கார மற்றும் காரமண் உலோகங்கள் மாதிரி வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    10 x 1 = 10
  1. பின்வருவனவற்றுள் தவறான கூற்று எது?

    (a)

    கார உலோக நேரயனிகளில், Li+ அயனியின் நீரேற்றும் தன்மையின் அளவு மிகக் குறைவு.

    (b)

    KO2 ல் K ன் ஆக்ஸிஜனேற்ற எண் +1.

    (c)

    Na/Pb உலோக கலவையை உருவாக்கசோடியம் பயன்படுகிறது.

    (d)

    MgSO4 நீரில் எளிதில் கரையும்.

  2. சோடியம் எதில் சேமிக்கப்படுகிறது?

    (a)

    ஆல்கஹால்

    (b)

    நீர்

    (c)

    மண்ணெண்ணெய்

    (d)

    இவற்றில் ஏதுமில்லை

  3. லித்தியம் எதனுடன் மூலைவிட்ட தொடர்பு உடையது?

    (a)

    சோடியம்

    (b)

    மெக்னீசியம்

    (c)

    கால்சியம்

    (d)

    அலுமினியம்

  4. நைட்ரஜன், CaC2 உடன் வினைபுரிந்து கிடைக்கும் விளைபொருள் (NEET-Phase I)

    (a)

    Ca(CN)3

    (b)

    CaN2

    (c)

    Ca(CN)2

    (d)

    Ca3N2

  5. CaC2 ஐ வளிமண்டல நைட்ரஜனுடன் சேர்த்து, மின்உலையில் வெப்பப்படுத்தும்போது கிடைக்கும் சேர்மம்.

    (a)

    Ca(CN)2

    (b)

    CaNCN

    (c)

    CaC2N2

    (d)

    CaNC2

  6. பின்வருவனவற்றுள் காரமண் உலோகம் எது?

    (a)

    சோடியம்

    (b)

    கால்சியம்

    (c)

    லித்தியம்

    (d)

    பொட்டாசியம்

  7. கடல் நீரில் அதிக அளவில் கரைந்துள்ள மூன்றாவது தனிமம்

    (a)

    பெரிலியம்

    (b)

    பேரியம்

    (c)

    கால்சியம்

    (d)

    மெக்னீசியம்

  8. பின்வருவனவற்றுள் எது பாரீஸ் சாந்து என அறியப்படுகிறது?

    (a)

    CaSO4.2H2O

    (b)

    CaCl2

    (c)

    CaSO4

    (d)

    CaSO4.\(\frac{1}{2}\)H2O

  9. பின்வருவனவற்றுள் பொருந்தாத இணையை கண்டறி.
    சுடரில் தனிமங்களால் கொடுக்கப்படும் நிறங்கள் கீழே தரப்பட்டுள்ளன.அவற்றில் பொருந்தாததை கண்டறி.

    (a)

    பேரியம் - பச்சை ஆப்பிள் நிறம்

    (b)

    ரேடியம் - கிரிம்சன்சிவப்பு

    (c)

    கால்சியம் செங்கல் சிவப்பு நிறம்

    (d)

    ஸ்டிரான்சியம் - நீல நிறம்

  10. பின்வருவனவற்றுள் சரியானது எது?

    (a)

    லித்தியம் நைட்ரஜனுடன் நேரடியாக இணைந்து Li3N ஐ தருகிறது.

    (b)

    மெக்னீசியம் நைட்ரஜனுடன் நேரடியாக இணைந்து Mg3N ஐ தருகிறது

    (c)

    (அ) மற்றும் (ஆ) சரி

    (d)

    லித்தியம் மற்றும் மெக்னீசியம் ஆகிய இரண்டும் பைகார்பனேட்டுகளை உருவாக்குகின்றன.

  11. 5 x 2 = 10
  12. முதல் தொகுதி உலோக புளூரைடுகளில் லித்தியம் புளூரைடு மிகக்குறைந்த கரைதிறனை கொண்டுள்ளது – உறுதிப்படுத்து.

  13. கார உலோகங்களை விட கார மண் உலோகங்கள் கடினமானவை ஏன்?

  14. பெரிலியத்தின் முரண்பட்ட பண்பிற்கு காரணம் என்ன?உன் பதிலை விளக்குக.

  15. பாலைவன ரோஜா என்பது எது?ஏன்?

  16. சோடியத்தின் ஆனா ஈத்தைனின் வினையைத் தருக.

  17. 5 x 3 = 15
  18. நீரில் சோடியம் ஹைட்ராக்சைடின் கரைதிறன், சோடியம் குளோரைடின் கரைதிறனை விட மிக அதிகம் ஏன்?

  19. சோடியம் கார்பனேட்டை தயாரிக்கும் சால்வே முறையில் நிகழும் வேதிவினைகளின் சமன்பாடுகளை எழுதுக

  20. பாரீஸ் சாந்தின் பயன்களைக் குறிப்பிடுக

  21. பின்வருவனவற்றை குறித்து சிறு குறிப்பு எழுதுக.
    (i) கார உலோகங்களின் எலக்ட்ரான் அமைப்பு
    (ii) கார உலோகங்களின் பொதுவான ஆக்ஸிஜனேற்ற

     

  22. கார உலோகங்களின் பயன்களை வரிசைப்படுத்துக.

  23. 3 x 5 = 15
  24. பெரிலியம் மற்றும் அலுமினியத்திற்குமான ஒத்தத் தன்மைகளை விவரிக்க

  25. கால்சியம் மற்றும் மெக்னீசியத்தின் உயிரியல் முக்கியத்துவத்தை சுருக்கமாக விவரி

  26. லித்தியத்தின் தனித்துவமான பண்புகளை அத்தொகுதியில் உள்ள மாற்ற தனிமங்களின் பண்புகளுடன் ஒப்பிடுக.

*****************************************

Reviews & Comments about 11th வேதியியல் Unit 5 கார மற்றும் காரமண் உலோகங்கள் மாதிரி வினாத்தாள் ( 11th Chemistry Alkali And Alkaline Earth Metals Model Question Paper )

Write your Comment