11th Physics Volume I Sample Question Paper

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 95
    2 மதிப்பெண் வினாக்கள் 
    20 x 2 = 40
  1. தரையில் ஒரு புள்ளியிலிருந்து ஓர் மரத்தின் உச்சியானது 60˚ ஏற்றக் கோணத்தில் தோன்றுகிறது. மரத்திற்கும் அப்புள்ளிக்கும் இடைப்பட்ட தூரம் 50 m எனில் மரத்தின் உயரத்தைக் காண்க.

  2. R1 = (100 ± 3) Ω; R2 = (150 ± 2) Ω ஆகிய இரு மின்தடைகள் தொடரிணைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றின் தொகுபயன் மின் தடை என்ன?

  3. 'அளவீட்டியல்' என்பது யாது?

  4. SI அலகுமுறையில் நிறைக்கான அலகின் வரைமுறை யாது?

  5. படத்தில் காட்டப்பட்டுள்ள \(\overrightarrow{A}\) வெக்டரிலிருந்து \(4\overrightarrow{A}\) மற்றும் \(-4\overrightarrow{A}\) ஜக் காண்க.

  6. சராசரி திசைவேகம் என்றால் என்ன?

  7. நிலை வெக்டரை அடிப்படையாகக் கொண்டு இடப்பெயர்ச்சி வெக்டரை அமைக்க.

  8. கொடுக்கப்பட்ட வெக்டர் சமன்பாட்டிலிருந்து 'T' ன் மதிப்பைக் காண்க. 5\(\hat { j } \) -T\(\hat { j } \) = 6\(\hat { j } \) + 3T\(\hat { j } \)

  9. தளம் ஒன்றில் இயங்கும் துகளின் திசைவேகம் பின்வரும் படத்தில் காட்டப்பட்டுள்ளது. துகள் மீது செல்படும் விசையின் திசையைக் காண்க.

  10. கால்பந்து வீரரொருவர் 0.8 kg நிறையுடைய கால்பந்தை உதைத்து அதை 12 ms-1 திசைவேகத்தில் இயக்க வைக்கிறார். அவ்வீரர் வினாடியில் ஆறில் ஒரு பங்கு நேரமே பந்தை உதைத்தார் எனில் அப்பந்தின் மீது அவர் செலுத்திய சராசரி விசையைக் காண்க.

  11. நியூட்டனின் இரண்டாவது விதி (F=Ma) அனைத்து இடங்களுக்கும் பொருந்துமா? காரணம் கூறு

  12. சீரான வட்ட இயக்கத்தில் எல்லா புள்ளிகளிலும் ஒரே அளவு மைய நோக்கு விசை செயல்படுமா?

  13. இயற்பியலில் வேலையின் வரையறையானது பொதுக்கருத்திலிருந்து எவ்வாறு  மாறுபடுகிறது என்பதை  விளக்குக.

  14. தொடக்கத்தில் நீட்டப்டாத நிலையில் உள்ள ஒரு சுருளவில் முதலில் x தொலைவுக்கும் மீணடும் x தொலைவுக்கும் நீட்டப்படுகிறைது. முதல் நேர்வில் செய்யப்பட்ட வேலை W1 ஆனது இரண்டாவதுத நேர்வில் செய்யப்பட்ட வேலை W2 ல் 1/3 பங்கு இருக்கும்.  சரி்யா, தவறா

  15. ஆற்றலை வரையறு. அதன் அலகு  மற்றும் பரிமாண வாய்ப்பாட்டைத் தருக .

  16. 20 kg நிறைவுள்ள ஒரு சிறுவனை ஒரு சாய்வுத் தளம் \(\theta \)=45° யில் 10 m தொலைவு வழியாக நிலையான திசைவேகத்துடன் நகர்த்த செய்யப்படும் வேலையாது?  

  17. \((4\hat { i } -3\hat { j } +5\hat { k } )\) N விசையானது \((7\hat { i } +4\hat { j } -2\hat { k } )\)m என்ற புள்ளியில் அமைந்த நிலைவெக்டரின் மீது செயல்படுகிறது. ஆதியைப் பொருத்து திருப்பு விசையின் மதிப்பை காண்க.

  18. மரம் வெட்டப்படும் போது, மரமானது வெட்டி வீழ்த்த வேண்டிய திசையின் பக்கமே வெட்டப்பட வேண்டியது ஏன்?

  19. திண்மப் பொருள்: வரையறு

  20. நழுவதலற்ற உருளுதலுக்கான கணக்குகளுக்கான தீர்வுகளை எவ்வகையில் தீர்மானிக்காலம்?

  21. 3 மதிப்பெண் வினாக்கள் 

    15 x 3 = 45
  22. இயற்பியல் அளவுகளின் வகைகளை விவரி:

  23. தொழில் நுட்பவியல் என்பது யாது? இயற்பியலும், தொழில் நுட்பவியலும் இணைந்து எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன?

  24. பரிமாண முறையில் கொடுக்கப்பட்ட இயற்பியல் சமன்பாட்டை சரியா என சோதிக்கப்படுதலை எடுத்துக்காட்டுடன் விளக்குக:
    (a) v = u + at
    (b) s = ut + \(\frac12\) at2

  25. வட்டப்பாதை இயக்கத்திலுள்ள துகள் ஒன்றின் கோண முடுக்கம் \(\alpha=0.2 rad \ {s}^{-2}\)
    அ) இத்துடன் 5 வினாடிகளுக்கு பின்னர் அடைந்த கோண இடப்பெயர்ச்சி மற்றும் 
    ஆ) நேரம் t = 5 வினாடியில் இத்துகளின் கோணத்திசை வேகம் ஆகியவற்றைக் காண்க.
    (துகளின் ஆரம்பக்கோணத்திசைவேகம் சுழி எனக் கருதுக.)

  26. ஒரு ரயில் 100 km/h வேகத்தில் இயங்குகிறது.15m தொலைவிற்குப்பிறது வேகத்தடை மூலம் நிறுத்தப்படுகிறது அதே ரயில் 120km/h வேகத்தில் இயங்குமானால் அதை நிறுத்தத் தேவையான சிறுமத் தொலைவு யாது?

  27. பின்வரும் வெக்டர்களின் எண்மதிப்பையும் , திசை வேகத்தையும் காண்: \(\hat {i }+\hat {j}\)மற்றும் \(\hat {i }-\hat {j}\)

  28. நியூட்டனின் இரண்டாவது விதியைக் கூறுக.

  29. சரிசமமான வட்டச் சாலையில் செல்லும் வாகனத்தின் மைய நோக்கு விசை எவ்வாறு செயல்படுகிறது? 

  30. ஒரு 40 gm நிறையுள்ள துப்பாக்கிக் குண்டு 250 ms-1வேகத்துடன் இயங்குகிறது. 20 cm தொலைவில் மரத்தைத் துளைத்துவிட்டு நின்று விடுகிறது. குன்றினால் செயற்படுத்தப்படும் சராசரி விசையைக் கணக்கீடு.

  31. 2 kg நிறையுள்ள ஒரு பொருள் இயக்க உராய்வுக் குணகம் 0.9 கொண்டுள்ள ஒரு பரப்பில் 20 N புறவிசையினால் 10 m தொலைவிற்கு நகர்த்தப்படுவதாகக் கருதுக. புறவிசை மற்றும் இயக்க உராய்வினால் செய்யப்பட்ட வேலை என்ன? முடிவைப் பற்றிய கருத்தைக் கூறுக
    (g = 10 m s-2 எனக் கொள்க)

  32. சுருள் வில்லன் விசை-இடப்பெயர்ச்சி வரைபடம் வரைந்து மீட்சி நிலை ஆற்றலைக்  கணக்கீடு.

  33. ஆற்றல் மாற்றா விசையினை படம் வரைந்து விவரி.

  34. கோண உந்த மாறா விதியைக் கூறு.

  35. திருப்பு விசையின் திறன் என்றால் என்ன?

  36. அச்சைப் பொருத்து திருப்பு விசை செயல்படுவதை படத்துடன் விவரி.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு இயற்பியல் தொகுதி I- மாதிரி வினாத்தாள் ( 11th Physics Volume I Sample Question Paper )

Write your Comment