11th Biology Revision Test 2

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 120

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும் 

    24 x 5 = 120
  1. நெஃப்ரானுள் நுழையும் ஒரு துளி நீர் எதிர்கொள்ளும் அமைப்புகளை வரிசைப்படுத்துக்க.
    (அ) உட்செல் நுண்தமனி
    (ஆ) பெளமானின் கிண்ணம்
    (இ) சேகரிப்பு நாளம் 
    (ஈ) சேய்மை சுருள் நுண் குழல்
    (உ) கிளாமருலஸ் மற்றும்
    (ஊ) ஹென்லேயின் வளைவு
    (எ) அண்மை சுருள் நுண்குழல் 
    (ஏ) சிறுநீரக பெல்விஸ்

  2. சிறுநீரகத்தின் அமைப்பை படத்துடன் விவரி

  3. சிறுநீரகத்தின் பணிகளை வெறிப்படுத்துதல் பற்றி எழுதுக? ADH மற்றும் டையபெட்டிஸ் இன்சிபிடஸ்

  4. தசைச்சுருக்கத்திற்கான சறுக்கு-இழைக்கோட்பாட்டை விளக்கு

  5. எலும்பு தசையிழையின் நுண்ணமைப்பை படத்துடன் விவரி?

  6. தோல் வளையத்தின் கை எலும்புகள் பற்றி எழுதுக.

  7. நுகர்ச்சி உணர் உறுப்பின் அமைப்பினை விவரி. 

  8. உடல் சமநிலை பேணும் உறுப்பு பற்றி எழுதுக?

  9. உடல் நரம்பு மண்டலம் பற்றி எழுதுக?

  10. தைராய்டு சுரப்பி அமைப்பைப் பற்றி சுருக்கி எழுதுக. 

  11. நாளமில்லாச் சுரப்பிகளின் குறை மற்றும் மிகைச் செயல்பாடுகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய கோளாறுகள் யாவை?    

  12. விலங்குகளை வளர்த்தல், உணவூட்டம் மற்றும் பாதுகாத்தல், இனப்பெருக்கம் மற்றும் அவைகளின் நோய்க்கட்டுப்பாடு ஆகியவற்றை உள்ளடக்கியதே கால்நடை வளர்ப்பாகும். வளர்ந்து வரும் மக்கள் தொகைப்பெருக்கத்திற்கு தேவையான உணவூட்டத்தை அளிக்கிறது. இத்தேவை பால், முட்டை , இறைச்சி மற்றும் தேன் போன்ற பொருட்களை அதிகமாக உற்பத்தி செய்து பெருக்குவதால் பூர்த்தி செய்யப்படுகிறது.
    அ) சரியான விகிதத்தில் கால்நடை வளர்ப்பதன் முக்கியத்துவம் யாது?
    ஆ) உள்நாட்டு கால்நடை இனங்களுக்கிடையே நடைபெறும் இனக்கலப்பைவிட குறுக்கு கலப்புச் செய்தல் அதிக நன்மையைத் தருகிறது - விவரி.
    இ) பறவைகள் உற்பத்தி ஒளிக்கால அளவைச் சார்ந்தது – விவரி
    ஈ) கூட்டு மீன் வளர்ப்பு அதிக முக்கியத்துவம்  வாய்ந்தது.      

  13. பறவை வளர்ப்பு பற்றி எழுதுக? 

  14. சல்லடை குழாய்கள் என்றால் என்ன? விளக்குக.  

  15. சல்லடை செல்கள் மற்றும் சல்லடைக் குழாய்களுக்கு இடையேயான வேறுபாட்டினை எழுதுக.

  16. டைலோசஸ் அமைப்பினை படம் வரைந்து பாகங்களைக் குறிக்க?

  17. நீரியல் திறனைக் கட்டுப்படுத்தும் கூறுகள் யாவை?

  18. ஆற்றல் சாரா உள்ளெடுப்பு பற்றி எழுதுக.

  19. அளவின் அடிப்படையில் கனிமங்களின் வகைப்பாட்டினை எழுதுக.

  20. சூழல் ஒளிபாஸ்பரிகரணம் மற்றும் சுழலா ஒளி பாஸ்பரிகரணம் வேறுபடுத்துக.

  21. குளுக்கோஸ் உடையும் மாற்றுவழிப் பாதையின் பெயர் என்ன? அதில் நடைபெறும் வினைகளை விவரி.  

  22. சுவாசித்தலின் மாற்று தளப்பொருள் படம் வரைக?

  23. சைட்டோகைனின் வாழ்வியல் விளைவுகள் யாவை ?

  24. வில் ஆக்ஸனோமீட்டர் ஆய்வினை எழுதுக.       

*****************************************

Reviews & Comments about 11th Biology Revision Test 2

Write your Comment