11th Physics - Important questions-இயக்க விதிகள்,வேலை, ஆற்றல் மற்றும் திறன்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 100

    Answer all the questions

    20 x 1 = 20
  1. வளைவுச் சாலை ஒன்றில் கார் ஒன்று திடீரென்று இடது புறமாகத் திரும்புபோது அக்காரிலுள்ள பயணிகள் வலது புறமாகத் தள்ளப்படுவதற்கு, பின்வருவனவற்றுள் எது காரணமாக அமையும்?

    (a)

    திசையில் நிலைமம்

    (b)

    இயக்கத்தில் நிலைமம்

    (c)

    ஓய்வில் நிலைமம்

    (d)

    நிலைமமற்ற தன்மை

  2. படத்தில் காட்டியவாறு வழுவழுப்பான கிடைத்தள பரப்பில் m, 2m நிறைகள் வைக்கப்பட்டுள்ளன, முதல் நிலையில் F1 விசை இடப்புறமிருந்து செயல்படுத்தப்படுகிறது. பிறகு F2 விசை மட்டும் வலப்புறமிருந்து செயல்படுத்தப்படுகிறது பொருள்கள் ஒன்றையொன்று தொடும் பரப்பில், இரு நிலைகளிலும் சமவிசைகள் செயல்படுகின்றன எனில் F1 : F_______.

    (a)

    1: 1

    (b)

    1: 2

    (c)

    2: 1

    (d)

    1: 3

  3. பொருளொன்று மாறாத் திசைவேகத்தில் சொர சொரப்பான பரப்பில் செல்லும்போது கீழ்க்கண்டவற்றுள் எது சாத்தியம்?

    (a)

    பொருளின் மீதான தொகுபயன் விசைசுழி

    (b)

    பொருளின்மீது விசை ஏதும் செயல்படவில்லை

    (c)

    பொருளின் மீது புறவிசை மட்டும் செயல்படுகிறது.

    (d)

    இயக்க உராய்வு மட்டும் செயல்படுகிறது.

  4. மையவிளக்கு விசை எங்கு ஏற்படும்?

    (a)

    நிலைமக் குறிப்பாயங்களில் மட்டும்

    (b)

    சுழல் இயக்க குறிப்பாயங்களில் மட்டும்

    (c)

    எந்த ஒரு முடுக்கமடையும் குறிப்பாயத்திலும்

    (d)

    நிலைம, நிலைமமற்ற குறிப்பாயம்

  5. மனிதரொருவர் புவியின் துருவத்திலிருந்து, நடுவரைக் கோட்டுப் பகுதியை நோக்கி வருகிறார். அவரின்மீது செயல்படும் மையவிலக்கு விசை _______.

    (a)

    அதிகரிக்கும்

    (b)

    குறையும்

    (c)

    மாறாது

    (d)

    முதலில் அதிகரிக்கும் பின்பு குறையும்

  6. வட்ட இயக்கத்தில் உள்ள துகள் ஒன்று, சம காலங்களில் சம கோணங்களை ஏற்படுத்தினால் அதன் திசைவேகம்_______.

    (a)

    எண்மதிப்பில் மட்டும் மாறும்

    (b)

    மாறாமல் இருக்கும்

    (c)

    திசையில் மட்டும் மாறும்

    (d)

    எண்மதிப்பிலும் திசையிலும் மாறும்

  7. 1000 kg நிறை கொண்ட கார் ஒன்று 30 ms-1 வேகத்தில் செல்கிறது. காரின் சக்கரங்களுக்கும், சாலையின் பரப்பிற்கும் இடையேயான உராய்வுவிசை 5000N ஆகும். காரில் உள்ள தடுப்பியைப் பயன்படுத்தினால் அது எவ்வளவு நேரத்திற்குப் பிறகு அமைதி நிலைக்கு வரும்?

    (a)

    5 s

    (b)

    10 s

    (c)

    12 s

    (d)

    6 s

  8. 1000 kg நிறையுள்ள ஊர்தி ஒன்று 90 m ஆரமுள்ள 450 உயர்த்தப்பட்ட வளைவுப் பாதையில் பாதுகாப்பாக செல்ல, ஊர்தியின் வேகம்_________

    (a)

    20 ms-1

    (b)

    30 ms-1

    (c)

    5 ms-1

    (d)

    10 ms-1

  9. 1000 kg நிறை கொண்ட வாகனம் ஒன்றை சமதளப் பாதையில், சீரான வேகத்தில் இயங்கச் செய்ய F என்ற 500N விசை தேவைப்படுகிறது. இப்போது F2 என்ற 1000N விசை வாகனத்தின்மீது செலுத்தப்பட்டால், வாகனத்தின் முடுக்கம்_________

    (a)

    சுழி

    (b)

    1.5 ms-2

    (c)

    1 ms-2

    (d)

    0.5 ms-2

  10. ஒரு பொருளின் நிறை 3 kg 2ms-2.முடுக்கத்துடன் நகருகிறது.ஒரு செகண்டில் உந்தத்தில் ஏற்படும் மாற்றம் _______

    (a)

    2/3 kgms-1 

    (b)

    3/2 kgms-1 

    (c)

    6 kgms-1 

    (d)

    1.5 kgms-1 

  11. 4 m நிறையுள்ள ஒரு பொருள் - தளத்தில் ஓய்வு நிலையில் உள்ளது. அது திடீரென மூன்று துண்டுகளாக வெடித்துச் சிதறுகிறது. m நிறையுள்ள இரு துண்டுகள் v என்ற சம வேகத்தில் ஒன்றுக்கொன்று செங்குத்தாக இயங்குகிறது. வெடிப்பினால் உருவாக்கப்பட்ட மொத்த இயக்க ஆற்றல் _______.

    (a)

    mv2

    (b)

    \(\frac { 3 }{ 2 } { mv }^{ 2 }\)

    (c)

    2mv2

    (d)

    4mv2

  12. R ஆரமுள்ள ஒரு செங்குத்து வட்டத்தை நிறைவு செய்ய m நிறையுள்ள பொருள் கீழ்முனையில் எந்த சிறும திசைவேகத்துடன் வட்டப்பாதையில் நுழைய வேண்டும்?

    (a)

    \(\sqrt { 2gR } \)

    (b)

    \(\sqrt { 3gR } \)

    (c)

    \(\sqrt { 5gR } \)

    (d)

    \(\sqrt { gR } \)

  13. ஒரு மூடிய பாதைக்கு ஆற்றல் மாற்றா விசையினால்  செய்யப்பட்ட வேலை?

    (a)

    எப்போதும் எதிர்குறியுடையது

    (b)

    சுழி

    (c)

    எப்போதும் நேர்குறியுடையது

    (d)

    வரையறுக்கப்படாதது

  14. ஒரு பொருளின் நேர்க்கோட்டு உந்தம், 0.1% உயர்ந்தால் அதன் இயக்க ஆற்றல் உயரும் அளவு _______.

    (a)

    0.1%

    (b)

    0.2%

    (c)

    0.4%

    (d)

    0.01%

  15. காற்றால் இயங்கும் ஒரு மின்னியற்றி காற்று ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுகிறது. மின்னியற்றியானது அதன் இறக்கைகளில் படும் காற்று ஆற்றலில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் மின் ஆற்றலாக மாற்றுவதாகக் கருதுக. v என்பது காற்றின் வேகம் எனில், வெளியீடு மின்திறன் எதற்கு நேர்விகிதத்தில் இருக்கும்?

    (a)

    v

    (b)

    v2

    (c)

    v3

    (d)

    v4

  16. ஒரு பொருள் தனது நிலைப்பாட்டினால் கொண்டுள்ள ஆற்றல் ஆகும்.

    (a)

    இயக்க ஆற்றல்

    (b)

    நிலை ஆற்றல்

    (c)

    ஆற்றல்களின் கூடுதல்

  17. மீட்சி மோதலில் 

    (a)

    இயக்க ஆற்றல் முதலில் அதிகரித்தப் பிறகு குறையும் 

    (b)

    இறுதி இயக்க ஆற்றல் மாறும் 

    (c)

    தொடக்க ஆற்றலை விட இறுதி இயக்க ஆற்றல் குறையும் 

    (d)

    தொடக்க இயக்க ஆற்றலும், இறுதி இயக்க ஆற்றலும் சமம் 

  18. Y திசையில் மட்டும் நகரக் கூடிய பொருள் ஒன்றின்மீது \(\overrightarrow { F } =\left( -2\hat { i } +15\hat { j } +6\hat { k } \right) N\)விசை செயல்பட்டு பொருளை Y அச்சின் திசையில் 10m தொலைவு நகரச் செய்தால், விசை செய்த வேலை

    (a)

    20J

    (b)

    150J

    (c)

    160J

    (d)

    190J

  19. நேர்கோட்டு உந்தங்கள் சமமாக உள்ள இரு பொருட்கள் இயக்க ஆற்றல்களின் விகிதம் 4 : 1 எனில், அவற்றின் நிறைகளின் விகிதம்?

    (a)

    1 : 2

    (b)

    1 : 1

    (c)

    4 : 1

    (d)

    1 : 4

  20. நிலை ஆற்றலை எவ்வாறு குறிப்பிட முடியாது?

    (a)

    J

    (b)

    Ns

    (c)

    Nm

    (d)

    Ws

  21. Answer all the questions

    20 x 2 = 40
  22. கார் ஒன்றின் உள்ளே இருந்து அக்காரைத் தள்ள முடியாது ஏன்?

  23. 50 g நிறையுள்ள சிலந்தி ஒன்று படத்தில் காட்டியவாறு அதன் வலையிலிருந்து தொங்குகிறது. வலையின் இழுவிசை யாது?

  24. படத்தில் காட்டியவாறு m1 மற்றும் m2 இரண்டு நிறைகள் மெல்லிய கயிற்றினால் உராய்வற்ற கப்பியின் வழியே இணைக்கப்பட்டுள்ளன. மேசையுடனான m1 க்கும் மேசைக்கும் இடையேயான ஓய்வுநிலை உராய்வுக் குணகம் μs. m1 மீது எவ்வளவு சிறும நிறை m3 வைத்தால் m1 நகராது? m1 = 15 kg, m2 = 10 kg, m3 = 25 kg, μs = 0.2 எனில் உனது விடையை சரி பார்.

  25. மக்கள் அடிக்கடி “எல்லா செயல்களுக்கும் சமமான எதிர்ச்செயல் உண்டு” என்று கூறுகிறார்கள். இங்கு “செயல்கள்” என்பது மனிதர்களின் செயல்களைக் குறிக்கிறது. மனிதர்களின் செயல்களுக்கு நியூட்டனின் மூன்றாம் விதியைப் பயன்படுத்துவது சரியா? நியூட்டனின் மூன்றாம் விதியில் குறிப்பிடப்படும் செயல் (Action) என்பது எதனைக் குறிக்கிறது?

  26. சரிசமமான வளைவுச் சாலையில் கார் ஒன்று சறுக்குவதற்கான நிபந்தனை என்ன?

  27. புவியின் சுழற்சியினால் ஏற்படும்  விளைவுகளைப் புறக்கணிக்கலாம் .ஏன்? 

     

  28. ஒரு தூக்கி 5.0 ms-2முடுக்கத்துடன் கீழே இறங்குகிறது.லிப்டில்[தூக்கி]உள்ள நபரின் எடையில் ஏற்படும் சதவீத மாற்றம் யாது?

  29. நியூட்டனின் இரண்டாம் விதி எதைச் சார்ந்தது?

  30. பொருளின் மீது செலுத்தப்படும் புறவிசையினைப் பொறுத்து ஓய்வுநிலை உராய்வு விசை மற்றும் இயக்க உராய்வு விசையில் மாறுபாட்டினை வரைபடம் வரை.

  31. சூரியனிலிருந்து 150 மில்லியன் கிலோமீட்டர் தொலைவிலுள்ள புவி, சூரியனைச் சுற்றி வருவதால் ஏற்படும் மையநோக்கு முடுக்கத்தைக் கணக்கிடுக. (இங்கு புவி சூரியனை வட்டப்பாதையில் சுற்றி வருகிறது என்று கருதுக).

  32. கயிற்றுடன் கட்டப்பட்ட ஒரு வாளியில் உள்ள நீர் 0.5 m ஆரமுள்ள செங்குத்து வட்டத்தை சுற்றி சுழற்றப்படுகிறது. இயக்கத்தின்போது நீரானது வாளியில் இருந்து சிந்தாமல் இருக்க அடிப்புள்ளியில் இருக்கவேண்டிய சிறும திசைவேகத்தைக் கணக்கிடுக. (g = 10 m s-2)

  33. ஒரு பொருளின் மீது புறவிசை செயல்படும்போது அப்பொருள் எவ்வாறு சுழி முடுக்கத்துடன் (மாறா திசைவேகத்தில்) இயங்கும்?

  34. சராசரித் திறன் வரையறு.

  35. ஆற்றலின் முக்கியமான அம்சம் யாது? [அ] ஆற்றல் மாறா விதி: வரையறு.

  36. மோதல்களுக்கு அன்றாட நிகழ்வில் எடுத்துக்காட்டு தருக?

  37. சராசரித் திறன் : வரையறு.

  38. 5 kg நிறையுள்ள ஒரு பொருள் 1000J இயக்க ஆற்றலுடன் மேல் நோக்கி செங்குத்தாக எறியப் படுகிறது. புவியீர்ப்பு முடுக்கம் 10 ms-2 எனில் இயக்க ஆற்றல் அதன் தொடக்க மதிப்பில் பாதியாகும் உயரத்தைக் கணக்கிடுக. 

  39. 60 kg மற்றும் 30 kg நிறை கொண்ட இரு பொருட்கள் ஒரே திசையில் நேர்கோட்டில் முறையே 40 cm s-1 மற்றும் 30 cm s-1 திசைவேகத்தில் இயங்கி ஒரு பரிமாண மீட்சி மோதலுக்குட்படுகிறது. மோதலுக்குப் பிறகு அவற்றின் திசைவேகங்களைக் காண்க.

  40. படத்தில் காட்டியுள்ளவாறு 70 g நிறையுள்ள ஒரு பொருள் 50cms-1 வேகத்தில் நகரும் போது மாறுபட்ட விசைக்கு உட்படுகிறது. விசை செயல்படுவது நிறுத்தப்பட்டவுடன் பொருளின் வேகம் என்ன?

  41. உராய்வற்ற கிடைத்தள தரையில் ஒரு பொருள் செங்குத்து அச்சுடன் \(\theta\)கோணத்தில் u வேகத்தில் மோதி செங்குத்து அச்சுடன் \(\phi \) கோணத்தில் v வேகத்தில் மீண்டெழுகிறது. பொருளுக்கும் தரைக்கும் இடையே உள்ள மீட்சியளிப்பு குணகம் e.v இன் எண்மதிப்பு யாது?

  42. Answer all the questions

    20 x 3 = 60
  43. படத்தில் காட்டியுள்ள A, B மற்றும் C என்ற கனச் செவ்வகத்துண்டுகளின் மீது செயல்படும் விசைகளை காண்க.

  44. நிலைமம் விளக்குக. இயக்கத்தில் நிலைமம். ஓய்வில் நிலைமம் மற்றும் திசையில் நிலைமம் ஒவ்வொன்றிற்கும் இரு எடுத்துக்காட்டுகள் தருக.

  45. ஓய்வுநிலை உராய்வு மற்றும் இயக்க உராய்வு ஆகியவற்றிற்கான அனுபவ கணிதத் தொடர்பைக் (empirical law) கூறுக.

  46. 1000 kg  நிறையுள்ள ஒரு கார் 10 kmh-1 வேகத்துடன் செல்கிறது.0.01 sல் ஓய்வுக்கு வருகிறது.கணத்தாக்கு விசையை காண்க.        

  47. ஒரு பொருள் மீது  \(\vec { F } =\left( 4\vec { i } -8\vec { j } +8\vec { k } \right) \) என்ற விசை செயல்படுகிறது .அது ஏற்கும் முடுக்கம் 2 ms-2 பொருளின் நிறையை காண்க/  

  48. 3000 g நிறையுள்ள ஒரு செயற்கைகோள் 4500 ms-1 வேகத்துடன் தொலைவில் 10000 km புவியைச் சுற்றி வருகிறது.செயல்படும் மைய நோக்கு விசையைக் கணக்கிடுக.   

  49. 75 kg நிறையுள்ள ஒரு நபர் ஒரு தூக்கியின் எடை பார்க்கும் கருவியின் மீது நிற்கிறார். மின் தூக்கியவாறு கீழ்நோக்கி முடுக்கம் 5 ms-2 வுடன் இறங்குகிறது. எடை பார்க்கும் கருவியில் அளவியின் முள்ளின் அளவீடு என்னவாக இருக்கும்.?

  50. 35 g நிறையுள்ள ஒரு கிரிக்கெட் பந்து ஸ்டெம்பைத் கோணத்தில் திசைவக்கத்துடன் தாக்குகிறது. பந்தினால் பெறப்பட்ட கணத்தாக்கு விசையைக் கணக்கிடுக.

  51. m நிறையுள்ள புத்தகம் ஒன்று மேசை ஒன்றின் மீது ஓய்வு நிலையில் உள்ளது.
    1. புத்தகத்தின் மீது செயல்படும் விசைகள் யாவை?
    2. புத்தகம் செலுத்தும் விசைகள் யாவை?
    3. புத்தகத்தின் விசைப்படத்தை வரைக. 

  52. கிடைத்தளத்துன் \(\theta\) சாய்வுக் கோணத்தில் அமைந்த சாய்தளம் ஒன்றின் வழியே இயங்கும் m1 நிறை கொண்ட கனச் செவ்வகப் பொருள் 1, நிறையற்ற மற்றும் நீட்சித் தன்மையற்ற மெல்லிய கயிற்றினால் நிறையற்ற கப்பி ஒன்றின் வழியே m2 நிறை கொண்ட மற்றொரு கனச்செவ்வகப் பொருள் 2 உடன் இணைக்கப்பட்டுள்ளது. சாய்தளம் மற்றும் கனச் செவ்வகப் பொருள் இரண்டிற்குமான ஓய்வு நிலை உராய்வுக்குணகம் \(\mu \)s மற்றும் இயக்க உராய்வுக்குணகம் \(\mu \) என்க. அமைப்பு சறுக்கத் துவங்கும் நிலையில் இரு கனச் செவ்வகப் பொருட்களின் நிறைகளுக்கு இடையே உள்ள தொடர்பினை வருவிக்கவும்.

  53. 2 kg மற்றும் 4 kg நிறை கொண்ட இரு பொருள்கள் 20 kg m s-1 என்ற சம உந்தத்துடன் இயங்குகின்றன.
    (a) அவை சம இயக்க ஆற்றலைப் பெற்றிருக்குமா?
    (b) அவை சம வேகத்தைப் பெற்றிருக்குமா?

  54. 2 kg நிறையுள்ள பொருள் தரையிலிருந்து 5 m உயரத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறது  (g = 10 m s-2) எனில்
    a) பொருளினுள் சேமிக்கப்பட்டுள்ள நிலையாற்றல் யாது?
    b) இந்த நிலையாற்றல் எங்கிருந்து கிடைத்தது?
    c) பொருளை அந்த உயரத்திற்கு எடுத்துச் செல்ல எவ்வளவு புறவிசை செயல்பட வேண்டும்?
    d) பொருளானது ‘h’ உயரத்திற்கு எடுத்துச் செல்லப்படும் போது அதன் மீது செயல்படும் நிகர விசை யாது?

  55. ஒரு சுருள்வில்லுடன் இணைக்கப்பட்ட 2 kg நிறையுள்ள ஒரு பொருள் அதன் சமநிலையிலிருந்து x = 10 m என்ற தொலைவுக்கு நகர்த்தப்படுகிறது. சுருள்வில் மாறிலி k = 1 N m-1 மற்றும் பரப்பு உராய்வற்றதாகக் கருதுக.
    (a) பொருளானது சமநிலையைக் கடக்கும்போது அதன் வேகம் என்ன?
    (b) பொருளானது சமநிலையைக் கடக்கும் போது, x = ± 10 m என்ற விளிம்பு நிலையை கடக்கும்போதும் பொருளின் மீது செயல்படும் விசை யாது?

  56. 1250 kg நிறையுள்ள ஒரு வாகனம் ஒரு சமமான நேர் சாலையில் 0.2 ms-2 முடுக்கத்துடன் 500 N என்ற எதிர்க்கும் புறவிசைக்கெதிராக இயக்கப்படுகிறது. வாகனத்தின் திசைவேகம் 30 m s-1 எனில் வாகனத்தின் இயந்திரம் வெளிப்படுத்தும் திறனைக் கணக்கிடுக.

  57. 10 m s-1 வேகததில் இ்யங்கும் ஒரு நிறை குறைவான பொருள் அதன நிறையைப் போன்று இரு மடங்கு மற்றும் அதன வேகததில் பாதி்யளவு கொண்ட அதே திசையில் இ்யங்கும் மறறொரு பொருளின் மீது மோதுகிறது .மோதலானது ஒரு பாரிமாண மீட்சி மோதல் எனக் கருதுக.மோதலுக்குப் பிறகு  இரு பொருள்களின் வேகம் என்ன?

  58. சுருள் வில்லன் விசை-இடப்பெயர்ச்சி வரைபடம் வரைந்து மீட்சி நிலை ஆற்றலைக்  கணக்கீடு.

  59. சுருள்வில்லின் நிலை ஆற்றல் -இடப்பெயர்ச்சிக்கான வரைபடத்தினை விவரி.

  60. மொத்த நேர்க்கோடு உந்தம் ஒரு மாறா அளவு என்பதை நிரூபி.

  61. முழு மீட்சியற்ற மோதலில் ஏற்படும் இயக்க ஆற்றல் உழைப்பினை சமன்பாட்டுடன் விவரி.

  62. ஒரு துகளை \(\overrightarrow { S } =(\hat { i } +2\hat { j } +6\hat { k } )m\) வெக்டரில் இயங்க செய்யப்பட்ட வேலை யாது? அளிக்கப்பட்ட விசை \(\overrightarrow { F } =(2\hat { i } +3\hat { j } +5k)N\) 60° கோணத்தில்.

  63. Answer all the questions

    20 x 5 = 100
  64. நியூட்டனின் மூன்று விதிகளின் முக்கியத்துவத்தை விளக்குக.

  65. புவியினை நோக்கி நிலவின் மையநோக்கு முடுக்கத்தைக் காண்க.

  66. பொருளொன்று மாறாத் திசைவேகத்தில் கிடைத்தளப் பரப்பில் இயங்குகின்றது எனக் கருதுக. வெளிப் புறவிசை அப்பொருளின் மீது செயல்பட்டு அதனை மாறாத் திசைவேகத்தில் இயக்கினால், அப்பொருளின் மீது செயல்படும் தொகுபயன் விசையின் மதிப்பு என்ன?

  67. ஆரம் 10 m மற்றும் நிலை உராய்வுக் குணகம் 0.81 கொண்ட சரிசமமான வட்டவடிவச் சாலை ஒன்றைக் கருதுக. அச்சாலையில் மூன்று கார்கள் (A,B மற்றும் C) முறையே 7 ms-1, 8 ms-1 , 10 ms-1 வேகத்தில் செல்கின்றன. இவற்றுள் எந்த கார் வட்ட வடிவச்சாலையில் செல்லும் போது சறுக்கி விழும்? (g = 10 ms-2)

  68. ஓய்வுநிலை உராய்வு மற்றும் இயக்கஉராய்வு-ஒப்பிடுக

  69. உந்த மாறாவிதிக்கு ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  70. பழம் ஒன்று மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது.நியூட்டனின் இரண்டாம் விதியைப் பயன்படுத்தி பழத்தைத் தாங்கியுள்ள காம்பின் இழுவிசையைக் காண்.   

  71. சாய்தளத்தில் பொருள் ஒன்று எவ்வாறு இயங்குகிறது என்பதை தனித்த பொருளின் விசைப் படத்துடன் விவரி.  

  72. சமதளப் பரப்பில் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டிருக்கும் இரு பொருட்களில் விசை எவ்வாறு செயல்படுகிறது? இது நியூட்டனின் 3ம் விதியை எவ்வாறு உறுதிப்படுத்திக்கிறது?

  73. பிரிவு 3.6.3 வெளி விளிம்பு உயர்த்தப்பட்ட சாலை உட்பிரிவில், சாலையின் பரப்பு காரின் டயர் மீது செலுத்தும் உராய்வு விசையைப் பற்றி நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. காரின் டயருக்கும், சாலையின் பரப்பிற்கும் இடையேயுள்ள ஓய்வுநிலை உராய்வுக்குணகம் எனக் கருதி, காரொன்று வளைவுச் சாலையில் சறுக்காமல் வளைவதற்கான பெருமத் திசைவேகத்தின் கோவையைப் பெறுக.

  74. மாறா விசை மற்றும் மாறும் விசையால் செய்யப்ட்ட வேலைகளுக்கிடையே உள்ள வேறுபாடுகளை வரைபடங்களுடன் விளக்குக.

  75. வேலை ஆற்றல் தத்துவத்தை கூறி விளக்குக.அதற்கு ஏதேனும் மூன்று உதாரணங்களை கூறுக 

  76. திறன் மற்றும் திசைவேகத்திற்காண கோவையைத் தருவி .அதற்கு சில உதாரணங்கள் தருக

  77. ஒரு பரிமாண மிட்சி மோதலில் பொருட்களின்  திசைவேகத்திற்கான சமன்பாட்டைத் தருவித்து , அதன் பல்வேறு நேர்வுகளை விவரி. 

  78. மீட்சியற்ற மோதல் என்றல் என்ன? அது மீட்சியற்ற இருந்து எவ்வாறு மாறபட்டது?அன்றாட வாழ்வில் மீட்சியற்ற மோதலுக்கு சில உதாரணங்களைக் கூறுக.

  79. ஆற்றல் மாற்றா மற்றும் ஆற்றல் மாற்றும் விசைகளை வரையறு. எடுத்துக்காட்டுகள் தருக.

  80. ஒரு துகள் \(\overset { \rightarrow }{ { r }_{ 1 } } =(2\hat { i } +\hat { j } -3\hat { k } )\) என்ற நிலையிலிருந்து \(\overrightarrow { { r }_{ 2 } } =(4\hat { i } +6\hat { j } -7\hat { k } )\) நிலைக்கு, \(\overrightarrow { F } =(3\hat { i } +2\hat { j } +4\hat { k } )N\). என்ற விசையின் தாக்கத்தால் நகர்கிறது எனில் செய்யப்பட்ட வேலை யாது?

  81. ஒரு துப்பாக்கி குண்டின் நிறை 300 அது 500 ms-1 அளவேகத்தில் இயங்குகிறது. ஒரு நிலையான இலக்கினை 10 cm துளைத்துக் கொண்டு செல்கிறது. இலக்கினால் குண்டின் மீது செலுத்தப்படும் சராசரி விசையைக் கணக்கிடுக. 

  82. புவிப்பரப்பிரு அருகில் நிலை ஆற்றல் வேலை மூலம் வரையறுக்கப்படுதலை சமன்பாட்டுடன் விவரி?

  83. ஆற்றல் மாறா விதியினை படம் வரைந்து விளக்குக.

*****************************************

Reviews & Comments about 11th Maths - Important questions-இயக்க விதிகள்,வேலை, ஆற்றல் மற்றும் திறன்

Write your Comment