112. பல்வேறு வகைப்பட்ட  தாவர நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஒற்றுமைகள் மற்றும் வேற்றுமைகள் அடங்கிய வகைப்பாடு_______.

    (a)

    வேதிய வகைப்பாடு

    (b)

    மூலக்கூறு வகைப்பாட்டு அமைப்புமுறை

    (c)

    ஊநீர்சார் வகைப்பாடு

    (d)

    எண்ணியல் வகைப்பாடு

  113. பின்வரும் எந்தத் தாவரத்தின் வேர் முண்டுகளில் நைட்ரஜனை நிலைநிறுத்தும் இழை நுண்ணுயிரிர்கள் உள்ளன.

    (a)

    குரோட்டலேரியா ஜன்சியா

    (b)

    சைகஸ் ரெவலூட்டா 

    (c)

    சைசர் அரிட்டினம்

    (d)

    கேசியுவரைனா  ஈகுசிடிஃபோலியா

  114. இருபக்கச்சீர் கொண்ட மலர்கள்_______.

    (a)

    சீரோஃபிஜியா

    (b)

    தெவிஷியா 

    (c)

    டட்டுரா

    (d)

    சொலானம்

  115. கரோலஸ் லின்னேயஸின் இறங்கு வரிசை வகைப்பாடு படி நிலைகளின், சரியாக உள்ளதை குறிப்பீடு.          

    (a)

    துறை \(\rightarrow \) வகுப்பு\(\rightarrow \)பெரும்பிரிவு\(\rightarrow \)பிரிவு பேரினம் \(\rightarrow \) சிற்றினம் \(\rightarrow \) குடும்பம் 

    (b)

    பெரும்பிரிவு \(\rightarrow \) பிரிவு \(\rightarrow \)  சிற்றினம் \(\rightarrow \) வகுப்பு \(\rightarrow \) துறை \(\rightarrow \) பேரினம் \(\rightarrow \) பெரும்பிரிவு   

    (c)

    குடும்பம் \(\rightarrow \)வகுப்பு \(\rightarrow \) துறை \(\rightarrow \) சிற்றினம் \(\rightarrow \) பேரினம் \(\rightarrow \) பிரிவு \(\rightarrow \)பெரும்பிரிவு

    (d)

    பெரும்பிரிவு \(\rightarrow \) பிரிவு \(\rightarrow \)வகுப்பு \(\rightarrow \) துறை \(\rightarrow \) குடும்பம் \(\rightarrow \) பேரினம் \(\rightarrow \) சிற்றினம் 

  116. வகைப்பாட்டின் அடிப்படை அலகு எது?   

    (a)

    பேரினம்

    (b)

    சிற்றினம்     

    (c)

    குடும்பம் 

    (d)

    வகுப்பு 

  117. குரோமோசோம்களின் பண்புகள் மாறும் நிகழ்வுகளில் அடிப்படையில் தாவர வகைப்பாட்டு, சிக்கல்களை களைவது _____ எனப்படும்     

    (a)

    வேதிமுறை வகைப்பாடு 

    (b)

    மூலக்கூறு வகைப்பாடு

    (c)

    குருதி நீர்ச்சார் வகைப்பாடு   

    (d)

    கேரியோடாக்ஸானமி       

  118. DNA வரிக்குறியிடுதலின் தந்தை எனக் கருதப்படுவர்         

    (a)

    ஆர்தர் கிரான்கிவிஸிட்   

    (b)

    அடால்∴ப் எங்ளர்    

    (c)

    காரல் A பிராண்டில் 

    (d)

    பால்ஹெபர்ட்    

  119. _______ எனும் தாவரத்தில் கிளைகள் இலைத் தொழில் தண்டாக உருமாறியுள்ளது 

    (a)

    டிரசினா   

    (b)

    ஸ்மைலாக்ஸ்     

    (c)

    ரஸ்கஸ்    

    (d)

    அலோ 

  120. ரைபோசோம்களின் இரண்டு துணை அலகுகளும் எந்த அயனி நிலையில் நெருக்கமாகத் தொடர்ந்து சேர்ந்திருக்கும்?

    (a)

    மெக்னீசியம்

    (b)

    கால்சியம்

    (c)

    சோடியம்

    (d)

    ஃபெர்ரஸ்

  121. பைலோஜெனியை தெரிந்துக் கொள்ள கீழ்க்கண்ட எந்த வரிசைகள் பயன்படுத்தப்படுகிறது.?

    (a)

    mRNA

    (b)

    rRNA

    (c)

    tRNA

    (d)

    HnRNA

  122. பல செல்களின் பணிகள் ஒழுங்காகவும் மற்றும் மைட்டாட்டிக் செல்பகுப்பு இருந்தாலும் கூட இவைகளைப் பெற்றிருப்பதில்லை?

    (a)

    பிளாஸ்மா சவ்வு

    (b)

    சைட்டோஸ்கெலிட்டன்

    (c)

    மைட்டோகாண்டிரியா

    (d)

    கணிகங்கள்

  123. செல் சவ்வின் அமைப்பில் பாய்ம திட்டு மாதிரியைக் கருத்தில்கொண்டு லிப்பிடுகளும் புரதங்களும், லிப்பிடு ஒற்றை அடுக்கிலிருந்து மறுபுறத்திற்கு இடப்பெயர்ந்து செல்லக் கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது.

    (a)

    லிப்பிடுகள் மற்றும் புரதங்கள் அங்கும் இங்கும் இடப்பெயர்வதில்லை

    (b)

    லிப்பிடு மற்றும் புரதங்கள் அங்கும் இங்கும் இடப்பெயர்கின்றன

    (c)

    லிப்பிடுகள் அரிதாக அங்கும் இங்கும் இடப்பெயர்கின்றன, புரதங்கள் அல்ல .

    (d)

    புரதங்கள் அங்கும் இங்கும் இடப்பெயர்கின்றன, லிப்பிடுகள் அல்ல .

  124. பட்டியல் I –ஐ பட்டியல் II- உடன் பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடு?

    பட்டியல் I பட்டியல் II
    அ) தைலாய்டுகள் (i) தட்டு வடிவப்  பை போன்ற கோல்கை உறுப்புகள்
    ஆ) கிரிஸ்டே (ii) சுருங்கிய அமைப்பை கொண்ட  DNA 
    இ) சிஸ்டர்னே (iii) ஸ்ட்ரோமாவின் தட்டையான பை போன்ற சவ்வு
    ஈ) குரோமாட்டின் (iv) மைட்டோகாண்டிரியாவில் உள்ள மடிப்புகள்
    (a)
    அ  ஆ  இ  ஈ 
    (iii) (iv) (ii) (i)
    (b)
    அ  ஆ  இ  ஈ 
    (iv ) (iii) (i) (i i)
    (c)
    அ  ஆ  இ  ஈ 
    (iii) (iv) (i) (ii)
    (d)
    அ  ஆ  இ  ஈ 
    (iii) (i) (iv) (ii)
  125. அனைத்து உயிருள்ள செல்களும் ஏற்கனவே உள்ள  உயிருள்ள செல்களிலிருந்து செல்வகுப்பின் மூலம் உருவாகின்றன என்ற கருத்தை கூறியவர் இவர்.      

    (a)

    Z .ஜேன் சென்  

    (b)

    ரூடால்ப் விரிச்சௌ    

    (c)

    மாத்தியோஸ் ஷுலிடன்    

    (d)

    தியோடர் ஷுவான்    

  126. உறக்க நிலையில் உள்ள விதைகளின் புரோட்டோபிளாசத்தில் காணப்படும் தண்ணிர் அளவு.  

    (a)

    5%

    (b)

    10%

    (c)

    15%

    (d)

    20%

  127. மீசோகேரியோட்டுகளின் DNA வானது .     

    (a)

    நீள் வடிவம், ஹிஸ்டோன் புரதம் கொண்டவை    

    (b)

    நீள் வடிவம், ஹிஸ்டோன் புரதம் அற்றவை 

    (c)

    வட்ட வடிவம் ஹிஸ்டோன் புரதம் அற்றவை

    (d)

    சுருள் வடிவம், ஹிஸ்டோன் புரதம் கொண்டவை.

  128. செல் பகுப்பின் பொது குரோமோசோமில் காணப்படும் பகுதியில் கதிர்கொல் இலைகள் இணைக்கப்படுகின்றன  

    (a)

    குரோமேட்டிட்     

    (b)

    கைனிட்டோகோர்     

    (c)

    சென்ட்ரோமியர்    

    (d)

    சாட்டிலைட்    

  129. செல்லின் வாழ்நாட்காலம் , இனப்பெருக்கத் தகுதியை தீர்மானிப்பது  குரோமோசோமின்          

    (a)

    சென்ட்ரோமியர்   

    (b)

    கைனிட்டோகோர்     

    (c)

    டிலோமியர்   

    (d)

    சாட்டிலைட்   

  130. செல் சுழற்சியின் சரியான வரிசை ______.

    (a)

    S - M - G1 - G2

    (b)

    S - G1 - G2 - M

    (c)

    G1 - S - G2 - M

    (d)

    M - G - G2 - S

  131. விலங்கு செல்களில் மைட்டாசிஸ் சரியாக நடைபெறுவதற்கு (APC) அனஃபேஸ் பிரிநிலைக்கு முன்னேறுதலை ஏற்படுத்த கூட்டமைப்பு உதவுகிறது. இது ஒரு புரத சிதைவை செயல்படுத்தும் கூட்டமைப்பாகும். மனித செல்லில் APC பிழையானால் கீழே உள்ளவற்றில் எது நிகழ முடியும்.

    (a)

    குரோமோசோம்கள் துண்டாக்கப்படுதல்

    (b)

    குரோமோசோம்கள் குறுக்கம் அடையாது

    (c)

    குரோமோசோம்கள் பிரிவுறாது

    (d)

    குரோமோசோம்களில் மீள் சேர்க்கை நிகழும்

  132. செல்சுழற்சியின் S-நிலையில் ______.

    (a)

    ஒவ்வொரு செல்லிலும் உள்ள DNA-வின் அளவு இரண்டு மடங்காகிறது

    (b)

    ஒவ்வொரு செல்லிலும் உள்ள DNA -வின் அளவு தொடர்ந்து அதே அளவு இருக்கும்

    (c)

    குரோமோசோம்களின் எண்ணிக்கை அதிகமாகும்

    (d)

    ஒவ்வொரு செல்லிலும் உள்ள DNA -வின் அளவு பாதியாக குறையும்

  133. எதற்கு இடையே ஜோடிசேர்தல் (சினாப்சிஸ்) நடைபெறுகிறது.

    (a)

    mRNA மற்றும் ரைபோசோம்கள்

    (b)

    கதிர்கோல் இழைகள் மற்றும் சென்ட்ரோமியர்கள்

    (c)

    இரண்டு ஒத்த குரோமோசோம்கள்

    (d)

    ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் கேமீட்டு

  134. குன்றல் பகுப்பில் (மியாஸிஸ்) குறுக்கே கலத்தல் எங்கு ஆரம்பிக்கிறது.

    (a)

    டிப்ளோட்டீன்

    (b)

    பாக்கிடீன்

    (c)

    லெப்டோட்டீன்

    (d)

    சைக்கோட்டீன்

  135. இடைக்கால நிலையில் G1 நிலையில் செல்கள் பகுபடாமல் தடைபடுவதற்கு காரணம் யாது?
    (I) பகுப்பிற்குத் தேவையான ஊட்டம் இல்லாமை
    (II) பகுப்பிற்குத தேவையான வளர்ச்சி ஊக்கிக் காரணிகள் இல்லாமை 
    (III) சைக்கிளின்கள் தட்டைப்புள்ளியாக செயல் படுவதால்
    (IV) செல்கள் வளர்சிதை மாற்றமடைந்து G0 நிலைக்குச் செல்வதால் 

    (a)

    I, IV

    (b)

    I, II, IV 

    (c)

    I, II, IV

    (d)

    I, II, III, IV

  136. DNA அளவானது 2C யாக இடைக்கால நிலையின் இந்த நிலையில் உள்ளது.

    (a)

    G1 

    (b)

    G0 

    (c)

    (d)

    G2 

  137. சரியான கூற்று எதுவெனக் கண்டுபிடி?
    (I) டீலோஃபேஸ் நிலையில் கதிர்கோல் ஏழைகள் மறைகின்றன.
    (II) மெட்டாஃபேஸ் நிலையிலிருந்து அனாஃபேஸ் நிலைக்கு முன்னேறுதலை ஒழுங்குபடுத்துவது சைக்கோலோசோம் ஆகும்.
    (III) மெட்டாஃபேஸ் நிலையில் குரோமோசோமின் புற அமைப்பு நன்கு புலப்படும்.
    (IV) புரோஃபேஸில் தாவரச் செல்களில் நட்சத்திர இழைகள் தோன்றுகின்ற.
    (V) மைட்டாசிஸ்சின் போது படியெடுத்தல் தடுக்கப் படுகிறது.

    (a)

    II, IV, V

    (b)

    I, II, III, V

    (c)

    I, III, IV, V

    (d)

    II, III, IV

  138. நட்சத்திர மீன்களின் கரங்களின் இழப்பு மீட்டலுக்கு காரணமான பகுப்பு எது?

    (a)

    மியாசிஸ்

    (b)

    நேர்முகப்பகுப்பு

    (c)

    சமநிலை பகுப்பு

    (d)

    ஏமைட்டாசிஸ்

  139. ஒத்திசைவு குரோமோசோம்கள் இத்துணை நிலையில் இணை சேர்கின்றன?

    (a)

    லெப்டோடீன்

    (b)

    சைக்கோட்டீன்

    (c)

    பாக்கிடீன்

    (d)

    டிப்லோட்டீன்

  140. கார அமினோ அமிலம் ______.

    (a)

     ஆர்ஜினைன்

    (b)

    ஹிஸ்டிடின்

    (c)

    கிளைசின் 

    (d)

    குளுட்டாமைன்

  141. பின்னூட்ட ஒடுக்கத்திற்கு உதாரணம் ______.

    (a)

    சைட்டோகுரோமில் சையனைடு வினை

    (b)

    ஃபோலிக் அமிலத்தை உருவாக்கும் பாக்டீரியாவில் சல்ஃபர் மருந்தின் வினை

    (c)

    குளுக்கோஸ் – 6 – பா ஸ்பேட்டை ஆலோஸ்டீரிக் ஒடுக்கம் மூலம் ஹெக்சோகைனேசை ஒடுக்கம் செய்கிறது

    (d)

    சக்சினிக்டிஹைட்ர ஜினேஸ்சை மலோனேட் ஒடுக்கம் செய்கிறது

  142. பார்வை ஒளி சார்ந்த ஐசோமியர், வடிவியல் ஐசோமியர் அல்லது நிலை சார்ந்த ஐசோமியர்களாக பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கு நொதிகள் இவற்றிற்கு ஊக்கிகளாகச் செயல்பன்றன.

    (a)

    லைகேஸ்சுகள் 

    (b)

    லையேஸ்கள் 

    (c)

    ஹைட்ரோலேசுகள்

    (d)

    ஐசோமியரேசுகள்

  143. புரதங்கள் பல செயலியல் பயன்பாடுகள் கொண்டுள்ளது. உதாரணமாகச் சில நொதிகளாகப் பயன்படுகிறது கீழ்கண்டவற்றில் ஒன்று புரதங்களின் கூடுதலான பணியை மேற்கொள்கின்றன.

    (a)

    உயிர் எதிர் பொருள்

    (b)

    நிறமிகளாகக் கொண்டு தோலின் நிறத்தை நிர்ணயித்தல்

    (c)

    மலர்களின் நிறங்கள் நிறமிகளைக் கொண்டு தீர்மானிக்கபடுகின்றன

    (d)

    ஹார்மோன்கள் 

  144. பாலிசாக்கரைடான செல்லுலோஸில் காணப்படும் மானோமெர்கள் எது?

    (a)

    பிரக்டோஸ்கள் 

    (b)

    குளுக்கோஸ்கள் 

    (c)

    ஹெக்கோஸ்கள் 

    (d)

    கீட்டோஸ்கள் 

  145. கிளைக்காலிஸிசின் இறுதி நிலையில் பைருவேட் கைனேஸ் நொதியின் செயல்பாட்டை அலனைன் என்ற அமினோ அமிலம் பாதித்தல் இதற்கு எடுத்துக்காட்டாக கூறப்படுகிறது.

    (a)

    மாற்றமுடியாத தன்மையுடைய ஒடுக்கிகள் 

    (b)

    வேற்றுதள ஒடுக்கிகள்

    (c)

    போட்டி ஒடுக்கிகள்

    (d)

    போட்டியிலா ஒடுக்கிகள்

  146. நொதியில் ஊக்குவிக்கப்படும் வினைகளின் வேகத்தை அதிகப்படுத்த உதவுவது _______ 

    (a)

    முழு நொதி 

    (b)

    அப்போ என்ஸைம் 

    (c)

    கனிம அயனிகள் 

    (d)

    பிராஸ்தட்டிக் தொகுதிகள் 

  147. எந்த வகை RNA அதிகக் கரையும் தன்மையுடையது.

    (a)

    mRNA 

    (b)

    tRNA 

    (c)

    rRNA 

    (d)

    RNA 

  148. ஒரு புரதத்தில் காணப்படும் அமினோ அமிலங்களின் எண்ணிக்கை 

    (a)

    10

    (b)

    15

    (c)

    20

    (d)

    25

  149. சிறுநீர் அடர்வு நெஃப்ரானின் எப்பகுதியை சார்ந்துள்ளது?

    (a)

    பெளமானின் கிண்ணம்

    (b)

    ஹென்லே வளைவின் நீளம்

    (c)

    அண்மை சுருள் நுண்குழல்

    (d)

    கிளாமருலஸிருந்து தோன்றும் இரத்த நுண்நாளத்தொகுப்பு 

  150. தவறான இணையைக் கண்டுபிடி

    (a)

    பெளமானின் கிண்ணம் - கிளாமருலார் வடிகட்டுதல் 

    (b)

    சேய்மை சுருள் நுண்குழல் - குளுக்கோஸ் உறிஞ்சப்படுத்தல்

    (c)

    ஹென்லேயின் வளைவு - சிறுநீர் அடர்வு

    (d)

    அண்மை சுருள் நுண்குழல் - Naமற்றும் K+ அயனிகள் உறிஞ்சப்படுத்தல்

  151. போடோ சைட்டுகள் காணப்படுவது______.

    (a)

    பெளமானின் கிண்ண வெளிச்சுவரில்

    (b)

    பெளமானின் கிண்ண உட்சுவரில்

    (c)

    நெஃப்ரானின் கழுத்து பகுதியில்

    (d)

    கிளாமருலார் இரத்த நுண்நாளங்களின் சுவரில்

  152. சிறுநீர் உருவாக்கத்திற்கு குறைந்த அளவு நீர்த்தேவையையுடைய உயிரிகள் ______.

    (a)

    யூரியா நீக்கிகள்

    (b)

    அம்மோனியா  நீக்கிகள்

    (c)

    யூரிக்அமில  நீக்கிகள்

    (d)

    இரசாயன  நீக்கிகள்

  153. சேய்மை சுருள் நுண்குழல் மற்றும் சேகரிப்பு நாளங்களில் ஆல்டோஸ்டிரோன் செயல்படும் போது நீர் இதன் மூலம் உறிஞ்சப்படுகிறது.

    (a)

    அக்குவாபோரின்கள் 

    (b)

    ஸ்பெக்ட்ரின்கள்

    (c)

    குளுக்கோஸ் கடத்திகள்

    (d)

    குளோரைடு கால்வாய்

  154. பாலூட்டிகளும் நிலவாழ் இருவாழ்விகளும் யூரியாவை நைட்ரஜன் கழிவாக வெளியேற்றுவதால் _____ எனப்டுகின்றன.

    (a)

    அம்மோனியா நீக்கிகள்

    (b)

    யூரிக் அமில நீக்கிகள்

    (c)

    யூரியா நீக்கிகள்

    (d)

    மண்புழுக்கள்

  155. குழலில் உள்ள வடித்திரவத்தில் வெளிவிடப்படுகிற ஒவ்வொரு ஹைட்ரஜன் அயனிக்கும் ______ குழல் செல்களினால் உறிஞ்சப்படுகிறது.

    (a)

    சேய்மை சுருள் நுண்குழல்

    (b)

    உயர்உப்படர்வு தன்மை கொண்ட சிறுநீர்

    (c)

    ஒரு சோடியம் அயனி

    (d)

    கார்பானிக் அமிலம் மற்றும் பாஸ்பாரிக் அமிலம்

  156. துகள் செல்கள் ____ ன்னும் நொதியை சுரக்கின்றன.

    (a)

    நீரிழிவு நோய்

    (b)

    ஜாக்ஸ்டா கிளாமருலார் அமைப்பு

    (c)

    மாக்குலா டென்ஸா செல்கள்

    (d)

    ரெனின்

  157. ____ மிகச்சிறிய அளவில் நைட்ரஜன் கழிவுகள் வெளியேறுகின்றன.

    (a)

    செபேசியஸ் சுரப்பிகள்

    (b)

    உமிழ்நீர் வழி

    (c)

    வியர்வையின் முதற்பணி

    (d)

    வியர்வையின் இரண்டாம் பணி

  158. குழந்தைகளில் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் தாக்கத்தின் பின்விளைவாக இரண்டு சிறுநீரகங்களிலும் கிளாமருலஸ் வீங்குதல் இந்நோயின் பண்பாகும்.

    (a)

    சுமார் 17-30மிகி /100மிலி

    (b)

    நெஃப்ரோலித்யாஸிஸ்

    (c)

    கிளாமருலோ நெஃப்ரைடிஸ்

    (d)

    யூரேமியா

  159. தசை இழைக் கற்றை இவ்வாறு அழைக்கப்படுகிறது.

    (a)

    மையோஃபைப்ரில்கள்

    (b)

    ஃபாசிக்கிள்

    (c)

    சார்கோமியர்

    (d)

    சார்கோப்பிளாசம்

  160. தசைச்சுருக்கத்திக்கான ATPயேஸ் நொதி உள்ள இடம் ______.

    (a)

    ஆக்டினின்

    (b)

    ட்ரோப்போனின்

    (c)

    மையோசின்

    (d)

    ஆக்டின்

  161. யூரிக் அமிலப் படிகங்கள் சேர்வதால் மூட்டுகளில் வீக்கம் தோன்றுவது ______.

    (a)

    கெளட் 

    (b)

    மயஸ்தீனியா கிரேவிஸ்

    (c)

    எலும்புப்புரை

    (d)

    ஆஸ்டியோமலேசியா

  162. அசிட்டாப்புலம் இதில் அமைந்துள்ளது.

    (a)

    காரை எலும்பு

    (b)

    இடுப்பெலும்பு

    (c)

    தோள்பட்டை எலும்பு

    (d)

    தொடை எலும்பு

  163. மாக்ரோஃபேஜ்கள் வெளிப்படுத்தும் இயக்கம் ______.

    (a)

    நீளிழை

    (b)

    குறுயிழை

    (c)

    தசையியக்கம்

    (d)

    அமீபா போன்ற இயக்கம்

  164. நழுவு மூட்டுக்கு எடுத்துக்காட்டு

    (a)

    மேற்கை எலும்பு மற்றும் கிளினாய்டு குழி

    (b)

    தொடை எலும்பு மற்றும் டிபியோ-பிபுலா

    (c)

    ஆக்சிபிடைல் கான்டைல் மற்றும் ஓடான்டாய்டு நீட்சி

    (d)

    அடுத்தடுத்த முதுகெலும்புகளில் உள்ள கைக்போபைசிஸ்

  165. மெல்லிய இழையில் உள்ள ட்ரோபோமையோசின் மற்றும் ட்ரோபோனின்

    (a)

    F ஆக்டின்

    (b)

    ஒழுங்குபடுத்தும் புரதங்கள்

    (c)

    தலைப்பகுதி

    (d)

    இரு ஆக்டின்

  166. _________ என்பது எலும்பின் முனைகளாகும்.

    (a)

    டயாஃபைசிஸ்

    (b)

    எபிஃபைசிஸ்

    (c)

    மெடாஃபைசிஸ்

    (d)

    பெரியாஸ்டியம்

  167. மண்டையோட்டு எலும்புகளில் உள்ள தையல் போன்ற மூட்டுகள் நாரிணைப்பு வகையானவை.

    (a)

    மூட்டுகள்

    (b)

    விசைகள்

    (c)

    நெம்புகோல்

    (d)

    நாரிணைப்பு மூட்டுகள்

  168. நரம்பு தசை சந்திப்பில் அசிட்டைல் கோலைன் செயல்பாடு குறைவதால் இந்நிலை தோன்றுகின்றது.

    (a)

    மையாஸ்தீனியா கிரேவிஸ்

    (b)

    டெட்டனி

    (c)

    தசைச்சோர்வு

    (d)

    தசைச்செயலிழப்பு

  169. நரம்பு தூண்டல் கடத்தலின் போது நரம்பு சந்திப்பில் சைனாப்டிக் பைகளிலிருந்து நரம்புணர்வு கடத்திகள் (Neurotransmitter) (P) அயனிகளின் (Q) செயல்பாடுகளால் வெளியிடப்படுகின்றன.சரியான விடையைத் தேர்ந்தெடு.     

    (a)

    P=அசிட்டைல் கோலைன் Q=Ca++   

    (b)

    P=அசிட்டைல் கோலைன் Q=Na+   

    (c)

    P=GABA Q=Na+   

    (d)

    P=கோலைன்எஸ்ட்ரேஸ் Q=Ca++     

  170. சுவாச மையம் காணப்படுமிடம் ______.

    (a)

    முகுளம் 

    (b)

    ஹைப்போதலாமஸ் 

    (c)

    சிறுமூளை 

    (d)

    தலாமஸ் 

  171. செல்லுக்குள் அதிகளவில் காணப்படும் நேர்மின் அயனி எது? 

    (a)

    H+ 

    (b)

    K+ 

    (c)

    Na+ 

    (d)

    Ca++ 

  172. கீழ்க்கண்ட புறநரம்பு மண்டலத்தின் பகுதியான உடல் நரம்பு மண்டலம் தொடர்பான கூற்றுகளில் தவறான கூற்று எது? 

    (a)

    எலும்புத் தசைகளுக்கு நரம்புகள் செல்கின்றன. 

    (b)

    இதன் வழித்தொடர்பு பொதுவாக விருப்ப இயக்கமாகும். 

    (c)

    இதன் வழித்தொடர்களில் சில, அனிச்சைவில் எனப்படுகின்றன.   

    (d)

    இதன் வழித்தொடரில் நான்கு நியூரான்கள் உள்ளன.

  173. கண் தசைகளுக்கு செல்லும் மூளை நரம்புகள்

    (a)

    4,5,6

    (b)

    3,4,5

    (c)

    4,6,7

    (d)

    3,4,6

  174. கூற்று : Na+K+ மற்றும் புரதம் போன்றவற்றின் சமநிலையற்ற தன்மை ஓய்வு நிலை மின்னழுத்தத்தை (Resting potential) உண்டாக்குகிறது.
    காரணம் : Na+K+ சமநிலையற்ற தன்மையைச் சரிசெய்ய நரம்புசெல் மின்னாற்றலை பயன்படுத்திக் கொள்கிறது.

    (a)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றைச் சரியாக விளக்குகிறது.

    (b)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றைச் சரியாக விளக்கவில்லை.

    (c)

    கூற்று சரி, காரணம் தவறு

    (d)

    கூற்று காரணம் இரண்டும் தவறு

  175. ஆக்ஸான்களின் மேற்புரத்தைக் கிளியால் செல்களின் ஒரு வகையான ______ சூழ்ந்துள்ளன.

    (a)

    கோல்கை உறுப்புகள் 

    (b)

    ஷிவான் செல்கள்

    (c)

    மயலின் உறை

    (d)

    மயலின் உறை அற்றவை

  176. சோடியம் அயனிகளின் உள்ளேற்றத்தால் சவ்வின் மின்னழுத்தம் மிக விரைவாக 45அஏ அளவிற்குச் செல்லுதல் ________ என்று பெயர்.

    (a)

    செயல்நிலை மின்னழுத்தம்

    (b)

    மின்முனைப்பியக்க நீக்கம்

    (c)

    உச்ச மின் அழுத்தம்

    (d)

    கூர்முனை மின்னழுத்த அளவு

  177. உணர்ச்சி மற்றும் இயக்குச் செயல்களை ஒருங்கினைக்கும் மையமாக ________ விளங்குகிறது.

    (a)

    இணை பரப்பு

    (b)

    எபிதலாமஸ்

    (c)

    தலாமஸ்

    (d)

    ஹைப்போதலாமஸ் 

  178. நடுமூளையின் முதுகுப்புறப்பகுதியில் நான்கு உருண்டையான அமைப்புகள் உண்டு. இவற்றுக்கு ________ என்று பெயர்.

    (a)

    உணர்ச்சி மூளை

    (b)

    முளைத்தண்டு

    (c)

    கார்ப்போரா குவார்ட்ரிஜெமினா

    (d)

    நடுமூளை

  179. உடலின் நிலையான அகச்சூழ்நிலையை பராமரிப்பது இப்படியும் அறியப்படுகின்றது.

    (a)

    ஒழுங்குப்படுத்துதல் 

    (b)

    உடல் சமநிலை பேணுதல் 

    (c)

    ஒருங்கிணைப்பு 

    (d)

    ஹார்மோன்களின் கட்டுப்பாடு 

  180. கீழ் வருவனவற்றுள் எந்த ஹார்மோன் பிட்யூட்டரி சுரப்பியின் தாக்கத்தினால் சுரப்பது இல்லை.   

    (a)

    தைராக்ஸின்   

    (b)

    இன்சுலின் 

    (c)

    ஈஸ்ட்ரோஜன்    

    (d)

    குளுக்கோகார்டிகாய்டுகள்     

  181. நோய்த்தடைக்காப்புடன் தொடர்புடைய சுரப்பி எது?   

    (a)

    பீனியல் சுரப்பி  

    (b)

    அட்ரினல் சுரப்பி 

    (c)

    தைமஸ் சுரப்பி 

    (d)

    பாராதைராய்டு சுரப்பி 

  182. எந்த அமைப்பால் ஹைபோதலாமஸ் முன்பகுதி பிட்யூட்டரியுடன் இணைந்துள்ளது.     

    (a)

    நியூரோஹைபோபைஸிஸின்  டென்ட்ரைட்டுகள்       

    (b)

    நியூரோஹைபோபைஸிஸின் ஆக்ஸான்கள்    

    (c)

    பெருமூளைப் பகுதியில் இருந்து வரும் வெண்மை இழைப் பட்டைகள்  

    (d)

    ஹைபோபைசியல் போர்ட்டல் தொகுப்பு.     

  183. கீழே கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் தைராய்டு சுரப்பி குறித்த வாக்கியங்களில் எது தவறானது எனக் கண்டுபிடி.
    (i) இது RBC உருவாக்க நிகழ்வுகளைத் தடை செய்கிறது.
    (ii) இது நீர் மற்றும் மின்பகுதிகளின் பராமரிப்புக்கு உதவுகின்றது.
    (iii) இதன் அதிக சுரப்பு இரத்த அழுத்தத்தினை குறைக்கலாம்.
    (iv) இது எலும்பு உருவாக்க செல்களைத் தூண்டுகிறது.

    (a)

    (i) மற்றும் (ii)  

    (b)

    (iii) மற்றும் (iv)

    (c)

    (i) மற்றும் (iv)

    (d)

    (i) மற்றும் (iii)

  184. ஹைப்போதலாமஸ் விடுவிப்பு காரணிகள் மற்றும் தடைசெய்யும் காரணிகள் மூலம் _____ கட்டுப்படுத்துகின்றது.

    (a)

    கூம்பு வடிவ அமைப்பு ஹைப்போதலாமஸ்

    (b)

    நாளமில்லாச் சுரப்பிகளின் அரசன்

    (c)

    பிட்யூட்டரி சுரப்பி

    (d)

    ஹைபோதாலமிக் ஹைபோஃபைஸிஸ் போர்ட்டல் இரத்தக்குழல்

  185. நரம்பு சுரப்பு செல்கள் இரு நியூரோ ஹார்மோன்களை சுரந்து ______ எனும் பிட்யுட்டரியின் பின் கதுப்பிற்கு அனுப்புகின்றன.

    (a)

    ஹைபோதாலமிக் ஹைபோபைசியல் அச்சு

    (b)

    நியுரோஹைப்போஃபைசிஸ்

    (c)

    திரவ மின்பகுபொருளின் சமநிலை

    (d)

    ஹைபோதாலமிக் ஹைபோஃபைசியல் போர்ட்டல் இரத்தக்குழல்

  186. ஆண்களில்_______ விந்தணு உற்பத்தி மற்றும் வெளியேற்றத்தை தூண்டுகிறது.

    (a)

    அட்ரினோகார்டிகோட்ரோபிக் ஹார்மோன்

    (b)

    ஃபாலிக்கிள் செல்களைத் தூண்டும் ஹார்மோன்

    (c)

    லூட்டினைசிங் ஹார்மோன்

    (d)

    லூட்டியோட்ரோபிக் ஹார்மோன்

  187. _________ இரைப்பையில் கீழ் அமைந்துள்ள இலை வடிவச்சுரப்பியாகும்.

    (a)

    அட்ரினல் மெடுல்லா

    (b)

    அட்ரினலின்

    (c)

    கணையம்

    (d)

    அசினி

  188. இது முதலாம் தூதுவர்களாக செயல்படுகிறது.

    (a)

    நேர்மறை பின்னூட்ட முறை

    (b)

    எதிர்மறை பின்னூட்ட முறை

    (c)

    பெப்டைடு ஹார்மோன்கள்

    (d)

    இரண்டாம் தூதுவர் அமைப்பு

  189. கீழ்வருவனவற்றைப் பொருத்துக. 

    1. பாம்பிக்ஸ் மோரி அ) சாம்பா i) முகா
    2.ஆந்ரேயா அஸ்ஸமென்சிஸ் ஆ) மல்பெரி  ii) எரி
    3.ஆந்ரேயா மைலிட்டா இ) அர்ஜுன்  iii) டஸ்ஸார்
    4.அட்டாகஸ் ரிசினி  ஈ) ஆமணக்கு    iv) மல்பெரி

    சரியான ஒன்றை தேர்ந்தெடு 

    (a)

    1-ஆ-iv  

    (b)

    2-அ-i  

    (c)

    3-இ-iii 

    (d)

    4-ஈ-ii  

  190. எரிபட்டு ______ லிருந்து பெறப்படுகின்றது.  

    (a)

    லேஸ்ஸிஃபெர் லேக்கா     

    (b)

    நொசிமா பாம்பிசிஸ்  

    (c)

    அட்டாகஸ்  ரிசினி 

    (d)

    அட்டாகஸ் மைலிட்டா  

  191. தேனீ வளர்ப்பு இவ்வாறு அழைக்கப்படுகின்றது. 

    (a)

    செரிகல்சர்  

    (b)

    லேக் கல்சர்  

    (c)

    வெர்மிகல்சர்   

    (d)

    ஏபிகல்சர்  

  192. உள்நாட்டு மீன்வளர்ப்பு என்பது ______.

    (a)

    ஆழ்கடலில் மீன்பிடித்தல் 

    (b)

    கடற்கரை ஓர மீன்பிடித்தல் 

    (c)

    நன்னீரில் மீன்வளர்ப்பு மற்றும் மீன்பிடித்தல்   

    (d)

    மீனிலிருந்து மீன் எண்ணெய் பிரித்தெடுத்தல் 

  193. கூற்று: மிகச் சிறந்த முத்து "லிங்கா முத்து" எனப்படும். இது கடற்சிப்பியிலிருந்து கிடைக்கிறது.
    காரணம்: மேன்டிலின் எபிதிலிய அடுக்கிலிருந்து தொடர்ந்து சுரக்கும் நேக்ரி உள்நுழையும் அயல் பொருளை சுற்றி படிகிறது.

    (a)

    கூற்று சரியானது, காரணம் தவறு.

    (b)

    கூற்றும் காரணமும் தவறானது

    (c)

    கூற்று தவறானது ஆனால், காரணம் சரியாக உள்ளது.

    (d)

    கூற்றும் காரணமும் சரியானது

  194. கிராமப் புறங்களில் _____ சில்லறை விற்பனை செய்து வருவாய் ஈட்டலாம்.  

    (a)

    இயற்கை கரிம உரம் 

    (b)

    மண்புழு உரம்  

    (c)

    வருவாய் ஈட்டும் தொழில் 

    (d)

    அதிக ஊட்டச்சத்து கொண்ட சுழல் நட்பு முறை   

  195. 30-35 ppt உப்புத் தன்மையுள்ள நீரில் மீன்களும் பிற விலங்குகளும் வளர்க்கப்படுத்தல் _____ எனப்படும்.

    (a)

    மேற்கு கடற்கரை

    (b)

    கிழக்குக் கடற்கரை

    (c)

    முதல் தர கடல் மீன்கள்

    (d)

    கடல் வாழ் உயிரிகள் வளர்த்தல்

  196. ______ புரதம் அதிகம் உள்ளது.

    (a)

    பாலில் உள்ள நொதிகள்

    (b)

    இறைச்சி

    (c)

    நிலமேலாண்மை

    (d)

    தொழு உரம்

  197. வேகமாக வளர்ச்சியடைந்து மென்மையான தரமான இறைச்சியைக் இவ்வகைக் கோழிகள் ஆகும்.

    (a)

    சிட்டகாங்

    (b)

    பிராய்லர் வகை

    (c)

    வெள்ளை பிளிமத் ராக்

    (d)

    லெக்ஹார்ன்

  198. தேன்கூட்டின் முக்கிய பகுதியான இதில் 5 - 10 சட்டங்கள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்பட்டிருக்கும்  

    (a)

    தாங்கி

    (b)

    அடிப்பலகை 

    (c)

    அடைகாப்பறை    
     

    (d)

      சூப்பர் 

  199. கீழ்கண்ட படத்தினை உற்றுநோக்கிச் சரியான விடையைத் தேர்ந்தெடு.

    i. A, B மற்றும் C தண்டு நுனியின் ஹிஸ்டோஜென் கொள்கை ஆகும்.
    ii. A-மெடுல்லா, கதிர்களை உருவாக்குகிறது.
    iii. B-புறணியை உருவாக்குகிறது.
    iv. C-புறத்தோலை உருவாக்குகிறது.

    (a)

    i மற்றும் ii மட்டும்

    (b)

    ii மற்றும் iii மட்டும்

    (c)

    i மற்றும் iii மட்டும்

    (d)

    iii மற்றும் iv மட்டும்

  200. கீழ்கண்டவற்றை படித்து சரியான விடையைத் தேர்ந்தெடு
    i. எக்ஸார்க் எனப்படுவது மெட்டாசைலத்திற்கு வெளியே புரோட்டோசைலம் அமைந்துள்ளது.
    ii. எண்டார்க் எனப்படுவது புரோட்டோசைலம் மையத்தை நோக்கி அமைந்துள்ளது.
    iii. சென்ட்ரார்க் எனப்படுவது புரோட்டோசைலத்திற்கு நடுவில் மெட்டாசைலம் அமைந்துள்ளது
    iv. மீஸார்க் எனப்படுவது மெட்டாசைலத்திற்கு நடுவில் புரோட்டோசைலம் அமைந்துள்ளது.

    (a)

    i, ii மற்றும் iii மட்டும்

    (b)

    ii, iii மற்றும் iv மட்டும்

    (c)

    i, ii மற்றும் iv மட்டும்

    (d)

    இவை அனைத்தும்

  201. ஜிம்னோஸ்பெர்ம்களில் சல்லடை செல்கள் களைக் கட்டுப்படுத்துவது எது?

    (a)

    அருகாமையில் உள்ள சல்லடை குழாய்கள்

    (b)

    ஃபுளோயம் பாரங்கைமா செல்கள்

    (c)

    துணைச்செல்களின் உட்கருக்கள்

    (d)

    அல்புமீனஸ் செல்களின் உட்கருக்கள்

  202. இருவிதையிலைத் தண்டில் வாஸ்குலக் கற்றையிலிருந்து இலை இழுவை நீட்டிக்கப்படும் பொழுது, இலை நரம்பின் வாஸ்குலத் திசுக்கள் எவ்வாறு அமைந்து இருக்கும்?

    (a)

    சைலம் மேல்புறத்திலும் ஃபுளோயம் கீழ்புறத்திலும் இருக்கும்.

    (b)

    ஃபுளோயம் மேல்புறத்திலும் சைலம் கீழ்புறத்திலும் இருக்கும்.

    (c)

    சைலம் ஃபுளோயத்தை சூழ்ந்திருக்கும்.

    (d)

    ஃபுளோயம் சைலத்தை சூழ்ந்திருக்கும்.

  203. இருவிதையிலைத் தாவரங்களில் ஓட்டுப்போடுதல் வெற்றிகரமாக உள்ளது. ஆனால், ஒருவிதையிலைத் தாவரங்களில் அவ்வாறு இல்லை. ஏனென்றால் இருவிதையிலை தாவரங்களில் _______.

    (a)

    வளையமாக வாஸ்குலக் கற்றைகள் அமைந்திருப்பது

    (b)

    இரண்டாம் நிலை வளர்ச்சிக்கான கேம்பியம் அமைந்துள்ளது.

    (c)

    சைலக்குழாய் கூறுகள் ஒருமுனையில் இருந்து அடுத்த முனை வரை இணைந்து அமைந்திருப்பது.

    (d)

    கார்க் கேம்பியம் அமைந்திருப்பது.

  204. கப்பே பகுதி ______ வகை பகுப்படைதல் எனவும் அழைக்கப்படுகிறது.

    (a)

    Y

    (b)

    T

    (c)

    L

    (d)

    I

  205. ஒரே மாதிரியான செல்களின் தொகுப்பு _____ எனபப்டும்.

    (a)

    செல்

    (b)

    எளியத்திசு

    (c)

    இடியோபிளாஸ்ட்கள்

    (d)

    ஸ்கிலிரைடுகள்

  206. ஹேபர்லேண்ட் சைலத்தை ஹேட்ரோம் எனவும் ஃபுளோயத்தை ____ எனவும் பெயரிட்டழைத்தார்.

    (a)

    வெளி நோக்கி சைலம்

    (b)

    லிப்ரிஃபார்ம் நார்கள்

    (c)

    இடியோபிளாஸ்ட்கள்

    (d)

    ஸ்கிலிரைடுகள்

  207. ஃபுளோயத்துடன் இணைந்து காணப்படுகின்ற ஸ்கிலிரங்கைமா நார்கள் ஃபுளோயம் நார்கள் அல்லது ______ எனபப்டும்.

    (a)

    கேலோஸ்

    (b)

    எளியத்திசு

    (c)

    இடியோபிளாஸ்ட்கள்

    (d)

    பாஸ்ட் நார்கள்

  208. இலைத் துளைக்கு அடுத்து உட்புறமாகக் காணப்படுகின்ற காற்றையானது சுவாச அறை அல்லது _____ எனப்படும்.

    (a)

    எபிபிளமா

    (b)

    இலைத்துளை கீழறை

    (c)

    ரானன்குலஸ் ப்ளுயிடன்ஸ்

    (d)

    பாஸ்ட் நார்கள்

  209. கீழ்கண்ட வாக்கியங்களைக் கருத்தில் கொள்க.
    வசந்தகாலத்தில் கேம்பியம்
    (i) குறைவான செயல்பாடு கொண்டது.
    (ii) அதிகப்படியான சைலக்கூறுகளை தோற்றுவிக்கின்றன.
    (iii) அகன்ற உள்வெளி கொண்ட சைலக்குழாய்களை உருவாக்குகிறது.

    (a)

    (i) சரியானது ஆனால் (ii) & (iii) சரியானவையல்ல

    (b)

    (i) சரியானதல்ல ஆனால் (ii) & (iii) சரியானவை

    (c)

    (i) & (ii) சரியானவை ஆனால் (iii) சரியானதல்ல

    (d)

    (i) & (ii) சரியானவையல்ல ஆனால் (iii) சரியானது

  210. வழக்கமாக ஒருவிதையிலை தாவரத்தில் சுற்றளவு அதிகரிப்பதில்லை. ஏனென்றால் _______.

    (a)

    செயல்படும் வாஸ்குலக் கேம்பியத்தை கொண்டுள்ளது.

    (b)

    செயல்படும் வாஸ்குலக் கேம்பியத்தை கொண்டிருப்பதில்லை

    (c)

    கேம்பியத்தின் செயல்பாடு தடை செய்யப்படுகிறது

    (d)

    அனைத்தும் சரியானவை

  211. வழக்கமாகக் குப்பி தக்கை எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?

    (a)

    ஃபெல்லம்

    (b)

    ஃபெல்லோஜென்

    (c)

    சைலம்

    (d)

    வாஸ்குலக் கேம்பியம்

  212. இருவிதையிலை தாவர வேரின் ஒரே சீரான இரண்டாம் நிலை வளர்ச்சி வெளிபாட்டில் முதல் நிலை சைலம் என்ன?

    (a)

    மையப் பகுதியில் நிலைத்து நிற்கிறது.

    (b)

    நசுக்கப்படும்

    (c)

    நசுக்கப்படலாம் அல்லது நசுக்கப்படாமல் இருக்கலாம்.

    (d)

    முதல் நிலை ஃபுளோயத்தை சுற்றிக் காணலாம்

  213. கூற்று-இருவிதையிலை தாவர வேரில் இரண்டாம் நிலை வளர்ச்சியானது வாஸ்குலக் கேம்பியம், ஃபெல்லோஜெனால் நடைபெறுகிறது.
    காரணம்-வாஸ்குலக் கேம்பியம் முழுவதும் முதல் நிலை தோற்றமாகும்.

    (a)

    கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம்.

    (b)

    கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமல்ல.

    (c)

    கூற்று சரி, ஆனால் காரணம் தவறு

    (d)

    கூற்று, காரணம் இரண்டும் தவறு

  214. சைலக் குழாய்கள் அல்லது துளைகள் யாவும் பெரிதளவில் உருவம் மற்றும் பரவலில் ஒரே சீராக ஆண்டு வளையம் முழுவதும் அமைந்திருக்கும் கட்டை ------------------ ஆகும்.

    (a)

    வன்கட்டை 

    (b)

    மென்கட்டை

    (c)

    மரவயதியல்

    (d)

    பரவலான துளைக்கட்டை 

  215. ஜிம்னோஸ்பெர்ம் மட்டுமின்றி ஆஞ்சியோஸ்பெர்ம்களில் ---------------------- ஒத்த அமைப்புகள் உள்ளது.

    (a)

    வன்கட்டை 

    (b)

    மென்கட்டை

    (c)

    மரவயதியல்

    (d)

    டைலோஸ்

  216. ------------------ ஆரோ ஜிம்னோஸ்பெர்ம் தாவரம் ஆகும்.

    (a)

    லெத்தகோடைல் பிஜியன்ஸிஸ் 

    (b)

    ஃபெல்லோஜென்  

    (c)

    செதில்பட்டை 

    (d)

    ஏபிஸ் பால்சாமியா 

  217. ------------------ தண்டை சுற்றி முழுமையான உருளையை உருவாக்கும் பொழுது அது வளை பட்டையை உருவாக்குகிறது.

    (a)

    லெத்தகோடைல் பிஜியன்ஸிஸ் 

    (b)

    ஃபெல்லோஜென் 

    (c)

    செதில்பட்டை 

    (d)

    பரவலான துளைக்கட்டை 

  218. ஒன்றுடன் ஒன்று மேற்கவிந்து செதில் அடுக்காகத் தோன்றினால் அது ------------------ எனப்படுகிறது.

    (a)

    லெத்தகோடைல் பிஜியன்ஸிஸ் 

    (b)

    ஃபெல்லோஜென் 

    (c)

    செதில்பட்டை 

    (d)

    பரவலான துளைக்கட்டை 

  219. விறைப்பழுத்தம் உடைய செல்லில், _______.

    (a)

    DPD =10 வளி; OP =5 வளி; TP =10 வளி

    (b)

    DPD =0 வளி; OP =10 வளி; TP =10 வளி

    (c)

    DPD =0 வளி; OP =5 வளி; TP =10 வளி

    (d)

    DPD =20 வளி; OP =20 வளி; TP =10 வளி

  220. கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைக் கண்டறிக.
    1) அப்போபிளாஸ்ட் என்பது வேகமானது, உயிரற்ற பகுதிகளில் நடைபெறுவது
    2) சவ்விடை வழிப்பாதை வாக்குவோலை உள்ளடக்கியது.
    3) சிம்பிளாஸ்ட் அருகமைந்த செல்களின் பிளாஸ்மா டெஸ்மேட்டாக்களை இணைக்கிறது.
    4) சிம்பிளாஸ்ட் மற்றும் சவ்விடை வழி ஆகியவை செல்லின் உயிருள்ள பகுதிகளில் நடைபெறுபவை

    (a)

    1 மற்றும் 2

    (b)

    2 மற்றும் 3

    (c)

    3 மற்றும் 4

    (d)

    1,2,3,4

  221. வறண்ட நிலத் தாவரமான ஒபன்ஷியாவில் எவ்வகை நீராவிப் போக்கு சாத்தியம்?

    (a)

    இலைத் துளை நீராவிப்போக்கு

    (b)

    லெண்டிசேல் நீராவிப்போக்கு

    (c)

    க்யூட்டிகிள் நீராவிப்போக்கு

    (d)

    மேற்கூறிய அனைத்தும்

  222. இலைத்துளைத் திறப்பு எதைச் சார்ந்தது?

    (a)

    பொட்டாசியம் அயனியின் உள்நுழைவு

    (b)

    பொட்டாசியம் அயனியின் வெளியேற்றம்

    (c)

    குளோரைடு அயனியின் உள்நுழைவு

    (d)

    ஹைட்ராக்ஸில் அயனியின் உள்நுழைவு

  223. முன்ச்சின் கருத்தாக்கம் எதை அடிப்படையாகக் கொண்டது?

    (a)

    விறைப்பழுத்தச் சரிவு மற்றும் உள்ளீர்த்தல் விசை காரணமாக உணவு இடப்பெயர்ச்சி அடைதல்

    (b)

    விறைப்பழுத்தம் காரணமாக உணவு இடம்பெயர்தல்

    (c)

    உள்ளீர்த்தல் விசை காரணமாக உணவு இடம்பெயர்தல்

    (d)

    மேற்கூறியவற்றுள் ஏதுமில்லை

  224. நீரில் பெரும்பான்மையான பொருட்கள் கரைவதால் நீர் ஒரு _______ என்றழைக்கப்படுகிறது.

    (a)

    புகையூட்டம் 

    (b)

    பொது கரைப்பான் 

    (c)

    பாஸ்கல் 

    (d)

    ஊடக உட்திறன் 

  225. கரைபொருள் திறன் என்பது ஒரு கரைபொருளின் நீரியல் திறன் மீது ஏற்படுத்தும் விளைவாகும் இது  ______ என்றும் அழைக்கப்படும்

    (a)

    புகையூட்டம் 

    (b)

    பொது கரைப்பான் 

    (c)

    சவ்வூடு பரவல் இயல்திறன் 

    (d)

    ஊடக உட்திறன் 

  226. செல்சுவரில் உள்ள நீரை ஈர்க்கும் கொல்லாய்டுகள் அல்லது கூழ்மம் போன்ற அங்கக மூலக்கூறுகளுக்கும் நீருக்கும் உள்ள ஈர்ப்பு  ______ எனப்படுகிறது. 

    (a)

    புகையூட்டம் 

    (b)

    பொது கரைப்பான் 

    (c)

    பாஸ்கல் 

    (d)

    ஊடக உட்திறன் 

  227. ஊடக உட்திறனை _____ எனவும் அழைக்கலாம். 

    (a)

    விறைப்பு அழுத்தம் 

    (b)

    சாறு 

    (c)

    நிராவிப்போக்கு 

    (d)

    நீராவிப்போக்கின் இழுவிசை 

  228. சைலத்திரலுள்ள நீரானது வேரின் கரைபொருட்களுடன் சேரும்போது அது _____ என்று அழைக்கப்படுகிறது. 

    (a)

    விறைப்பு அழுத்தம் 

    (b)

    சாறு 

    (c)

    நிராவிப்போக்கு 

    (d)

    நீராவிப்போக்கின் இழுவிசை 

  229. பொருத்தமான இணையைத் தேர்ந்தெடு:

    1. சிட்டரஸ் அடிநுனி இறப்பு (i) Mo
    2. சாட்டை வால் நோய் (ii) Zn
    3. பழுப்பு மையக் கருக்கல் நோய் (iii) Cu
    4. சிற்றிலை நோய் (iv) B
    (a)
    2 4
    (iii) (ii) (iv) (i)
    (b)
    2 4
    (iii) (i) (iv) (ii)
    (c)
    2 4
    (i) (iii) (ii) (iv)
    (d)
    2 4
    (iii) (iv) (ii) (i)
  230. ஒரு தாவரத்திற்கு அனைத்துக் கனிமங்களும் வழங்கப்பட்டு Mn செறிவு மட்டும் அதிகமாக இருந்தால் ஏற்படும் குறைபாடு யாது?

    (a)

    Fe, Mg உட்கொள்திறனை தடுக்கும் ஆனால் Ca தவிர

    (b)

    Fe, Mg மற்றும் Ca உட்கொள்திறனை அதிகரிக்கும்

    (c)

    Ca உட்கொள்திறனை மட்டும் அதிகரிக்கும்

    (d)

    Fe, Mg மற்றும் Ca உட்கொள்திறனைத் தடுக்கும்

  231. மீண்டும் இடப்பெயராத தனிமம் எது?

    (a)

    பாஸ்பரஸ்

    (b)

    பொட்டாசியம்

    (c)

    கால்சியம்

    (d)

    நைட்ரஜன்

  232. சரியானவற்றைப் பொருத்துக.

      தனிமங்கள்   பணிகள்
    A மாலிப்டினம் 1 பச்சையம்
    B துத்தநாகம் 2 மெத்தியோனின்
    C மெக்னீசியம் 3 ஆக்சின்
    D சல்ஃபர் 4 நைட்ரோஜினேஸ்
    (a)
    1 3 4 2
    (b)
    2 1 3 4
    (c)
    4 3 1 2
    (d)
    4 2 1 3
  233. சரியான கூற்றைக் கண்டறிக
    I. சிஸ்டைன், மெத்தியோனின் அமினோ அமிலத்திற்குச் சல்ஃபர் அவசியம்
    II. N, K, S மற்றும் MO குறைபாடு செல்பிரிவை பாதிக்கிறது.
    III. லெகூம் அல்லாத தாவரத்தில் பிரான்க்கியா பாக்டீரியம் காணப்படுகிறது.
    IV. நைட்ரஜன் நீக்கத்தில் பங்கேற்கும் நைட்ரோசோமோனாஸ் மற்றும் நைட்போபாக்டர்

    (a)

    I, II சரி

    (b)

    I, II, III சரி

    (c)

    I மட்டும் சரி

    (d)

    அனைத்தும் சரி

  234. தாவர வளர்ச்சிக்கு காரணம் மண்ணிலிருந்து வேர்கள் மூலம் பெறப்படும் நைட்ரஜன் மற்றும் பிற   _______ 

    (a)

    கனிமங்கள் 

    (b)

    கால்சியத்தின் 

    (c)

    குளோரின் 

    (d)

    நிக்கல் 

  235. ____________யுரியேஸ் மற்றும் ஹைட்ரோஜினேஸ் நொதிகளின் துணை காரணியாகப் பங்கு பெறுகிறது.

    (a)

    கனிமங்கள் 

    (b)

    கால்சியத்தின் 

    (c)

    குளோரின்

    (d)

    நிக்கல் 

  236. ____ துணை அலகுகள் இணைப்பிற்குத் தேவைப்படுகிறது.

    (a)

    ஹாஸ்டோரியம் 

    (b)

    கூட்டுயிர் 

    (c)

    சல்பர் டை ஆக்ஸைடு 

    (d)

    ரைபோசம் 

  237. பூஞ்சைகளும் உயர்தாவர வேர்களும் இணைந்த _______ வாழ்க்கையாக இது உள்ளது.

    (a)

    ஹாஸ்டோரியம் 

    (b)

    கூட்டுயிர் 

    (c)

    சல்பர் டை ஆக்ஸைடு 

    (d)

    ரைபோசம் 

  238.  ______ காற்று மாசுபடுதலை காட்டும் மாசு காட்டியாக உள்ளது.

    (a)

    ஹாஸ்டோரியம் 

    (b)

    கூட்டுயிர் 

    (c)

    சல்பர் டை ஆக்ஸைடு 

    (d)

    ரைபோசசோம் 

  239. கூற்று: தைலக்காய்டுகளின் உள் இடைவெளியில் அதிகரிக்கும் புரோட்டான் செறிவானது ATP உற்பத்திக்கு காரணமாக உள்ளது.
    காரணங்கள்: PSI-இல் காணப்படும் ஆக்ஸிஜன் வெளியேற்றம் கூட்டமைப்பு தைலக்காய்டு உறையின் மீது ஸ்ட்ரோமாவை நோக்கி காணப்படுவதுடன் H+ அயனிகளை வெளியேற்றுகிறது.

    (a)

    கூற்று மற்றும் காரணங்கள் சரி

    (b)

    கூற்று சரி, காரணங்கள் தவறு

    (c)

    கூற்று தவறு, காரணங்கள் சரி

    (d)

    கூற்று, காரணங்கள் இரண்டும் தவறு

  240. எவ்வகை பச்சையத்தில் பைட்டால் வால்பகுதி காணப்படுவதில்லை.

    (a)

    பச்சையம் a

    (b)

    பச்சையம் b

    (c)

    பச்சையம் c

    (d)

    பச்சையம் d

  241. ஒளி வினையில் எலக்ட்ரான் ஓட்டத்தின் சரியான வரிசைமுறை ______.

    (a)

    PS II, பிளாஸ்டோகுயினோன், சைட்டோகுரோம், PS I, பெர்ரிடாக்ஸின்

    (b)

    PS I, பிளாஸ்டோகுயினோன், சைட்டோகுரோம், PS II, பெர்ரிடாக்ஸின்

    (c)

    PS II, பெர்ரிடாக்ஸின், பிளாஸ்டோகுயினோன், சைட்டோகுரோம், PS I

    (d)

    PS II, பிளாஸ்டோகுயினோன், சைட்டோகுரோம், பெர்ரிடாக்ஸின், PS I

  242. C3 சுழற்சியில் நுழையும் ஒவ்வொரு CO2 மூலக்கூறுகளுக்கும் தேவைப்படும் ATP மற்றும் NADPH எண்ணிக்கை______.

    (a)

    2 ATP + 2 NADPH

    (b)

    2 ATP + 3 NADPH

    (c)

    3 ATP + 2 NADPH

    (d)

    3 ATP + 3 NADPH

  243. ஒளிச்சேர்க்கை ஒளிவினையின் சரியான கூற்றினை கண்டறிக.

    (a)

    ஒளிசார் நீர் பகுப்பு PS I உடன் தொடர்புடையது

    (b)

    PS I மற்றும் PS II ஆகியவை NADPH + H+ உருவாதலில் பங்கு பெறுகிறது.

    (c)

    PS I-ன் வினை மையமான பச்சையம் 'a'-யின் ஒளி ஈர்ப்பு உச்சம் 680 nm ஆகும்.

    (d)

    PS II-ன் வினை மையமான பச்சையம் 'a'-யின் ஒளி ஈர்ப்பு உச்சம் 700 nm ஆகும்.

  244. ஒளியால் நீரை பிளந்து ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனாக மாற்றக்கூடிய _____ தாவரங்களில் இயல்பாக நடைபெறும் நிகழ்வு.

    (a)

    ஹைட்ரஜன்

    (b)

    ஒளியின் நீராற்பகுப்பு

    (c)

    ஸ்ரோமா

    (d)

    தைலக்காய்டு

  245. ஸ்ரோமாவில் பை போன்ற தட்டு வடிவ படல அமைப்புகள் காணப்படுகிறது இதற்கு _____ வட்டில்கள் என்று பெயர். 

    (a)

    ஹைட்ரஜன்

    (b)

    ஒளியின் நீராற்பகுப்பு

    (c)

    ஸ்ரோமா

    (d)

    தைலக்காய்டு

  246. கிரானத்தில் காணப்படும் தைலக்காய்டுகள் ______ எனவும் அழைக்கப்படுகிறது.

    (a)

    கிரானம் லாமெல்லே

    (b)

    ஸ்ட்ரோமா லாமெல்லே

    (c)

    குவாண்டோசோம்கள்

    (d)

    புரதம்

  247. ஸ்ட்ரோமாவில் காணப்படும் தைலக்காய்டுகள் _____ எனவும் அழைக்கப்படுகின்றன.

    (a)

    கிரானம் லாமெல்லே

    (b)

    ஸ்ட்ரோமா லாமெல்லே

    (c)

    குவாண்டோசோம்கள்

    (d)

    புரதம்

  248. பசுங்கணிக புரதங்களில் இது _____ சதவீதமாக உள்ளது.

    (a)

    15

    (b)

    16

    (c)

    17

    (d)

    20

  249. ஒரு மூலக்கூறு பைருவிக் அமிலம் முழுவதுமாக ஆக்ஸிஜனேற்றமடைந்து உருவாகும் ATP மூலக்கூறுகளின் எண்ணிக்கை ______.

    (a)

    12

    (b)

    13

    (c)

    14

    (d)

    15

  250. இரண்டு மூலக்கூறு சைட்டோசோலிக் NADH + H+ ஆக்ஸிஜனேற்றமடையும் போது தாவரங்களில் உருவாகும் ATP மூலக்கூறுகளின் எண்ணிக்கை______.

    (a)

    3

    (b)

    4

    (c)

    6

    (d)

    8

  251. கிளைக்காலைசிஸ் மற்றும் கிரப்ஸ் சுழற்சியினை இணைக்கும் இந்தச் சேர்மம்______.

    (a)

    சக்சினிக் அமிலம்

    (b)

    பைருவிக் அமிலம்

    (c)

    அசிட்டைல் CoA

    (d)

    சிட்ரிக் அமிலம்4

  252. கூற்று: ஆக்ஸிஜனேற்ற பாஸ்பரிகரணம் மைட்டோகாண்ட்ரியாவின் எலக்ட்ரான் கடத்துச் சங்கிலியில் நடைபெறுகிறது.
    காரணம்: சக்சினைல் CoA பாஸ்பரிகரணமடைந்து சக்சினிக் அமிலமாக தளப்பொருள் பாஸ்பரிகரணத்தால் நடைபெறுகிறது.

    (a)

    கூற்று மற்றும் காரணம் சரி. கூற்றுக்கான சரியான விளக்கம் காரணம்.

    (b)

    கூற்று மற்றும் காரணம் சரி ஆனால் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல காரணம்.

    (c)

    கூற்று சரி ஆனால் காரணம் தவறு

    (d)

    கூற்று மற்றும் காரணம் தவறு

  253. கீழ்க்கண்டவற்றுள் கிரப்ஸ் சுழற்சியில் நடைபெறாத வினை யாது?

    (a)

    3 C லிருந்து 2 C க்கு ஃபாஸ்பேட் மாறுதல்

    (b)

    ப்ரக்டோஸ் 1,6 பிஸ்ஃபாஸ்பேட் உடைந்து இரண்டு மூலக்கூறு 3C சேர்மங்களாக மாறுகிறது

    (c)

    தளப்பொருளிலிருந்து ஃபாஸ்பேட் நீக்கம்

    (d)

    இவை அனைத்தும்

  254. CO2 வெளியிடும் இந்த நிகழ்ச்சி _______ எனப்படும்.

    (a)

    சுவாசித்தல் 

    (b)

    ஒடுக்க ஆக்ஸிஜனேற்ற வினை 

    (c)

    இணைப்பு வினை 

    (d)

    குளுக்கோ நியோஜெனிசிஸ் 

  255. ஆற்றல் மிகுந்த ATP-களை அதிக அளவில் மைட்டோகாண்ட்ரியங்கள் உருவாக்குவதால் இவை ________ என அழைக்கப்படுகிறது.

    (a)

    வீரிய சுவாசம்

    (b)

    செல்லின் ஆற்றல் நிலையம் 

    (c)

    பைருவேட் 

    (d)

    ஈஸ்ட் 

  256. முளைக்க வைத்த பார்லி மற்றும் திராட்சை நொதித்தலின் வாயிலாக _______ எத்தனாலாக மாறுகிறது. 

    (a)

    வீரிய சுவாசம் 

    (b)

    செல்லின் ஆற்றல் நிலையம்

    (c)

    பைருவேட் 

    (d)

    ஈஸ்ட் 

  257. _______ காற்றிலாச் சூழலில் இந்த நிகழ்ச்சியின் கீழ் எத்தனாலின் செறிவினை அதிகரிக்கிறது.

    (a)

    வீரிய சுவாசம் 

    (b)

    செல்லின் ஆற்றல் நிலையம்

    (c)

    பைருவேட்

    (d)

    ஈஸ்ட்

  258. எலக்ட்ரான்கள் ATP சிந்தேஸின் உதவியால் ATP உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகின்றன இந்நிகழ்ச்சி _________ என்றழைக்கப்படுகிறது.

    (a)

    வீரிய சுவாசம் 

    (b)

    செல்லின் ஆற்றல் நிலையம் 

    (c)

    பைருவேட் 

    (d)

    ஆக்ஸிஜனேற்ற பாஸ்பரிகரணம் 

  259. தவறான வாக்கியத்தைத் தேர்ந்தெடு:

    (a)

    உருவாக்க கட்டத்தில் செல்பகுப்பை தக்கவைத்துக் கொள்ளும்

    (b)

    நீட்சியுறு கட்டத்தில் மைய வாக்குவோல் செல்லில் தோன்றுகிறது

    (c)

    முதிர்ச்சியுறு கட்டத்தில் தடிப்படைதல் மற்றும் வேறுபாடு அடைதல் நடைபெறுகிறது

    (d)

    முதிர்ச்சியுறு கட்டத்தில் செல்கள் மேலும் வளர்கிறது

  260. கப்பியின் விட்டம் 6 அங்குலம், குறிமுள்ளின் நீளம் 10 அங்குலம் மற்றும் குறிமுள் நகர்ந்த தூரம் 5 அங்குலமாக இருந்தால் தாவரத்தின் உண்மையான நீள் வளர்ச்சியைக் கண்டுபிடி.

    (a)

    3 அங்குலம்

    (b)

    6 அங்குலம்

    (c)

    12 அங்குலம்

    (d)

    30 அங்குலம்

  261. ஒரு பால் மலர்கள் கொண்ட தாவரங்களில் இந்த ஹார்மோன்களால் இனமாற்றம் நிகழ்கிறது.

    (a)

    எத்தனால்

    (b)

    சைட்டோகைனின்

    (c)

    ABA

    (d)

    ஆக்சின்

  262. சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்ந்தெடு

    1) மனிதச் சிறுநீர் i) ஆக்சின் B
    2) மக்காச்சோள எண்ணெய் ii) GA3
    3) பூஞ்சைகள் iii) அப்சிசிக் அமிலம் II
    4) ஹெர்ரிங் மீன் விந்து iv) கைனடின்
    5) இளம் மக்காச்சோளம் v ) ஆக்சின் A
    6) இளம் பருத்திக் காய் vi) சியாடின்
    (a)
    1 2 3 4 5 6
    iii iv  vi  ii 
    (b)
    1 2 3 4 5 6
    ii  iv  vi  iii 
    (c)
    1 2 3 4 5 6
    iii   vi  ii  iv 
    (d)
    1 2 3 4 5 6
    ii   iii  vi  iv 
  263. தாவரங்களின் விதை உறக்கம்______.

    (a)

    சாதகமற்ற பருவ மாற்றங்களை தாண்டி வருதல்

    (b)

    வளமான விதைகளை உருவாக்குதல்

    (c)

    வீரியத்தை குறைகிறது

    (d)

    விதைச்சிதைவை தடுக்கிறது

  264. பின்வருவனவற்றுள் எந்தமுறை விதை உறக்கத்தை நீக்க பயன்படுத்தப்படுகின்றன?

    (a)

    விதையுறை செதுக்கீடு

    (b)

    மோதல் நிகழ்த்துதல்

    (c)

    அடுக்கமடைதல்

    (d)

    இவை அனைத்தும்

  265. தண்டு மற்றும் வேரில் தொடர்ந்து செல் பகுப்பு நடைபெறுவதால் உறுதி நிலையற்ற வளர்ச்சி அடைகிறது, இதற்கு ________ என அழைக்கப்படுகிறது.      

    (a)

    திறந்த வகை வளர்ச்சி 

    (b)

    ஆக்சின்   

    (c)

    2,4D மற்றும் 2,4,5 - T 

    (d)

    பக்கானே   

  266. ஆக்சின் எதிர்பொருட்களைத்  தாவரத்தின் மீது தெளிக்கும் போது விளைவுகளை தடை செய்கிறது.    

    (a)

    திறந்த வகை வளர்ச்சி 

    (b)

    ஆக்சின்   

    (c)

    2,4னு  மற்றும் 2,4,5 - கூ  

    (d)

    பக்கானே 

  267. வியட்நாம் போரில் வனப்பகுதியில் இலைகளை நீக்க ______ டீனாக்ஸி களைக் கொல்லிகள் கலந்த கலவை USA வால் பயன்படுத்தப்பட்டது.             

    (a)

    திறந்த வகை வளர்ச்சி 

    (b)

    ஆக்சின்   

    (c)

    2,4D மற்றும் 2,4,5 - T 

    (d)

    பக்கானே 

  268. பெரும்பாலான தாவரங்களில் கனி உருவாதல் நிகழும் போது _________ அதிகரிக்கிறது.      

    (a)

    ஜிப்ரில்லா பியூஜிகுராய்

    (b)

    ஜிப்ரலின்     

    (c)

    ஜிப்ரலிக் அமிலம்     

    (d)

    செல்சுவாச வீதம்  

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு உயிரியல் - 1 மதிப்பெண் முக்கிய வினா விடைகள் ( 11th Biology- Important 1 mark Questions )

Write your Comment