கரைசல்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    8 x 1 = 8
  1. 250 கிராம் நீரில் 1.8 கிராம் குளுக்கோஸ் கரைக்கப்பட்டுள்ள கரைசலின் மோலாலிட்டி

    (a)

    0.2 M

    (b)

    0.01 M 

    (c)

    0.02 M

    (d)

    0.04 M

  2. பின்வரும் செறிவு அலகுகளில், வெப்பநிலையை சார்ந்து அமையாதவை எவை ?

    (a)

    மோலாலிட்டி 

    (b)

    மோலாரிட்டி

    (c)

    மோல் பின்னம் 

    (d)

    (அ) மற்றும் (இ)

  3. ஒரு இருகூறு நல்லியல்புக் கரைசலில், தூய திரவக் கூறுகள் 1 மற்றும் 2 இன் ஆவிஅழுத்தங்கள் முறையே P1 மற்றும் P2 ஆகும். x1 என்பது கூறு 1 இன் மோல் பின்னம் எனில், 1 மற்றும் 2 ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட கரைசலின் மொத்த அழுத்தம்

    (a)

    P1 + x1 (P2 – P1)

    (b)

    P2 – x1 (P2 + P1)

    (c)

    P1 – x2 (P1 – P2)

    (d)

    P1 + x2 (P- P2)

  4. பின்வரும் இருகூறு திரவ கலவைகளில் எது, ரெளல்ட் விதியிலிருந்து நேர்குறி விலக்கத்தை காட்டுகிறது?

    (a)

    அசிட்டோன் + குளோரோஃபார்ம்

    (b)

    நீர் + நைட்ரிக் அமிலம்

    (c)

    HCl + நீர்

    (d)

    எத்தனால் + நீர்

  5. ரெளல்ட் விதிப்படி, ஒரு கரைசலின் ஒப்பு ஆவிஅழுத்தக்குறைவானது _____ க்கு சமம்.

    (a)

    கரைப்பானின் மோல் பின்னம்

    (b)

    கரைபொருளின் மோல் பின்னம்

    (c)

    கரைபொருளின் மோல் எண்ணிக்கை

    (d)

    கரைப்பானின் மோல் எண்ணிக்கை

  6. இரண்டு திரவங்கள் X மற்றும் Y ஆகியன கலக்கப்படும்போது வெதுவெதுப்பான கரைசலைத் தருகின்றன. அந்தக் கரைசலானது

    (a)

    நல்லியல்புக் கரைசல் 

    (b)

    நல்லியல்புக் கரைசல் மற்றும் ரெளல்ட் விதியிலிருந்து நேர்க்குறி விலக்கத்தை காட்டுகிறது.

    (c)

    நல்லியல்புக் கரைசல் மற்றும் ரெளல்ட் விதியிலிருந்து எதிர்குறி விலக்கத்தை காட்டுகிறது.

    (d)

    இயல்புக் கரைசல் மற்றும் ரெளல்ட் விதியிலிருந்து எதிர்குறி விலக்கத்தை காட்டுகிறது.

  7. 10% w/w செறிவுடைய சோடியம் ஹைட்ராக்சைடு நீர்க்கரைசலின் மோலாலிட்டி என்ன?

    (a)

    2.778

    (b)

    2.5

    (c)

    10

    (d)

    0.4

  8. வாண்ட் ஹா ஃப் காரணி மதிப்பு 0.54 கொண்ட பென்சீனில், பீனால் மூலக்கூறுகள் இரட்டையாகின்றன. இணைதல் வீதம் என்ன

    (a)

    0.46

    (b)

    92

    (c)

    46

    (d)

    0.92

  9. 6 x 2 = 12
  10. வரையறு (i) மோலாலிட்டி (ii) நார்மாலிட்டி

  11. ஹென்றி விதியைக் கூறி விளக்குக

  12. ரெளல்ட் விதியைக் கூறு மேலும் எளிதில் ஆவியாகாத கரைபொருளை கரைப்பானில் கரைக்கும்போது ஏற்படும் ஆவிஅழுத்தக்குறைவிற்கான சமன்பாட்டைத் தருவி.

  13. சவ்வூடுபரவல் என்றால் என்ன?

  14. ”ஐசோடானிக் கரைசல்கள்” எனும் சொற்பதத்தை வரையறு.

  15. 500 g நீரில் 7.5 g கிளைசீன் (NH2-CH2 -COOH) கரைந்துள்ள கரைசலின் மோலாலிட்டியை கணக்கிடுக.

  16. 5 x 3 = 15
  17. தூய கரைபொருள் மற்றும் கரைப்பானிலிருந்து பின்வரும் கரைசல்களை நீ எவ்வாறு தயாரிப்பாய் என்பதை விளக்குக.
    (அ) 1L கனஅளவுடையடைய 1.5 M CoCl2 இன் நீர்க்கரைசல்.
    (b) 500 mL கனஅளவுடைய 6.0 % (V/V) நீர்ம மெத்தனால் கரைசல்.

  18. திட்டக் கரைசலை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளை பட்டியலிடுக.

  19. வாண்ட் ஹாஃப் சமன்பாட்டை எழுதி விளக்குக.

  20. வாண்ட் ஹாஃப் காரணி 'i' எனும் சொற் கூற்றை வரையறு. 

  21. சவ்வுடு பரவல் அழுத்தத்திலிருந்து மோலார் நிறையை கணக்கிடும் முறையை தருவி.       

  22. 3 x 5 = 15
  23. ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில், பென்சீனில் மீத்தேன் வாயு கரைதலுக்கு ஹென்றி விதி மாறிலி மதிப்பு 4.2 X 10-5 mm Hg. இந்த வெ ப்பநிலையில் மீத்தேனின் கரைதிறனை i) 750 mm Hg ii) 840 mm Hg ஆகிய அழுத்தங்களில் கணக்கிடுக.

  24. ஹென்றி விதியை கூறி. அதை ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  25. இயல்புக் கரைசல்கள் - ரெளல்ட் வீதியிலிருந்து எவ்வாறு நேர்விலக்கம் பெற்றுள்ளன என்பதை வரைபடத்துடன் விளக்கு.

*****************************************

Reviews & Comments about 11th வேதியியல் - கரைசல்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Chemistry - Solutions Model Question Paper )

Write your Comment