வேதிப் பிணைப்புகள் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    14 x 1 = 14
  1. பின்வருவனவற்றுள் எண்ம விதிப்படி அமையும் மைய அணுவைப் பெற்றுள்ளது எது?

    (a)

    XeF4

    (b)

    AlCl3

    (c)

    SF6

    (d)

    SCl2

  2. OA=C=OB,மூலக்கூறில், OA, C மற்றும் OB ஆகியவற்றினுடைய முறைசார்மின்சுமைகள் முறையே 

    (a)

    -1, 0, + 1

    (b)

    +1, 0,-1

    (c)

    -2,0,+2

    (d)

    0,0,0

  3. பின்வருவனவற்றுள், சல்பர்டெட்ராபுளூரைடு மூலக்கூறின் பிணைப்புக்கோணங்களாக இருக்க வாய்ப்புள்ளவை எவை?

    (a)

    1200,800

    (b)

    1090.28

    (c)

    900

    (d)

    890,1170

  4. இணைதிற பிணைப்புக் கொள்கையின்படி, இரண்டு அணுக்களுக்கிடையே எந்நிலையில் பிணைப்பு உருவாவது

    (a)

    முழுவதும் நிரம்பிய அணு ஆர்பிட்டால்கள் மேற்பொருந்தும்போதும்போது

    (b)

    சரிபாதி நிரம்பிய அணு ஆர்பிட்டால்கள் மேற்பொருந்தும்போது

    (c)

    பிணைப்பில் ஈடுபடாதஅணு ஆர்பிட்டால்கள் மேற்பொருந்தும்போது

    (d)

    காலியான அணு ஆர்பிட்டால்கள் மேற்பொருந்தும்போது

  5. ClF3 ,NF3 மற்றும் BF3 மூலக்கூறுகளில் உள்ள குளோரின், நைட்ரஜன் மற்றும் போரான் அணுக்கள் ஆகியன

    (a)

    sp3 இனக்கலப்பிலுள்ளன.

    (b)

    முறையே sp3 ,sp3 மற்றும் sp2 இனக்கலப்பிலுள்ளன.

    (c)

    sp2 இனக்கலப்பிலுள்ளன.

    (d)

    முறையே sp3d, sp3 மற்றும் sp2 இனக்கலப்படைந்துள்ளன.

  6. பின்வருவனவற்றுள் எது, அவற்றின் பிணைப்புத்தரங்களின் ஏறுவரிசையில் அமைந்தசரியான வரிசையை குறிப்பிடுகிறது.

    (a)

    C2 < C22- < O22- < O2

    (b)

    C22- < C2+ < O2 < O22-

    (c)

    O22- < O2 < C22- < C2+

    (d)

    O22- < C2 +< O2 < C22+

  7. ஹைட்ரஜன் பெராக்சைடு, ஓசோன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றில் O-O பிணைப்பு நீளத்தின் சரியான வரிசை

    (a)

    H2O2 > O3 >O2

    (b)

    O2 > O3 > H2 O2

    (c)

    O2 > H2 O2 > O3

    (d)

    O3 > O2 > H2 O2

  8. பின்வருவற்றில் எந்த ஒன்றுடையா காந்தத்தன்மை கொண்டது?

    (a)

    O2

    (b)

    O22-

    (c)

    O2+

    (d)

    இவற்றில் ஏதுமில்லை.

  9. IF5 மூலக்கூறின் வடிவம் மற்றும் இனக்கலப்பு

    (a)

    முக்கோண இருபிரமிடு வடிவம், Sp3d2

    (b)

    முக்கோண இருபிரமிடு வடிவம், Sp3d

    (c)

    சதுரபிரமிடு வடிவம், Sp3d2

    (d)

    எண்முகி வடிவம், Sp3d2

  10. ஒத்த இனக்கலப்பு, வடிவம் மற்றும் தனித்த எலக்ட்ரான் இரட்டை எண்ணிக்கையை கொண்ட மூலக்கூறுகள்

    (a)

    SeF4, XeO2 F2

    (b)

    SF4, Xe F2

    (c)

    XeOF4, TeF4

    (d)

    SeCl4, XeF4

  11. Xe F2 ஆனது ______ உடன் ஒத்த வடிவமுடையது.

    (a)

    SbCl2

    (b)

    BaCl2

    (c)

    TeF2

    (d)

    ICl2

  12. மீத்தேன், ஈத்தேன், ஈத்தீன் மற்றும் ஈத்தைன் ஆகியவற்றில் உள்ள இனக்கலப்பு ஆர்பிட்டால்களின் s- பண்பு சதவீதங்கள் முறையே

    (a)

    25, 25,33.3,50

    (b)

    50,50,33.3,25

    (c)

    50,25,33.3,50

    (d)

    50,25,25,50

  13. பின்வரும் மூலக்கூறுகளில் எது கார்பன்டையாக்சைடின் வடிவத்தை ஒத்துள்ளது?

    (a)

    SnCl2

    (b)

    NO2

    (c)

    C2 H2

    (d)

    இவை அனைத்தும்

  14. பின்வருவனவற்றுள், அயனி, சகப்பிணைப்பு மற்றும் ஈதல் சகப்பிணைப்பு இணைப்புகளை கொண்டுள்ள சேர்மம். 

    (a)

    NH4Cl

    (b)

    NH3

    (c)

    NaCl

    (d)

    இவற்றில் ஏதுமில்லை

  15. 8 x 2 = 16
  16. CO இன் மூலக்கூறு ஆர்பிட்டாட்டால் MO வரைபடத்தை வரைக, மேலும் அதன் பிணைப்புத் தரத்தை கணக்கிடுக.

  17. மூலக்கூறு ஆர்பிட்டால் (MO) கொள்கையில், அணு ஆர்பிட்டால்களின் நேர்க்கோட்டு மேற்பொதிதல் என்பதிலிருந்து நீவிர்புரிந்து கொண்டது என்ன?

  18. x- அச்சை மூலக்கூறு அச்சாகக் கருதினால், பின்வருவனவற்றுள் எவை சிக்மா பிணைப்பை உருவாக்கக்கூடும்?
    i) 1s மற்றும் 2py
    ii) 2Px மற்றும் 2Px
    iii) 2px மற்றும் 2pz
    iv) 1s மற்றும் 2pz

  19. எத்திலீன் மற்றும் அசிட்டிலீனில் பிணைப்புகள் உருவாதலை விளக்குக.

  20. பின்வரும் வடிவங்களில், என்னவகை இனக்கலப்புகள் நிகழசாத்தியப்படும்?
    அ)எண்முகி
    ஆ)நான்முகி
    இ)சதுரதளம்

  21. CO2 மற்றும் H2O ஆகிய இரண்டும் மூவணு மூலக்கூறுகளாகும் ஆனால் அவற்றின் இருமுனை திருப்புத் திறன் மதிப்புகள் வெவ்வேறாக உள்ளன. ஏன்?

  22. அயனிப் பிணைப்பிலுள்ள சகப்பிணைப்புத் தன்மையை விளக்குக.

  23. ஃபஜான் விதியை விளக்குக.

*****************************************

Reviews & Comments about 11th வேதியியல் - வேதிப் பிணைப்புகள் Book Back Questions ( 11th Chemistry - Chemical Bonding Book Back Questions )

Write your Comment