11th Public Exam March 2019 Important Creative One Mark Test

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 150
    150 x 1 = 150
  1. நிறுவனம் பிறர்க்கு கொடுக்க வேண்டிய கடன்கள்.

    (a)

    பொறுப்பாகும்

    (b)

    செலவாகும்

    (c)

    வருமானமாகும்

    (d)

    கடனீந்தோர் ஆவர்

  2. நடவடிக்கைகளுக்கு ஆதாரமாக விளங்கக் கூடிய ஆவணத்தினை அழைப்பது.

    (a)

    கணக்கு

    (b)

    நடவடிக்கை

    (c)

    சான்றுச்சீட்டு

    (d)

    இடாப்பு

  3. வணிக நடவடிக்கைகளின் வகைபாடு. 

    (a)

    ஒன்று 

    (b)

    இரண்டு 

    (c)

    மூன்று

    (d)

    நான்கு

  4. கொள்முதல் திருப்பம் என்பது சரக்களித்தோர்க்கு திருப்பி அளித்தக் காரணம். 

    (a)

    நல்ல தரம்

    (b)

    குறைவுடைய தரம்

    (c)

    மிகநல்ல தரம்

    (d)

    இவற்றில் ஏதும் இல்லை

  5. பொருளை உற்பத்தி செய்ய அல்லது பண்டங்கள் பணியினை விற்பனை செய்யும் நிலைக்கு கொண்டு வர ஆகும் தொகை.  

    (a)

    செலவுகள்

    (b)

    வருவாய் 

    (c)

    ஆதாயம்

    (d)

    முதலீடு

  6. கணக்காளரின் பணி __________________ 

    (a)

    ஏடுகளைப் பராமரிப்பவர் 

    (b)

    நிதி ஆலோசகர்

    (c)

    வரி மேலாளர்

    (d)

    மேற்கூறிய அனைத்தும் 

  7. ________________ வணிகத்தின் ஒரு மொழியாகும்.

    (a)

    நிதி

    (b)

    கணக்கியல்

    (c)

    பொருளியில்

    (d)

    அறிவியல்

  8. இரட்டைப் பதிவு கணக்கியல் முறையை மேம்படுத்தியவர் ________________ 

    (a)

    லூகா பாசியோலி 

    (b)

    ஆடம் ஸ்மித்

    (c)

    கீன்சு

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  9. 19ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின் விளைவுகள்_________________

    (a)

    மக்கள் தொகை கட்டுப்பாடு

    (b)

    நாடுகள் பெருக்கம்

    (c)

    இயற்கைச் சீரழிவுகள்

    (d)

    பேரளவு உற்பத்தி மற்றும் கடன் நடவடிக்கைகள்

  10. ஒரு வணிகர் வணிகத்தை தொடங்குவதன் முக்கிய நோக்கம் __________________ ஈட்டுவதாகும்.

    (a)

    இலாபம்

    (b)

    நட்டம்

    (c)

    செலவுகள்

    (d)

    நற்பெயர்

  11. திருப்பி அடைக்கப்பட வேண்டிய கடன்கள் __________________ ஆகும்.

    (a)

    சொத்துகள்

    (b)

    பொறுப்புகள்

    (c)

    பற்று

    (d)

    வரவு

  12. ஒரேவகையான அனைத்து வணிக நடவடிக்கைகளையும் ஒருமுகப்படுத்துவது ________________ எனப்படும்.

    (a)

    இனம் காணுதல்

    (b)

    பதிவு செய்தல்

    (c)

    வகைப்படுத்துதல்

    (d)

    வரிசைப்படுத்துதல்

  13. பேரேட்டுக் கணக்குகளில் கணக்கியல் துல்லியத் தன்மையை அறிவதற்கு தயாரிக்கப்படுவது _______________  

    (a)

    இருப்பாய்வு

    (b)

    இருப்பு நிலைக்குறிப்பு

    (c)

    இலாப நட்டக் கணக்கு

    (d)

    வியாபாரக் கணக்கு 

  14. வணிகத்தின் நிதிநிலையை அறிய இறுதியில் தயாரிக்கப்படுவது.

    (a)

    இருப்பு நிலைக் குறிப்பு

    (b)

    இருப்பாய்வு

    (c)

    வியாபாரக் கணக்கு 

    (d)

    இலாப நட்டக் கணக்கு

  15. தனித்தன்மை அனுமானமானது நிறுவனத்தை இவரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும்

    (a)

    உரிமையாளர்

    (b)

    வங்கியர்

    (c)

    கடனீந்தோர்

    (d)

    அரசு

  16. குறிப்பிட்ட கணக்காண்டின் அடக்கவிலை 

    (a)

    பொரருத்துகை கருத்து

    (b)

    புராதன அடக்கவிலை கருத்து

    (c)

    முழு வெளிப்பாட்டுக் கருத்து

    (d)

    வருவாய் தீர்வுக்கு கருத்து

  17. இரட்டைத் தன்மைக் கருத்துப்படி ஒவ்வொரு வணிக நடவடிக்கையும்

    (a)

    மூன்று தன்மைகளை கொண்டுள்ளது

    (b)

    ஒரு தன்மையுடையது

    (c)

    இரு தன்மையுடையது

    (d)

    ரொக்கத் தன்மையுடையது

  18. ASP என்பது _______ 

    (a)

    கணக்கியல் தரநிலை வாரியம்

    (b)

    கணக்கியல் தரநிலை வியாபாரம்

    (c)

    கணக்கியல் தரநிலை புத்தகம்

    (d)

    இவற்றில் ஏதும் இல்லை

  19. முதல் - _______ ________

    (a)

    சொத்துக்கள் பொறுப்புகள்

    (b)

    சொத்துக்கள் - பொறுப்புகள்

    (c)

    சொத்துக்கள் கடனீந்தோர்

    (d)

    இவற்றில் ஏதும் இல்லை

  20. சொத்துக்கள் - _______ _________

    (a)

    முதல் - பொறுப்புகள்

    (b)

    முதல் + கடனீந்தோர்

    (c)

    முதல் - கடனீந்தோர்

    (d)

    முதல் + பொறுப்புகள்

  21. "வணிக நடவடிக்கைகள் பதியும் போது இலாபத்தை எதிர்நோக்காமல், ஆனால் அனைத்து எதிர்பார்க்கும் நட்டங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்".இது ______ ஆகும்.

    (a)

    முக்கிய தன்மை மரபு

    (b)

    முழு வெளிப்படுத்தல் மரபு

    (c)

    முன்னெச்சரிக்கை மரபு

    (d)

    நிலைத்தன்மை மரபு

  22. இரட்டைத் தன்மைக் கருத்து _________________  க்கு அடிப்படையாக அமைந்துள்ளது.

    (a)

    குறிப்பேட்டு

    (b)

    பேரேட்டு

    (c)

    ஒற்றைப் பதிவு முறை

    (d)

    இரட்டைப் பதிவு முறை

  23. பொருத்துகை கருத்தின்படி ஒப்பிடப்படும் இனங்கள்  _______________ 

    (a)

    அடக்கம் மற்றும் ஈட்டிய வருவாய்

    (b)

    அடக்கம் மற்றும் ஈட்டிய இலாபம்

    (c)

    அடக்கம் மற்றும் ஈட்டிய நட்டம்

    (d)

    அடக்கம் மற்றும் ஈட்டிய செலவு

  24. வணிக நடவடிக்கைகளில் _________________ நடவடிக்கைகள் மட்டுமே கணக்கியலில் பதியப்படும்.

    (a)

    அறிவியல் சார்புடைய

    (b)

    அன்பு சார்புடைய 

    (c)

    நிதிச் சார்புடைய

    (d)

    பொருளியல் சார்புடைய

  25. ஈட்டிய ஆதாயத்தைக் குறிப்பது _________________ 

    (a)

    வருவாய்

    (b)

    கொள்முதல்

    (c)

    விற்பனை

    (d)

    இலாபம்

  26. ஒரு நடவடிக்கையின் பெறுதல் தன்மை அழைக்கப்படுவது

    (a)

    பற்றுத்தன்மை

    (b)

    வரவப்புதன்மை

    (c)

    ரொக்கத்தன்மை

    (d)

    இவற்றில் ஏதும் இல்லை

  27. ஒரு நடவடிக்கையின் செலுத்தல் தன்மை அழைக்கப்படுகிறது.

    (a)

    பற்றுத்தன்மை

    (b)

    வரவுத்தன்மை

    (c)

    ரொக்கத்தன்மை

    (d)

    இவற்றில் ஏதும் இல்லை

  28. நற்பெயர் எடுத்துக்காட்டாக இருப்பது

    (a)

    பெயரளவுக் கணக்கிற்கு

    (b)

    ஆள்சார் கணக்கிற்கு

    (c)

    புலனாகும் சொத்து கணக்கிற்கு

    (d)

    புலனாக சொத்து கணக்கிற்கு

  29. கழிவு பெற்றது எடுத்துக்காட்டாக விளங்குவது.

    (a)

    சொத்துக் கணக்கிற்கு

    (b)

    ஆள்சார் கணக்கிற்கு

    (c)

    பெயரளவு கணக்கிற்கு

    (d)

    பிரதிநிதித்துவ கணக்கிற்கு

  30. கொடுப்பதா வேண்டிய வாடகை கணக்கு எடுத்துகாட்டாக விளங்குவது

    (a)

    பெயரளவு கணக்கிற்கு

    (b)

    சொத்துக் கணக்கிற்கு

    (c)

    ஆள்சார் கணக்கு

    (d)

    பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கிற்கு

  31. எடுப்புக் கணக்கு வகைப்படுத்தப்பட்டுள்ளது

    (a)

    சொத்து கணக்கு

    (b)

    ஆள்சார் கணக்கு

    (c)

    பெயரளவு கணக்கு

    (d)

    பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு

  32. உரிமையாளருக்கு சேர வேண்டிய தொகை

    (a)

    சொத்துக்கள் 

    (b)

    பொறுப்புகள்

    (c)

    முதல்

    (d)

    கடன்

  33. அலுவலகச் செலவுகளுக்கு உரிமையாளர் வங்கியிலிருந்து ரொக்கம் எடுத்ததற்காக வரவு வைக்க வேண்டிய கணக்கு.

    (a)

    எடுப்பு க/கு

    (b)

    அலுவலகச் செலவுகள் க/கு

    (c)

    ரொக்க க/கு

    (d)

    வங்கி க/கு

  34. ஒரு தொழிலின் பொறுப்புகள் மதிப்பு ரூ.60,00/- அதன் உரிமையாளரின் முதல் ரூ.1,40,000 எனில் சொத்துக்களின் மதிப்பு

    (a)

    ரூ.1,40,000

    (b)

    ரூ.80,000

    (c)

    ரூ.60,000

    (d)

    ரூ.2,00,000

  35. நடவடிக்கையின் தோற்றம் பெறுவது

    (a)

    குறிப்பேடு

    (b)

    ஆதார ஆவணங்கள்

    (c)

    கணக்கியல் சமன்பாடு

    (d)

    இவற்றில் ஏதும் இல்லை

  36. முருகன் என்பவரிடம் கடனாக அறைக்கலன் வாங்கியதற்கு வரவு வைக்க வேண்டிய கணக்கு.

    (a)

    முருகன் க/கு

    (b)

    அறைக்கலன் க/கு

    (c)

    கொள்முதல் க/கு

    (d)

    ரொக்க க/கு

  37. நடப்பு ஆண்டின் ஆரம்பத்தில் பதியக் கூடிய பதிவு

    (a)

    தோற்றப் பதிவு

    (b)

    குறிப்பிட்டுப் பதிவு

    (c)

    தொடக்க பதிவு

    (d)

    இறுதிப் பதிவு

  38. முரளிக் கணக்கு எடுத்துக்காட்டாக இருப்பது  _________________

    (a)

    ஆள்சார் கணக்கு

    (b)

    சொத்துக் கணக்கு

    (c)

    பெயரளவுக்கு கணக்கு

    (d)

    இவை எதுவுமில்லை

  39. இருப்பாய்வின் உதவியால் தயாரிக்கப்படுவது _______________ 

    (a)

    குறிப்பேட்டுப் பதிவுகள்

    (b)

    பேரேட்டுக் கணக்குகள்

    (c)

    இறுதிக் கணக்குகள்

    (d)

    இலாபநட்டக் கணக்குகள்

  40. நடவடிக்கைகள் தோற்றம் பெறுவது

    (a)

    ஆதார ஆவணங்கள்

    (b)

    குறிப்பேடு

    (c)

    கணக்கியல் சமன்பாடு

    (d)

    கணக்கியல் கருத்துக்கள்

  41. கீழ்கண்டவைகளில் எது சரியானது?

    (a)

    முதல் = சொத்துக்கள் + பொறுப்புகள்

    (b)

    முதல் = சொத்துகள் - பொறுப்புகள் 

    (c)

    சொத்துகள் = பொறுப்புகள் - முதல்

    (d)

    சொத்துக்கள் = பொறுப்புகள்

  42. உரிமையாளருக்குச் சேரவேண்டிய தொகை

    (a)

    சொத்துகள்

    (b)

    பொறுப்புகள்

    (c)

    முதல்

    (d)

    எடுப்புகள்

  43. கணக்கியல் சமன்பாடு எதனுடன் சார்ந்தது?

    (a)

    சொத்துக்களுடன்

    (b)

    பொறுப்புகளுடன்

    (c)

    சொத்துகள் மற்றும் பொறுப்புகளுடன் 

    (d)

    சொத்தகள், பொறுப்புகள் மற்றும் முதல் ஆகியவற்றின்

  44. ஒரு தொழிலின் சொத்துகள் ரூ 3,60,000, முதல் ரூ 2,00,000 பொறுப்புகள் _________________ 

    (a)

    ரூ 1,60,000

    (b)

    ரூ 3,60,000

    (c)

    ரூ 2,00,000

    (d)

    ரூ 5,60,000

  45. பேரேடு ஒரு _________.  

    (a)

    தோற்றப் பதிவு ஏடு 

    (b)

    இறுதிப்  பதிவு ஏடு  

    (c)

    ரொக்க நடவடிக்கைகள் ஏடு 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  46. குறிப்பேட்டிலுள்ள பதிவினை இணைக்கக் கூடிய பேரேட்டுப் பகுதி _______.  

    (a)

    பே.ப.எ.பத்தி    

    (b)

    கு.ப.எ.பத்தி 

    (c)

    விவரப் பத்தி 

    (d)

    குறிப்புப் பத்தி 

  47. பெயரளவுப் கணக்கின் வரவு இருப்பு குறிப்பது _________. 

    (a)

    வரவு/ஆதாயம் 

    (b)

    செலவு / நட்டம் 

    (c)

    சொத்து 

    (d)

    பொறுப்பு 

  48. கணக்கின் இருப்பை அடுத்த காலத்தின் முதல் நாளில் எழுதப்படுவது _________. 

    (a)

    இருப்பு கீ/கொ  

    (b)

    இருப்பு கீ/இ 

    (c)

    இருப்பு மு/தூ  

    (d)

    இருப்பு பி/தூ  

  49. பற்று மொத்தமும் வரவு மொத்தமும் சமமாக இருந்தால் அது ________. 

    (a)

    பற்றிருப்பு 

    (b)

    வரவிருப்பு 

    (c)

    இருப்பு இன்மை 

    (d)

    இருப்பு கூடுதல் 

  50. முந்தைய ஆண்டின் _______ அடுத்த நிதி ஆண்டின் தொடக்க இருப்பு ஆகும். 

    (a)

    தொடக்க இருப்பு 

    (b)

    இறுதி இருப்பு

    (c)

    இலாபங்கள் 

    (d)

    நட்டங்கள் 

  51. நிதி ஆண்டின் ஆரம்பத்தில் கணக்கு ஏடுகளில் பதியக் கூடிய பதிவுக்கு ______ என்று பெயர். 

    (a)

    சரிக்கட்டுப்பதிவு 

    (b)

    இறுதிப் பதிவு 

    (c)

    தொடக்கப் பதிவு 

    (d)

    குறிப்பேடு 

  52. ________ என்பது ஒரு இன்றியமையாத கணக்கு ஏடு. 

    (a)

    குறிப்பேடு 

    (b)

    பேரேடு 

    (c)

    தொடக்கப் பதிவு 

    (d)

    சரிக்கட்டுப் பதிவு 

  53. ஆள்சார் கணக்குகளும் சொத்துக் கணக்குகளும்

    (a)

    முடிக்கப்படுகின்றன

    (b)

    இருப்புக் கட்டப்படுகின்றன

    (c)

    முடிக்கப்பட்டு மாற்றப்படுகின்றன

    (d)

    துவக்கப்படுகின்றன

  54. ஒரு கணக்கின் பற்றுப் பக்கத்தில் எடுத்தெழுதப்படும் கணக்கு, குறிப்பேட்டில்

    (a)

    பற்று வைக்கப்பட்ட கணக்கு

    (b)

    வரவு வைக்கப்பட்ட கணக்கு

    (c)

    இரண்டும்

    (d)

    இவற்றில் ஏதும் இல்லை

  55. சொத்துக் கணக்குகள் எப்பொழுதும் காண்பிப்பது.

    (a)

    பற்றிருப்புகள்

    (b)

    வரவிருப்புகள்

    (c)

    பற்று/வரவு இருப்புகள்

    (d)

    இருப்புகள் இன்மை

  56. குறிப்பேட்டிலிருந்து பதிவுகளை பேரேட்டில் மாற்றி எழுதும் முறைக்கு _______ என்று பெயர்.

    (a)

    கூட்டுதல்

    (b)

    குறிப்பேட்டில் பதிதல்

    (c)

    இருப்பு கட்டுதல்

    (d)

    எடுத்தெழுதுதல்

  57. கணக்கு இருப்புக் கடும் பொழுது இருப்புக் கடும் நாளில் ______ என எழுதப்படுகின்றது.

    (a)

    இருப்பு பி/தூ

    (b)

    இருப்பு மு/தூ

    (c)

    இருப்பு கீ/இ

    (d)

    இருப்பு கீ/கொ

  58. _____ விதிகளின் படி, இருப்பாய்வு கட்டாயம் சமன்பட வேண்டும்.

    (a)

    ஒற்றைப்பதிவு முறை

    (b)

     இரட்டைப் பதிவு முறை

    (c)

    கணக்கியல்

    (d)

    இவை எதுவுமில்லை

  59. பிழைகள் கண்டுபிடிக்கப்பட்டு, திருத்தப்பட்டவுடன் _____ தானாகவே முடிவுறும்.

    (a)

    இருப்பாய்வு

    (b)

    பொறுப்புகள் கணக்கு

    (c)

    அனாமத்துக் கணக்கு

    (d)

    சொத்துகள் கணக்கு

  60. பிழைகளைத் திருத்தப் பதியும் குறிப்பேட்டுப் பதிவுகள் _____ எனபப்டும்.

    (a)

    திருத்தப் பதிவுகள்

    (b)

    சரிக்கட்டுப் பதிவுகள்

    (c)

     விதிப்பிழைகள்

    (d)

    இவை எதுவுமில்லை

  61. பேரேட்டிலுள்ள அனைத்துக் கணக்குகளின் பற்று இருப்புகள் மற்றும் வரவு இருப்புகளைக் காட்டும் அறிக்கை _____ எனப்படும்.

    (a)

    நிதிநிலையியல்

    (b)

    கணக்கியல்

    (c)

    இருப்புநிலைக் குறிப்பு

    (d)

    இருப்பாய்வு

  62. அனாமத்துக் கணக்கு பதியப்படும் இடம் _____ 

    (a)

    வியாபாரக் கணக்கு

    (b)

    இலாப, நட்டக் கணக்கு

    (c)

    இருப்புநிலைக் குறிப்பு

    (d)

    இருப்பாய்வு

  63. அனாமத்துக் கணக்கின் வரவு இருப்பு தோன்றுவது _____ 

    (a)

    இலாப நட்டக் கணக்கு வரவுப் பக்கத்தில்

    (b)

    இருப்பு நிலைக் குறிப்பு பொறுப்புகள் பக்கத்தில்

    (c)

    இருப்பு நிலைக் குறிப்பு சொத்துகள் பக்கத்தில்

    (d)

    இவை எதுவுமில்லை

  64. உரிமையாளர் தன்னுடைய குடும்பப் பயனுக்காக எடுத்துக் கொண்ட சரக்கை, வரவு வைக்க வேண்டியது.

    (a)

    எடுப்புக் கணக்கில்

    (b)

    விற்பனைக் கணக்கில்

    (c)

    கொள்முதல் கணக்கில்

    (d)

    முதல் கணக்கில்

  65. அனாமத்து கணக்கின் பற்று இருப்பு தோன்றுமிடம்

    (a)

    இலாப நட்டக் கணக்கு பற்று பக்கம்

    (b)

    இலாப நட்டக் கணக்கு வரவு பக்கம்

    (c)

    இருப்பு நிலைக் குறிப்பு சொத்து பக்கம்

    (d)

    இருப்பு நிலைக் குறிப்பு பொறுப்பு பக்கம்

  66. இருப்பாய்வு தயாரிப்பதில் ________ முறையே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

    (a)

    இருப்பு முறை

    (b)

    மொத்தக் தொகை முறை

    (c)

    மொத்தத் தொகை மற்றும் இருப்பு முறை

    (d)

    அ மற்றும் ஆ

  67. எந்திரம் வாங்கியது பதிவு செய்யப்படுவது

    (a)

    விற்பனை ஏடு 

    (b)

    கொள்முதல் ஏடு

    (c)

    முறையான குறிப்பேடு 

    (d)

    எந்திரம் கணக்கு

  68. துணை ஏடுகளில் பதியமுடியாத நடவடிக்கைகளை பதிவு செய்யும் ஏடு

    (a)

    முறையான குறிப்பேடு

    (b)

    ரொக்க ஏடு

    (c)

    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு ஏடு 

    (d)

    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு ஏடு

  69. கணக்கேடுகளில் செய்யப்பட்டுள்ள தவறுகளைத் திருத்துவதற்காகச் செய்யப்படும் பதிவுகள்______.

    (a)

    சரிக்கட்டுப் பதிவுகள்

    (b)

    திருத்தப் பதிவுகள்

    (c)

    மாற்றுப் பதிவுகள்

    (d)

    குறிப்பேட்டுப் பதிவுகள்

  70. மறுப்புச் சான்றிதழை வழங்குபவர்

    (a)

    பொதுக்குறிப்பர்

    (b)

    எழுதுநர் 

    (c)

    எழுதுப்பெறுநர் 

    (d)

    செலுத்தப் பெறுநர்

  71. மாற்றுச்சீட்டில் குறிக்கப்பட்டுள்ள தொகையைப் பெறுபவர் ______.

    (a)

    எழுதுப் பெறுநர்

    (b)

    எழுதுநர்

    (c)

    செலுத்தப் பெறுநர்

    (d)

    உரிமையர்

  72. எழுதப்பெறுநரின் அவமதிப்பிற்கான விளக்கத்தினை வழக்கறிஞர் பதிவுசெய்தல் மாற்றுச்சீட்டை _________ செய்தல் எனப்படும்.

    (a)

    குறிக்கை 

    (b)

    எடுத்தெழுதல்

    (c)

    மேலெழுதல்

    (d)

    அவமதிப்பு

  73. ______ அவமதிப்பு விற்பனையாளரால் வாங்குபவருக்கு, சரக்குகள் பட்டியல் விலையிலிருந்து குறைத்து வழங்குவதாகும்.

    (a)

    வியாபாரத் தள்ளுபடி

    (b)

    ரொக்க தள்ளுபடி

    (c)

    கடன் தள்ளுபடி

    (d)

    இவை ஏதுவுமில்லை

  74. கொள்முதல் ஏட்டில் பதிவு செய்யப்படுவது

    (a)

    மொத்த கொள்முதல்

    (b)

    ரொக்கக் கொள்முதல் மட்டும்

    (c)

    கடன் கொள்முதல் மட்டும்

    (d)

    இவற்றில் ஏதும் இல்லை

  75. இயந்திரம் வாங்கியது பதிவு செய்யப்படுவது

    (a)

    விற்பனை ஏடு

    (b)

    கொள்முதல் ஏடு

    (c)

    கொள்முதல் திருப்ப எடு

    (d)

    முறையான குறிப்பேடு

  76. வாடிக்கையாளர் திருப்பிய சரக்கு பதிவு செய்யப்படுவது

    (a)

    விற்பனை ஏடு

    (b)

    விற்பனை திருப்ப ஏடு

    (c)

    கொள்முதல் ஏடு

    (d)

    கொள்முதல் திருப்ப ஏடு

  77. சனவரி 1, 2018 அன்று சுரேஷ், கணேஷ் மீது ஒரு மூன்று மாத கால மாற்றுச் சீட்டினை எழுதினார்.

    (a)

    மார்ச் 31, 2018

    (b)

    ஏப்ரல் 1, 2018

    (c)

    ஏப்ரல் 4, 2018

    (d)

    ஏப்ரல் 4, 2018

  78. வியாபாரத் தள்ளுபடியின் நோக்கம்

    (a)

    விற்பனையை அதிகப்படுத்துவது

    (b)

    குறைந்த விலையில் பொருட்களை விற்பது

    (c)

    ரொக்க விற்பனையை ஊக்கப்படுத்துதல்

    (d)

    மேற்கூறிய அனைத்தும்

  79. ஜூலை 12, 2015 ஆண்டு சுபா, மஞ்சுளா மீது ஒரு மாத கால சீட்டின் எழுதினார். அம்மாற்றுச்சீட்டின் தவணை நாள்

    (a)

    ஆகஸ்ட் 12, 2015

    (b)

    ஆகஸ்ட் 15, 2015

    (c)

    ஆகஸ்ட் 16, 2015

    (d)

    ஆகஸ்ட் 14, 2015

  80. மாற்றுச்சீட்டின் மீது வழங்கப்படும் சலுகை நாட்கள்

    (a)

    2

    (b)

    3

    (c)

    4

    (d)

    5

  81. ரொக்கத்திற்கு சரக்கு வாங்குதல் பதியப்படும் ஏடு 

    (a)

    ரொக்க ஏடு 

    (b)

    கொள்முதல் ஏடு 

    (c)

    முதற்குறிப்பேடு 

    (d)

    பேரேடு 

  82. ரொக்க ஏட்டின் ரொக்கப் பத்தி இருப்பு காட்டுவது 

    (a)

    நிகர வருமானம் 

    (b)

    கையிருப்பு ரொக்கம் 

    (c)

    மொத்த லாபம் 

    (d)

    நிகர லாபம் 

  83. முப்பத்தி ரொக்க ஏட்டில் அலுவலகத் தேவைக்காக வங்கியிலிருந்து பணம் எடுத்தது தோன்றுவது 

    (a)

    ரொக்க ஏட்டின் பற்றுப் பக்கத்தில் மட்டும் 

    (b)

    ரொக்க ஏட்டின் வரவுப் பக்கத்தில் மட்டும் 

    (c)

    ரொக்க ஏட்டின் இரு பக்கங்களிலும் 

    (d)

    இவை எதுவுமில்லை 

  84. வசூலுக்கனுப்பட்ட காசோலை அவமதிக்கப்பட்டால், பற்று செய்யப்படும் கணக்கு 

    (a)

    சரக்கீந்தோர் க/கு 

    (b)

    வங்கி க/கு 

    (c)

    வாடிக்கையாளர் க/கு 

    (d)

    உரிமையர் க/கு 

  85. நாம் வழங்கிய காசோலை அவமதிக்கப்பட்டால் வரவு செய்யப்படும் கணக்கு 

    (a)

    சரக்கீந்தோர் க/கு 

    (b)

    வாடிக்கையாளர் க/கு 

    (c)

    உரிமையர் க/கு 

    (d)

    வங்கி க/கு 

  86. ஜனவரி 1,2018 அன்று சில்லறைக் காசாளரிடம் ரூ.1,000 தரப்பட்டது. ஜனவரி மாதம் அவர் ரூ.860 செலவழித்தார் பிப்ரவரி 1அன்று அவர் முன் பண மீட்புக்காக பெறும் காசோலையின் தொகை ரூ.________ .

    (a)

    1000

    (b)

    860

    (c)

    1860

    (d)

    140

  87. சில்லறை ரொக்க ஏட்டினைப் பராமரிப்பவர் _________என அழைக்கப்படுகிறார்.

    (a)

    உரிமையாளர் 

    (b)

    வங்கியர் 

    (c)

    சில்லறைக் காசாளர் 

    (d)

    அலுவலகர் 

  88. நடவடிக்கையில்  இரு தன்மைகளும் ரொக்க ஏட்டிலேயே பதியப்படுவது _________எனப்படும்.

    (a)

    உரிய குறிப்பேடு 

    (b)

    முதன்மை ஏடு 

    (c)

    துணை ஏடு 

    (d)

    எதிர்ப்பதிவு 

  89. சில்லறை ரொக்க ஏடு _________வகைப்படும் 

    (a)

    இரண்டு 

    (b)

    மூன்று 

    (c)

    நான்கு 

    (d)

    ஐந்து 

  90. பெறப்பட்ட காசோலை அன்றே வங்கியில் செலுத்தப்பட்டால் பற்று வைக்க வேண்டிய கணக்கு 

    (a)

    வங்கி க/கு 

    (b)

    ரொக்க க/கு 

    (c)

    வாடிக்கையாளர் க/கு 

    (d)

    இவற்றில் ஏதும் இல்லை 

  91. வங்கிச் சரிக்கட்டும் பட்டியலை தயாரிப்பவர்     

    (a)

    வங்கி 

    (b)

    வணிகத்தின் கடனீ ந்தோர்    

    (c)

    வங்கியின் வாடிக்கையாளர்   

    (d)

    பணியாளர்  

  92. ரொக்க ஏட்டின் பற்றிருப்பு என்பது       

    (a)

    செல்லேட்டின் மேல்வரைப் பற்று       

    (b)

    செல்லேட்டின்படி வரவு இருப்பு 

    (c)

    ரொக்க ஏட்டின் படி மேல்வரைப் பற்று      

    (d)

    இவை ஏதுவுமில்லை 

  93. ரொக்க ஏட்டின் இருப்பு ஆரம்ப நிலையில் இருக்கும் பொழுது , வங்கி அளிக்கும் வட்டி ________.    

    (a)

    கழிக்கப்பட வேண்டும் 

    (b)

    கூட்டப்படவேண்டும்  

    (c)

    இரண்டும் இல்லை 

  94. ரொக்க ஏட்டின்படி இருப்பு ஆரம்ப நிலையாக  இருக்கும் பொழுது  , வங்கி கட்டணம்   

    (a)

    கழிக்கப்பட வேண்டும்    

    (b)

    கூட்டப்படவேண்டும்  

    (c)

    சரிகட்ட வேண்டும் 

    (d)

    இவற்றில் ஏதும் இல்லை 

  95. ரொக்க  ஏட்டின்படி  இருப்பு ஆரம்ப  நிலையாக  இருக்கும் பொழுது  வங்கி நேரடியாக  செலுத்துபவை    

    (a)

    சரிகட்ட வேண்டும் 

    (b)

    கூட்டப்பட வேண்டும்   

    (c)

    கழிக்கப்பட வேண்டும்   

    (d)

    இவற்றில் ஏதும் இல்லை 

  96. ரொக்க  ஏட்டின்படி இருப்பு ஆரம்ப  நிலையாக  இருக்கும் பொழுது, வங்கியில்  நேரடியாக  செலுத்துபவை      

    (a)

    கூட்டப்பட வேண்டும்   

    (b)

    கழிக்கப்பட வேண்டும்    

    (c)

    சரிகட்ட வேண்டும் 

    (d)

    இவற்றில் ஏதும் இல்லை 

  97. வங்கி அறிக்கையின்படி  இருப்பு ரூ 7,500 செலுத்திய காசோலை  இன்னும் வரவு வைக்கப்படாதது  ரூ,1,500 ரொக்க ஏட்டின்  வங்கி பத்தியின் இருப்பு       

    (a)

    6,000 மேல்வரைப்பற்று    

    (b)

    9,000 மேல்வரைப்பற்று

    (c)

    9,000 சாதக இருப்பு 

    (d)

    6,000 சாதக இருப்பு 

  98. ரொக்க ஏட்டின் படி வங்கியிருப்பு  ரூ 12,000 காசோலை விடுத்தும் வங்கியில் முன்னிலைப்படுத்தாதவை  ரூ 2,000 எனில் வங்கி  அறிக்கையின்படி இருப்பு.        

    (a)

    14,000 வரவு இருப்பு 

    (b)

    14,000 பற்றிருப்பு    

    (c)

    10,000 பற்றிருப்பு    

    (d)

    10,000 வரவிருப்பு  

  99. ரொக்க ஏட்டின் வங்கிப்பத்தியின் வரவிருப்பு என்பது    

    (a)

    வங்கி அறிக்கையின்படி  பற்றிருப்பு     

    (b)

    வங்கி அறிக்கையின்படி  வரவிருப்பு  

    (c)

    ரொக்க ஏட்டின்படி சாதக இருப்பு  

    (d)

    மேற்கூறிய ஏதுமில்லை  

  100. விதிகளைத் தெரியாமலோ அல்லது மீறியோ தவறாகப் பதிவு செய்வதால் ஏற்படும் பிழைகள் _________________ எனப்படும்.

    (a)

    விதிப்பிழைகள்

    (b)

    செய்பிழைகள்

    (c)

    பிழைகள்

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  101. கணக்கின் ஒரு பக்கத்தை பாதிக்கும் பிழை ________________  

    (a)

    ஒரு கணக்கைப் பாதிக்கும் பிழை

    (b)

    இரண்டு கணக்குகளையும் பாதிக்கும் பிழைகள்

    (c)

    இவை இரண்டும்

    (d)

    இரண்டும் இல்லை 

  102. கணக்காளர் நடவடிக்கையை அல்லது ஏதேனும் ஒரு தொகையை கணக்கு ஏடுகளில் பதிவு செய்யத் தவறுவதே ________________ எனப்படும். 

    (a)

    விடுபிழை 

    (b)

    பகுதி விடுபிழை

    (c)

    முழுவிடுபிழை

    (d)

    இருமுறை பதிந்தபிழை

  103. ______________ கணக்காளரின் ஒருமுகப்படுத்தல் இல்லாததாலும், கவனமின்மையாலும் நிகழ்வதாகும். 

    (a)

    பகுதி விடுபிழை

    (b)

    செய்பிழை

    (c)

    விதிப்பிழை

    (d)

    விடுபிழை

  104. இருப்பக்கத்தையும் பாதிக்கும் பிழைகளை  _________________ வெளிப்படுத்துவதில்லை.

    (a)

    குறிப்பேடு

    (b)

    பேரேடு

    (c)

    இருப்பாய்வு

    (d)

    இறுதிக்கணக்குகள்

  105. பிழைகளைக் கண்டறிந்து அவற்றைத் திருத்தும் வரை _______________ ஏடுகளில் இருக்கும். 

    (a)

    முதல் கணக்கு

    (b)

    பேரேட்டுக் கணக்கு

    (c)

    அனாமத்துக் கணக்கு

    (d)

    இவை எதுவுமில்லை

  106. 'தேய்மானம் என்பது எக்காரணத்தினாலும் ஒரு சொத்தின் மதிப்பிலுண்டாகும் படிப்படியான நிலையான குறைவே ஆகும்' என்று கூறியவர் யார்?

    (a)

    கார்டர் 

    (b)

    ஸ்பைசர் 

    (c)

    பெக்லர் 

    (d)

    கோஹ்லர் 

  107. நற்பெயர், புனையுரிமை மற்றும் தொடக்கச் செலவுகள் போன்ற புலனாகாச் சொத்துக்களின் மதிப்பு குறைதலைக் குறிப்பது________.

    (a)

    வெறுமையாதல் 

    (b)

    போக்கெழுதுதல் 

    (c)

    வழக்கொழிவு 

    (d)

    இவை எதுவுமில்லை 

  108. சுரங்கங்கள், எண்ணெய் கிணறுகள் போன்ற இயற்க்கை வளங்களின் மதிப்புக் குறைதல் ________எனப்படும்.

    (a)

    போக்கெழுதல் 

    (b)

    வழக்கொழிவு 

    (c)

    வெறுமையாதல் 

    (d)

    இவை எதுவுமில்லை 

  109. வருமான வரி விதிக்கும் அதிகாரிகள் ஏற்கும் முறை _________.

    (a)

    நேர்க்கோட்டு முறை 

    (b)

    ஆண்டுத் தொகை முறை 

    (c)

    குறைந்து செல் மதிப்பு முறை 

    (d)

    இவை எதுவுமில்லை 

  110. மறுமதிப்பீடு தேய்மான முறை ________சொத்துக்களுக்கு பயன்படுகிறது?

    (a)

    பொறிவகை 

    (b)

    இயந்திரம் 

    (c)

    விடுகருவிகள் 

    (d)

    இவை எதுவுமில்லை 

  111. ஒரு நிலைச் சொத்தினை விற்பதனால் ஏற்பட்ட இலாபம் _______பக்கத்தில் பதியப்படுகிறது.

    (a)

    சொத்துக் கணக்கின் பற்றுப் 

    (b)

    சொத்துக் கணக்கின் வரவுப் 

    (c)

    இரு பக்கங்களிலும் 

    (d)

    இவை எதுவுமில்லை 

  112. ஒரு பொறிவகையின் மதிப்பு ரூ.10,000 பயனளிப்புக் காலம் ஆண்டுகள், ஏறி மதிப்பு ரூ.1000 என்றால் நேர்கோட்டு முறையின் தேய்மான விகிதம்  _______ஆகும்.

    (a)

    9.5%

    (b)

    9%

    (c)

    10%

    (d)

    12%

  113. ஒரு நிலைச் சொத்தின் மதிப்பு ரூ. 20,000 ஆகும். அதன் மீது குறைந்து செல் இருப்பு முறையில் 10% தேய்மானம் நீக்கினால் மூன்றாவது வருடக் கடைசியில் நிலைச் சொத்தின் மதிப்பு _________ஆகும்.

    (a)

    ரூ. 7290

    (b)

    ரூ. 14580

    (c)

    ரூ. 1620

    (d)

    ரூ. 12890

  114. இயந்திரத்தின் விற்பனை  விலை ரூ.4,00,000 விற்றதால் ஏற்பட்ட இலாபம் ரூ.36,000 எனில், இயந்திரத்தின் எட்டு மதிப்பு ________.

    (a)

    ரூ. 3,64,000

    (b)

    ரூ. 4,36,000

    (c)

    ரூ. 36,000

    (d)

    ரூ. 2,18,000

  115. தேய்மானத் தொகை ரூ.900. சொத்தின் அடக்கவிலை ரூ.10,000 எனில்,தேய்மான விகிதம் ________.

    (a)

    9%

    (b)

    8%

    (c)

    7%

    (d)

    6%

  116. ஓராண்டிற்கு மேல் தொழிலுக்கு பயன்தரும் நடவடிக்கை

    (a)

    முதலின நடவடிக்கை

    (b)

    வருவாயின நடவடிக்கை

    (c)

    'அ' மற்றும் 'ஆ'

    (d)

    இவை எதுவுமில்லை

  117. பழைய சீருந்தை புதுப்பிக்கச் செலவு செய்தது_______________

    (a)

    நீள்பயன் வருவாயினச் செலவு 

    (b)

    முதலினச் செலவு 

    (c)

    வருவாயினச் செலவு

    (d)

    முதலின வரவு

  118. கோகுல் தன் தொழிலில் ரூ 50,000 கூடுதல் முதல் போட்டது.

    (a)

    முதலின வரவு 

    (b)

    வருவாயின வரவு

    (c)

    முதலினச் செலவு 

    (d)

    வருவாயினச் செலவு 

  119. வருவாயின வரவுகள் தொழிலில் ________________ கொண்டவை.

    (a)

    அடிக்கடி நிகழும் தன்மை

    (b)

    அடிக்கடி நிகழாத் தன்மை

    (c)

    நிலையானது

    (d)

    இவை எதுவுமில்லை

  120. வெங்கடேசன் விற்பனை செய்வதற்காக ரூ 80,000 மதிப்புள்ள சரக்கை கொள்முதல் செய்தது ஒரு _______________ 

    (a)

    முதலினச் செலவு

    (b)

    வருவாயினச் செலவு

    (c)

    நீள்பயன் வருவாயினச் செலவு

    (d)

    இவை எதுவுமில்லை

  121. விளம்பரத்திற்கு அதிகமாக செலவு செய்தது, ஒரு__________________ 

    (a)

    முதலினச் செலவு

    (b)

    வருவாயினச் செலவு

    (c)

    நீள்பயன் வருவாயினச் செலவு 

    (d)

    முதலின வரவு

  122. ரூ 8,000 மதிப்புள்ள ஒரு பொறிவகை ரூ 8,500 க்கு விற்பனை செய்தததில் முதலின வரவு. 

    (a)

    ரூ 8,000

    (b)

    ரூ 8,500

    (c)

    ரூ 500

    (d)

    ரூ 16,500

  123. வருவாயினச் செலவு பயன்தருவது_________________ 

    (a)

    அடுத்த ஆண்டுக்கு

    (b)

    முந்தைய ஆண்டுக்கு

    (c)

    நடப்பு ஆண்டுக்கு

    (d)

    இவை எதுவுமில்லை

  124. ரூ 1,00,000 மதிப்புள்ள ஒரு சொத்து ரூ 85,000 க்கு விற்கப்பட்டால், முதலின நட்டம்_______________ 

    (a)

    ரூ 85,000

    (b)

    ரூ 1,00,000

    (c)

    ரூ 15,000

    (d)

    ரூ 1,85,000

  125. தொழிலில் கிடைக்கப் பெற்ற நிகர நட்டம், ஒரு 

    (a)

    வருவாயின நட்டம்

    (b)

    முதலின நட்டம்

    (c)

    முதலின வரவு

    (d)

    வருவாயின வரவு

  126.  ______ அறிக்கை ஒரு கணக்கியல் காலத்திற்கு எவ்வாறு இலாபம் அல்லது நட்டம் கணக்கிடப்படுகிறது என்பதைக் காட்டுகின்றது          

    (a)

    வருமான 

    (b)

    இலாப நட்ட  

    (c)

    செலவின 

    (d)

    இவை ஏதுவுமில்லை 

  127. கூலி என்பது உதாரணமாக இருப்பது.________   

    (a)

    முதலினச் செலவிற்கு  

    (b)

    மறைமுகச் செலவிற்கு 

    (c)

    நேரடி செலவிற்கு

    (d)

    இவை எதுவுமில்லை 

  128. நிலைச் சொத்துகள்_______ கொண்டது.   

    (a)

    குறுகிய வாழ்நாள் 

    (b)

    நீண்ட வாழ்நாள் 

    (c)

    வாழ்நாள் இன்மை 

    (d)

    நிலையான வாழ்நாள் 

  129. கையிருப்பு ரொக்கம் உதாரணமாக இருப்பது      

    (a)

    நடப்புச் சொத்துக்கு  

    (b)

    நிலைச் சொத்துக்கு  

    (c)

    நடப்புப் பொறுப்புக்கு 

    (d)

    நிலை பொறுப்புக்கு 

  130. நடப்புப் பொறுப்புகள் இருப்பு நிலைக் குறிப்பில்   

    (a)

    இடம் பெறாது 

    (b)

    பொறுப்புகள் பக்கத்தில் பதிய வேண்டும் 

    (c)

    சொத்துக்கள் பக்கத்தில் பதிய வேண்டும் 

    (d)

    இவை எதுவுமில்லை 

  131. இலாப நட்டக் கணக்கு வெளிப்படுத்துவது ________. 

    (a)

    நிறுவனத்தின் நிதிநிலை 

    (b)

    நிகர இலாபம் அல்லது நிகர நட்டம் 

    (c)

    மொத்த இலாபம் அல்லது மொத்த நட்டம் 

    (d)

    இவை எதுவுமில்லை 

  132. கொடுபட வேண்டிய வாடகை ஒரு ________.

    (a)

    பொறுப்பு 

    (b)

    சொத்து 

    (c)

    வருமானம் 

    (d)

    நட்டம் 

  133. மொத்த இலாபம் மாற்றப்படும் கணக்கு _______. 

    (a)

    இலாப நட்டக்கணக்கில் 

    (b)

    வியாபாரக் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பில் 

    (c)

    முதல் கணக்கில்

    (d)

    மேற்கண்ட எதுவுமில்லை 

  134. நிறுவன உரிமையாளருக்காகச் செலுத்தப்பட்ட வருமான வரி எதிலிருந்து கழிக்கப்படுகிறது? 

    (a)

    இலாபத்திலிருந்து 

    (b)

    முதலிலிருந்து 

    (c)

    எடுப்பிலிருந்து 

    (d)

    கை ரொக்கத்திலிருந்து 

  135. பொதுவாக,தேய்மானம் ______ மீது ஒரு குறிப்பிட்ட சதவீதம் நீக்கப்படுகிறது.  

    (a)

    நடப்புச் சொத்து 

    (b)

    புலனாகாச் சொத்து 

    (c)

    நிலைச் சொத்து 

    (d)

    கற்பனைச் சொத்து 

  136. பெற வேண்டிய பங்காதாயம் இருப்பு நிலைக்குறிப்பில் எங்குக் காட்டப்பட வேண்டும்? 

    (a)

    பற்றுப் பக்கத்தில் 

    (b)

    பொறுப்புக்கள் பக்கத்தில் 

    (c)

    சொத்துக்கள் பக்கத்தில் 

    (d)

    இவை எதுவுமில்லை 

  137. 1.4.2013 இருப்பாய்வில் வங்கிக்கடன் ரூ 5,00,000 வங்கி வட்டி வீதம் ஆண்டுக்கு 12% வட்டி செலுத்தியது ரூ 30,000.31.3.2014 அன்று நிலுவையில் உள்ள வட்டி ________.   

    (a)

    ரூ 30,000

    (b)

    ரூ 5,00,000

    (c)

    ரூ 4,70,000

    (d)

    ரூ 5,30,000

  138. உரிமையாளரின் முதல் தொகை ரூ 7,00,000 ஆண்டுக்கு 8% முதல் மீதான வட்டி அனுமதிக்கப்பட்டால் முதல் மீதான வட்டி _______. 

    (a)

    ரூ 56,000 

    (b)

    ரூ 5,600

    (c)

    ரூ5,60,000

    (d)

    ரூ 7,00,000

  139. 31.3.2018 அன்றைய இருப்பாய்வின் படி முதலீடுகள் 10% ரூ 5,00,000 முதலீடுகள் மீது பெற்ற வட்டி ரூ 40,000 பெற வேண்டிய வட்டி ________. 

    (a)

    ரூ 5,40,000 

    (b)

    ரூ 40,000

    (c)

    ரூ 10,000

    (d)

    ரூ 5,10,000

  140. இறுதிக் கணக்குகள் தயார் செய்யப்படுகையில், சரிக்கட்டுதலில் தரப்படும் அனைத்து இனங்களும் _______ தோன்றும்.  

    (a)

    ஒரு இடம் 

    (b)

    இரு இடங்களில் 

    (c)

    மூன்று இடங்களில் 

    (d)

    இவை எதுவுமில்லை 

  141. கணினி அமைப்பானது ________ முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது. 

    (a)

    மூன்று 

    (b)

    நான்கு 

    (c)

    ஐந்து 

    (d)

    ஆறு 

  142. _______ கணினி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு கையால் எழுதும் கணக்கியல் முறை,படிப்படியாக மாற்றப்பட்டுள்ளது.  

    (a)

    அறிவியலில் 

    (b)

    வணிகத்தில்

    (c)

    பொருளாதாரத்தில் 

    (d)

    இவை எதுவுமில்லை 

  143. ________ பராமரிக்கப்படுவது யைரல் எழுதும் முறையானாலும் அல்லது கணினிமயக் கணக்கியல் முறையானாலும், கணக்கியளலின் அடிப்படைகள் மாறாது என்பது குறிப்பிடத்தக்கது.   

    (a)

    நிதி அறிக்கைகள் 

    (b)

    இருப்பாய்வு 

    (c)

    கணக்குகள் 

    (d)

    கணக்கேடுகள் 

  144. ______ முறையானது கொள்முதல், விற்பனை நிதி,சரக்கு மற்றும் உற்பத்தி போன்ற அணைத்து வணிக செயற்பாடுகளை தானியங்கியாகவும் மற்றும் ஒருங்கிணைக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.   

    (a)

    கணினிமயக் கணக்கியல்  

    (b)

    வணிகவியல் 

    (c)

    நிதியியல் 

    (d)

    பொருளியல் 

  145. முழுமையான கணினி அமைப்பை உருவாக்குவதற்கான உள்ளீடு சாதனங்கள் மற்றும் வெளியீட்டு சாதனங்களையும் ______ கொண்டிருக்கும். 

    (a)

    வன்பொருள் 

    (b)

    மென்பொருள் 

    (c)

    இரண்டும் 

    (d)

    இவை எதுமில்லை 

  146. ______ பயனாளிக்கும் கணினி அமைப்புக்கும் இடையேயான ஒரு இடைமுகமாக அமைகின்றது. 

    (a)

    நிரலாக்க மென்பொருள் 

    (b)

    பயன்பாட்டு மென்பொருள்  

    (c)

    இயக்கமுறைமை 

    (d)

    செயல்பாட்டு மென்பொருள் 

  147. PASCAL மற்றும் COBOL போன்றவை _______ க்கு உதாரணம். 

    (a)

    இயக்கமுறைமை 

    (b)

    நிரலாக்க மென்பொருள் 

    (c)

    பயன்பாட்டு மென்பொருள்  

    (d)

    இவை எதுவுமில்லை 

  148. கணினி அமைப்பின் மிக முக்கியமான கூறு அதன் ________. 

    (a)

    உரிமையாளர் 

    (b)

    பணியாளர்கள்  

    (c)

    பயனாளிகள் 

    (d)

    இவை எதுவுமில்லை 

  149. ________ என்பது ஒரு குறிப்பிட்டச் செயலை செய்வதற்காகவும்,எதிர்பார்க்கப்படும் வெளியீட்டை பெறுவதற்காகவுமான படிப்படியான தொடர் அறிவுறுத்தலாகும். 

    (a)

    தரவு 

    (b)

    வன்பொருள் 

    (c)

    மென்பொருள் 

    (d)

    செயல்படுமுறை 

  150. ________ குறிமுறைகள்,காசோலை,இடாப்பு போன்ற பல மூல ஆவணங்கள் முதன்மையாக குறிப்பிடப்படுகிறது.  

    (a)

    தொடர்ச்சியான 

    (b)

    தொகுப்புக் 

    (c)

    மதியோட்டு 

    (d)

    இவை அனைத்தும் 

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 வேதியியல் முக்கிய கூடுதல் 1 மதிப்பெண் தேர்வு ( 11th Standard Accountancy Public Exam March 2019 Important Creative One Mark Test )

Write your Comment