கரிம வேதியியலின் அடிப்படைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    6 x 1 = 6
  1. ஆல்காடையீன்களின் பொதுவான வாய்பாடு

    (a)

    CnH2n

    (b)

    CnH2n-1

    (c)

    CnH2n-2

    (d)

    CnHn-2

  2.  ன் IUPAC பெயர்

    (a)

    2 – புரோமோ -3 – மெத்தில் பியூட்டனோயிக் அமிலம்

    (b)

    2 - மெ த்தில் - 3- புரோமோ பியூட்டனோயிக் அமிலம்

    (c)

    3 - புரோமோ - 2 -மெத்தில் பியூட்யிக் அமிலம்

    (d)

    3 - புரோமோ- 2, 3 - டைமெத்தில் புரோப்பனோயிக் அமிலம்

  3. பின்வருவனவற்றுள் எது ஒளிசுழற்றும் பண்புடையது?

    (a)

    3 – குளோரோபென்டேன்

    (b)

    2 குளோரோ புரோப்பேன்

    (c)

    மீசோ டார்டாரிக் அமிலம்

    (d)

    குளூக்கோஸ்

  4. ஆர்தோ மற்றும் பாரா நைட்ரோபீனால் கலவையை பிரித்தெடுக்க பயன்படும் முறை

    (a)

    கொதிநிலைமாறா வாலை வடித்தல்

    (b)

    சிதைத்து வடித்தல்

    (c)

    நீராவி வாலை வடித்தல்

    (d)

    பிரிக்க முடியாதது

  5. சோடியம் நைட்ரோபுருசைடு, சல்பைடு அயனியுடன் வினைப்பட்டு ஊதா நிறத்தை தோற்றுவிப்பதற்கான காரணம்.

    (a)

    [Fe(CN)5 NO]3-

    (b)

    [Fe(NO)5 CN]+

    (c)

    [Fe(CN)5NOS]4-

    (d)

    [Fe (CN)5 NOS]3-

  6. கரிமச் சேர்மங்கள் பின்வரும் எவற்றில் கரையும்?

    (a)

    நீர்

    (b)

    HCL

    (c)

    முனைவுள்ள கரைப்பான்கள்

    (d)

    முனைவற்ற கரைப்பான்கள்

  7. 7 x 2 = 14
  8. கரிம சேர்மங்களின் பொதுபண்புகளைத் தருக.

  9. ஒரினவரிசை (அ) படிவரிசை பற்றி குறிப்பெழுதுக.

  10. நைட்ரோ ஆல்கேன் படி வரிசையில் உள்ள முதல் ஆறு சேர்மங்களின் மூலக்கூறு வாய்ப்பாட்டினை எழுதுக.

  11. லாசிகன் முறையில் கரிமச்சேர்மங்களில் காணப்படும் நைட்ரஜனைக் கண்டறிவதில் நடைபெ றும் வேதிவினைகளை விளக்குக.

  12. தாள் வண்ணப்பிரிகை முறையினை விளக்குக.

  13. காரியஸ் முறையில், 0.24g கரிமச்சேர்ம்ம் 0.287g சில்வர்குளோரைடைத் தருகிறது. அச்சேர்ம த்தில் உள்ள குளோரினின் சதவீத்த்தினைக் காண்க.

  14. டுமாஸ் முறையை பயன்படுத்தி நைட்ரஜனை அளவிடும்போது, 0.35g கரிமச்சேர்மமானது 150oC மற்றும் 760mm Hg அழுத்தத்தில் 20.7mL நைட்ரஜனை தருகிறது. அச்சேர்மத்தில் காணப்படும் நைட்ரஜனின் சதவீதத்தினைக் காண்க.

  15. 5 x 3 = 15
  16. பின்வரும் சேர்மங்களுக்கு வடிவ வாய்ப்பாடுகளை எழுதுக
    i. சைக்ளோ ஹெக்ஸா-1,4-டையீன்
    ii. எத்தைனைல் சைக்ளோ ஹெக்ஸேன்

  17. 0.284 எடையுள்ள கரிமச்சேர்மம் 0.287எடையுள்ள AgClயை காரியஸ் முறைப்படி அளந்தறியபடுகிறது எனில், Clன் சதவீதத்தைக் காண்க.

  18. பாஸ்பரஸை கொண்டுள்ள 0.33 எடையுள்ள கரிமச் சேர்மம் 0.397g Mg2P2O7யை தந்தது. அச்சேர்மத்தில் உள்ள P இன் சதவீதத்தினைக் கணக்கிடுக.

  19. வடிவ மாற்றியங்கள் என்றால் என்ன? அவை எவ்வாறு ஏற்படுகின்றன?

  20. பதங்கமாதல் என்றால் என்ன? பதங்கமாதல் எதற்குப் பயன்படுகிறது?

  21. 3 x 5 = 15
  22. 0.26g நிறையுள்ள கரிமசேர்மம் 0.039g நீரிரனையும், 0.245g கார்பன் டை ஆக்சைடினையும் எரிதலின் மூலம் தருகிறது. C மற்றும் H ன் சதவீதத்தினை கணக்கிடுக.

  23. சல்பரை அளந்தறியும் காரியஸ் முறையை விவரி.

  24. மெல்லிய அடுக்கு வண்ணப்பிரிகை முறையை விளக்கு.

*****************************************

Reviews & Comments about 11th வேதியியல் - கரிம வேதியியலின் அடிப்படைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Chemistry - Fundamentals of Organic Chemistry Model Question Paper )

Write your Comment