11th Physics- Important questions-ஈர்ப்பியல், பருப்பொருளின் பண்புகள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 01:30:00 Hrs
Total Marks : 120

    Answer all the questions

    20 x 1 = 20
  1. திடீரென புவி மற்றும் சூரியனின் நிறைகள் இருமடங்காக மாறினால், அவைகளுக்கிடையேயான ஈர்ப்பியல் விசை_____.

    (a)

    மாறாது 

    (b)

    2 மடங்கு அதிகரிக்கும்

    (c)

    4 மடங்கு அதிகரிக்கும்

    (d)

    4 மடங்கு குறையும்  

  2. கெப்ளரின் இரண்டாம் விதிப்படி சூரியனையும் கோளையும் இணைக்கும் ஆர வெக்டர் சமகால அளவில் சம பரப்புகளை ஏற்படுத்துகின்றன. இவ்வித்தியானது _____ மாறா விதிப்படி அமைந்துள்ளது.

    (a)

    நேர்கோட்டு உந்தம் (Linear momentum)

    (b)

    கோண உந்தம் (Angular momentum)

    (c)

    ஆற்றல் 

    (d)

    இயக்க ஆற்றல்

  3. சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றி வரும் கோள் ஒன்று A,B மற்றும் C  ஆகிய நிலைகளில் பெற்றுள்ள இயக்க ஆற்றல்கள் முறையே KA, KB மற்றும் KC ஆகும்.  இங்கு நெட்டச்சு AC மற்றும் SB யானது சூரியனின் நிலை S-ல் வரையப்படும் செங்குத்து எனில், _____. 

    (a)

    KA > KB >KC

    (b)

    KB < K< KC

    (c)

    KA < KB < KC

    (d)

    KB > KA > KC

  4. புவியின் மீது சூரியனின் ஈர்ப்பியல் விசை செய்யும் வேலை _____.

    (a)

    எப்பொழுதும் சுழி 

    (b)

    எப்பொழுதும் நேர்குறி உடையது 

    (c)

    நேர்குறியாகவோ அல்லது எதிர்க்குறியாகவோ அமையும் 

    (d)

    எப்பொழுதும் எதிர்க்குறி உடையது 

  5. புவியினால் உணரப்படும் சூரியனின் ஈர்ப்பு புலத்தின் எண்மதிப்பு _____.

    (a)

    ஆண்டு முழுவதும் மாறாது 

    (b)

    ஜனவரி மாதத்தில் குறைவாகவும் ஜூலை மாதத்தில் அதிகமாகவும் இருக்கும் 

    (c)

    ஜனவரி மாதத்தில் அதிகமாகவும் ஜூலை மாதத்தில் குறைவாகவும் இருக்கும் 

    (d)

    பகல் நேரத்தில் அதிகமாகவும் இரவு நேரத்தில் குறைவாகவும் இருக்கும் 

  6. கெப்ளரின் இரண்டாம் விதியில் முடுக்கம் சார்ந்து ஒரு கோளின் ஆர்வெக்டர் சம கால இடைவெளிகளில் சமபரப்பினை கடந்து செல்கிறது எனில் பின்வருவனவற்றில் விதியின் மாறாவிளைவு 

    (a)

    நேர்க்கோட்டு உந்தம்

    (b)

    கோண உந்தம்

    (c)

    ஆற்றல்

    (d)

    நியூட்டனின் ஈர்ப்பியல் விதி

  7. இரண்டு கோள்களின் ஆரங்களின் விகிதம் k. ஈர்ப்பு முடுக்கங்களுக்கான விகிதம் s. இதன் விடுபடு வேகத்திற்கான விகிதம்

    (a)

    \(\sqrt { \frac { K }{ S } } \)

    (b)

    \(\sqrt { \frac { S }{ K } } \)

    (c)

    \(\sqrt { K-S } \)

    (d)

    ks

  8. நடக்கும் போது ஒரு நபரின் தோள்பட்டையை ஆட்டுவது

    (a)

    கையில் ஏற்படும் வலியினால்

    (b)

    திசைவேகத்தை அதிகரிக்க

    (c)

    திசைவேகத்தை சமன் செய்ய

    (d)

    புவியின் ஈர்ப்பு விளைவினை ஈடுகட்ட

  9. இரட்டை நட்சத்திர அமைப்பில் இரு விண்மீன்கள் A மற்றும் B யின் சுற்றுக்காலங்கள் Tமற்றும் Tஆரங்கள் RA மற்றும் Rநிறைகள் M, MB எனில்

    (a)

    TA>TB எனில் MA>MB 

    (b)

    TA>TB எனில் RA>RB 

    (c)

    TA=TB

    (d)

    \({ \left( \frac { { T }_{ A } }{ { T }_{ B } } \right) }^{ 2 }={ \left( \frac { { R }_{ A } }{ { R }_{ B } } \right) }^{ 3 }\)

  10. புவியின் ஆரம் 6400 km மற்றும் செவ்வாயின் ஆரம் 3200 km. புவியின் நிறையானது செவ்வாயின் நிறையைப் போல் 10 மடங்கு. ஒரு பொருளின் எடை 200 N பூமியின் பரப்பில் உள்ளபோது, செவ்வாயின் பரப்பின் மீது.

    (a)

    40 N

    (b)

    2 N

    (c)

    88 N

    (d)

    80 N

  11. ஒரு கம்பியானது அதன் தொடக்க நீளத்தைப்போல இரு மடங்கு நீட்டப்பட்டால் கம்பியில் ஏற்பட்ட திரிபு _____.

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    4

  12. கொடுக்கப்பட்ட ஒரு பொருளுக்கு விறைப்புக் குணகமானது யங் குணத்தில் \(\left( \frac { 1 }{ 3 } \right) \)பங்கு உள்ளது. அதன் பாய்ஸன் விகிதம் _____.

    (a)

    0

    (b)

    0.25

    (c)

    0.3

    (d)

    0.5

  13. ஒரே பருமனைக்கொண்ட இரு கம்பிகள் ஒரே பொருளால் ஆனது. முதல் மற்றும் இரண்டாம் கம்பிகளின் குறுக்குவெட்டுப்பரப்புகள் முறையே A மற்றும் 2A  ஆகும். F என்ற விசை செயல்பட்டு முதல் கம்பியின் நீளம் \(\Delta \)l அதிகரிக்கப்பட்டால் இரண்டாவது கம்பியை அதே அளவு நீட்ட தேவைப்படும் விசை யாது?

    (a)

    2F

    (b)

    4F

    (c)

    8F

    (d)

    16F

  14. ஒரு பரப்பை  ஒரு திரவத்தால் ஈரமாக்கும் அளவு முதன்மையாக சார்ந்துள்ளது  _____.

    (a)

    பாகுநிலை 

    (b)

    பரப்பு இழுவிசை 

    (c)

    அடர்த்தி

    (d)

    பரப்புக்கும் திரவத்திற்கும்இடையே உள்ள சேர்கோணம்

  15. மாறுபட்ட குறுக்கு வெட்டுப்பரப்பு கொண்ட ஒரு கிடைமட்டக்குழாய்யில், நீரானது 20 cm குழாயின் விட்டமுள்ள ஒரு புள்ளியில் 1 ms-1 திசைவேகத்தில்செல்கிறது. 1.5 ms-1 திசைவேகத்தில் செல்லும் புள்ளியின் குழாயின் விட்டமானது  _____.

    (a)

    8

    (b)

    16

    (c)

    24

    (d)

    32

  16. ஆரம் V நீளம் /கொண்ட  ஒரு குழாயில் அதன் முனைகளில் அழுத்த வேறுபாடு P என்பது V  = \(\frac { \pi \theta { pr }^{ 4 } }{ \eta l } \)  n என்பது பாகியல் குணகம் , \(\theta \) என்பது   

    (a)

    8

    (b)

    \(\frac { 1 }{ 8 } \)

    (c)

    16

    (d)

    \(\frac { 1 }{ 16 } \)

  17. ஒரு எ༜கு பந்து எண்ணெயில் விழும்போது     

    (a)

    சிறிது நேரத்திற்கு பிறகு நிலையான திசைவேகத்தை அடையும்  

    (b)

    பந்து சாயும் 

    (c)

    பந்தின் வேகம் அதிகரித்து விடுபடும் 

    (d)

    ஏதுமில்லை 

  18. ஒரு தூய பொருள் உறையும் அல்லது திண்மமாவது அதன்    

    (a)

    கொதிநிலை புள்ளியில் 

    (b)

    படிதல் நிலை புள்ளியில் 

    (c)

    உருகுநிலை புள்ளியில்   

    (d)

    யூரித ஆவி நிலையில்    

  19. வாண்டர்வாலஸ் ''அழுத்தக்  குறைபாடு '' க்கனா சமன்பாட்டினை தருவிக்கும்போது  காட்சிப்படுத்தப்பட்ட அழுத்தம் P, பருமன் V வாயு அழுத்த வாயு பருமனில்           

    (a)

    \(P+\frac { a }{ v } \)

    (b)

    \(P+\frac { a }{ { v }^{ 2 } } \)

    (c)

    P  + (a  x  v )

    (d)

    P  + (a  x  v2 )

  20. ஒரு கம்பியின் கூண்டின் தளத்தில் ஒரு கிளி உட்கார்ந்து கொண்டிருக்கிறது. ஒரு சிறுவன் அதை சுமந்து செல்லும் போது பறக்கத் தொடங்குகிறது.அச்சிறுவனுக்கு அப்பெட்டி        

    (a)

    கனமாக இருக்கும் 

    (b)

    இலேசாக இருக்கும்    

    (c)

    எடையில் மாற்றம் இல்லை 

    (d)

    முதலில் இலேசாகவும் பின்னர் கனமாகவும் இருக்கும்  

  21. Answer any 10  questions

    10 x 2 = 20
  22. ஈர்ப்பு புலம் வரையறு. அதன் அலகினைத் தருக.

  23. நிலாவின் மீதான புவியின் ஈர்ப்பு விசை திடீரெனெ மறைந்தால் சந்திரனுக்கு என்ன நிகழும்?

  24. தற்போது புவி தன் சுழற்ச்சி அச்சிலிருந்து சாய்ந்து அமையவில்லை எனில் பருவக்காலங்களில் என்ன மாறுபாடு ஏற்படும்?

  25. சூரியனை புவி சுற்றும் வேகம் 30 kms-1 எனில் புவியின் இயக்க ஆற்றலைக் கணக்கிடுக. முந்தய கணக்கில் புவியின் ஈர்ப்பு நிலை ஆற்றலை கணக்கிட்டாய். அதன்படி புவியின் மொத்த ஆற்றல் நேர்க்குறி தன்மையுடையதா? இல்லை எனில் காரணம் கூறு.

  26. புவிப் பரப்பிலிருந்து எறியப்பட்ட பொருள் ஒன்று சுழி அல்லாத இயக்க ஆற்றலுடன் \(\left[ K.E(r=\infty )=\frac { 1 }{ 2 } { Mv }_{ \infty }^{ 2 } \right] \)ஈறிலாத் தொலைவை அடைகிறது எனில் புவிப்பரப்பிலிருந்து அப்பொருள் எறியப்பட்ட வேகம் யாது?

  27. புவிமையக் கொள்கை என்றால் என்ன?

  28. ஈர்ப்பியல் விசையின் தன்மை யாது?

  29. புவியின் வளிமண்டலத்தில் நைட்ரஜனும், ஆக்சிஜனும் அதிக அளவியல் உள்ளன.ஏன்?

  30. கெப்ளரின் விதிகள் செயற்கைத் துணைக் கோள்களுக்குப் பொருந்துமா? ஏன்?

  31. "கோள்களின் பின்னோக்கு இயக்கம்" என்றால் என்ன? 

  32. வரிச்சீர் ஓட்டம் மற்றும் சுழற்சி ஓட்டம் - வேறுபடுத்துக்க.

  33. ஸ்டோக் விசைக்கான சமன்பாட்டை எழுதுக. அதில் உள்ள குறியீடுகளை விளக்குக. 

  34. நீர்மத்தின் பரப்பு இழுவிசையைப் பாதிக்கும் காரணிகள் யாவை?

  35. ஒரு மூடிய குழாயுடுன் இணைக்கப்பட்டுள்ள அழுத்தமானி 5 × 105 N m-2 என்ற அளவீட்டைக் காட்டுகிறது. குழாயின் திறப்பானை திறந்தாள் அழுத்தமானியில் 4.5 × 105 Nm-2 என்ற அளவீடு உள்ளது. குழாயில் பாயும் நீரின் வேகத்தை கணக்கீடுக.

  36. எண்ணெய் கொள்கலனை (tin) காலி செய்ய இரு துளைகள் ஏன் இடப்படுகிறது?

  37. அமுக்கத்தகைவு என்பது யாது?   

  38. பாய்மத்தின் அடர்த்தி வரையறு.  

  39. ஒப்படர்த்தி வரையறு.  

  40. பரப்பு இழுவிசைக்கு எடுத்துக்காட்டுகளை கூறு.  

  41. நுண்புழை நுழைலின் செயல்முறைப் பயன்பாடுகள் யாவை?     

  42. Answer any 10 questions

    10 x 3 =30
  43. கோள்களின் பரப்பு விதியினை விவரி.

  44. குன்றின் உச்சியிலிருந்து அருவிநீர் கீழ்நோக்கி பாய்வது ஏன்?

  45. ஒரு வண்டியின் மெர்குரியிலிருந்து தங்க விடப்பட்டுள்ள நீளம் 'L' கொண்ட தனி ஊசலின் அலைவுக் காலத்தைக் கண்டுபிடி. இது கீழாக ஒரு சாய்தள உள்ளமைப்பு \(\alpha \)ன் மீது உராய்வின்றி அலைவுறுகிறதது. 

  46. ஈர்ப்பு விசை தொலைவின் n அடுக்கில் எதிர்மாறாக மதிப்பு மாறுபாடு கொண்டுள்ளது எனக் கொண்டாடல் ஒரு கோளானது சூரியனை வட்டப்பாதையில் சுற்றும் போது  அதன் ஆரம் 'r' எனில் கோளின் சுழற்சிக் காலத்திற்கான சமன்பாட்டினை தருக.        

  47. ஒரு துகள் புவியின் பரப்பிலிருந்து மேல் நோக்கி எறியப்படுகிறது. (ஆரம் R )அதன் இயக்க ஆற்றல் விடுபடுவதற்கு தேவையான சிறும மதிப்பில் பாதிக்கு சமமாக இருக்கும்.புவியின் பரப்பிற்கு மேலே  எவ்வுயரத்திற்கு எலும்பும்?               

  48. ஒரு நீரியல் தூக்கியின் இரு பிஸ்டன்கள் 60cm மற்றும் 5 cm விட்டங்களைக் கொண்டுள்ளன. சிறிய பிஸ்டன் மீது 50 N விசை செலுத்தப்பட்டால் பெரிய பிஸ்டன் செலுத்தும் விசை யாது?

  49. ஒரு மரத்தாலான கன சதுரம் நீரில் 300 g  நிறையை அதன் மேற்பகுதியின் மையத்தில் தாங்குகிறது. நிறையானது நீக்கப்பட்டால், கன சதுரம் 3 cm உயருகிறது. கனசதுரத்தின் பருமனைக் கணக்கிடுக.

  50. 2.5 × 10-4m2 பரப்புள்ள ஒரு உலோகத்தட்டு 0.25 × 10-3m தடிமனான விளக்கெண்ணெய் ஏட்டின்மீது வைக்கப்பட்டுள்ளது. தட்டை 3 × 10-2m s-1, திசைவேகத்தில் நகர்த்த 2.5 N விசை தேவைப்பட்டால், விளக்கெண்ணெயின் பாகியல் எண்ணைக் கணக்கிடுக.
    கொடுக்கப்பட்டவை:
    A = 2.5 x 10-4m2,dx = 0.25 x 10-3m,
    F = 2.5N and dv = 3 x 10-2ms-1

  51. ஒப்படர்த்தி 0.8 கொண்ட 4mm உயரமுள்ள எண்ணெய் தம்பத்தினால் 2.0cm ஆரமுள்ள சோப்புக் குமிழியின் மிகையழுத்தம் சமப்படுத்தப்பட்டால், சோப்புக்குமிழியின் பரப்பு இழுவிசையைக் காண்க.

  52. நுண்புழைக் குழாய் ஒன்றில் நீர் 2.0 cm உயரத்திற்கு மேலேறுகிறது. இக்குழாயின் ஆரத்தைப்போல மூன்றில் ஒரு பகுதி ஆரமுடைய மற்றொரு நுண்புழைக் குழாயில் நீர் எந்த அளவிற்கு மேலேறும்?

  53. சறுக்குப் பெயர்ச்சித்திரிபு, பருமத் திரிபு  இவற்றை விளக்குக.       

  54. கிடைத்தளமட்டங்களில் நிர்மத்தின் ஓட்டத்தினை படுத்துடன் விவரி?    

  55. ரெனால்டு எண் Rc ன் முக்கியத்துவம் யாது? அதன் மூலம் ஒற்றுமை விதி என்பதை விளக்கு.       

  56. கொடுக்கப்பட்டுள்ள உலோகத்தின் யங்  குணகம் விறைப்பு குணகத்தை போல் 2-4 தடவைகள் எனில் இதன் பாய்சன் விகிதம் யாது?  

  57. இந்தியப் பெருங்கடலின் சராசரி ஆழம்  பெருங்கடலின்  அடியே உள்ள நீரின் பகுதிக்  குறுக்கம் யாது? (நீரின்  பருமக் குணகம்  = 2..2 x 109 Nm-2/g  = 10ms -2  )  

  58. Answer any 10 questions

    10 x 5 = 50
  59. நிலவும் ஆப்பிளும் ஒரே ஈர்ப்பியல் விசையாலேயே முடுக்கமடைகிறது. இவை இரண்டும் அடையும் முடுக்கங்களை ஒப்பிடுக.

  60. புவியின் இயற்கை துணைக்கோளான நிலா 27 நாட்களுக்கு ஒரு முறை புவியைச் சுற்றி வருகிறது. நிலாவின் சுற்றுப்பாதையை வட்டம் எனக் கொண்டு நிலவுக்கும் புவிக்கும் இடையே உள்ள தொலைவினைக் காண்க.

  61. (i) புவியினைச் சுற்றும் நிலா (ii) சூரியனைச் சுற்றும் புவி ஆகியவற்றின் ஆற்றலை கணக்கிடுக.

  62. ஈர்ப்பியல் விதியின் முக்கிய கூறுகளை விளக்குக.

  63. உயரத்தை பொறுத்து g எவ்வாறு மாறுபடும்?

  64. எண்ணையில் இடப்பட்ட ஒரு எஃகு குண்டு சிறிது ஆரம் கழித்து ______ அடைகிறது.

    (a)

    நிலையான விசை

    (b)

    மாறா திசைவேகம்

    (c)

    மாறும் விசை

    (d)

    மாறும் திசைவேகம்

  65. ஈர்ப்புத் தன்னிலை ஆற்றலுக்கான கோவையைத் தருவி.ஆப்பிள் கீழே விழும் நிகழ்வினைக் கொண்டு விவரி.

  66. வானியல் மற்றும் ஈர்ப்பியலில் சமீபத்திய வளர்ச்சிகளை விவரி.

  67. துணைக்கோளின் ஆற்றலுக்கான கோவையை தருவி.

  68. புவி நிலை துணைக்கோள் மற்றும் துருவத் துணைக்கோள்- விரிவாக விளக்குக.

  69. மீட்சிக்குணத்தின் வகைகளை விளக்குக.

  70. நீர்ம பரப்பிற்குக் கீழே h ஆழத்தில் உள்ள மொத்த அழுத்தத்திற்க்கான சமன்பாட்டைத் தருவி.  

  71. ஸ்டோக் விதியைப் பயன்படுத்தி அதிக பாகுநிலை கொண்ட திரவத்தில் இயங்கும் கோளத்தின் முற்றுத்திசைவேகத்திற்கான சமன்பாட்டைத் தருவி.

  72. 1. திரவத்துளி 2. திரவக்குமிழி 3. காற்றுக்குமிழி ஆகியவற்றின் உள்ளே மிகையழுத்தத்திற்கான கோவையைத் தருவி.

  73. நிறை மாறா நிலையின் அடிப்படையில் பாய்மம் ஒன்றின் ஓட்டத்திற்கான தொடர் மாறிலிச் சமன்பாட்டைத் தருவி.

  74. தகைவு -திரிபு விவரப் படத்தினை வரைந்து விவரி. 

  75. வரிச்சீர் ஓட்டத்தினை எடுத்துக்கட்டுடன் விவரி.

  76. திரவத்தின் வெவ் வேறு மட்டங்களில் உள்ள மூலக்கூறுகளுக்கிடேயேயான விசைகள் பற்றி எழுதுக.

  77. நீர்மங்களின் அழுத்த, இயக்க மற்றும் நிலை ஆற்றலுக்கான கோவையைத் தருவி.

  78. ஒரு இலேசான தண்டின் நீளம் 2m இரு செங்குத்து மூலம் கிடைமட்டமாக தொங்கவிடப்பட்டுள்ளன. அதன் முனைகள் சமமான நீளுங்களுடையவை. ஒரு கம்பி எஃகினாலும் அதன் குறுக்கு பரப்பு A1=0.1cm மற்றொன்று பித்தளையாலும் இதன் குறுக்குப் பரப்பு A= 0.2 cm2 தண்டின் எந்த நிலைகளிலும் எடை தொடங்கவிடப்பட்டால் பின்வருவன உண்டாகும்? (i) இரு கம்பிகளும் ஒத்தி தகைவுகள், (ii) இரு எஃகு கம்பிகளிலும் ஒத்தி திரிபு Y= 20X 1010 Nm-2பித்தளை Y = 10 X 1010 Nm-2

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணிதம் - முக்கிய வினா விடைகள் ( 11th math- Important questions-ஈர்ப்பியல், பருப்பொருளின் பண்புகள் )

Write your Comment