இயற் மற்றும் வேதிச்சமநிலை இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. KP மற்றும் Kக்கு இடையேயான தொடர்பு யாது? KPமதிப்பானது KCக்கு சமம் என்பதற்கான ஒரு எடுத்துக்கா ட்டினை தருக

  2. சமநிலையில், வாயுக்களின் ஒருபடித்தான வினையில் வினைவிளை பொருள்களின் மோல்களின் எண்ணிக்கையானது வினைபடு பொருள்களின் மோல்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தால், KC ஆனது KPயை விட அதிகமாக இருக்குமா அல்லது குறைவாக இருக்குமா?

  3. கீழ்கண்டுள்ள வினைகளைக் கருதுக
    a) H2(g) + I2(g) ⇌ 2 HI
    b) CaCO3 (s) ⇌ CaO (s) + CO2(g)
    c) S(s) + 3F2 (g) ⇌ SF6 (g)
    மேற்குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு வினைகளிலும், பெறப்படும் வினைவிளை பொருளின் அளவினை அதிகரிக்க கன அளவினை அதிகரிக்க அல்லது குறைக்க வேண்டுமா என்பதைக் கண்டுபிடி.

  4. 3H2(g) + N2(g) ⇌ 2NH3(g) என்ற வினையின் சமநிலை மாறிலி KP மற்றும் Kக்கான பொதுவான சமன்பாட்டினை வருவி.

  5. சமநிலையில் உள்ள ஒரு வினையில், மந்த வாயுக்களை சேர்ப்பதால் நிகழும்விளைவு என்ன?

  6. KP மற்றும் KC க்கு இடையேயான தொடர்பினை வருவி.

  7. ஒருபடித்தான சமநிலை என்றால் என்ன?

  8. பலபடித்தான சமநிலை என்றால் என்ன?

  9. \({ H }_{ 2 }(g)+{ I }_{ 2 }\rightleftharpoons 2HI(g)\) என்றள வினைக்கு 717K  வெப்பநிலையில் KC ன் மதிப்பு 48. ஒரு குறிப்பிட்ட நிலையில், H2, I2, மற்றும் HI ன் செறிவுகள் முறையே 0.2 mol L-1, 0.2 mol L-1 மற்றும் 0.6 mol L-1 என கண்டறியப்படுகிறது. எனில் வினைநிகழும் திசையினை கண்டறி.  

  10. \({ N }_{ 2 }{ O }_{ 2 }(g)\rightleftharpoons 2NO_{ 2 }(g)\) என்ற வினைக்கு 373K  ல், KC = 0.21. கொடுக்கப்பட்ட நேரத்தில் N2O4 மற்றும் NO2 ஆகியவற்றின் செறிவுகள் முறையே 0125 mol dm-3 மற்றும் 0.5  mol dm-3 என கண்டறியபட்டது. எனில் வினைநிகழும் திசையை கண்டறி.

*****************************************

Reviews & Comments about 11th வேதியியல் - இயற் மற்றும் வேதிச்சமநிலை இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Chemistry - Physical And Chemical Equilibrium Two Marks Questions Paper )

Write your Comment