திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 03:00:00 Hrs
Total Marks : 70

    பகுதி - I

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

    15 x 1 = 15
  1. கூற்று (A): இரு மோல் குளுக்கோஸில் 12.044 × 1023 குளுக்கோஸ் மூலக்கூறுகள் உள்ளன.
    காரணம் (R): ஒரு மோல் அளவுள்ள எந்த ஒரு பொருளிலும் உள்ள உட்பொருட்களின் எண்ணிக்கை 6.02x1022 

    (a)

    கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, மேலும் காரணம் (R) ஆனது கூற்று (A)க்கான சரியான விளக்க

    (b)

    கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, மேலும் காரணம் (R)ஆனது கூற்று (A)க்கான சரியான விளக்கமல்ல

    (c)

    கூற்று (A) சரி மற்றும் காரணம் (R) தவறு

    (d)

    கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் தவறு

  2. ஹைட்ரஜன் அணுவின் மூன்றாம் வட்டப்பாதையின் (orbit) ஆற்றல் மதிப்பு –E அதன் முதல் வட்டப்பாதையின் (orbit) ஆற்றல் மதிப்பு

    (a)

    -3E

    (b)

    -E/3

    (c)

    -E/9

    (d)

    -9E

  3. பின்வரும் வாய்ப்புகளில், கொடுக்கப்பட்ட வரிசைகளுக்கு அவற்றிற்கு எதிராக குறிப்பிடப்பட்டுள்ள பண்பினைப் பொருத்து சரியாக அமைந்திருக்காத வரிசை இடம்பெற்றுள்ள வாய்ப்பு எது?

    (a)

    I< Br < Cl < F (எலக்ட்ரான் நாட்டம் அதிகரிக்கும்)

    (b)

    Li < Na < K < Rb (உலோக ஆரம் அதிகரிக்கும்)

    (c)

    Al3+ < Mg2+

    (d)

    B < C < O < N (முதல் அயனியாக்கும் ஆற்றல் அதிகரிக்கும்)

  4. H3PO2 + D2O → H2DPO2 + HDO என்ற வினையிலிருந்து ஹைப்போ பாஸ்பரஸ் அமிலம் ஒரு

    (a)

    முக்காரத்துவ அமிலம்

    (b)

    இருகாரத்துவ அமிலம்

    (c)

    ஒரு காரத்துவ அமிலம்

    (d)

    இவற்றுள் ஏதுமில்லை

  5. பெரிலியத்தின் சூழலைப் பொருத்து , பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?

    (a)

    நைட்ரிக் அமிலம் இதை செயலற்றதாக்குகிறது

    (b)

    Be2C ஐ உருவாக்குகிறது

    (c)

    இதன் உப்புகள் அரிதாக நீராற்பகுக்கப்டுகின்றன.

    (d)

    இதன் ஹைட்ரைடு எலக்ட்ரான் குறைவுள்ளது,மற்றும் பலபடி அமைப்புடையது.

  6. விசையினை, விசை செலுத்தப்படும் பரப்பினால் வகுக்கக் கிடைப்பது.

    (a)

    வெப்பநிலை

    (b)

    அழுத்தம்

    (c)

    கன அளவு

    (d)

    இவற்றுள் எதுவுமில்லை

  7. 'q' அளவு வெப்பத்தை உறிஞ்சி 'W' அளவு வேலையைச் செய்தால் அக ஆற்றலில் ஏற்படும் மாற்றம் 

    (a)

    H

    (b)

    P\(\triangle\)V

    (c)

    V

    (d)

    E

  8. 2A(g) ⇌ 2B(g) + C2(g) என்ற சமநிலையில், 400K வெப்பநிலையில் A, B மற்றும் C2வின்
    சமநிலைச் செறிவுகள் முறையே 1 \(\times\) 10–4 M, 2.0 \(\times\) 10–3 M, 1.5 \(\times\) 10–4 M. 400K, வெப்பநிலையில் சமநிலையின் KC மதிப்பு யாது?

    (a)

    0.06

    (b)

    0.09

    (c)

    0.62

    (d)

    \(\times\) 10-2

  9. நீர் மூலக்கூறில் உள்ள OH பிணைப்புகளின் பிணைப்பு ஆற்றல்களின் சராசரி மதிப்பு

    (a)

    502 KJ mol-1

    (b)

    427 KJ mol-1

    (c)

    546.8 KJ mol-1

    (d)

    464.5 KJ mol-1

  10. மாற்றியம் என்ற சொற்கூறு யாரால் அறிமுகப்டுத்தபட்டது? 

    (a)

    கெருலே

    (b)

    பிஷர்

    (c)

    லூயிஸ்

    (d)

    பெர்சீலியஸ்

  11. பின்வருவனவற்றுள் மீசோமெரிக் விளைவிற்கு உட்படாத சேர்மம் எது?

    (a)

    C6H5OH

    (b)

    C6H5Cl

    (c)

    C6H5NH2

    (d)

    C6H5\(\stackrel{+}{N}\)H3

  12. பென்சீனை நைட்ரோ ஏற்றம் செய்யும்போது அடர் H2SO4 ஜ சேர்ப்பதால் வெளிப்படுவது        

    (a)

    NO2  

    (b)

    \({ NO }_{ 2 }^{ - }\)

    (c)

    \({ NO }_{ 2 }^{ + }\)

    (d)

    \({ NO }_{ 3 }^{ - }\)

  13. பின்வருவனவற்றுள் கருக்கவர் பொருள் பதிலீட்டு வினையில் அதிக வினைபுரிவது எது?

    (a)

    (b)

    (c)

    (d)

  14. குடிநீரில் காணப்படும் எதன் குறைவால் பற்சிதைவு தோன்றுகிறது ? 

    (a)

    குளோரைடு 

    (b)

    புளூரைடு 

    (c)

    கால்சியம் 

    (d)

    மெக்னீசியம் 

  15. கரைசலின் சவ்வூடு பரவல் அழுத்தத்தை (π) தரும் சமன்பாடு

    (a)

    \(\pi \) = nRT

    (b)

    \(\pi \)V = nRT

    (c)

    \(\pi \)RT = n 

    (d)

    இவற்றில் ஏதுமில்லை

  16. பகுதி - II

    எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 24க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    6 x 2 = 12
  17. மோல் - வரையறு 

  18. அயனி ஆரம் கணக்கிட உதவும் பாலிங்கின் இரு கூற்றுகள் யாவை?

  19. HCl மற்றும் NaH ஆகியனவற்றுள் எந்த ஹைட்ரைடு திடப்பொருள் மீதான வாயு. உனது விடைக்கான காரணத்தினைக் கூறு.

  20. பெரிலியம் ஹைட்ராக்சைடின் ஈரியல்புத் தன்மைக்கான சமன்பாடுகளை எழுது.

  21. ஜூல் தாம்சன் விளைவை எழுதுக. 

  22. வாண்ட் ஹாப் சமன்பாடு பற்றி எழுதுக.

  23. லாசிகன் முறையில் கரிமச்சேர்மங்களில் காணப்படும் நைட்ரஜனைக் கண்டறிவதில் நடைபெ றும் வேதிவினைகளை விளக்குக.

  24. அமில குளோரைடுகள் கிரிக்னார்டு வினைபொருளுடன் வினைப்பட்டு எவற்றைத் தருகின்றன?

  25. ஒரு படித்தான கலவைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

  26. பகுதி - III

    எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 33க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    6 x 3 = 18
  27. கார்பன் அனுவின் ஒரு மோல் பொருளில் காணப்படும் உட்பொருள் எண்ணிக்கையைக் கணக்கிடுக.

  28. O-அணுவில் உள்ள 8வது எலக்ட்ரான் மற்றும் Cl – அணுவில் உள்ள 15வது எலக்ட்ரான் குரோமியத்தின் கடைசி எலக்ட்ரான் ஆகியனவற்றிற்கான நான்கு குவாண்டம் எண்களின் மதிப்புகளையும் தீர்மானிக்கவும்.

  29. குவாண்டம் எண்களை அடிப்படையாகக் கொண்டு தனிம வரிசை அட்டவணையின் 5வது வரிசையில் 18 தனிமங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பதை நிறுவுக.

  30. டி-சான்கோர்டாய்ஸ் வகைப்பாட்டினை எழுது.

  31. கீழ்க்கண்ட வேதி வினைகளை பூர்த்தி செய்து.
    (அ) நீராற் பகுத்தல் (ஆ) ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினைகள் (இ) நீரேற்ற வினைகள் என வகைப்படுத்துக
    (i) KMnO4 + H2O2
    (ii) CrCl3 + H2O →
    (iii) CaO + H2O →

  32. கார உலோகங்களின் வேதிப் பண்புகள் சிறு குறிப்பு வரைக.

  33. ஆர்கான் ஒரு மந்தவாயு. இது மின்விளக்குகளில் டங்ஸ்டன் இழை ஆவியாவதைத் தடுக்க பயன்படுகிறது. மாறா கனஅளவில் உள்ள ஒரு மின் விளக்கில் 180C யில் 1.2atmல் உள்ள ஆர்கான் வாயு 850C க்கு வெப்பப்படுத்தப்படுகிறது. அதன் இறுதி அழுத்தத்தினை (atmல்) கணக்கிடுக.

  34. தன்னிச்சை செயல்முறைகளுக்கான அடிப்படை விதிமுறைகள் யாவை?

  35. N2O2(g) \(\rightleftharpoons \) 2NO2(g)
    373Kல், மேற்கண்டுள்ள வினைக்கு KC = 0.21. கொடுக்கப்பட்ட நேரத்தில் N2O4 மற்றும் NO2 ஆகியவற்றின் செறிவுகள் முறையே 0.125 mol dm-3 மற்றும் 0.5 mol dm-3 என கண்டறியப்பட்டது. இவ் விவரங்களிலிருந்து வினை நிகழும் திசையினை நாம் பின்வருமாறு தீர்மானிக்க இயலும்.

  36. பகுதி - IV

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    5 x 5 = 25
    1. பின்வரும் நிபந்தனைகளில் ஒரு வாயு நல்லியல்பு பண்பினை பெறுகிறதா அல்லது நல்லியல்பு பண்பிலிருந்து விலகிச் செல்கிறதா என விவரி?
      அ) மாறா வெப்ப நிலையில் அது மிகச்சிறிய கனஅளவிற்கு அழுத்தப்படும் போது 
      ஆ) மாறா கனஅளவில் அதன் வெப்பநிலையை உயர்த்தும் போது 
      இ) சமவெப்ப மற்றும் சமகன அளவு நிலையில் அதிக அளவு வாயு சேர்க்கப்படும் போது 

    2. எதிர் - மார்கோனிகாப் விதி  (அ) பெராக்சைடு விளைவு (அ) கேராஸ்  விதியின் வினை வழிமுறைய எழுது.            

    1. உராய்வற்ற அழுத்தி பொருத்தப்பட்ட கலனில் உள்ள ஒரு வாயுவானது 1 atm வெளி அழுத்தத்திற்கு எதிராக 5 லிட்டர் கன அளவிலிருந்து 10 லிட்டருக்கு விரிவடைகிறது .இவ்வாறு நிகழும்போது அது 400J வெப்ப ஆற்றலை அதன்சூழலில் இருந்து உட்கவர்க்கிறது. அமைப்பின் அகஆற்றல் மாற்றத்தை கணக்கிடுக.

    2. 1atm NO மற்றும் 1atm O2 ஐ தொடக்க செறிவுகளாகக் கொண்ட NOன் வளிமண்டல ஆக்சிஜனேற்ற வினை.
      2NO(g) + O2(g) ⇌ 2NO2(g)
      ஆய்ந்தறியப்படுகிறது. சமநிலையில், ஆக்சிஜனின் பகுதி அழுத்தம் 0.52atm எனில் இவ்வினைக்கான Kpன் மதிப்பைக் காண்க.

    1. ஹைட்ரஜனின் பயன்களை விவரி.

    2. ஹாலஜன்களை அளந்தறியும் காரியஸ் முறையை விவரி.

    1. தொகுதிகள் மற்றும் வரிசைகளில் எலக்ட்ரான் கவர்தன்மையில் ஏற்படும் ஆவர்த்தன மாற்றங்களை கூறுக.

    2. மூலக்கூறு ஆர்பிட்டால் கொள்கையின் முக்கிய அம்சங்களை எழுதுக.

    1. பின்வருவனவற்றை விவரிக்க:
      (i) முதன்மை குவாண்டம் எண் 
      (ii) கோண குவாண்டம் எண் 
      (iii) காந்த குவாண்டம் எண் 
      (iv) தற்சுழற்சி குவாண்டம் எண் 

    2. கார உலோகங்களின் பின்வரும் வேதிப் பண்புகளை எழுது.
      (i) ஆக்சிஜனுடன் வினை
      (ii) ஹைட்ரஜனுடன் வினை
      (iii) ஹேலஜன்களுடன் வினை
      (iv) ஒடுக்கும் செயல்
      (v) கார்பனுடன் வினை

*****************************************

Reviews & Comments about 11th வேதியியல் - திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2 ( 11th Chemistry - Revision Model Question Paper 2 )

Write your Comment