11th chemistry-important 2 marks

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

chemistry

USE ONLY BLUE PEN
Time : 01:00:00 Hrs
Total Marks : 100

    PART-A

    ANSWER  ANY 50 OF THE FOLLOWING QUESTIONS

    50 x 2 = 100
  1. எது அதிகபட்ச மோல் எண்ணிக்கையிலான ஆக்ஸிஜன் அணுக்களை கொண்டுள்ளது?
    (i) 1 மோல் எத்தனால் (ii) 1 மோல் பார்மிக் அமிலம் (iii) 1 மோல் H2O

  2. கிராம் சமான நிறை வரையறு.

  3. எளிய விகித வாய்ப்பாடு வரையறு.

  4. NH3 ஆனது, 15ம் தொகுதியில் உள்ள பிற தனிமங்களின் ஹைட்ரைடுகளைக் காட்டிலும் அதிக உருகுநிலை மற்றும் கொதிநிலையைக் கொண்டுள்ளது – விளக்குக

  5. ஆர்த்தோ ஹைட்ரஜன் மற்றும் பாரா ஹைட்ரஜன் பண்புகளை வேறுபடுத்துக. 

  6. ஹைட்ரஜன் பெராக்சைடு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது.

  7. மூலக்கூறினுள் நிகழும் ஹைட்ரஜன் பிணைப்பு என்றால் என்ன? ஒரு உதாரணம் கொடு.

  8. பின்வரும் செயல்முறைகளுக்கு சமன்செய்யப்பட்ட சமன்பாடுகளை எழுதுக
    (அ) கால்சியம் ஹைட்ரஜன் கார்பனேட் கரைசலை ஆவியாக்குதல்
    (ஆ) கால்சியம் ஆக்சைடை கார்பனுடன் சேர்த்து வெப்பப்படுத்துதல்

  9. கால்சியம் ஹைட்ராக்சைடின் பயன்கள் யாவை?

  10. விரவுதல் மற்றும் பாய்தல் வேறுபாடு தருக.

  11. ஜூல் தாம்சன் விளைவை எழுதுக. 

  12. வெப்ப இயக்கவியலின் முதல் விதியை கூறு.

  13. வேலையின் சிறப்பியல்புகள் யாவை?

  14. சமநிலை செறிவில் எவ்வித மாற்றமும் இல்லை எனினும் சமநிலையானது ஏன் இயங்குச் சமநிலை என கருதப்படுகிறது?

  15. ஒரு வினையில், ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் சமநிலை மாறிலி மாறாத மதிப்பினை பெற்றிருக்கிறது Qன் மதிப்பும் மாறாமல் இருக்குமா? விவரி.

  16. KP மற்றும் Kக்கு இடையேயான தொடர்பு யாது? KPமதிப்பானது KCக்கு சமம் என்பதற்கான ஒரு எடுத்துக்கா ட்டினை தருக

  17. சமநிலையில், வாயுக்களின் ஒருபடித்தான வினையில் வினைவிளை பொருள்களின் மோல்களின் எண்ணிக்கையானது வினைபடு பொருள்களின் மோல்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தால், KC ஆனது KPயை விட அதிகமாக இருக்குமா அல்லது குறைவாக இருக்குமா?

  18. வினைகுணகத்தின் எண்மதிப்பு சமநிலைமாறிலியின் எண் மதிப்பை விட அதிகமாக இருந்தால், வினையானது சமநிலையை அடைய எந்த திசையினை நோக்கி நகரும்?

  19. லீ – சாட்லியர் தத்துவம் வரையறு.

  20. கீழ்கண்டுள்ள வினைகளைக் கருதுக
    a) H2(g) + I2(g) ⇌ 2 HI
    b) CaCO3 (s) ⇌ CaO (s) + CO2(g)
    c) S(s) + 3F2 (g) ⇌ SF6 (g)
    மேற்குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு வினைகளிலும், பெறப்படும் வினைவிளை பொருளின் அளவினை அதிகரிக்க கன அளவினை அதிகரிக்க அல்லது குறைக்க வேண்டுமா என்பதைக் கண்டுபிடி.

  21. நிறைதாக்க விதியினை வரையறு.

  22. சமநிலை வினையின் திசையினை எவ்வாறு கணிப்பாய் என்பதை விவரி.

  23. 3H2(g) + N2(g) ⇌ 2NH3(g) என்ற வினையின் சமநிலை மாறிலி KP மற்றும் Kக்கான பொதுவான சமன்பாட்டினை வருவி.

  24. சமநிலை மாறிலி மதிப்பு
    \({ K }_{ c }=\frac { { [{ NH }_{ 3 } }]^{ 4 }{ [{ O }_{ 2 } }]^{ 7 } }{ { [NO] }^{ 4 }{ [{ H }_{ 2 }O }]^{ 6 } } \) கொண்ட ஒரு சமநிலை வினை க்கான , தகுந்த சமன்செய்யப்பட்ட வேதி சமன்பாட்டை தருக.

  25. வான்ட் ஹாஃப் சமன்பாட்டினை வருவி.

  26. சமநிலையில் உள்ள ஒரு வினையில், மந்த வாயுக்களை சேர்ப்பதால் நிகழும்விளைவு என்ன?

  27. KP மற்றும் KC க்கு இடையேயான தொடர்பினை வருவி.

  28. பின்வரும் சமநிலை வினைகளைக் கருதுக. அவைகளின் சமநிலை மாறிலிகளைத் தொடர்பு படுத்துக.
    i) N2 + O2 ⇌ 2NO ; K1
    ii) 2NO + O2 ⇌ 2NO2 ; K2
    iii) N2 + 2O2 ⇌ 2NO2 ; K3

  29. ஒரு அமைப்பு இயற்சமநிலையில் உள்ளது என்பதை எவ்வாறு அறிவாய்?

  30. \(\triangle ng\) என்பதை பற்றி நீ அறிவதென்ன? 

  31. உருகுநிலை அல்லது உறைநிலை என்பது யாது?

  32. சமநிலை மாறிலியின் வரம்பு யாது?

  33. கொதிநிலைப் புள்ளி அல்லது சுருங்குதல் புள்ளி என அழைக்கப்படுவது எது? 

  34. ஒருபடித்தான சமநிலை என்றால் என்ன?

  35. பலபடித்தான சமநிலை என்றால் என்ன?

  36. பின்வரும் வினைகளுக்கு Kமற்றும் KC ஐ எழுதுக.
    \((i)2SO_{ 2 }(g)+{ O }_{ 2 }(g)\rightleftharpoons 2SO_{ 3 }(g)\)
    \((ii)2CO(g)\rightleftharpoons CO_{ 2 }(g)+C(s)\)
     

  37. பின்வரும் சூழ்நிலைகளில் வினை நிகழும் அளவினை கணிக்க.
    (i) KC மதிப்பு மிக அதிகமாக இருப்பின் 
    (ii) KC   மதிப்பு குறைவாக இருப்பின் 

  38. \({ H }_{ 2 }(g)+{ I }_{ 2 }\rightleftharpoons 2HI(g)\) என்றள வினைக்கு 717K  வெப்பநிலையில் KC ன் மதிப்பு 48. ஒரு குறிப்பிட்ட நிலையில், H2, I2, மற்றும் HI ன் செறிவுகள் முறையே 0.2 mol L-1, 0.2 mol L-1 மற்றும் 0.6 mol L-1 என கண்டறியப்படுகிறது. எனில் வினைநிகழும் திசையினை கண்டறி.  

  39. \({ N }_{ 2 }{ O }_{ 2 }(g)\rightleftharpoons 2NO_{ 2 }(g)\) என்ற வினைக்கு 373K  ல், KC = 0.21. கொடுக்கப்பட்ட நேரத்தில் N2O4 மற்றும் NO2 ஆகியவற்றின் செறிவுகள் முறையே 0125 mol dm-3 மற்றும் 0.5  mol dm-3 என கண்டறியபட்டது. எனில் வினைநிகழும் திசையை கண்டறி.

  40. வாண்ட் ஹாப் சமன்பாடு பற்றி எழுதுக.

  41. பின்வருவனவற்றை வரையறு
    i) பிணைப்புத்தரம் ii) இனக்கலப்பு iii) σ- பிணைப்பு

  42. பை (π) பிணைப்பு என்றால் என்ன?

  43. CH4, NH3 மற்றும் H2O, ஆகியவற்றிலுள்ளமைய அணுக்கள் sp3 இனக்கலப்பிற்கு உட்பட்டுள்ளன. எனினும் அவற்றின் பிணைப்புக் கோணங்கள் வெவ்வேறாக உள்ளன. ஏன்?

  44. BF3 மூலக்கூறில் காணப்படும் Sp2 இனக்கலப்பை விளக்குக.

  45. ஆக்ஸிஜன் மூலக்கூறிற்கு மூலக்கூறு ஆர்பிட்டால் (MO) வரைபடத்தை வரைக. அதன் பிணைப்புத் தரத்தை கணக்கிடுக, மேலும் O2 மூலக்கூறு பாரா காந்தத்தன்மை கொண்டது எனக் காட்டுக.

  46. CO இன் மூலக்கூறு ஆர்பிட்டாட்டால் MO வரைபடத்தை வரைக, மேலும் அதன் பிணைப்புத் தரத்தை கணக்கிடுக.

  47. மூலக்கூறு ஆர்பிட்டால் (MO) கொள்கையில், அணு ஆர்பிட்டால்களின் நேர்க்கோட்டு மேற்பொதிதல் என்பதிலிருந்து நீவிர்புரிந்து கொண்டது என்ன?

  48. N2 மூலக்கூறு உருவாதலை மூலக்கூறு ஆர்பிட்டால் (MO) கொள்கை மூலம் விவாதிக்கவும்.

  49. இரு முனை திருப்புத் திறன் என்றால் என்ன?

  50. கார்பன்டையாக்சைடு மூலக்கூறின் நேர்க்கோட்டு வடிவமானது இரண்டு முனைவுற்ற பிணைப்புகளை கொண்டுள்ளது. எனினும் மூலக்கூறு பூஜ்ஜிய இருமுனை திருப்புத்திறனை பெற்றுள்ளது ஏன்?

  51. பின்வருவனவற்றிற்கு லூயி வடிவமைப்புகளை வரைக.
    i) NO3
    ii) SO42–
    iii) HNO3
    iv) O3

  52. BeCl2 மற்றும் MgCl2 ஆகியவற்றில் பிணைப்புகள் உருவாதலை விளக்குக .

  53. σ மற்றும் π பிணைப்புகளில் எது வலிமையானது? ஏன்?

  54. பிணைப்பு ஆற்றல் வரையறு.

  55. ஹைட்ரஜன் வாயுவானது ஈரணு மூலக்கூறாகும், அதேசமயம் மந்த வாயுக்கள் ஓரணு வாயுக்களாகும்- மூலக்கூறு ஆர்பிட்டால் (MO) கொள்கையின் அடிப்படையில் விளக்குக.

  56. முனைவுற்ற சகப்பிணைப்பு என்றால் என்ன?எடுத்துக்காட்டுடன் விவரி.

  57. x- அச்சை மூலக்கூறு அச்சாகக் கருதினால், பின்வருவனவற்றுள் எவை சிக்மா பிணைப்பை உருவாக்கக்கூடும்?
    i) 1s மற்றும் 2py
    ii) 2Px மற்றும் 2Px
    iii) 2px மற்றும் 2pz
    iv) 1s மற்றும் 2pz

  58. கார்பனேட் அயனியை மேற்கோளாக கொண்டு ஒத்திசைவை விளக்குக.

  59. எத்திலீன் மற்றும் அசிட்டிலீனில் பிணைப்புகள் உருவாதலை விளக்குக.

  60. பின்வரும் வடிவங்களில், என்னவகை இனக்கலப்புகள் நிகழசாத்தியப்படும்?
    அ)எண்முகி
    ஆ)நான்முகி
    இ)சதுரதளம்

  61. VSEPR கொள்கையை விளக்குக. இக்கொள்கையை பயன்படுத்தி IF7, மற்றும் SF6 ஆகியவற்றின் வடிவமைப்புகளை கண்டுபிடி.

  62. CO2 மற்றும் H2O ஆகிய இரண்டும் மூவணு மூலக்கூறுகளாகும் ஆனால் அவற்றின் இருமுனை திருப்புத் திறன் மதிப்புகள் வெவ்வேறாக உள்ளன. ஏன்?

  63. பின்வருவனவற்றுள் எந்த ஒன்று அதிகபட்ச பிணைப்புத் தரத்தைக் கொண்டுள்ளது?
    \(\mathrm{N}_{2}, \mathrm{~N}_{2}^{+}\) அல்லது \(\mathrm{~N}_{2}^{-}\)

  64. அயனிப் பிணைப்பிலுள்ள சகப்பிணைப்புத் தன்மையை விளக்குக.

  65. ஃபஜான் விதியை விளக்குக.

  66. எண்ம விதியைப் பற்றி எழுதுக.

  67. சகபிணைப்பு எவ்வாறு உருவாகிறது?

  68. ஒற்றை எண்ணிக்கையில் எலக்ட்ரான்களைக் கொண்டுள்ள மூலக்கூறுகளை நைட்ரஜன் டை ஆக்ஸைடு மற்றும் நைட்ரிக் ஆக்ஸைடின் லூயிஸ் வடிவமைப்பை எழுதுக.

  69. பின்வரும் மூலக்கூறுகளுக்கு லூயிஸ் வடிவமைப்புகளை வரைக.
    (i) SF6
    (ii) PCl5

  70. அயனிப் பிணைப்பை வரையறு.

  71. பெர்ரொசயனைடு அயனியில் உள்ள பிணைப்பு எவ்வகையானது என விளக்குக.

  72. அமோனியா BF3 உடன் நிகழ்த்தும் பிணைப்பை விளக்குக.

  73. பிணைப்பு நீளம் என்பதை வரையறு.

  74. பிணைப்புக் கோணம் வரையறு. அதை எவ்வாறு கண்டறியலாம்.

  75. F2 மூலக்கூறு உருவாதலை விளக்குக.

  76. எட்டு எலக்ட்ரான் விதிக்கான விதி விலக்குகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

  77. கரிம சேர்மங்களின் பொதுபண்புகளைத் தருக.

  78. கரிமச்சேர்மங்களை அவற்றின் அமைப்பின் அடிப்படையில் வகைப்படுத்தலை விவரி.

  79. ஒரினவரிசை (அ) படிவரிசை பற்றி குறிப்பெழுதுக.

  80. வினை செயல் தொகுதி என்றால் என்ன? பின்வரும் சேர்மங்களில் உள்ள வினைச்செயல் தொகுதியினை கண்டறிக.
    (அ) அசிட்டால்டிஹைடு
    (ஆ) ஆக்சாலிக் அமிலம்
    (இ) டைமெத்தில் ஈதர்
    (ஈ) மெத்தில் அமீன்.

  81. பின்வரும் கரிமச்சேர்ம வகைகளின் பொதுவான வாய்ப்பாட்டினைத் தருக.
    (அ) அலிபாடிக் மோனோ ஹைட்ரிக் ஆல்கஹால்
    (ஆ) அலிபாடிக் கீட்டோன்கள்
    (இ) அலிபாடிக் அமீன்கள்.

  82. நைட்ரோ ஆல்கேன் படி வரிசையில் உள்ள முதல் ஆறு சேர்மங்களின் மூலக்கூறு வாய்ப்பாட்டினை எழுதுக.

  83. கார்பாக்ஸிலிக் அமிலங்களின் முதல் நான்கு படிவரிசைச் தொடர் சேர்மங்களின் மூலக்கூறுவாய்பாடு மற்றும் சாத்தியமுடைய அமைப்பு வாய்பாடுகளைத் தருக.

  84. லாசிகன் முறையில் கரிமச்சேர்மங்களில் காணப்படும் நைட்ரஜனைக் கண்டறிவதில் நடைபெ றும் வேதிவினைகளை விளக்குக.

  85. கேரியஸ் முறையில் கரிமச்சேர்மங்களில் ஹாலஜன்களை எடையறியும் முறையின் தத்துவத்தினை விளக்குக.

  86. பின்வருவனவற்றின் தத்துவங்களை சுருக்கமாக விளக்குக.
    i. பின்ன வடிகட்டுதல்
    ii. குழாய் வண்ணப்பிரிகை முறை

  87. தாள் வண்ணப்பிரிகை முறையினை விளக்குக.

  88. கரிமச்சேர்மங்களில் காணப்படும் பல்வேறு கட்டமைப்பு மாற்றியங்களை விளக்குக.

  89. ஒளிசுழற்சி மாற்றியத்தை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  90. 2-பியூட்டீனை எடுத்துக்காட்டாக்க் கொண்டு வடிவ மாற்றியங்களை விளக்குக.

  91. 0.30g கரிமச்சேர்மம் 0.88g காரபன்பன்டை ஆக்ஸடு மற்றும் 0.54g நீரினைத் தருகிறது. அச்சேர்ம த்தில் உள்ள கார்பன் மற்றும் ஹைட்ரஜனின் சதவிதத்தினைக் காண்க.

  92. கெல்டால் முறை யில் 0.20g கரிமச் சேர்மத்திலிருந்து வெளிப்படும் அம்மோனியா 15 ml N/20 கந்தக அமிலக் கரைசலால் நடுநிலையாக்கப்படுகிறது. நைட்ரஜனின் சதவீதத்தினைக் காண்க.

  93. 0.32g கரிமச் சேர்மத்தினை புகையும் நைட்ரிக் அமிலம் மற்றும் பேரியம் நைட்ரேட் படிகத்துடன் ஒரு முடப்பட்ட குழாயில் வெப்பப்படுத்தும் போது, 0.466g பேரியம் சல்பேட் கிடைக்கிறது. அச்சேர்மத்தில் உள்ள கந்தகத்தின் சதவீதத்தினைக் கண்டறிக.

  94. காரியஸ் முறையில், 0.24g கரிமச்சேர்ம்ம் 0.287g சில்வர்குளோரைடைத் தருகிறது. அச்சேர்ம த்தில் உள்ள குளோரினின் சதவீத்த்தினைக் காண்க.

  95. டுமாஸ் முறையை பயன்படுத்தி நைட்ரஜனை அளவிடும்போது, 0.35g கரிமச்சேர்மமானது 150oC மற்றும் 760mm Hg அழுத்தத்தில் 20.7mL நைட்ரஜனை தருகிறது. அச்சேர்மத்தில் காணப்படும் நைட்ரஜனின் சதவீதத்தினைக் காண்க.

  96. பின்வரும் சேர்மங்களை அவற்றின் அமைப்பின் அடிப்படையில் வகைப்படுத்துக.
    (i) CH≡ C-CH2-≡CH
    (ii) CH3-CH2-CH2-CH2-CH3

  97. உட்கரு பதிலீடு செய்யப்பட்ட அரோமேட்டிக் ஹாலஜன் சேர்மங்களுக்கு எவ்வாறு பெயரிடப்படுகின்றன? 

  98. ஒரு சேர்மத்தின் மூலக்கூறு வாய்ப்பாடு என்பதை வரையறு?

  99. கரிமச் சேர்மங்களின் அமைப்பினை குறித்துக்காட்டும் முறைகள் யாவை?

  100. சுருக்கப்பட்ட வாய்பாடு என்றால் என்ன?

  101. மாற்றியம் என்றால் என்ன?

  102. மாற்றியங்களின் வகைகள் யாவை?

  103. புறவெளி மாற்றியம் என்பவை யாவை?

  104. பின்வரும் சேர்மங்களுக்கு வடிவ வாய்ப்பாடுகளை எழுதுக.
    i. சைக்ளோ ஹெக்ஸா-1,4-டையீன்
    ii. எத்தனைல் சைக்ளோ ஹெக்ஸேன்

  105. 0.40 g எடையுள்ள அயோடின் பதிலீடு செய்யப்பட்ட கரிம சேர்மம் 0.125 g Agl யை காரியஸ் முறைப்படி தருகிறது எனில், அயோடினின் சதவீதத்தைக் காண்க.

  106. பாஸ்பரஸை கொண்டுள்ள 0.33 எடையுள்ள கரிமச் சேர்மம் 0.397 g Mg2P2O7 யை சார்ந்தது. அச்சேர்மத்தில் உள்ள P இன் சதவீதத்தினைக் கணக்கீடுக.

  107. பின்வருவன பற்றி சிறு குறிப்பு வரைக
    (அ) உடனிசைவு
    (ஆ) பிணைப்பில்லா உடனிசைவு

  108. கருக்கவர் பொருள் மற்றும் எலக்ட்ரான் கவர் பொருள் என்றால் என்ன? ஒவ்வொன்றிற்கும் தகுந்த உதாரணம் தருக

  109. வளைந்த அம்புக்குறியீட்டினை பயன்படுத்தி சகப்பிணைப்ணைப்பின் சீரற்ற பிளத்தலை சுட்டிக் காட்டுவதுடன் பின்வரும் சமன்பாடுகளை பூர்த்தி செய்க. ஒவ்வொரு வினையிலும் கருக்கவர் பொருளைக் கண்டறிக
    (i) CH3 - Br + KOH →
    (ii) CH3 - OCH3 + HI →

  110. தூண்டல் விளைளைவினை தகுந்த உதாரணங்களுடன் விளக்குக.

  111. எலக்ட்ரோமெரிக் விளைவினை விளக்குக.

  112. பின்வரும் வகை கரிமவினைகளுக்கு உதாரணம் தருக.
    (i) \(\beta\) - நீக்க வினை
    (ii) எலக்ட்ரான் கவர் பொருள் பதிவீட்டு வினை.

  113. ஒரு ஆல்கைல் டைஹேலைடிலிருந்து புரப்பைனை எவ்வாறு தயாரிக்கலாம் ?

  114. C6H13Br என்ற மூலக்கூறு வாய்பாடுடைய ஒரு ஆல்கைல் ஹாலைடானது ஹைட்ரோ ஹாலஜன் நீக்க வினைக்கு உட்பட்டு X மற்றும் Y ஆகிய C6H12 மூலக்கூறு வாய்பாட்டினை உடைய இரு மாற்றிய ஆல்கீன்களைத் தருகிறது. ஒடுக்க ஓசேனேற்றத்திற்கு உட்படுத்தும் போது  X மற்றும் Y ஆகியன CH3COCH3, CH3CHO, CH3CH2CHO and (CH3)2 CHCHOஆகியனவற்றைத் தருகின்றன. ஆல்கைல் ஹாலைடைக் கண்டறிக

  115. பென்சீனின் நைட்ரோ ஏற்ற வினையின் வினை வழிமுறையினை விளக்குக

  116. ஒரு சேர்மத்தின் அரோமேட் டிக் தன்மையைப் ஹக்கல் விதிப்படி எவ்வாறு தீர்மானிக்கலாம்

  117. பென்சினிலிருந்து பின்வரும் சேர்மங்களைத் தயாரிக்க உதவும் வழிமுறையினைத் தருக.
    1) 3 -குளோரோ  நைட்ரோ பென்சின்
    2) 4 - குளோரோ  டொலுவீன்
    3) புரோமோ பென்சின்
    4) m- டைநைட்ரோ பென்சீன்  

  118. புரப்பேன் மற்றும் புரப்பீனை வேறுபடுத்தி அறிய உதவும் எளிய சோதனையைக் கூறுக

  119. ஐசோ  பியூட்டைலினை அமிலம் கலந்த பொட்டாசியம் பெர்மாங்கனேட்டுடன் வினைபடுத்தும் போது என்ன நிகழும்

  120. எத்தில் குளோரைடை பின்வருவனவாக எவ்வாறு மாற்றுவாய்.
    1) ஈத்தேன்
    2) n - பியூட்டேன்

  121. n - பியூட்டேனின் வச அமைப்புகளை விவரிக்க

  122. புரப்பேனின் எரிதல் வினைக்கான வேதிச்சமன்பாட்டினைத் தருக

  123. மார்கோவ்னிகாப் விதியினை தகுந்த உதாரணத்துடன் விளக்குக

  124. எத்திலீனை குளிர்ந்த காரம் கலந்த பொட்டாசியம் பெரமாங்கனேட்டுடன் வினைபடுத்தும் போது நிகழ்வது யாது?

  125. பின்வரும் ஆல்கேன்களுக்கு வடிவமைப்பை எழுதுக
    1) 2, 3 – டைமெத்தில் – 6 – (2 –மெத்தில் புரப்பைல்) டெக்கேன்
    2) 5 – (2 –எத்தில் பியூட்டைல் ) – 3, 3 – டைமெத்தில் டெக்கேன்
    3) 5 – (1, 2 –டைமெத்தில் புரப்பைல்) – 2 –மெத்தில் நானேன்

  126. கொழுப்பு அமிலங்களின் சோடியம் உப்புகளிலிருந்து புரப்பேனை எவ்வாறு தயாரிப்பாய்?


  127. (A) பெருமளவு முதன்மை விளைபொருள் 
    (B) பெருமளவு முதன்மை (A) மற்றும் (B) ஐக் கண்டறிக

  128. பின்வருவனவற்றை நிறைவு செய்க :
    i) 
    ii) 
    iii) 
    iv) \(Ca{ C }_{ 2 }\overset { { H }_{ 2 }O }{ \longrightarrow } \)

  129. 1- பியூட்டைன் மற்றும் 2 - பியூட்டைனை எவ்வாறு வேறுபடுத்தி அறிவாய்?

  130. சாபாடியர்  - சண்டர்சன்ஸ் வினையை எழுதுக.      

  131. கார்பாக்சில் நீக்க வினையை எழுதுக.    

  132. கோல்பின் மின்னாற் பகுப்பு முறையை எழுது.    

  133. குளோரோபுரப்பேனின் ஒடுக்க வினையை எழுது.      

  134. உர்ட்ஸ் வினையை எழுது.    

  135. கோரி ஹவுஸ் வினையை எழுது. 

  136. பென்சீலிருந்து வளைய ஹெக்சேன் எவ்வாறு தயாரிப்பாய்?      

  137. உர்ட்ஸ் - பிட்டிங் வினையை எழுதுக.        

  138. ஃபிரிடல் - கிராப்ட்  வினையை எழுதுக.      

  139. பென்சீனின் ஹைட்ரஜனேற்ற  வினையை எழுதுக.          

  140. பென்சினின் குளோரினேற்றத்தை எழுது.        

  141. பிர்க் ஒடுக்கம் வினையை எழுதுக.    

  142. பின்வரும் சேர்மங்களை ஆல்கைல், அல்லைலிக், வைனைல், பென்சைலிக் ஹேலைடுகள் என வகைப்படுத்துக
    i) CH3 – CH = CH – Cl
    ii) C6H5CH2I
    iii) \({ CH }_{ 3 }-\underset { \overset { | }{ Br } }{ CH } -{ CH }_{ 3 }\)
    iv) CH2 = CH – Cl

    (a)

    CH3 – CH = CH – Cl

    (b)

    C6H5CH2I

    (c)

    \({ CH }_{ 3 }-\underset { \overset { | }{ Br } }{ CH } -{ CH }_{ 3 }\)

    (d)

    CH2 = CH – Cl

  143. இருளில் மீத்தேனின் குளோரினேற்றம் சாத்தியமல்ல ஏன்?

  144. n- புரப்பைல் புரோமைடிலிருந்து, n-புரப்பைல் அயோடைடை எவ்வாறு தயாரிப்பாய்?

  145. பின்வரும் ஆல்கைல் ஹேலைடுகளில்

    (i) கைரல் தன்மையுடையது?
    (i) விரைவாக SN2 வினையில் ஈடுபடக்கூடியது? எனக் கண்டறிக.

  146. குளோரோ பென்சீன் ஈதரின் முன்னிலையில் உலோக சோடியத்துடன் எவ்வாறு வினைபுரிகிறது. இவ்வினையின் பெயர் என்ன?

  147. ஹேலோ ஆல்கேன்களில் காணப்படும் C-X பிணைப்பின் முனைவுத் தன்மைக்கு காரணம் தருக

  148. கிரிக்னார்டு வினைபொருள் தயாரிப்பில் மிகச் சிறிதளவு நீர் கூட தவிர்க்கப்பட வேண்டும். ஏன்?

  149. அசிட்டைல் குளோரைடை அதிகளவு CH3MgI உடன் வினைப்படுத்தும் போது என்ன நிகழும்?

  150. R-Xன் பிணைப்பு ஆற்றலின் ஏறுவரிசையில் பின்வரும் ஆல்கைல் ஹாலைடுகளை எழுதுக.
    CH3Br, CH3F, CH3Cl, CH3I

  151. சூரிய ஒளியின் முன்னிலையில் குளோரோபார்ம் ஆக்சிஜனுடன் எவ்வாறு வினைபுரிகிறது?

  152. C5H11Br என்ற சேர்மத்திற்கு அனைத்து சாத்தியமான மாற்றியங்களையும் எழுதுக. அவற்றின் பெயர் மற்றும் IUPAC பெயரினைத் தருக.

  153. ஆல்கஹால்களிலிருந்து ஹேலோ ஆல்கேன்கள் தயாரிக்க உதவும் ஏதேனும் மூன்று முறைகளைத் தருக.

  154. SN1 மற்றும் SN2 வினைகளின் வினை வழிமுறைகளை ஒப்பிடுக.

  155. பின்வரும் அட்டவணையை நிரப்புக. வினையின் பெயரினைத் தருக. சமன்பாட்டினை எழுதுக.

    வினை விளை பொருள் வினையின் பெயர்
    __________ __________
    \(CH_3CH_2Br+ AgF \rightarrow ?\) __________ __________
    __________ __________
  156. குளோரோ  பென்சீனின் அரோமேட்டிக் கருக்கவர் பொருள் பதிலீட்டு வினையை விளக்குக.

  157. பின்வருவனவற்றிற்கு காரணம் தருக
    1. t-பியூட்டைல் குளோரைடானது நீர்த்த KOH உடன் SN1 வினை வழிமுறையில் வினைபுரிகிறது. ஆனால் n-பியூட்டைல் குளோரைடானது SN2 வினை வழிமுறையைப் பின்பற்றுகிறது.
    2. O- மற்றும் m- டைகுளோரோ  பென்சீன்களைக் காட்டிலும் p-டைகுளோரோ பென்சீன் அதிக உருகு நிலையைக் கொண்டுள்ளது.

  158. ஈதரில் உள்ள எத்தில் அயோடைடானது மெக்னீசியத்தூளுடன் வினை புரியும் ஒரு வினையில் மெக்னீசியம் கரைந்து விளைபொருள் உருவாகிறது.
    அ) விளைபொருளின் பெயர் என்ன? வினைக்கான சமன்பாட்டினை எழுதுக.
    ஆ) இவ்வினையில் பயன்படுத்தும் அனைத்து வினைப்பொருட்களும் உலர்வானதாக இருக்க வேண்டும்
    இ) இவ்வினையினைப் பயன்படுத்தி அசிட்டோனை எவ்வாறு தயாரிக்க முடியும்?

  159. பின்வருவனவற்றை தயாரிக்க உதவும் வேதி வினைகளை எழுதுக.
    i) கார்பன் டெட்ரா குளோரைடிலிருந்து ஃப்ரீயான்-12
    ii) கார்பன்-டை-சல்பைசல்பைடிலிருந்து கார்பன் டெட்ரா குளோரைடு

  160. ஃப்ரீயான்கள் என்பவை யாவை? அவைகளின் பயன்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு விளைவினை விளக்குக.

  161. புரோமோ ஈத்தேனை பின்வருவனவற்றுடன் வினைப்படுத்தும் போது உருவாகும் விளைபொருளைக் கண்டறிக.(i) KNO2 (ii) AgNO2

  162. SN1 வினை வழிமுறையினையும், அதன் புறவெளி வேதியியல் தன்மையினையும் விளக்குக.

  163. பின்வருவன பற்றி குறிப்பு வரைக.
    i) ராஷ் முறை
    ii) டெள முறை
    iii) டார்சன் முறை

  164. CH3 MgI ல் தொடங்கி பின்வருவனவற்றை எவ்வாறு தயாரிப்பாய்?
    i) அசிட்டிக் அமிலம்
    ii) அசிட்டோன்
    iii) எத்தில் அசிட்டேட்
    iv) ஐசோ புரப்பைல் ஆல்கஹால்
    v) மெத்தில் சயனைடு

  165. பின்வரும் வினைகளை நிறைவு செய்க
    i) 
    ii) |
    iii)C6H5Cl + Mg\(\xrightarrow{THF}\)
    iv)CHCl3 + HNO3\(\xrightarrow{\triangle}\)
    v) CCl4 + H2O\(\xrightarrow{\triangle}\)

  166. பின்வரும் சேர்மங்களின் தயாரிப்பினை விளக்குக.
    i) DDT
    ii) குளோரோஃபார்ம்
    iii) பை பீனைல்
    iv) குளோரோ பிக்ரின்
    v) ஃப்ரீயான்-12

  167. பின்வனவற்றின் IUPAC பெயர்களை எழுதுக.
    (i)\({ CH }_{ 3 }-\underset { \overset { | }{ F } }{ CH } -{ CH }_{ 3 }\)
    (ii)\({ CH }_{ 3 }-\overset { \underset { | }{ { CH }_{ 3 } } }{ \underset { \overset { | }{ { CH }_{ 3 } } }{ C } } -{ CH }_{ 2 }-Br\)
    (iii)\({ CH }_{ 2 }=CH-{ CH }_{ 2 }-Br\)
    (iv)\({ CH }_{ 3 }-\overset { \underset { | }{ { Br } } }{ \underset { \overset { | }{ { CH }_{ 3 } } }{ C } } -\underset { \overset { | }{ CI } }{ CH } -\underset { \overset { | }{ { CH }_{ 3 } } }{ CH } -Br\)

  168. மீத்தேனின் குளோரினேற்ற வினையை எழுதுக.

  169. ஸ்வார்ட் வினையை எழுதுக.

  170. ஹீன்ஸ்டிக்கர் வினையை எழுதுக 

  171. புரோமோ ஈத்தேன் எவ்வாறு ஆல்கஹால் கலந்த KCN உடன் வினைபுரிகிறது.

  172. புரோமோ ஈத்தேன் ஆல்கஹால் கலந்து AgCN உடன் எவ்வாறு வினைபுரிகிறது?

  173. வில்லியம்சன் ஈதர் தொகுத்தல் முறையை எழுதுக. 

  174. 2-புரோமோ பியூட்டேன் ஆல்கஹால் கலந்து KOH உடன் எவ்வாறு வினைபுரிகிறது?

  175. பின்வரும் வினைகளை பூர்த்தி செய்க.
    (i) 
    (ii) \({ CH }_{ 3 }{ CH }_{ 2 }Br+Na/Pb\rightarrow \)

  176. பின்வருவனவற்றின் பயன்களை எழுதுக 
    அ.  குளோரோஃபார்ம் 
    ஆ. அயோடாஃபார்ம்
    இ .கார்பன் டெட்ரா குளோரைடு 

  177. ஹேலோ ஆல்கேனின் ஒடுக்கவினையை எழுதுக. 

  178. கிரிக்னார்டு வினைபொருள் எத்தில் பார்மேட்டுடன் புரியும் வினையை எழுதுக. 

  179. கிரிக்னார்டு வினைப்பொருடன் நீரின் வினையை எழுதுக.

  180. சான்ட்மேயர் வினையை எழுதுக. 

  181. நீரில் கரைந்ரைந்துள்ள ஆக்சிஜன் நீர்சூழ் வாழ்க்கைக்கு பொறுப்பாகிறது. நீரில் கரைந்துள்ள ஆக்சிஜன் அளவு குறைவதற்கு எந்தெந்த  செயல்பாடுகள் பொறுப்பாகின்றன?

  182. புமியின் வளிமண்டலத்திலிருந்து பசுமைக்குடில் வாயுக்கள் காணாமல் போனால் என்ன நிகழும்?

  183. பனிப்புகை வரையறு.

  184. எது பூமியின் பாதுகாப்புக் குடை என கருதப்படுகிறது? ஏன்?

  185. மக்கும் மாசுபடுத்திகள் மற்றும் மக்கா மாசுபடுத்திகள் என்றால் என்ன?

  186. ஒளிவேதி பனிப்புகையில் உள்ள ஓசோன் எங்கிருந்து வந்தது?

  187. ஒருவர் தான் பயன்படுத்திய நீரினால் மலமிளக்குதல் விளைவால் பாதிக்கப்பட்டார் எனில் அதற்கான காரணம் என்னவாக இருக்கமுடியும்?

  188. பசுமை வேதியியல் என்றால் என்ன?

  189. பசுமைக்குடில் விளைவு எவ்வாறு உலக் வெப்பமயமாதலுக்கு காரணமாகிறது என்பதை விளக்குக.

  190. இந்திய தரநிலை அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்பட்ட குடிநீருக்கான தரநிலை அளவுகளை குறிப்பிடுக.

  191. பனிப்புகை என்றால் என்ன? தீவிர பனிப்புகை எவ்வாறு ஒளிவேதிப் பனிப்புகையிலிருந்து வேறுபடுகிறது?

  192. துகள் மாசுக்கள் என்றால் என்ன? ஏதேனும் மூன்றை விளக்குக.

  193. நுண்ணுயிர்க்கொல்லிகள், தானிய உற்பத்திய அதிகரித்தபோதிலும், அவை உயிரினங்களை கடுமையாக பாதிக்கின்றன. நுண்ணுயிர்க்கொல்லிகளின் பாதிப்பு விளைவுகளை விளக்குக.

  194. ஈத்தேன் காற்றில் முற்றிலுமாக எரிந்து CO2 ஐ தருகிறது. ஆனால் குறைந்தளவு காற்றில் CO ஐ தருகிறது. இதே வாயுக்கள் மோட்டார் வாகனப் புகையிலும் காணப்படுகின்றன. CO மற்றும் CO2 இரண்டும் வளிமண்டல மாசுபடுத்திகளாகும்.
    i) இந்த வாயுக்களுடன் இணைந்த ஆபத்துகள் என்ன?
    ii) மாசுபாடு எவ்வாறு மனித உடலை பாதிக்கிறது?

  195. CFC மூலக்கூறுகள், அடுக்குமண்டலத்தில் ஓசோன் படல சிதைவை எவ்வாறு உண்டாக்குகின்றன என்பதை நிகழும் வினைகளின் அடிப்படையில் விளக்குக.

  196. அமில மழை எவ்வாறு உருவாகிறது? அதன் விளைவுகளை விளக்குக.

  197. பின்வருவனவற்றை வேறுபடுத்துக:
    (i) BOD மற்றும் COD
    (ii) உயிருள்ள மற்றும் உயிரற்ற துகள் பொருள் மாசுபடுத்திகள்

  198. நம் இரத்தத்தில் கார்பன் மோனாக்சைடால் உருவாக்கப்படும் ஆக்சிஜன் பற்றாக்குறையை விளக்குக. அதன் விளைவுகளை எழுதுக.

  199. மாசுபடுதலிருந்து நம் சுற்றுச்சூழலை பாதுகாக்க நீ பரிந்துரைக்கும் பல்வேறு வழிமுறைகள் யாவை?

  200. வரையறு (i) மோலாலிட்டி (ii) நார்மாலிட்டி

  201. திரவத்தின் ஆவி அழுத்தம் என்றால் என்ன? ஒப்பு ஆவி அழுத்தக் குறைவு என்றால் என்ன?

  202. ஹென்றி விதியைக் கூறி விளக்குக

  203. ரெளல்ட் விதியைக் கூறு மேலும் எளிதில் ஆவியாகாத கரைபொருளை கரைப்பானில் கரைக்கும்போது ஏற்படும் ஆவிஅழுத்தக்குறைவிற்கான சமன்பாட்டைத் தருவி.

  204. மோலால் தாழ்வு மாறிலி என்றால் என்ன? இது கரைபொருளின் தன்மையை பொருத்து அமைகிறதா ?

  205. சவ்வூடுபரவல் என்றால் என்ன?

  206. ”ஐசோடானிக் கரைசல்கள்” எனும் சொற்பதத்தை வரையறு.

  207. A என்ற திடப்பொருள் மற்றும் அதன் மூன்று கரைசல்கள் (i) ஒரு தெவிட்டிய கரைசல், (ii) ஒரு மீ தெவிட்டிய கரைசல் ஆகியன உன்னிடம் வழங்கப்பட்டுள்ளது. எந்த கரைசல் என்ன வகையானது என எவ்வாறு கண்டறிவாய்?

  208. கரைதிறன் மீதான அழுத்தத்தின் விளைவை விளக்குக.

  209. 370.28 K வெப்பநிலையில், 0.25m குளுக்கோஸ் கரைசலானது ஏறத்தாழ இரத்தத்திற்கு சமமான சவ்வூடுபரவல் அழுத்தத்தை கொண்டுள்ள து. இரத்தத்தின் சவ்வூடு பரவல் அழுத்தம் என்ன?

  210. 500 g நீரில் 7.5 g கிளைசீன் (NH2-CH2 -COOH) கரைந்துள்ள கரைசலின் மோலாலிட்டியை கணக்கிடுக.

  211. (i) 100 கிராம் நீரில் 10 கிராம் மெத்தனால் (CH3OH) கரைந்துள்ள கரைசல்
    (ii) 200 கிராம் நீரில் 20 கிராம் எத்தனால் (C2H5OH) கரைந்துள்ள கரைசல். மேற்கண்டுள்ள கரைசல்களில் குறைவான உறைநிலையை பெற்றுள்ள கரைசல் எது?

  212. ஒரு லிட்டர் 10-4 M பொட்டாசியம் சல்பேட் கரைசலில் உள்ள கரைபொருள் துகள்களின் மோல்களின் எண்ணிக்கை யாது?

  213. வெளிப்புற பூச்சாக பயன்படும் ஐயோடோபோவிடோன் புரைதடுப்பான் கரைசலானது 10% w/v அயோடோபோவிடோனைக் கொண்டுள்ளது. வழக்கமாக ஒருமுறை பயன்படுத்தப்படும் அளவான 1.5 மி.லி உள்ள அயோடோபோவிடோனின் அளவைக் கணக்கிடுக.

  214. 1.05 கி.கி எடையுள்ள 1 லிட்டர் ஆக்சிஜனை (O2)கொண்டுள்ளது. கரைந்துள்ள ஆக்சிஜனின் செறிவை ppm அலகில் குறிப்பிடுக.

  215. 500 மி.லி, 0.250 M NaOH கரைசலை தயாரிக்க தேவையான 6M NaOH கரைசலின் கனஅளவு எவ்வளவு?

  216. ஏன், கோடைக்காலத்தில் வெதுவெதுப்பான நீரில் இருப்பதைக் காட்டிலும், குளிர்காலத்தில் குளிர்ந்த நீரில், நீர்வாழ் விலங்குகள் வசதியாக உணர்கின்றன விளக்குக.

  217. 400K வெப்பநிலையில் 1.5 கிராம் நிறையுடைய பெயர் அறியா பொருளானது, கரைப்பானில் கரைக்கப்படுகிறது. மேலும் இந்த கரைசலானது 1.5 லி க்கு நீர்க்கப்படுகிறது. இதன் சவ்வூடுபரவல் அழுத்தம் 0.3 bar என கண்டறியப்பட்டுள்ளது. புதிய பொருளின் மோலார் நிறையை கணக்கிடுக.

  218. கி.கி நீரில் 45 கிராம் குளுக்கோஸ் கரைந்துள்ள கரைசலின் மோலாலிட்டி கணக்கிடு 

  219. 5.845 கிராம் சோடியம் குளோரைடை நீரில் கரைக்கப்பட்டது. மேலும் அக்கரைசலானது திட்டக் குடுவையைப் பயன்படுத்தி 500 மி.லி க்கு நீர்க்கப்பட்டது. அக்கரைசலின் வலிமை மோலாரிட்டியில் கணக்கிடுக.

  220. 3.15 கிராம் ஆக்ஸாலிக் அமில ஹட்ரேட்டானது நீரில் கரைக்கப்பட்டது, மேலும் அக்கரைச்சலானது திட்டக் குடுவையைப் பயன்படுத்தி 100 மி.லி க்கு நீர்க்கப்பட்டது. அக்கர சைலின் வலிமை நார்மாலிட்டியில் கணக்கிடு.

  221. 5.85 கிராம் சோடியம் குளோரைடு நீரில் கரைக்கப்பட்டு, ஒரு திட்டக் குடுவையில் 500 மி.லி க்கு நீர்க்கப்பட்டது. அக்கர சைலின் வலிமை பார்மாலிட்டியில் கணக்கிடு.

  222. நியோமைசின் எனும், அமினோகிளைக்கோசைடு வகை எதிர் நுண்ணுயிர் களிம்பானது, 30 கிராம் களிம்பு அடிப்படைப் பொருளில், செயலாக்க கூறான 300 மி.கி நியோமைசின் சல்பேட்டினைக் கொண்டுள்ளது. நியோமைசினின் நிறைச் சதவீதம் காண்க.

  223. புரைத்தடுப்பானாகப் பயன்படும் டிங்சர் பென்சாயின் கரைசலானது, 50 மி.லி பென்சாயினை கொண்டுள்ளது. பென்சாயினின் கன அளவுச் சதவீதத்தைக் கணக்கிடு. 

  224. 60 ml பாராசிட்டமால் எனும் குழந்தைகளுக்கான வாய்வழி கரைசலானது 3 கிராம் பாராசிட்டமாலைக் கொண்டுள்ளது. பாராசிட்டமாலின் நிறை/ கன அளவுச் சதவீதம் காண்.

  225. 50 ml குழாய் நீரானது 20 mg கரைக்கப்பட்ட திண்மங்களை கொண்டுள்ளது. ppm இல் TDS [கரைந்துள்ள மொத்த திடப்பொருள்] மதிப்பு காண்.

  226. கரைபொருளின என்பதனை வரையறு. 

  227. நல்லியல்பு கரைசல்களுக்கு எடுத்துக்காட்டுகள் தருக.

  228. கொதிநிலை என்றால் என்ன?

  229. சவ்வூடு பரவல் அழுத்தம் என்பதை வரையறு.

  230. எதிர் சவ்வூடு பரவல் என்பதை வரையறு.

  231. எதிர் சவ்வூடு பரவலின் பயன்கள் யாவை?

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு வேதியியல் -2 மதிப்பெண் முக்கிய வினா விடைகள் ( 11th chemistry-important 2 marks questions )

Write your Comment