திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 03:00:00 Hrs
Total Marks : 70

    பகுதி - I

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

    15 x 1 = 15
  1. உயிருள்ளவை உயிரற்றவைகளிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன? 

    (a)

    இனப்பெருக்கம் 

    (b)

    வளர்ச்சி

    (c)

    வளர்சிதை மாற்றம் 

    (d)

    இடப்பெயர்ச்சி 

    (e)

    மேற்குறிப்பிட்ட அனைத்தும்

  2. கொரட்டின் நிரம்மிய வகை கூட்டு எப்பிதீலியம் இங்கு காணப்படுகிறது.

    (a)

    உணவுக்கு குழல்

    (b)

    எபிடெர்மிஸ்

    (c)

    வாய்

    (d)

    பெண் இனப்பெருக்க உறுப்பு

  3. சரியான வாக்கியத்தை கண்டுபிடி

    (a)

    மண்புழுவில் வளர்ச்சி மறைமுக வளர்ச்சியாகும்

    (b)

    விந்து கொள்பைகள் ஒரு இணை காணப்படுகிறது

    (c)

    விந்து பைகளில் ஸ்பெர்மெட்டோகோனிய விந்தணுக்களாக வளர்ச்சியடைகிறது

    (d)

    கருமுட்டை கூட்டை உருவாக்குவது இளம் உயிரிகள்

  4. நுரையீரல்களுக்குள் 1500 மிலி காற்று இருக்கும் நிலை ______.

    (a)

    உயிர்ப்புத்திறன் 

    (b)

    மூச்சுக்காற்று அளவு 

    (c)

    எஞ்சிய கொள்ளளவு 

    (d)

    உள்மூச்சு சேமிப்புக் கொள்ளளவு 

  5. சிரைகளின் இரத்த நுண்நாளப் படுகைகளில் காணப்படும் ஊடுபரவல் அழுத்தம் ______.

    (a)

    நீர்ம அழுத்தத்தைவிட அதிகம்

    (b)

    திரவங்களின் நிகர வெளியேற்ற அளவில் முடியும்

    (c)

    திரவங்களின் நிகர உறிஞ்சுதல்அளவில் முடியும்

    (d)

    எவ்வித மாற்றமும் நிகழவில்லை

  6. தண்டைத் தவிர தாவரத்தின் மற்ற பாகங்களிலிருந்து தோன்றும் மொட்டுகள் _________ என்று அழைக்கப்படுகின்றன.

    (a)

    நுனிமொட்டுகள் 

    (b)

    பக்கவாட்டு மொட்டுகள்

    (c)

    வேற்றிட மொட்டுகள்

    (d)

    துணை மொட்டுகள்

  7. மாதுளைக் கனியானது ________ வகைகளைச் சார்ந்தது.

    (a)

    சிலிக்குவா 

    (b)

    சைக்கோனஸ் 

    (c)

    சிப்செலா 

    (d)

    பலாஸ்டா 

  8. பல செல்களின் பணிகள் ஒழுங்காகவும் மற்றும் மைட்டாட்டிக் செல்பகுப்பு இருந்தாலும் கூட இவைகளைப் பெற்றிருப்பதில்லை?

    (a)

    பிளாஸ்மா சவ்வு

    (b)

    சைட்டோஸ்கெலிட்டன்

    (c)

    மைட்டோகாண்டிரியா

    (d)

    கணிகங்கள்

  9. விலங்கு செல்களில் மைட்டாசிஸ் சரியாக நடைபெறுவதற்கு (APC) அனஃபேஸ் பிரிநிலைக்கு முன்னேறுதலை ஏற்படுத்த கூட்டமைப்பு உதவுகிறது. இது ஒரு புரத சிதைவை செயல்படுத்தும் கூட்டமைப்பாகும். மனித செல்லில் APC பிழையானால் கீழே உள்ளவற்றில் எது நிகழ முடியும்.

    (a)

    குரோமோசோம்கள் துண்டாக்கப்படுதல்

    (b)

    குரோமோசோம்கள் குறுக்கம் அடையாது

    (c)

    குரோமோசோம்கள் பிரிவுறாது

    (d)

    குரோமோசோம்களில் மீள் சேர்க்கை நிகழும்

  10. இதன் விளைவாக சிறுநீரக குடல்வலி என்னும் கடுமையான வழியும் சிறுநீரகத் தழும்புகளும் தோன்றும்

    (a)

    சுமார் 17-30மிகி /100மிலி

    (b)

    நெஃப்ரோலித்யாஸிஸ்

    (c)

    கிளாமருலோ நெஃப்ரைடிஸ்

    (d)

    யூரேமியா

  11. மனிதன் _________ க்கு உதாரணமாகும்.

    (a)

    அகச்சட்டகம்

    (b)

    டென்டான்

    (c)

    நீர்மசட்டகம்

    (d)

    புறச்சட்டகம்

  12. எரிபட்டு ______ லிருந்து பெறப்படுகின்றது.  

    (a)

    லேஸ்ஸிஃபெர் லேக்கா     

    (b)

    நொசிமா பாம்பிசிஸ்  

    (c)

    அட்டாகஸ்  ரிசினி 

    (d)

    அட்டாகஸ் மைலிட்டா  

  13. விறைப்பழுத்தம் உடைய செல்லில், _______.

    (a)

    DPD =10 வளி; OP =5 வளி; TP =10 வளி

    (b)

    DPD =0 வளி; OP =10 வளி; TP =10 வளி

    (c)

    DPD =0 வளி; OP =5 வளி; TP =10 வளி

    (d)

    DPD =20 வளி; OP =20 வளி; TP =10 வளி

  14. அசிட்டைல் CoA எந்த பொருள் ஆக்ஸிஜனேற்றம் அடையும் பொழுது உருவாகிறது?

    (a)

    கார்போஹைட்ரேட் 

    (b)

    புரதம் 

    (c)

    கொழுப்பு 

    (d)

    இவை அனைத்தும் 

  15. ஃபைட்டாசேஸ்கள் என்பது தாவரங்களில் _________.

    (a)

    மூப்படைதலை தூண்டுகிறது 

    (b)

    விதை உறக்கத்தைத் தூண்டுகிறது 

    (c)

    திட்டமிடப்பட்ட செல் இறப்புக்கு காரணம் 

    (d)

    விதை முளைத்தலை தூண்டும் பொருள் 

  16. பகுதி - II

    எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 24க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    6 x 2 = 12
  17. வெள்ளை அடிப்போஸ் திசுவைப் பழுப்பு அடிப்போஸ் திசுவிலிருந்து வேறுபடுத்து.

  18. சிறுகுடலில் மட்டும் உறிஞ்சிகள் உள்ளன. ஏன் இரைப்பையில் இல்லை?

  19. பயிர் சுழற்சி மற்றும் கலப்புப்பயிர் முறைகளில் உழவர்கள் லெகூம் வகை தாவரங்களைப் பயிரிடுவது ஏன்?

  20. பைரினாய்டுகள் என்பவை யாவை?

  21. முதன்மை வகைப்பாடு என்பது யாது? 

  22. பகுப்பிடைக்காலம் என்றால் என்ன?

  23. ஹைபோதலாமஸையும் முன்பகுதி பிட்யூட்ரியையும் இணைப்பது எது?

  24. பரவலில் மூலக்கூறுகளின் இயக்கம் எவ்வாறு இருக்கும்?

  25. தாவரங்களின் வளர்ச்சியை அளவிடும் முறைகள் யாவை?

  26. பகுதி - III

    எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 33க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    6 x 3 = 18
  27. பறவைகளில் காணப்படும் பறப்பதற்கு உண்டான தகவமைப்பை குறிப்பிடுக. 

  28. ஹீமோலிஃம்ப் என்பது யாது? அதன் முக்கியத்துவம் யாது?

  29. மனித சுவாச மண்டலத்தில் காணப்படும் உறுப்புகள் யாவை?

  30. எரித்ரோபிளாஸ்டோஸிஸ் ஃபீடாலிஸ் என்பது யாது?

  31. கைரை மற்றும் சல்சி இவற்றை வேறுபடுத்துக்க. அவற்றின் பணியைக் குறிப்பிடுக.

  32. பட்டுப்புழுக்களுக்கு ஏற்படும் நோய் மற்றும் அதன் காரணிகளை தொகுத்து அட்டவணைப்படுத்து.

  33. கால்வாய் புரதங்கள் என்றால் என்ன?

  34. ஆஞ்சியோஸ் பெர்ம்களின் பூச்சியுண்ணும் உணவூட்ட முறையினை விவரி?

  35. EMP வழித்தடத்தில் பாஸ்பரிகரணம் மற்றும் ஃபாஸ்பேட் நீக்கம் ஆகிய வினைகளில் ஈடுபடும் நொதிகளை எழுதுக.  

  36. பகுதி - IV

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    5 x 5 = 25
    1. தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் சதைக்கனியின் வகைகளை விவரி.

    2. ஒரு தாவரவியல் வகுப்பில் ஆசிரியர் C4 தாவரங்கள் ஒரு குளுக்கோஸ் உற்பத்திக்கு 30 ATP-களை பயன்படுத்துவதாகும். C3 தாவரங்கள் 18 ATP - க்களை மட்டுமே பயன்படுத்துவதாகவும் விளக்குகிறார். பின்னர் அதே ஆசிரியர் C4 தாவரங்கள் தான் C3-யை விட சிறந்த தகவமைப்பு  பெற்றுள்ளதாக கூறுகிறார். இந்த முரண்பாட்டிற்க்கான காரணங்களை உன்னால் கூற முடியுமா?  

    1. நரம்பமைவு என்பது யாது? அதன் வகைகளை படத்துடன் விளக்குக.

    2. கூட்டுயிர் மூலம் நைட்ரஜன் நிலைநிறுத்ததை விளக்கு.

    1. DNA வின் அமைப்பை விளக்கு. 

    2. சல்லடை குழாய்கள் என்றால் என்ன? விளக்குக.  

    1. இரத்தக் கொள்ளளவு கட்டுப்பாட்டில் சிறுநீரகங்கள் எவ்வாறு பங்கேற்கின்றன.உடலின் இரத்தக்கொள்ளளவு மற்றும் தமனி அழுத்தத்திற்கு கிடையே உள்ள தொடர்பு யாது?

    2. தைராய்டு சுரப்பி அமைப்பைப் பற்றி சுருக்கி எழுதுக. 

    1. தொகுதி : டினோஃபோராவின் பொதுப்பண்புகளை கூறு.

    2. தண்டுவடத்தின் குறுக்கு வெட்டுத்தோற்றத்தை படத்துடன் விளக்கு.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு உயிரியல் திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் ( 11th Standard Biology Revision Model Question Paper )

Write your Comment