காலாண்டு மாதிரி வினாத்தாள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 02:45:00 Hrs
Total Marks : 70
    15 x 1 = 15
  1. விசையானது திசைவேகத்தின் இருமடிக்கு நேர்விகிதப் பொருத்தமுடையது எனில் விகித மாறிலியின் பரிமாண வாய்ப்பாடு_______.

    (a)

    [MLT0]

    (b)

    [MLT-1]

    (c)

    [ML-2T]

    (d)

    [ML-1T0]

  2. பொருளொன்றின் நீளம் 3.51m அதன் துல்லியதன்மை 0.01m எனில் அளவீட்டின் விழுக்காடு பிழை ______

    (a)

    351%

    (b)

    1%

    (c)

    0.28%

    (d)

    0.035%

  3. 2.64 x 104 kg ல் உள்ள முக்கிய எண்ணுருக்களின் எண்ணிக்கை____ 

    (a)

    2

    (b)

    4

    (c)

    5

    (d)

    3

  4. சமஉயரத்தில் உள்ள இரு பொருட்களில் ஒன்று தானாக கீழ்நோக்கி விழுகிறது. மற்றொன்று கிடைத்தளத்ளத்தில் எறியப்படுகிறது. ‘t’ வினாடியில் அவை கடந்த செங்குத்து தொலைவுகளின் விகிதம் என்ன?

    (a)

    1

    (b)

    2

    (c)

    4

    (d)

    0.5

  5. இரு சம வெக்டர்களின் தொகுப்பயன் விக்டரின் என்மதிப்பு அவற்றின் ஏதேனும் ஒரு விக்டரின் எண் மதிப்பிறகு சமமீனில் இரு வெக்டர்களுக்கும் இடையேயான கோணம்_____ 

    (a)

    600

    (b)

    900

    (c)

    1000

    (d)

    1200

  6. மாறாத் திசைவேகத்தில் செல்லும் துகளின் மீது செயல்படும் விசையின் மதிப்பு என்ன?

    (a)

    எப்பொழுதும் சுழி

    (b)

    சுழியாக இருக்க வேண்டிய அவசியமில்லை

    (c)

    எப்பொழுதும் சுழியற்ற மதிப்பு

    (d)

    முடிவு செய்ய இயலாது

  7. வளைவுப் பாதையில் கார் ஒன்று திடீரென திரும்பும் போது, காரினுள் அமர்ந்திருப்பவர்கள் வெளிப்புறமாக தள்ளப்படுகின்றனர். காரணம்?

    (a)

    காரின் வேகம்

    (b)

    இயக்க நிலைமம்

    (c)

    இயக்க முடுக்கம்

    (d)

    எதுவும் இல்லை

  8. சக்கரங்கள் ஏன் வட்ட வடிவில் அமைந்துள்ளன?

    (a)

    அவற்றை உருவாக்க குறைந்த அளவு பொருட்கள் போதும்

    (b)

    உருளும் உராய்வு, நழுவும் உராய்வைவிடக் குறைவு

    (c)

    எளிதில் காற்றை நிரப்ப முடியும்

    (d)

    எதுவும் இல்லை

  9. 10 g  நிறையுடைய ஒரு பொருளின் மீது செயல்படும் விசை 2.5 N.அப்பொருளின் முடுக்கம் யாது?  

    (a)

    \(1.5 \times 10^{2} ms^{-2}\)

    (b)

    \(2.0 \times 10^{3} ms^{-2}\)

    (c)

    \(2.5 \times 10^{3} ms^{-2}\)

    (d)

    \(3.0 \times 10^{2} ms^{-2}\)

  10. ஒரு பிளாக் B தொடக்க திசைவேகம் V யுடன் கிடைமட்டப் பரப்பில் உந்தத்துடன் தள்ளப்படுகிறது.μ- உராய்வு குணகம் பிளாக்கிற்கும் பரப்பிற்கும் இடையே ஆனது.எனில் B ஓய்வு நிலையை அடையும் கால அளவு_______

    (a)

    v/gμ

    (b)

    gμ/v  

    (c)

    g/v 

    (d)

    v/g  

  11. R ஆரமுள்ள ஒரு செங்குத்து வட்டத்தை நிறைவு செய்ய m நிறையுள்ள பொருள் கீழ்முனையில் எந்த சிறும திசைவேகத்துடன் வட்டப்பாதையில் நுழைய வேண்டும்?

    (a)

    \(\sqrt { 2gR } \)

    (b)

    \(\sqrt { 3gR } \)

    (c)

    \(\sqrt { 5gR } \)

    (d)

    \(\sqrt { gR } \)

  12. இரு திண்ம கோலங்கள் மீட்சியற்ற மோதலுறும் போது 

    (a)

    மொத்த இயக்க ஆற்றல் மாறாது 

    (b)

    மொத்த இயந்திர ஆற்றல் மாறுபடும் 

    (c)

    நேர்கோட்டு உந்தம் மாறுபடும் 

    (d)

    நேர்கோட்டு உந்தம் மாறுபடாது 

  13. ஒரு பொருள் 'h' உயரத்தில் இருந்து விழுகிறது. உயரம் \(\frac {h }{2}\) ஐ அடைந்த பிறகு அது மேற்கொள்ளும் ஆற்றல்

    (a)

    நிலை ஆற்றல் மட்டும்

    (b)

    இயக்க ஆற்றல் மட்டும்

    (c)

    பாதி நிலை ஆற்றல் பாதி இயக்க ஆற்றல்

    (d)

    அதிக இயக்க ஆற்றல் குறைவான நிலை ஆற்றல்

  14. ஒரு பந்தின் இயக்க ஆற்றல் E ஆனது 45கோணத்தில் கிடைமட்டத்தில் எறியப்படுகிறது. பந்து பறக்கும் பெருமை உயரத்தில் இயக்க ஆற்றல்

    (a)

    E

    (b)

    \(\frac { E }{ \sqrt { 2 } } \)

    (c)

    \(\frac { E }{ 2 } \)

    (d)

    சுழி

  15. சாய்தளத்தில் M நிறையும் R ஆரமும் கொண்ட உருளை வடிவப்பொருள் நழுவாமல் கீழ்நோக்கி உருள்கிறது. அது உருளும் உராய்வு விசையானது ______.

    (a)

    இயக்க ஆற்றலை வெப்ப ஆற்றலாக மாற்றும்

    (b)

    சுழற்சி இயக்கத்தை குறைக்கும்

    (c)

    சுழற்சி மற்றும் இடப்பெயர்ச்சி இயக்கங்களை குறைக்கும்

    (d)

    இடப்பெயர்ச்சி ஆற்றலை சுழற்சி ஆற்றலாக மாற்றும்

  16. 6 x 2 = 12
  17. ஒரு கோளின் மீது ரேடார் துடிப்பினை செலுத்தி 7 நிமிடங்களுக்குப் பின் அதன் எதிரொளிக்கப்பட்ட துடிப்பு பெறப்படுகிறது. கோளுக்கும் பூமிக்கும் இடையேயான தொலைவு 6.3 × 1010m எனில் ரேடார் துடிப்பின் திசைவேகத்தைக் கணக்கிடுக.

  18. சோலார் வருடம், லீப் வருடம் என்பன யாவை?

  19. அளவீடு செய்தலில் 'பிழை' என்றால் என்ன? இதனால் அளவீடுகளில் ஏற்படும் தாக்கம் யாது?

  20. படம் 1 மற்றும் 2 இல் காட்டப்பட்ட 25 kg மிதிவண்டிகளின் முடுக்கங்களைக் கணக்கிடு.

  21. துப்பாக்கியை கையில் ஏந்தும் போது தோல் பட்டையின் உதவி தேவைப்படுகிறது ஏன்?

  22. சீரான வடிவம் கொண்ட பொருட்களில் நிறைமையம் எங்கு அமையும் ? எ.கா தருக

  23. 6 x 3 = 18
  24. வேறு கோளில் மனிதன் உள்ளபோது எந்த அடிப்படை அளவுகளில் மாற்றம் நிகழும்?

  25. \(\overrightarrow{A}\) மற்றும் \(\overrightarrow{B}\) என்ற இரண்டு வெக்டர்கள் அவற்றின் கூறுகள் வடிவில் கொடுக்கப்பட்டுள்ளன. \(\overrightarrow{A}=5\hat{i}+7\hat{j}-4\hat{k}\) மற்றும் \(\overrightarrow{B}=6\hat{i}+3\hat{j}+2\hat{k}\) எனில் கீழ்கண்டவற்றைக் காண்க.
    \(\overrightarrow{A}+\overrightarrow{B},\ \ \overrightarrow{B}+\overrightarrow{A},\ \overrightarrow{A}-\overrightarrow{B}, \ \ \overrightarrow{B}-\overrightarrow{A}\)

  26. நிலைமம் விளக்குக. இயக்கத்தில் நிலைமம். ஓய்வில் நிலைமம் மற்றும் திசையில் நிலைமம் ஒவ்வொன்றிற்கும் இரு எடுத்துக்காட்டுகள் தருக.

  27. வெற்றிடத்தில் ஒரு குதிரை வண்டி ஒன்றை இழுத்துக்கொண்டு ஓட முடியுமா?

  28. திருப்புத்திறனின் தத்துவத்தை கூறுக.

  29. அச்சைப் பொருத்து திருப்பு விசை செயல்படுவதை படத்துடன் விவரி.

  30. 5 x 5 = 25
  31. i) குறைந்த தொலைவை அளப்பதற்கு பயன்படும் திருகு அளவி மற்றும் வெர்னியர் அளவி பற்றி விவரி.
    ii) நீண்ட தொலைவுகளை அளக்கும் முக்கோண முறை மற்றும் ரேடார் முறை பற்றிக் குறிப்பிடுக

  32. இரு அளவுகளைப் பெருக்குவதால், வகுப்பதால் ஏற்படும் பிழைகளை விவரி. 

  33. சென்னையிலுள்ள 60 kg நிறையுடைய மனிதரின் மீது செயல்படும் மையவிலக்கு விசையைக் காண்க
    (கொடுக்கப்பட்டவை: சென்னையில் குறுக்குக் கோடு θ = 13°)

  34. உராய்வுக் கோணம் விளக்குக.

  35. கோண உந்தம் மற்றும் கோணதிசைவேகம் இவற்றிக்கான தொடர்பினைத் தருவி.

*****************************************

Reviews & Comments about 11th இயற்பியல் காலாண்டு மாதிரி வினாத்தாள் ( 11th Physics Quarterly Model Question Paper )

17-Sep-2019

English la poduri

17-Sep-2019

speeda English send pannu

Write your Comment