Full Portion ஐந்து மதிப்பெண்கள் வினாத்தாள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 100
    20 x 5 = 100
  1. பின்வருவனவற்றின் மோலார் நிறைகளைக் காண்க.
    i) யூரியா[CO(NH2)2]
    ii) அசிட்டோன் [CH3COCH3]
    iii) போரிக் அமிலம்[H3BO3]
    iv) கந்தக அமிலம்[H2SO4]

  2. அயனி எலக்ட்ரான் முறையில் பின்வரும் வினைகளைச் சமன் செய்க.
    i) KMnO4 + SnCl2+HCl → MnCl2 + SnCl4 + H2O + KCl
    ii) C2O42- + Cr2 O72- → Cr3+ + CO2 (அமில ஊடகத்தில்)
    iii) Na2S2O3 + I2 → Na2S4O6 + NaI
    iv) Zn +NO3- → Zn2+ + NO (அமில ஊடகத்தில்)

  3. அயனி - எலக்ட்டரான் முறையை பற்றி விரிவாக எழுதுக.

  4. நிறை எண் 37 உடைய ஒரு அயனி ஒற்றை எதிர்மின் சுமையினைப் பெற்றுள்ளது. இந்த அயனியானது, எலக்ட்ரான்களைக் காட்டிலும் 11.1% அதிகமான நியூட்ரான்களைப் ப் பெற்றிருந்தால், அந்த அயனியின் குறியீட்டினைக் கண்டறிக.

  5. டீ-பிராக்ளே சமன்பாட்டை வருவி.

  6. அயனியாக்கும் ஆற்றலின் ஆவர்த்தன தொடர்பினை விவரி.

  7. பாலிங் முறையினை பயன்படுத்தி பொட்டாசியம் குளோரைடு படிகத்தில் உள்ள Kமற்றும் Cl அயனிகளின் அயனி ஆரங்களை கணக்கிடுக. கொடுக்கப்பட்டுள்ள தரவு dk+ - cl- =3.14 Å

  8. திரைமறைப்பு விளைவு என்றால் என்ன?

  9. ஹைட்ரஜனின் (A) என்ற ஐசோடோப்பானது 16ம் தொகுதி, 2வது வரிசையில் உள்ள ஈரணு மூலக்கூறுகளுடன் வினைபுரிந்து அணுக்கரு உலைகளில் மட்டுப்படுத்தியாகச் செயல்படும் (B) என்ற சேர்மத்தினைத் தருகிறது. (A) ஆனது (C) – C3H6 உடன் சேர்க்கை வினைக்கு உட்பட்டு (D)யைத் தருகிறது. A, B, C மற்றும் Dயைக் கண்டறிக.

  10. கார உலோகச் சேர்மங்கள் ஆக்சைடுகள் மற்றும் ஹைட்ராக்சைடுகள் பற்றி விரிவாக எழுது.

  11. வாண்டர் வால்ஸ் மாறிலிகளைக் கொண்டு நிலைமாறு மாறிகளைத் தருவி

  12. 298k வெப்பநிலையில் ஆக்ஸ்ஜனை ஓசோனாக மாறும் 3/2 O\(\rightarrow O_{3(g)}\)வினைக்கு \(\triangle G^0 \) காண்க , திட்டஅழுத்த அலகுகளில் இவ்வினையின் KP மதிப்பு 2.47X 10-29 

  13. CaCl2 உருவாதல்செயல்முறைக்கு பார்ன்-ஹேபர் சுற்றை எழுதுக.

  14. விரிவடைதல், மற்றும் சுருங்குதல் செயல்முறையின் போது செய்யப்படும் வேலையை கணக்கிடுக

  15. N2 (g) + 3H2 (g) ⇌ 2NH3 (g) என்ற வினையில் 298K ல் KP ன் மதிப்பு 8.19x102 மற்றும் 498Kல் 4.6 x 10–1 ஆகும். வினைக்கான ΔH0 னை கணக்கிடுக

  16. ஹாலஜன்களை அளந்தறியும் காரியஸ் முறையை விவரி.

  17. பீனாலின்  அமிலத்தன்மை உடனிசைவை பயன்படுத்தி விளக்கு.

  18. பிணைப்பில்லா உடனிசைவு ஒரு உதாரணத்துடன் விளக்கு. 

  19. 20% O2 மற்றும் 80% N2 கனஅளவு வீதத்தை கொண்டுள்ள காற்று, சமநிலையில் இருக்கும்போது, 298 K வெப்பநிலையில், நீரில் கரைக்கப்பட்டுள்ள O2 மற்றும் N2 ஆகியவற்றின் கனஅளவு சதவீதத்தை கணக்கிடுக. இவ்விரண்டு வாயுக்களின் ஹென்றி மாறிலிகளின் மதிப்புகள்
    KH(O2) = 4.6 x 104 atm and KH (N2) = 8.5 x 104 atm.

  20. கரைசல்கள் ரெளல்ட் வீதியிலிருந்து விளக்கமடைவதற்க்கான காரணங்களை பட்டியலிடு.

*****************************************

Reviews & Comments about 11th வேதியியல் - Full Portion ஐந்து மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Chemistry - Five Marks Question Paper )

Write your Comment