11th Public Model Exam March 2019

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 90
    20 x 1 = 20
  1. நிதிநிலைக் கணக்கின் அடிப்படையாக விளங்குவது

    (a)

    சமூகக் கணக்கியல்

    (b)

    காரியதரிசிகளின் கணக்கியல்

    (c)

    மேலாண்மைக் கணக்கியல்

    (d)

    பொறுப்பு கணக்கியல்

  2. கணக்காளரின் பணி __________________ 

    (a)

    ஏடுகளைப் பராமரிப்பவர் 

    (b)

    நிதி ஆலோசகர்

    (c)

    வரி மேலாளர்

    (d)

    மேற்கூறிய அனைத்தும் 

  3. வணிகத்தின் உரிமையாளர் இட்ட முதலிற்கு, வணிக நிறுவனம் கடன்பட்டிருக்கிறது என்பதை கூறும் கருத்து

    (a)

    பண மதிப்பீட்டுக் கருத்து

    (b)

    அடக்கவிலை கருத்து

    (c)

    வணிகத்தனித்தன்மை கருத்து

    (d)

    இரட்டைத்தன்மை கருத்து

  4. கணக்கியல் சமன்பாடு எதனுடன் சார்ந்தது?

    (a)

    சொத்துக்களுடன்

    (b)

    பொறுப்புகளுடன்

    (c)

    சொத்துகள் மற்றும் பொறுப்புகளுடன் 

    (d)

    சொத்தகள், பொறுப்புகள் மற்றும் முதல் ஆகியவற்றின்

  5. ஒரு பேரேட்டுக் கணக்கின் பற்று பத்தியின் மொத்தத்திலிருந்தும் மற்றும் வரவுப் பத்தியின் மொத்தத்திலிருந்தும் நிகர இருப்பினை கண்டறியும் வழிமுறையை இவ்வாறு அழைக்கலாம்.

    (a)

    கூட்டுதல்

    (b)

    எடுத்தெழுதுதல்

    (c)

    குறிப்பேட்டில் பதிதல்

    (d)

    இருப்புக் கட்டுதல்

  6. பெயரளவுப் கணக்கின் வரவு இருப்பு குறிப்பது _________. 

    (a)

    வரவு/ஆதாயம் 

    (b)

    செலவு / நட்டம் 

    (c)

    சொத்து 

    (d)

    பொறுப்பு 

  7. இருப்பாய்வு தயாரிக்கும்போது, கணக்காளர் இருப்பாய்வின் வரவு பக்கத்தில் மொத்த தொகை ரூ. 200 குறைவாக இருப்பதைக் கண்டறிந்தார். அந்த வேவேறுபாட்டினை அவர் என்ன செய்வார்

    (a)

    அனாமத்து கணக்கில் பற்று செய்வார்

    (b)

    அனாமத்து கணக்கில் வரவு செய்வார்

    (c)

    ஏதேனும் பற்று இருப்புக்கொண்ட கணக்கில் சரி செய்வார்

    (d)

    ஏதேனும் வரவு இருப்புக்கொண்ட கணக்கில் சரி செய்வார்

  8. விற்பனை ஏட்டின் மொத்தம் ஒரு குறிப்பிட்ட கால அளவில் வரவு வைக்கப்படுவது

    (a)

    விற்பனை கணக்கு

    (b)

    ரொக்க கணக்கு

    (c)

    கொள்முதல் கணக்கு

    (d)

    உரிய குறிப்பேடு

  9. ஒரு நடவடிக்கையின் பற்று மற்றும் வரவுத் தன்மைகளை ரொக்க ஏட்டில் பதிந்தால், அது

    (a)

    எதிர்ப்பதிவு

    (b)

    கூட்டுப் பதிவு

    (c)

    ஒற்றைப் பதிவு

    (d)

    சாதாரணப் பதிவு

  10. வங்கி அறிக்கை என்பது

    (a)

    ரொக்க ஏட்டின் ரொக்க பத்தியின் நகல்

    (b)

    ரொக்க ஏட்டின் வங்கிப்பத்தியின் நகல்

    (c)

    வங்கி புத்தகத்தில் வாடிக்கையாளர் கணக்கின் நகல்

    (d)

    வணிகத்தால் விடுக்கப்பட்ட காசோலையின் நகல்

  11. அதியமானிடமிருந்து கடனுக்கு அறைகலன் வாங்கியது கொள்முதல் கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது. இப்பிழையைத் திருத்தம் செய்யும்போது, கீழ்கண்டவற்றில் எந்தக் கணக்கைப் பற்று வைக்க வேண்டும்?

    (a)

    கொள்ள்முதல் கணக்கு

    (b)

    அறைகலன் கணக்கு

    (c)

    அதியமான் கணக்கு

    (d)

    இவை ஏதுமில்லை

  12. கணக்கின் ஒரு பக்கத்தை பாதிக்கும் பிழை ________________  

    (a)

    ஒரு கணக்கைப் பாதிக்கும் பிழை

    (b)

    இரண்டு கணக்குகளையும் பாதிக்கும் பிழைகள்

    (c)

    இவை இரண்டும்

    (d)

    இரண்டும் இல்லை 

  13. நிலைச்சொத்து விற்பனை மூலம் பெறப்படும் தொகை எந்த கணக்கில் வரவு வைக்கப்படுகிறது?

    (a)

    இலாப நட்டக் கணக்கு

    (b)

    நிலைச் சொத்து கணக்கு

    (c)

    தேய்மானக் கணக்கு

    (d)

    வங்கி கணக்கு

  14. வங்கி வைப்புகள் மீதான வட்டி

    (a)

    முதலின வரவு

    (b)

    வருவாயின வரவு

    (c)

    முதலினச் செலவு

    (d)

    வருவாயினச் செலவு

  15. வருவாயினச் செலவு பயன்தருவது_________________ 

    (a)

    அடுத்த ஆண்டுக்கு

    (b)

    முந்தைய ஆண்டுக்கு

    (c)

    நடப்பு ஆண்டுக்கு

    (d)

    இவை எதுவுமில்லை

  16. வணிகத்தின் நிகர இலாபம் __________ அதிகரிக்கும்

    (a)

    எடுப்புகளை

    (b)

    பெறுதல்களை

    (c)

    பொறுப்புகளை

    (d)

    முதலினை

  17. இறுதிச் சரக்கிருப்பு மதிப்பிடப்படுவது.

    (a)

    அடக்க விலையில்

    (b)

    சந்தை விலையில்

    (c)

    அடக்க விலை அல்லது சந்தை விலை இதில் எது அதிகமோ அந்த விலையில்

    (d)

    அடக்க விலை அல்லது நிகரத் தீர்வு மதிப்பு இதில் எது குறைவோ அந்த விலையில்

  18. இறுதிக் கணக்குகள் தயார் செய்யப்படுகையில், சரிக்கட்டுதலில் தரப்படும் அனைத்து இனங்களும் _______ தோன்றும்.  

    (a)

    ஒரு இடம் 

    (b)

    இரு இடங்களில் 

    (c)

    மூன்று இடங்களில் 

    (d)

    இவை எதுவுமில்லை 

  19. வெளியீட்டு சாதனத்திற்கான ஒரு உதாரணம்

    (a)

    சுட்டி

    (b)

    அச்சுப்பொறி

    (c)

    ஒளியியல் வருடி

    (d)

    விசைப் பலகை

  20. PASCAL மற்றும் COBOL போன்றவை _______ க்கு உதாரணம். 

    (a)

    இயக்கமுறைமை 

    (b)

    நிரலாக்க மென்பொருள் 

    (c)

    பயன்பாட்டு மென்பொருள்  

    (d)

    இவை எதுவுமில்லை 

  21. 7 x 2 = 14
  22. குறிப்பு வரைக: அ. கொள்முதல், ஆ. கொள்முதல் திருப்பம்

  23. கணக்கியல் தரநிலையின் இலக்கணம் தருக.

  24. கணக்கியல் சமன்பாடு என்றால் என்ன?

  25. விற்பனைத் திருப்ப ஏடு என்றால் என்ன?

  26. இருபத்தி ரொக்க ஏடு என்றால் என்ன

  27. முழு விடு பிழை என்றால் என்ன?

  28. தேய்மானம் என்றால் என்ன?

  29. வருவாயினச் செலவு என்றால் என்ன?

  30. வியாபாரக் கணக்கு தயாரிப்பதன் நோக்கங்கள் யாவை?

  31. கணினிமயக் கணக்கியல் முறை என்றால் என்ன?

  32. 7 x 3 = 21
  33. கணக்கியலின் நோக்கங்கள் யாவை?

  34. கணக்கியல் சமன்பாட்டினை நிரப்புக

     (அ)   சொத்துகள்    =    முதல்    +    பொறுப்புகள் 
       ரூ 1,00,000   =  ரூ 80,000 + ?
     (ஆ)  சொத்துகள்  = முதல்  + பொறுப்புகள் 
      ரூ 2,00,000 = ? + ரூ 40,000
    (இ) சொத்துகள்  = முதல்  + பொறுப்புகள் 
      ? = ரூ 1,60,000 + ரூ 80,000
  35. 2018, ஜனவரி 1 அன்று வினோத் என்பவரின் ஏடுகளில் கீழ்க்கண்ட இருப்புகள் காணப்பட்டன.

    சொத்துகள்: ரூ 
    ரொக்கம் 40,000
    சரக்கிருப்பு 50,000
    ராம் என்பவரிடமிருந்து பெற வேண்டியது 20,000
    இயந்திரம் 40,000
    பொறுப்புகள்:  
    விஜய் என்பவருக்கு செலுத்த வேண்டியது 10,000

    தொடக்கப் பதிவினைத் தந்து வினோத்தின் முதல் கணக்கில் எடுத்து எழுதவும்.

  36. இருப்பாய்வு தயாரிப்பதின் நோக்கங்கள் யாவை?

  37. ரொக்க ஏட்டில் தள்ளுபடியைப் பதிவு செய்வது பற்றி குறிப்பு வரைக

  38. ரோனி என்பவர் வீணா புகைப்பட நிலையத்தின் உரிமையாளர் ஆவார். மார்ச் 31, 2018 ஆம் நாளன்று அவருடைய வணிகத்தின் ரொக்க ஏட்டின் வங்கிப்பத்தி இருப்பு கட்டப்பட்டது. அது
    ரூ12,000 மேல்வரைப்பற்று காட்டியது. வீணா புகைப்பட்பட நிலையத்தின் வங்கி அறிக்கை ரூ 5,000 வரவு இருப்பைக் காட்டியது. பின்வரும் விவரங்களைக் கொண்டு  வங்கிச் சரிக்கட்டும் பட்டியலை தயார் செய்க.
    (அ) வங்கி நேரடியாக வசூலித்த பங்காதாயம் ரூ 3,000 ஆனால், இது குறித்து ரொக்க  ஏட்டில் பதியப்படவில்லை
    (ஆ) 2018 மார்ச் 27 அன்று விடுத்த ரூ 9,000 மதிப்புள்ளள்ள காசோலை . இதில் ரூ 7,000 மதிப்புள்ள காசோலை  2018 மார்ச் 31-ஆம் நாள் வரை செலுத்துகைக்கு முன்னிலைப் படுத்தப்படவில்லை.
    (இ) ரொக்க  ஏட்டின் பற்றிருப்பு ரூ 4,100 வரவிருப்பாக எடுத்தெழுதப்பட்டது.
    (ஈ) வங்கியால் பற்று வைக்கப்பட்ட காசோலை  புத்தகக் கட்டணம் ரூ.200 ரொக்க  ஏட்டில் பதியப்படவில்லை.
    (உ) வங்கியில் பற்று வைக்கப்பட்ட பாதுகாப்பு பெட்டக வாடகை ரூ1,000 ரொக்க  ஏட்டில் பதியப்படவில்லை

  39. இருப்பாய்வு தயாரிக்கப்பட்டு வித்தியாசம் அனாமத்துக் கணக்குக்கு எடுத்துச் செல்லப்பட்டது எனக் கருதி பின்வரும் பிழைகளைத் திருத்தம் செய்யவும்.
    (அ) விற்பனை ஏட்டின் கூட்டுத்தொகை ரூ.250 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.
    (ஆ) கொள்முதல் ஏட்டில் ரூ.120 குறைவாகக் கூட்டப்பட்்பட்டுள்ளது.
    (இ) விற்பனை ஏட்டில் ரூ.130 அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது.
    (ஈ) பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு ஏட்டில் ரூ.75 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.
    (உ) கொள்முதல் ஏட்டில் ரூ.35 அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது

  40. ஜாய் என்ற நிறுவனம் 1.4.2016 அன்று ரூ. 75,000-க்கு இயந்திரம் ஒன்றை வாங்கியது. 31.3.2018
    அன்று ரூ.62,000-க்கு அவ்வியந்திரத்தை விற்பனை செய்தது. நிலைத் தவணை முறையில்
    தேய்மானம் ஆண்டுக்கு 10% நீக்கப்படவேண்டும். ஆண்டுதோறும் கணக்குகள் மார்ச் 31-ல் முடிக்கப்படுகிறது. விற்ற இயந்திரத்தின் மீதான இலாபம் அல்லது நட்டத்தை கணக்கிடுக

  41. மொத்த இலாபம் மற்றும் நிகர இலாபம் என்றால் என்ன?

  42. வாராக்கடன், வாரா ஐயக்கடன் ஒதுக்கு மற்றும் கடனாளிகள் மீது தள்ளுபடி ஒதுக்கு குறித்த கணக்கியல் செயல்பாடுகள் பற்றி விவரி.

  43. 7 x 5 = 35
  44. வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் சசிகுமாரின் ஏடுகளில் பின்வரும் நடவடிக்கைகளுக்கு குறிப்பேட்டு பதிவு தருக.

        2017    
      அக்   
       ரூ 
    1   வியாபாரம் தொடங்குவதற்கா இட்ட சரக்கின் மதிப்பு      40,000
    3   வணிகத்தில் இட்ட ரொக்கத்தின் மதிப்பு 60,000
    4   அருளிடமிருந்து கடனுக்கு வாங்கிய சரக்கின் மதிப்பு       70,000
    6   அருளிற்கு திருப்பிய சரக்கின் மதிப்பு 10,000
    10   அருளின் கணக்கில் செலுத்தியத 60,000
    15   சந்தருக்கு கடனுக்கு விற்ற சரக்கின் மதிப்பு 30,000
    18   சந்தர் திருப்பி அனுப்பிய சரக்கின் மதிப்பு 6,000
    20   சந்தரிடமிருந்து ரொக்கம் ரூ 23,000 பெற்றுக்கொண்டு அவரது கணக்கு முடிக்கப்பட்டது   
    25   மின்னனு பரிவர்த்தனை மூலம் சம்பளம் வழங்கியது  2,000
    30   சசிகுமார் தமது சொந்த பயன்பாட்டிற்காக எடுத்துக் கொண்ட சரக்கின் மதிப்பு  10,000
  45. திருமதி. பானுமதியின் குறிப்பேட்டில் கீழ்க்காணும் நடவடிக்கைக்களைப் பதிவு செய்க.

    டிசம்பர் 2017   ரூ
    3 ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது 84,500
    7 தனலட்சுமிக்கு கடனாக சரக்கு விற்றது 55,000
    9 கழிவு பெற்றது 3,000
    10 ரொக்கத்திற்கு சரக்கு விற்றது 1,09,000
    12 மகாலட்சுமியிடமிருந்து சரக்கு வாங்கியது 60,000
    15 ரேவதி அண்டு கோவிடமிருந்து 5 நாற்காலிகள் ஒன்று ரூ 400 வீதம் வாங்கியது 2,000
    20 ரேவதி அண்டு கோவுக்கு ரொக்கம் செலுத்தி கடனைத் தீர்த்தது 2,000
    28 ஊதியம் வழங்கியது வாடகை செலுத்தியது 5,000
  46. பின் வரும் நடவடிக்கைகளிலிருந்து விற்பனை கணக்கு தயாரிக்கவும்.

    2018 ஜன 1 சாம் என்பவருக்கு கடனுக்கு விற்றது ரூ.4,000
    4 சுரேஷ் என்பவருக்கு ரொக்கத்திற்கு விற்றது 2,500
    11 ஜாய் என்பவருக்கு கடனுக்கு விற்றது 8,000
    17 ராஜன் என்பவருக்கு ரொக்கத்திற்கு விற்றது 3,000
  47. பியர்ல் என்ற வியாபாரியின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட இருப்புகளிலிருந்து 31.3.2017 அன்றைய இருப்பாய்வினைத் தயாரிக்கவும்.

    விவரம் ரூ விவரம் ரூ
    முதல் 44,000 முதலீடு மீதான வட்டி 2,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 5,000 சுங்க வரி 3,000
    கூலி 800 கணிப்பொறி 20,000
    எடுப்புகள் 4,000 விற்பனை 72,000
    கொள்முதல் 75,000 தொடக்கச் சரக்கிருப்பு 10,200
  48. பின்வரும் நடவடிக்கைகளை ஜவுளி வியாபாரியான குகன் என்பவரின் விற்பனை ஏடு மற்றும் விற்பனை திருப்ப ஏட்டில் பதிவு செய்க.

    2017  
    மே 2 கரண் என்பவருக்கு கடனுக்கு விற்றது
      ஒன்று ரூ. 280 வீதம் 100 துண்டுகள்
      மீட்டர் ரூ. 270 வீதம் 200 மீட்டர் சட்டைத் துணி
    மே 5 வீரன் என்பவருக்கு கடனுக்கு விற்றது
      ஒன்று ரூ. 1,500 வீதம் 10 ஆயத்த ஆடைகள்
    மே 16 ஜெயின் நிறுவனத்திடம் கடன் விற்பனைச் செய்தது
      ஒன்று ரூ. 240 வீதம் 50 போர்வைகள்
    மே 20 சேதம் அடைந்தடைந்த காரணத்தினால் 10 துண்டுகள் கரணுக்குத் திருப்பி அனுப்பியது. அதற்கான ரொக்கம் பெறப்படவில்லை
    மே 25 சரண் என்பவருக்கு பழைய அறைகலன்களை கடனுக்கு விற்றது ரூ. 18,000
    மே 27 தரம் குறைவு காரணமாக இரண்டு ஆயத்த ஆடைகள் வீரனிடமிருந்து திரும்பப்பெற்றது. அதற்கு பணம் செலுத்தவில்லை.
  49. 2017 ஜுன் மாதத்திற்கான பாண்டீஸ்வரி என்பவரின் பின்வரும் நடவடிக்கைகளிலிருந்து தனிப்பத்தி ரொக்க ஏட்டைத் தயாரிக்கவும்

    2017 ஜூன்   ரூ
    1 ரொக்கத்துடன் வணிகம் தொடங்கியது 50,000
    8 வாடகை ரொக்கமாகச் செலுத்தியது 4,000
    10 ரொக்கம் செலுத்தி அச்சுப்பொறி வாங்கியது 7,500
    11 ரொக்கக் கொள்முதல் 15,000
    14 ரொக்க விற்பனை 10,000
    17 ரொக்கமாகப் பெற்ற கழிவு 6,000
    19 கடன் மீதான வட்டி ரொக்கமாகச் செலுத்தியது 2,000
    20 சொந்த செலவுக்கு பணம் எடுத்தது 3,000
    21 துரித அஞ்சல் கட்டணம் ரொக்கமாகச் செலுத்தியது 3,500
  50. கீழே  கொடுக்கப்பட்டுள்ள  விவரங்களிலிருந்து ஜான் வியாபார நிறுவனத்தின் 2018 மார்ச் 31-ம் நாளன்றைய வங்கிச் சரிகட்டும் பட்டியலைத் தயாரிக்கவும்.
    (அ) வங்கி அறிக்கையின் படி வங்கி மேல்வரைப்பற்று ரூ 4,000
    (ஆ) ரொக்க  ஏட்டில் பதிவு செய்யப்பட்டு 2018 மார்ச் 26 அன்று வங்கியில் செலுத்தப்பட்ட காசோலை ரூ 2,000, 2018 ஏப்ரல் 4 அன்று வங்கி அறிக்கையில் பதியப்பட்டது
    (இ) பணம் வைப்பு இயந்திரம் வழியாக வங்கியால் பெறப்பட்ட தொகை  ரூ 5,000 ரொக்க  ஏட்டில் பதியப்படவில்லை
    (ஈ) ஜான் நிறுவனத்தின் கணக்கில் ரூ 3,000 வங்கியால் தவறுதலாக பற்று வைக்கப்பட்டது குறித்த தகவல்கள் எதுவும் தெரியப்படுத்தவில்லை
    (உ) 2017 மார்ச் 29 அன்று வரை வங்கியால் வசூலித்து வரவு வைக்கப்பட்ட மாற்றுச்சீட்டு ரூ 4,000 குறித்த தகவல்கள் ஏதும் ஜான் நிறுவனத்திற்கு தரப்படவில்லை
    (ஊ) இணைய வங்கி வாயிலாக செலுத்திய மின்சாரக்ன்சாரக் கட்டணம் ரூ 900 ரொக்க  ஏட்டின் வங்கிப்பத்தியில் பதிவதற்கு பதிலாக ரொக்கப்பத்தியில் தவறுதலாக பதியப்பட்டது.
    (எ) ரொக்க  விற்பனை தவறுதலாக ரொக்க  ஏட்டின் வங்கிப்பத்தியில் பதியப்பட்டது ரூ 4,000

  51. பின்வரும் விவரங்களில் இருந்து திரு.ஜாக்கப் அவர்களின் செல்லேடு காட்டும் வங்கியிருப்பை 2010 டிசம்பர் 31ல் காண்க.
    [அ] 2010 டிசம்பர் 31ல் ரொக்க ஏட்டினபடியான வங்கியிருப்பு ரூ 11,500.
    [ஆ] விடுத்த காசோலைகள் பணமாக்கப்படாதவை ரூ 1,750.
    [இ] வங்கியில் செலுத்திய காசோலைகள் 31 டிசம்பர் 2010ல் தீர்வு செய்யப்படாதது ரூ 2,150.
    [ஈ] வங்கி வசூல் செய்த முதலீட்டு மீது வட்டி ரூ 275 குறித்து ரொக்க ஏட்டில் பதிவு இல்லை.
    [உ] உள்ளூர் காசோலை நேரடியாக வங்கியில் செலுத்தியது ரூ 250 குறித்து ஏட்டில் பதிவு இல்லை.
    [ஊ] செல்லோட்டின்படி வங்கிக் கட்டணம் ரூ95.         

  52. ஒரு நிறுவனத்தின் கணக்காளர் இருப்பாய்வு சமன்படாமல் ரூ.922 வித்தியாசம் (கூடுதல் வரவு) இருப்பதை அறிந்தார். அவர் அந்தத் தொகையை அனாமத்துக் கணக்கில் பதிந்து விட்டு, அதைத் தொடர்ந்து பின்வரும் பிழைகளைக் கண்டறிந்தார்.
    (அ) ரொக்க ஏட்டின் வரவுப் பக்கம் உள்ள தள்ளுபடிப் பத்தியின் கூட்டுத்தொகை ரூ.78 பேரேட்டில் எடுத்து எழுதப்படவில்லை.
    (ஆ) கொள்முதல் ஏட்டின் கூட்டுத்தொகையில் ரூ.1,000 குறைவாக உள்ளது.
    (இ) கடனுக்கு நடராஜனுக்கு ரூ.375 க்கு சரக்கு விற்றது விற்பனை ஏட்டில் ரூ.735 என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
    (ஈ) மேகலாவுக்கு கடனுக்கு ரூ.700 க்கு சரக்கு விற்றது கொள்முதல் ஏட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    பிழை திருத்தப் பதிவுகளை தந்து அனாமத்துக் கணக்கைத் தயாரிக்கவும்.

  53. ஏப்ரல் 1, 2014 அன்று இராகுல் இயந்திரம் ஒன்றை ரூ. 2,00,000 க்கு வாங்கினார். அக்டோபர் 1, 2015 அன்று மற்றொரு இயந்திரத்தை ரூ. 1,20,000 க்கு வாங்கினார். செப்டம்பர் 30, 2016 அன்று, ஏப்ரல் 1, 2014 அன்று வாங்கிய இயந்திரத்தை ரூ. 1,20,000 க்கு விற்றார். ஒவ்வொரு ஆண்டும் கணக்குகள் மார்ச் 31ல் முடிக்கப்பெறுகின்றன. ஆண்டுக்கு 10% தேய்மானம் நேர்க்கோட்டு முறையில் நீக்கப்பட வேண்டும். 2014 – 15 லிருந்து 2016 – 2017 வரை மூன்று ஆண்டுகளுக்கான இயந்திர கணக்கு மற்றும் தேய்மானக் கணக்கு தயாரிக்கவும்.

  54. பின்வரும் செலவினங்களை முதலின, வருவாயினச் செலவினங்களாக வகைப்படுத்தவும்.
    (i) நிலம் வாங்குவதற்குச் செய்யப்பட்ட பத்திரப்பதிவு கட்டணம்.
    (ii) வாங்கிய பழையக் கட்டடத்தைப் புதுப்பிப்பதற்காகச் செய்த பழுது பார்ப்புச் செலவுகள்.
    (iii) சரக்குக் கொள்முதலின் போது செலுத்திய ஏற்றிச்செல் கட்டணம்.
    (iv) கடன் பெறுவதற்காகச் செய்யப்பட்ட சட்டச் செலவுகள்.

  55. கீழ்க்காணும் தகவல்களிலிருந்து ராமசுந்தரி என்பவரின் ஏடுகளில் 2017, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய வியாபர இலாப நட்டக் கணக்கையும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயாரிக்கவும்.

    விவரம் ரூ விவரம் ரூ
    தொடக்கச் சரக்கிருப்பு 2,500 விற்பனை 7,000
    கூலி 2,700 கொள்முதல் 3,300
    இறுதிச் சரக்கிருப்பு 4,000 சம்பளம் 2,600
    பெற்ற தள்ளுபடி 2,500 முதல் 52,000
    இயந்திரம் 52,000 வங்கி ரொக்கம் 6,400
    கடனீந்தோர் 8,000    
  56. கீழ்க்கண்ட சரிக்கட்டுதல்களுக்கு சரிக்கட்டுப் பதிவுகள் தரவும்.
    (அ) கொடுபட வேண்டிய கூலி ரூ 5,000
    (ஆ) இயந்திரம் மீதான தேய்மானம் ரூ 1000
    (இ) முதல் மீது வட்டி 5% (முதல் ` 20,000)
    (ஈ) எடுப்புகள் மீது வட்டி ரூ 50
    (உ) வாராக்கடன் போக்கெழுத வேண்டியது ரூ 500

  57. மூன் நிறுமத்தின் 2017 ஆம் ஆண்டிற்கான விற்பனை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
    (அ) பை விளக்கப்படம்
    (ஆ) டோனட் விளக்கப்படம்

      A B C D E F G
    1 City Chennai Coimbatore Madurai Trichy Tanjore Tirunelveli
    2 SALES
    (ரூ in lakhs)
    500 350 250 250 200 150

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் மாதிரி பொது தேர்வு வினாத்தாள் 2019 ( 11th Standard Accountancy Model Public Exam Question Paper 2019 )

Write your Comment