ஹேலோ ஆல்கேன்கள் மற்றும் ஹேலோ அரீன்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    11 x 1 = 11
  1. பின்வரும் சேர்மங்களில், அதிக கொதிநிலை உடைய சேர்மம் எது?

    (a)

    n-பியூட்டைல் குளோரைடு

    (b)

    ஐசோ பியூட்டைல் குளோரைடு

    (c)

    t- பியூட்டைல் குளோரைடு

    (d)

    n-புரப்பைல் குளோரைடு

  2. Cl அணுவின் இட அமைவினைப் பொருத்து CH3– CH = CH – CH2 – Cl, சேர்மமானது பின்வருமாறு வகைப்படுத்தப்படுகிறது

    (a)

    வினைல்

    (b)

    அல்லைல்

    (c)

    ஈரிணைய

    (d)

    அர்அல்கைல்

  3. டை எத்தில் குளோரோ மீத்தேனின் சரியான IUPAC பெயர்

    (a)

    3 – குளோரோ பென்டேன்

    (b)

    1-குளோரோ பென்டேன்

    (c)

    1-குளோரோ-1, 1, டை எத்தில் மீத்தேன்

    (d)

    1 –குளோரோ-1-எத்தில் புரப்பேன்.

  4. C-X பிணைப்பானது இவற்றில் வலிமையாக உள்ளது

    (a)

    குளோரோ மீத்தேன்

    (b)

    அயடோ மீத்தேன்

    (c)

    புரோமோ மீத்தேன்

    (d)

    புளுரோ மீத்தேன்

  5. பென்சீன் FeCl3 முன்னிலையில் Cl2 உடன் சூரிய ஒளி இல்லாத நிலையில் வினைபட்டு தருவது

    (a)

    குளோரோ பென்சீன்

    (b)

    பென்சை் குளோரைடு

    (c)

    பென்சால் குளோரைடு

    (d)

    பென்சீன் ஹெக்ஸா குளோரைடு

  6. C2F4Cl2 ன் பெயர்______________

    (a)

    ஃப்ரீயான் – 112

    (b)

    ஃப்ரீயான் – 113

    (c)

    ஃப்ரீயான் – 114

    (d)

    ஃப்ரீயான் – 115

  7. கூற்று: மோனோ ஹேலோ அரீன்களில், எலக்ட்ரான் கவர்பொருள் பதிலீட்டு வினை o- மற்றும் p- இடங்களில் நிகழ்கிறது.
    காரணம்: ஹாலஜன் அணுவானது வளைய கிளர்வு நீக்கி

    (a)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமாகும்.

    (b)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கம் அல்ல

    (c)

    கூற்று சரி, ஆனால் காரணம் தவறு

    (d)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

  8. பின்வரும் வினையைக் கருதுக.
    CH3CH2CH2Br+NaCN→ CH3CH2CH2CN + NaBr
    இவ்வினை பின்வரும் எவற்றுள் வேகமாக நிகழும்

    (a)

    எத்தனால்

    (b)

    மெத்தனால்

    (c)

    DMF (N, N' – டைமெத்தில் பார்மமைடு)

    (d)

    நீர்.

  9. எத்திலிடீன் குளோரைடை நீர்த்த KOH உடன் வினைப்படுத்தும் போது பெறப்படுவது

    (a)

    அசிட்டால்டிஹைடு

    (b)

    எத்திலீன் கிளைக்கால்

    (c)

    பார்மால்டிஹைடு

    (d)

    கிளையாக்சால்

  10. அசிட்டோன் \(\xrightarrow[ii)H_2O/H^{-1}]{i)CH_3MgI }X\),இங்கு X என்பது

    (a)

    2-புரப்பனால்

    (b)

    2-மெத்தில்-2-புரப்பனால்

    (c)

    1-புரப்பனால்

    (d)

    அசிட்டோனால்

  11. ஆல்கஹால்களை, அல்கைல் ஹாலைடுகளாக மாற்றும் பொழுத, பயன்படும் சிறந்த வினைப்பான் 

    (a)

    PCI3

    (b)

    PCI5

    (c)

    SOCI3

    (d)

    மேற்கூறிய அனைத்தும்  

  12. 12 x 2 = 24
  13. இருளில் மீத்தேனின் குளோரினேற்றம் சாத்தியமல்ல ஏன்?

  14. ஹேலோ ஆல்கேன்களில் காணப்படும் C-X பிணைப்பின் முனைவுத் தன்மைக்கு காரணம் தருக

  15. சூரிய ஒளியின் முன்னிலையில் குளோரோபார்ம் ஆக்சிஜனுடன் எவ்வாறு வினைபுரிகிறது?

  16. ஆல்கஹால்களிலிருந்து ஹேலோ ஆல்கேன்கள் தயாரிக்க உதவும் ஏதேனும் மூன்று முறைகளைத் தருக.

  17. குளோரோ  பென்சீனின் அரோமேட்டிக் கருக்கவர் பொருள் பதிலீட்டு வினையை விளக்குக.

  18. ஃப்ரீயான்கள் என்பவை யாவை? அவைகளின் பயன்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு விளைவினை விளக்குக.

  19. புரோமோ ஈத்தேனை பின்வருவனவற்றுடன் வினைப்படுத்தும் போது உருவாகும் விளைபொருளைக் கண்டறிக.(i) KNO2 (ii) AgNO2

  20. பின்வரும் சேர்மங்களின் தயாரிப்பினை விளக்குக.
    i) DDT
    ii) குளோரோஃபார்ம்
    iii) பை பீனைல்
    iv) குளோரோ பிக்ரின்
    v) ஃப்ரீயான்-12

  21. ஸ்வார்ட் வினையை எழுதுக.

  22. ஹேலோ ஆல்கேனின் ஒடுக்கவினையை எழுதுக. 

  23. கிரிக்னார்டு வினைபொருள் எத்தில் பார்மேட்டுடன் புரியும் வினையை எழுதுக. 

  24. சான்ட்மேயர் வினையை எழுதுக. 

  25. 5 x 3 = 15
  26. C2H5Cl என்ற மூலக்கூறு வாய்ப்பாடு உடைய (A) என்ற சேர்மம் KOH உடன் வினைபுரிந்து (B) என்ற சேர்மத்தையும் ஆல்கஹால் கலந்த KOH உடன் வினைபுரிந்து (C) என்ற சேர்மத்தையும் தருகின்றன. (A), (B), (C)ஐக் கண்டறிக.
     

  27. C3H6 என்ற (A) ஹைட்ரோ கார்பன் HBr உடன் வினைபுரிந்து (B) ஐத் தருகிறது. (B) நீர்த்த KOH உடன் வினைபுரிந்து C3H6O என்ற மூலக்கூறு வாய்ப்பாடுடைய (C) ஐத் தருகிறது. (A), (B) மற்றும் (C) ஐக் கண்டறிக. வினைகளை விளக்குக.

  28. காட்டர்மான் வினையை எழுதுக.

  29. பால்ஸ்கீமன் வினையை எழுதுக. 

  30. அசிட்டிலுடனான HCIன் வினையை எழுதுக.

*****************************************

Reviews & Comments about 11th வேதியியல் - ஹேலோ ஆல்கேன்கள் மற்றும் ஹேலோ அரீன்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Chemistry - Haloalkanes and Haloarenes Model Question Paper )

Write your Comment