11th First Revision Test

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70

    I. சரியானவிடையைத்தேர்ந்தெடுத்துஎழுதுக.

    16 x 1 = 16
  1. கீழ்க்கண்டவற்றுள் எது சமதரத்தில் இல்லை.

    (a)

    பிரைமேட்டா  

    (b)

    ஆர்த்தோப்டீரா   

    (c)

    டிப்டிரா  

    (d)

    இன்செக்டா   

  2. உருளைப்புழுக்களில் நீர்மச் சட்டகமாக செயல்படுவது

    (a)

    உடற்குழி திரவம்

    (b)

    போலி உடற்குழி திரவம்

    (c)

    இரத்தம்

    (d)

    நிணநீர்

  3. கீழ் உள்ளனவற்றுள் பொருந்தாத இணை எது?

    (a)

    பிலிரூபின் மற்றும் பிலிவிரிடின்-சிறுகுடல் நீர்

    (b)

    ஸ்டார்ச்சை நீராற் பகுத்தல்-அமைலேஸ்கள்

    (c)

    கொழுப்பு செரித்தல்-லிபேஸ்கள்

    (d)

    உமிழ்நீர் சுரப்பி-பரோடிட்

  4. கீழ்கண்டவற்றுள் உள்ள தவறான வாக்கியத்தைக் கண்ண்டுபிடி..

    (a)

    நீணநீர் ரத்தத்திலிருந்து உருவாகி நீணநீர் நாளங்கள் வழியாக எடுத்து செல்லப்பட்டு மீண்டும் சுற்றோட்ட மண்டத்தை அடைகிறது 

    (b)

    புரதங்களின் அடர்த்தி பிளாஸ்மாவைக் காட்டிலும் திசுத்திரவத்தில் குறைவாகக் காணப்படுகிறது.

    (c)

    நீணநீர் என்பது ஒருவகை செல் உள் திரவமாகும் 

    (d)

    நுண் இரத்த நாளங்களின் சுவர் வழியாக வெளிவரும் நீர்  மற்றும் சிறுமூலக்கூறுகள் நீணநீரைத் தோற்றுவிக்கிறது.

  5. உயிரினங்களில் காணப்படும் வளர்ச்சி குறித்த தவறான கூற்று எது. 

    (a)

    உயிரினங்களில் வளர்ச்சி வெளியார்ந்ததாகும். 

    (b)

    உயிரினங்களில் வளர்ச்சி, வளர்ச்சியும்  இனப்பெருக்கமும்  ஒருங்கிணைந்தது. 

    (c)

    உயிரினங்களின் வளர்ச்சியின் போது பொருண்மை அதிகரிக்கின்றது. 

    (d)

    உயிரினங்களின் உடலில் காயம் ஏற்படும் சமயத்தில் பழுதடைந்த திசுக்களைச் சரி செய்வது  வளர்ச்சியின் மூலமே. 

  6. கீழ்கண்டவற்றில் பல்காய்ப்புத் தாவரம் எது?

    (a)

    மாஞ்சிஃபெரா

    (b)

    பாம்புசா

    (c)

    மியூசா

    (d)

    அகேவ்

  7. பல்வேறு வகைப்பட்ட  தாவர நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஒற்றுமைகள் மற்றும் வேற்றுமைகள் அடங்கிய வகைப்பாடு_______.

    (a)

    வேதிய வகைப்பாடு

    (b)

    மூலக்கூறு வகைப்பாட்டு அமைப்புமுறை

    (c)

    ஊநீர்சார் வகைப்பாடு

    (d)

    எண்ணியல் வகைப்பாடு

  8. மீசோகேரியோட்டுகளில் இவ்வகை செல்பகுப்பு நடைபெறுகிறது.  

    (a)

    ஏமைட்டாசிஸ்     

    (b)

    மைட்டாசிஸ்     

    (c)

    மியாசிஸ்   

    (d)

    மறைமுகப் பகுப்பு   

  9. சிறுநீர் அடர்வு நெஃப்ரானின் எப்பகுதியை சார்ந்துள்ளது?

    (a)

    பெளமானின் கிண்ணம்

    (b)

    ஹென்லே வளைவின் நீளம்

    (c)

    அண்மை சுருள் நுண்குழல்

    (d)

    கிளாமருலஸிருந்து தோன்றும் இரத்த நுண்நாளத்தொகுப்பு 

  10. பொதுச் சொல்லான பிளாஸ்மா சவ்வு தசைகளில் _________ என அழைக்கப்படுகிறது.

    (a)

    தசை நுண்ணிழை

    (b)

    சார்க்கோலெம்மா

    (c)

    சார்க்கோபிளாசம்

    (d)

    சார்க்கோபிளாச வலைப்பின்னல்

  11. அயோடின் கலந்த உப்பு இதனைத் தடுத்தலில் முக்கியப்பங்காற்றுகிறது.  

    (a)

    ரிக்கெட்ஸ்  

    (b)

    ஸ்கர்வி 

    (c)

    காய்டர்  

    (d)

    அக்ரோமெகாலி    

  12. பெண்பூச்சிகள் ____ முட்டை பொரிந்து லார்வாவாக மாறும்        

    (a)

    கருவுருதலுக்குப் பின் 

    (b)

    வாரங்களுக்குப் பின்

    (c)

    ஸ்வார்மிங்

    (d)

    நீண்ட வடிவில்

  13. தாவரத்தின் அடிப்படை அலகு ______ எனப்படும்.

    (a)

    செல்

    (b)

    எளியத்திசு

    (c)

    இடியோபிளாஸ்ட்கள்

    (d)

    ஸ்கிலிரைடுகள்

  14. பொருத்தமான இணையைத் தேர்ந்தெடு:

    1. சிட்டரஸ் அடிநுனி இறப்பு (i) Mo
    2. சாட்டை வால் நோய் (ii) Zn
    3. பழுப்பு மையக் கருக்கல் நோய் (iii) Cu
    4. சிற்றிலை நோய் (iv) B
    (a)
    2 4
    (iii) (ii) (iv) (i)
    (b)
    2 4
    (iii) (i) (iv) (ii)
    (c)
    2 4
    (i) (iii) (ii) (iv)
    (d)
    2 4
    (iii) (iv) (ii) (i)
  15. மீளாவினையின் விளைவால் இரண்டு மூலக்கூறு NADH+H+ மற்றும் CO2 ஆகியவை உருவாகின்றன. இது உருமாறும்வினை அல்லது _________ எனவும் அழைக்கப்படுகின்றது.

    (a)

    சுவாசித்தல் 

    (b)

    ஒடுக்க ஆக்ஸிஜனேற்ற வினை

    (c)

    இணைப்பு வினை

    (d)

    குளுக்கோ நியோஜெனிசிஸ்

  16. தாவரங்களின் விதை உறக்கம்______.

    (a)

    சாதகமற்ற பருவ மாற்றங்களை தாண்டி வருதல்

    (b)

    வளமான விதைகளை உருவாக்குதல்

    (c)

    வீரியத்தை குறைகிறது

    (d)

    விதைச்சிதைவை தடுக்கிறது

  17. II.ஏதேனும் நான்கனுக்கு மட்டும் ஒவ்வொரு பிரிவிலும் விடையளி :

    8 x 2 = 16
  18. வரையறுக்கப்பட்ட துண்டங்களின் பல்வேறு தன்மைகளின் பகுப்பாய்வி என்பது யாது?

  19. பெரும்பாலான விலங்குகளில் காணப்படும் பொதுவான நான்கு பண்புகளைக்ளைக் குறிப்பிடுக.

  20. இரைப்பை உணவுக்குழல் பின்னோட்ட நோய் என்பது யாது? 

  21. ஸ்ட்ரெப்டோமைசிஸ் எனும் மண்வாழ் ஆக்டினோ பாக்டீரியம் உருவாக்கும் உயிர் எதிர்ப் பொருட்களைக் கூறு.

  22. வேர் ஏறுகொடிகள் எவ்வாறு தண்டு ஏறுகொடிகளிலிருந்து வேறுபடுகின்றன?

  23. சினான்டரஸ் மகரந்தம் என்பது யாது? எடுத்துக்காட்டு தருக.

  24. சிறுநீரகத்தில் இருந்து வடிகட்டப்பட்ட இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக்குழாய் எது?

  25. நுகர்ச்சி உறுப்புகள் என்றால் என்ன?

  26. தேனீக்களின் மூவகைச் சமூகக் கட்டமைப்பின் பெயர்களைக் கூறு 

  27. தாவரங்கள் இலைகள் உதிர்ந்த பின் எவ்வாறு சுவாசிக்கிறது?

  28. ஒரே அளவிலான மற்றும் சம இலை பரப்பு கொண்ட அவரை தாவரத்தை இரு பிரிவுகளாக (அ மற்றும் ஆ) பிரித்து ஒரே நிலையில் வளர்க்கப்படுகிறது. அ பிரிவு தாவரங்களுக்கு 400 முதல் 450 nm அலை நீளமுள்ள ஒளியும், ஆ பிரிவு தாவரங்களுக்கு 500 முதல் 550 nm அலை நீள ஒளியும் வழங்கப்படுகிறது.

  29. நீள் பகல் தாவரம் என்றால் என்ன? 

  30. III.ஏதேனும் 3 மட்டும் ஒவ்வொரு பிரிவிலும் விடையளி .வினா எண் 32,36க்கு கண்டிப்பாக விடையளிக்கவும்

    6 x 3 =18
  31. பிளவு உடற்குழியையை (Schizocoelom) உணவுப்பாதை உடற்குழியுடன்டன் (Enterocoelom) ஒப்பிடுக.

  32. வாம்பின் என்றால் என்ன?

  33. இதய ஒலிகள் என்றால் என்ன? அவை எப்போது, மற்றும் எப்படி உண்டாக்கப்படுகின்றன?

  34. சூல் ஒட்டுமுறையின் வகைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  35. பிளீக்டோனீமிக் DNA சுருள்கள் என்றால் என்ன?    

  36. அண்மை சுருள் நுண்குழல் பகுதியில் மீள உறிஞ்சப்பட்ட பொருட்கள் எம்முறையில் கடத்தப்படுகின்றன எனப் பொருத்துக.

    அ) Na+ -எளிய ஊடுருவல்
    ஆ) குளுக்கோஸ் -முதன்மை செயல்மிகு கடத்தல்
    இ) யூரியா -மறைமுக செயல்மிகு கடத்தல்
    ஈ) பிளாஸ்மா -இணை செயலியக்கம் 
    உ) நீர் -உயிரணு உட்கவர்தல்
    ஊ) புரதங்கள் -புரத வழி ஊடுருவல்
  37. நல்ல மணம் ஒருவரை சமையலறை நோக்கிச் செல்லத் தூண்டியது.இதில் உணவை அடையாளம் கண்டு உணர்வு தூண்டலை உண்டாக்கும் மூளை பகுதி எது?  

  38. ஃபுளோய செல்லின் படம் வரைந்து பாகங்களை குறிக்கவும்.

  39. பட்டைத் துளை நீராவிப் போக்கு பற்றி எழுதுக.

  40. பொட்டாசியம் மற்றும் அதன் அறிகுறியினை எழுதுக 

  41. IV. அனைத்து வினாக்களுக்கும் விடையளி :

    4 x 5 = 20
    1. உயிரியியல் பாடத்தில் இலத்தீன் மற்றும் கிரேக்கப் பெயர்களின் பயன்பாட்டின் முக்கியத்துவத்தை விளக்குக. 

    2. தவளைகளுக்கும் தேரைகளுக்குமிடையே வேறுபாடுகளை அட்டவணைப்படுத்து

    1. சயனோ பாக்டீரியத்தின் சிறப்பியல்புகள் யாவை? 

    2. லில்லியேசி குடும்பத் தாவரங்களை  சொலானேசி குடும்பத் தாவரங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுத்துவாய்?

    1. நெஃப்ரானுள் நுழையும் ஒரு துளி நீர் எதிர்கொள்ளும் அமைப்புகளை வரிசைப்படுத்துக்க.
      (அ) உட்செல் நுண்தமனி
      (ஆ) பெளமானின் கிண்ணம்
      (இ) சேகரிப்பு நாளம் 
      (ஈ) சேய்மை சுருள் நுண் குழல்
      (உ) கிளாமருலஸ் மற்றும்
      (ஊ) ஹென்லேயின் வளைவு
      (எ) அண்மை சுருள் நுண்குழல் 
      (ஏ) சிறுநீரக பெல்விஸ்

    2. உடல் சமநிலை பேணும் உறுப்பு பற்றி எழுதுக?

    1. இருவிதையிலை தண்டிற்கும் ஒருவிதையிலை தண்டிற்கும்  இடையே உள்ள உள்ளமைப்பியல் வேறுபாடுகளை எழுதுக.

    2. சுவாசித்தலின் மாற்று தளப்பொருள் படம் வரைக?

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு உயிரியல் முதல் திருப்புதல் தேர்வு ( 11th biology First Revision Test )

Write your Comment