சுற்றுச்சூழல் வேதியியல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
    14 x 1 = 14
  1. பூமியைச் சுற்றியுள்ள வாயுக்களால் ஆன உறை வளிமண்டலம் என அறியப்படுகிறது. உயரம் 11 முதல் 50 கி.மீ க்கு இடைப்பட்ட பகுதி

    (a)

    அடிவெளிப்பகுதி

    (b)

    மத்திய அடுக்கு 

    (c)

    வெப்ப அடுக்கு 

    (d)

    அடுக்கு மண்டலம்

  2. பின்வருவனவற்றுள் எது இயற்கை மற்றும் மனிதர்களால் ஏற்படும் சூழலியல் இடையூறு?

    (a)

    காட்டுத் தீ

    (b)

    வெள்ளம்

    (c)

    அமில மழை 

    (d)

    பசுமைக்குடில் விளைவு

  3. போபால் வாயு துயரம் என்பது ________ இன் விளைவு ஆகும்.

    (a)

    வெப்ப மாசுபாடு

    (b)

    காற்று மாசுபாடு

    (c)

    கதிர்வீச்சு மாசுபாடு

    (d)

    நில மாசுபாடு

  4. பசுமைக்குடில் வாயுக்களின் தொடர்வரிசைகளில் எது GWP இன் அடிப்படையில் அமைந்துள்ளது?

    (a)

    CFC > N2O > CO2> CH4

    (b)

    CFC > CO2> N2O > CH4

    (c)

    CFC > N2O > CH4> CO2

    (d)

    CFC > CH4> N2O > CO2

  5. மழைநீரின் pH மதிப்பு

    (a)

    6.5

    (b)

    7.5

    (c)

    5.6

    (d)

    4.6

  6. ஓசோன் படல சிதைவு உருவாக்குவது

    (a)

    காட்டுத்தீ

    (b)

    தூர்ந்து போதல்

    (c)

    உயிர் பெருக்கம் 

    (d)

    உலக வெப்பமயமாதல்

  7. பின்வருவனவற்றுள் தவறான கூற்றை கண்டறிக.

    (a)

    தூய நீர் 5 ppm க்கும் குறைவான BOD மதிப்பை பெற்றிருக்கும்.

    (b)

    பசுமைக்குடில் விளைவு ஆனது உலக வெப்பமயமாதல் எனவும் அழைக்கப்படுகிறது

    (c)

    காற்றிலுள்ள நுண்ணிய திண்ம துகள்கள், துகள் மாசுபடுத்திகள் எனப்படுகின்றன

    (d)

    உயிர்க்கோளம் ஆனது பூமியை சூழ்ந்துள்ள பாதுகாப்பு ப�ோர்வையாகும்.

  8. CO சூழலில் வாழ்தல் அபாயகரமானது , ஏனெனில்

    (a)

    உள்ளே உள்ள O2 உடன் சேர்ந்து CO2 ஐ உருவாக்குகிறது.

    (b)

    திசுக்களிலுள்ள கரிம பொருள்களை ஒடுக்குகிறது

    (c)

    ஹீமோகுளோபினுடன் இணைந்து அதை ஆக்சிஜன் உறிஞ்ச தகுதியற்றதாக ஆக்குகிறது.

    (d)

    இரத்தத்தை உலரவைக்கிறது 

  9. உயிர்வேதி ஆக்சிஜன் தேவைஅளவு 5 ppm க்கு குறைவாக கொண்டுள்ள நீர் மாதிரி குறிப்பிடுவது

    (a)

    அதிகளவில் மாசுபட்டுள்ளது

    (b)

    குறைந்தளவு கரைந்த ஆக்ஸிஜன்

    (c)

    அதிகளவில் கரைந்த ஆக்ஸிஜன் உள்ளது

    (d)

    குறைந்த COD

  10. பசுமைக்குடில் விளைவு இல்ல நிலையில் பூமியின் புறப்பரப்பு வெப்பநிலை 

    (a)

    -220

    (b)

    -320

    (c)

    -180

    (d)

    00

  11. பின்வருவனவற்றுள் எவை கரும்புகை துகள்களை உருவாக்குகின்றன?

    (a)

    கரிம கரைப்பான்கள் 

    (b)

    உலோகங்கள் 

    (c)

    உலோக ஆக்சைடுகள் 

    (d)

    இவை அனைத்தும் 

  12. பின்வருவனவற்றுள் எடு தாவர ஊட்டச்சத்து  மாசுபடுத்திகள்?

    (a)

    வீட்டுக் கழிவு நீர் 

    (b)

    சாணக்குவியல் 

    (c)

    வேதி உரங்கள் 

    (d)

    இவை அனைத்தும் 

  13. குடிநீரில் காணப்படும் எதன் குறைவால் பற்சிதைவு தோன்றுகிறது ? 

    (a)

    குளோரைடு 

    (b)

    புளூரைடு 

    (c)

    கால்சியம் 

    (d)

    மெக்னீசியம் 

  14. குடிநீரில் உள்ள லெட் மாசுக்களின் அளவு எவ்வளவு இருப்பின் அது கல்லீரலை பாதிக்கிறது?

    (a)

    500 ppm க்கு மேல் 

    (b)

    500 ppm க்கு மேல் 

    (c)

    45 ppm க்கு மேல் 

    (d)

    450 ppm க்கு மேல் 

  15. 8 x 2 = 16
  16. பனிப்புகை வரையறு.

  17. ஒளிவேதி பனிப்புகையில் உள்ள ஓசோன் எங்கிருந்து வந்தது?

  18. பசுமை வேதியியல் என்றால் என்ன?

  19. பனிப்புகை என்றால் என்ன? தீவிர பனிப்புகை எவ்வாறு ஒளிவேதிப் பனிப்புகையிலிருந்து வேறுபடுகிறது?

  20. CFC மூலக்கூறுகள், அடுக்குமண்டலத்தில் ஓசோன் படல சிதைவை எவ்வாறு உண்டாக்குகின்றன என்பதை நிகழும் வினைகளின் அடிப்படையில் விளக்குக.

  21. அமில மழை எவ்வாறு உருவாகிறது? அதன் விளைவுகளை விளக்குக.

  22. பின்வருவனவற்றை வேறுபடுத்துக:
    (i) BOD மற்றும் COD
    (ii) உயிருள்ள மற்றும் உயிரற்ற துகள் பொருள் மாசுபடுத்திகள்

  23. நம் இரத்தத்தில் கார்பன் மோனாக்சைடால் உருவாக்கப்படும் ஆக்சிஜன் பற்றாக்குறையை விளக்குக. அதன் விளைவுகளை எழுதுக.

  24. 5 x 3 = 15
  25. காற்று மாசுபாடு என்றால் என்ன? அது எவ்வாறு உண்டாகிறது?

  26. ஹைட்ரோகார்பன்கள் என்பவை யாவை? அவற்றுடன் இணைந்த ஆபத்துகளை குறிப்பிடு.

  27. தீவிர பனிப்புகையின் விளைவுகள் எழுதுக.

  28. நீர் மாசுபடுதல் என்றால் என்ன?

  29. மண் மாசுபாடு என்பது என்ன? மண் மாசுபாடு எவற்றை பாதிக்கிறது?

  30. 3 x 5 = 15
  31. ஒளிவேதிப் பனிப்புகை எவ்வாறு உருவாகிறது? அதன் தன்மைகள் மற்றும் விளைவுகளை விளக்குக.

  32. நைட்ரஜன் ஆக்சைடுகள் பற்றிய குறிப்பைத் தருக.

  33. ஒளிவேதிப் புகையின் விளைவுகள் குறித்து எழுதுக.

*****************************************

Reviews & Comments about 11th வேதியியல் - சுற்றுச்சூழல் வேதியியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Chemistry - Environmental Chemistry Model Question Paper )

Write your Comment