+1 NEET BASED ONE MARK TEST

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 40
    40 x 1 = 40
  1. எந்த வகைப்பாட்டு கருவி டாக்சான் பற்றிய முழுவிவரங்களைக் கொண்டுள்ளது?

    (a)

    வகைப்பாட்டுத் திறவுகோல் 

    (b)

    ஹெர்பேரியம் 

    (c)

    தாவரம் 

    (d)

    மோனோஃகிராப்   

  2. சரியான வாக்கியத்தை தேர்ந்தெடு.

    (a)

    கிளாடோகிராம் என்பது வகைப்பாட்டு மரம்

    (b)

    கிளாஸ்டிக் வகைப்பாட்டு என்பது பரிணாம வகைப்பாடு

    (c)

    புரோபையோடிக் பாக்டீரியா நோய்களை ஏற்படுத்தும்

    (d)

    வகைப்பாட்டு படிநிலைகள் மொத்தம் ஒன்பது

  3. முப்பெயரிடும் முறையில் காணப்படுவது.

    (a)

    தொகுதி

    (b)

    வரிசை

    (c)

    துணை சிற்றினம்

    (d)

    டாட்டோனைமி

  4. பக்கக்கோட்டு  உணர்வு உறுப்புகள் இதில் காணப்படுகிறது. 

    (a)

    சலமான்டர்   

    (b)

    தவளை 

    (c)

    தண்ணீர் பாம்பு 

    (d)

    மீன்

  5. கீழ்க்காண்பவைகளில்  எது முட்டையிடும் பாலூட்டி? 

    (a)

    டெல்ஃபினஸ்    

    (b)

    மேக்ரோபஸ்   

    (c)

    ஆர்னிதோரிங்கஸ்    

    (d)

    ஈகுவஸ்  

  6. சமச்சீரற்ற உடலமைப்பை பெற்றுள்ள விலங்குகளின் பண்பு

    (a)

    நிரந்தரமான உடலமைப்பு, வடிவம் கிடையாது

    (b)

    ஒழுங்கற்ற வடிவத்தில் காணப்படுகிறது

    (c)

    உடல் மையத்தின் வழியாகச் செல்லும் எந்தப் பிளவும் இவ்வுயிரிகளின் உடலை இரு சமப்பகுதிகளாகப் பிரிக்காது

    (d)

    இவை அனைத்தும்

  7. கீழ்கண்ட தொகுதியை அதில் காணப்படும் விலங்குகளின் பண்புகளோடு சரியாக பொருத்தவும்.

      விலங்கு தொகுதி பண்புகள்
    I பிளாட்டிஹெல்மின்தஸ் a. உயிரொளிர்தல்
    II அன்னலிடா b. மெட்டாஜெனிசிஸ்
    III. நிடோரியா c. மெட்டாமெரிசம்
    IV. டினோஃபோரா d. சுடர் செல்கள்
    (a)
    I II III IV
    a b d c
    (b)
    I II III IV
    d c b a
    (c)
    I II III IV
    b d c b
    (d)
    I II III IV
    c a b d
  8. தொகுதி: எக்கினோடெர்மேட்டாவில் காணப்படும் ஆம்புலேக்ரல் மண்டலத்தின் பணி இதுவல்ல.

    (a)

    இடப்பெயர்ச்சிக்கு பயன்படுகிறது

    (b)

    கழிவு நீக்கத்தில் பங்குகொள்கிறது

    (c)

    உணவைப் பிடித்து கடத்துகிறது

    (d)

    சுவாசத்தில் பங்கு கொள்கிறது

  9. கனசதுர வடிவ எபிதீலியத்தின் முக்கியப்பணி_______.

    (a)

    பாதுகாப்பு

    (b)

    சுரப்பு

    (c)

    உறிஞ்சுதல்

    (d)

    ‘ஆ’ மற்றும் ‘இ’

  10. பொய் அடுக்கு எபிதீலியத்தில் ஓரடுக்கு செல்களால் ஆன் எபிதீலியம் பல அடுக்குகள் செல்கள் கொண்ட எபிதீலியம் போன்று காட்சியளிப்பதற்கு காரணம்.

    (a)

    பல அடுக்குகள் கொண்ட எபிதீலியத்தில் சில அடுக்குகள் மறைந்து போவதால்

    (b)

    செல் அடுக்குகள் வெவேறு மட்டத்தில் காணப்படுவதால்

    (c)

    செல்களில் உலா உட்கருக்கள் வெவ்வேறு மட்டங்களில் காணப்படுவதால்

    (d)

    செல்களும் உட்கருக்களும் வெவேறு மட்டங்களில் காணப்படுவதால்

  11. கொரட்டின் நிரம்மிய வகை கூட்டு எப்பிதீலியம் இங்கு காணப்படுகிறது.

    (a)

    உணவுக்கு குழல்

    (b)

    எபிடெர்மிஸ்

    (c)

    வாய்

    (d)

    பெண் இனப்பெருக்க உறுப்பு

  12. எதில் திறந்த வகை சுற்றோட்ட மண்டலம் காணப்படுகின்றன.

    (a)

    தவளை

    (b)

    மண்புழு

    (c)

    புறா

    (d)

    கரப்பான் பூச்சி

  13. கீழ்கண்ட வகை மண்புழு மண்ணின் மேலடுக்குக்குள் வாழிடம் கிடைமட்ட வாழ்விகளாகும். இவைகள் அனிசிக் வகை மண்புழுக்கள் என அழைக்கப்படுகிறது.

    (a)

    பெரியோனிக்ஸ் எக்ஸ்கவேட்டஸ்

    (b)

    லேம்பிட்டோ மாரிட்டீ

    (c)

    ஆக்டகீடோனா தர்ஸ்டோனி

    (d)

    யூட்ரிலஸ் யூஜினியே

  14. சரியான வாக்கியத்தை கண்டுபிடி

    (a)

    மண்புழுவில் வளர்ச்சி மறைமுக வளர்ச்சியாகும்

    (b)

    விந்து கொள்பைகள் ஒரு இணை காணப்படுகிறது

    (c)

    விந்து பைகளில் ஸ்பெர்மெட்டோகோனிய விந்தணுக்களாக வளர்ச்சியடைகிறது

    (d)

    கருமுட்டை கூட்டை உருவாக்குவது இளம் உயிரிகள்

  15. கரப்பான் பூச்சியின் முதுகுபுரத்தில் காணப்படும் ஸ்கிளிரைடு

    (a)

    ஆர்தோடியல் சவ்வு

    (b)

    டெர்கிட்கள் 

    (c)

    ஸ்டர்னைட்கள்

    (d)

    புளூரட்கள்

  16. கூற்று: கரப்பான் பூச்சியின் உடற்குழியில் காணப்படும் நிறமற்ற திரவம் ஹீமோலிம்ப் எனப்படும்
    காரணம்: திசுக்களுக்கு O2 நேரடியாக கிடைக்கிறது.

    (a)

    கூற்று சரி, காரணமும் சரி, காரணம் கூற்றிற் விளக்குகிறது

    (b)

    கூற்று சரி, காரணமும் சரி, காரணம் கூற்றிற் விளக்கவில்லை

    (c)

    கூற்று சரி, காரணம் தவறு

    (d)

    கூற்று தவறு, காரணம் தவறு

  17. தவளையின் கண்களைப் பாதுகாப்பது

    (a)

    மேல் இனம்

    (b)

    கீழ் இமை

    (c)

    நிக்டிடேடிவ் சவ்வு

    (d)

    இவை அனைத்தும்

  18. தவளையின் முன்பகுதியிலிருந்து மற்றும் பின்பகுதியிலிருந்து வரும் இரத்தத்தை பெறுவது _____ 

    (a)

    வலது ஆரிக்கிள்கள்

    (b)

    சைனஸ் வினோஸஸ்

    (c)

    இடது ஆரிக்கிள்

    (d)

    வென்ட்ரிகிள்

  19. தவளையின் மூளை நரம்புகளின் எண்ணிக்கை ___ இணைகள்.

    (a)

    12

    (b)

    15

    (c)

    18

    (d)

    10

  20. கீழ் உள்ளனவற்றுள் பொருந்தாத இணை எது?

    (a)

    பிலிரூபின் மற்றும் பிலிவிரிடின்-சிறுகுடல் நீர்

    (b)

    ஸ்டார்ச்சை நீராற் பகுத்தல்-அமைலேஸ்கள்

    (c)

    கொழுப்பு செரித்தல்-லிபேஸ்கள்

    (d)

    உமிழ்நீர் சுரப்பி-பரோடிட்

  21. அறிக (A): சிறு குடலைப் போலப் பெருங்குடலிலும் உறிஞ்சிகள் உள்ளன.
    காரணம்(R): நீர் உட்கிரகித்தல் பெருங்குடலில் நடைபெறுகின்றது

    (a)

    A மற்றும் R ஆகியன சரி மேலும் R, A பற்றிய சரியான விளக்கம் ஆகும்.

    (b)

    A மற்றும் R ஆகியன சரி மேலும் R, A பற்றிய சரியான விளக்கம் இல்லை.

    (c)

    A சரி ஆனால் R தவறு

    (d)

    A தவறு ஆனால் R சரி

  22. தவறான ஜோடியைக் கண்டுபிடி.

    (a)

    கார்டியாக் சுருக்குத் தசை - உணவுகுழலும் இரைப்பையும் இணையுமிடம்

    (b)

    பைலோரிக் சுருக்குத் தசை - இரைப்பையும் முன் சிறு குடலும் இணையுமிடம்

    (c)

    ஓட்டி சுருக்குத் தசை - கல்லீரல் கணைய பொது நாளமும் முன் சிறுகுடல் இணையுமிடம்  

    (d)

    அனைத்தும் சரியாக பொருத்தப்பட்டுள்ளது.

  23. தாவர உண்ணிகளில் குடல் வாலின் பயன் யாது?

    (a)

    கார்போஹைட்ரேட் செரித்தல்

    (b)

    செல்லுலோஸ் செரித்தல்

    (c)

    புரதம் செரித்தல்

    (d)

    கொழுப்பு செரித்தல்

  24. கோழையைச் சுரக்கும் செல்கள் எவை?

    (a)

    முதன்மை செல்கள்

    (b)

    பெப்ட்டிக் செல்கள் 

    (c)

    சைமோஜன் செல்கள் 

    (d)

    கோப்பை வடிவ செல்கள்

  25. கீழ்க்கண்டவைகள் அனைத்தும் கல்லீரலின் பணிகளாகும். இதனைத் தவிர.

    (a)

    யூரியாவை உற்பத்தி செய்கிறது.

    (b)

    வயதான பழுதுபட்ட இரத்த செல்களை அழிக்கிறது

    (c)

    அவசியமான அமினோ அமிலத்தை உற்பத்தி செய்கிறது

    (d)

    கிளைக்கோஜனை சேமிக்கிறது. 

  26. பெருங்குடலில் காணப்படும் இணைவாழ் பாக்டீரியாவில், நார்பொருட்களிலிருந்து உருவாக்கப்படுவது.

    (a)

    சோடியம்

    (b)

    இரும்பு தனிமம்

    (c)

    கழிவுப் பொருள்

    (d)

    வைட்டமின் K

  27. ஆஸ்துமா ஏற்படக் காரணம் ______.

    (a)

    புளூரல் குழிக்குள் இரத்தப்போக்கு 

    (b)

    மூச்சுக்கிளை குழல் மற்றும் நுண்குழலில் வீக்கம்

    (c)

    உதரவிதானச் சேதம் 

    (d)

    நுரையீரல் தொற்று 

  28. நீண்ட ஆழ்ந்த மூச்சுக்குப்பின் சில வினாடிகள் நாம் காற்றை சுவாசிப்பதில்லை இதற்குக் காரணம்.

    (a)

    இரத்தத்தில் அதிக CO2 இருப்பதால் 

    (b)

    இரத்தத்தில் அதிக O2 இருப்பதால் 

    (c)

    இரத்தத்தில் குறைவான CO2 இருப்பதால் 

    (d)

    இரத்தத்தில் குறைவான O2 இருப்பதால் 

  29. மனிதனுடைய சுவாசமண்டலத்தின் கடத்தும் பாதையில் காணப்படாத பகுதி _________________

    (a)

    தொண்டை

    (b)

    மூச்சுக்குழல்

    (c)

    காற்று நுண்ணறை

    (d)

    மூச்சுக்கிளை நுண்குழல்

  30. மூச்சுக்குழல் இவ்விடத்தில் வலது மற்றும் இடது முதல்நிலை மூச்சுக்கிளைக் குழல்களைப் பிரிகிறது.

    (a)

    5வது கழுத்து முள்ளெலும்பு

    (b)

    5வது மார்பு முள்ளெலும்பு

    (c)

    5வது இடுப்பு முள்ளெலும்பு

    (d)

    5வது சேக்ரல் முள்ளெலும்பு

  31. கீழ்கண்ட வாக்கியங்களில் தவறான வாக்கியத்தைக் கண்டுபிடி.

    (a)

    நுரையீரல்கள் தசை நார்களால் ஆனது.

    (b)

    மூச்சுக் கிளை நுண்குழல்களில் குருத்தெலும்பு வளையங்கள் இல்லை

    (c)

    உட்சுவாசத்தின் போது நுரையீரலினுள் வளிமண்டலத்தைவிட காற்று அழுத்தம் குறைவாக இருக்கும். 

    (d)

    வெளிச் சுவாசத்தின் போது உதரவிதானம் கூம்பு வடிவத்தில் காணப்படும்.

  32. ஒரு மனிதன் கடலின் ஆழத்திற்குச் செல்லும் போது அவனுடைய இரத்தத்தில் கலக்கும் வாயு எது? 

    (a)

    ஹைட்ரஜன்

    (b)

    நைட்ரஜன்

    (c)

    ஆக்ஸிஜன் 

    (d)

    கார்பன்-டை-ஆக்சைடு

  33. தோல் கருநீல நிறமாக மாறுவது எப்பொழுது?

    (a)

    இரத்தத்தில் O2 அளவு குறையும் போது

    (b)

    காற்றில் O2 அளவு குறையும் போது

    (c)

    இரத்தத்தில் COஅளவு அதிகரிக்கும் போது

    (d)

    காற்றில் CO2 அளவு அதிகரிக்கும் போது

  34. மிக அதிக எண்ணிகையில் காணப்படும் இரத்த வெள்ளையணு எது?

    (a)

    ஈயோசினோஃபில்

    (b)

    நியூட்ரோஃபில்

    (c)

    பேசோஃபில்

    (d)

    மானோசைட்

  35. சிரைகளின் இரத்த நுண்நாளப் படுகைகளில் காணப்படும் ஊடுபரவல் அழுத்தம் ______.

    (a)

    நீர்ம அழுத்தத்தைவிட அதிகம்

    (b)

    திரவங்களின் நிகர வெளியேற்ற அளவில் முடியும்

    (c)

    திரவங்களின் நிகர உறிஞ்சுதல்அளவில் முடியும்

    (d)

    எவ்வித மாற்றமும் நிகழவில்லை

  36. கீழ்கண்ட அட்டவணையில் உள்ள இரத்த வெள்ளையணுக்களின் வகைகளை அதனுடைய செல்கள் அல்லது பண்புகளோடு பொறுத்துக.

      இரத்த வெள்ளையணுக்கள்  செயல்/பணிகள் 
    மோனோ சைட்டுகள்   a. வீக்கங்களின் காரணம் 
    II  பேசாஃபில்கள்  b பல்லுரு உட்கரு 
    III  ஈசினோஃபில்கள் c  கப்ஃபர் செல்கள் 
    IV   நியூட்ரோஃபில்கள் d ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது.
    (a)
    II  III   IV 
    a d c b
    (b)
    II  III   IV 
    b d a c
    (c)
    II  III   IV 
    d b c a
    (d)
    II  III   IV 
    c a d b
  37. கீழ்க்கண்ட இச்செல்களின் உற்பத்திக்கு காரணமானது எலும்பு மஜ்ஜையாகும்.

    (a)

    இரத்தச் சிவப்பணுக்கள் 

    (b)

    இரத்த வெள்ளை அணுக்கள் 

    (c)

    இரத்தத் தட்டுகள் 

    (d)

    இவை அனைத்தும் 

  38. இரத்தக்குழாயின் மைய அடுக்கில் காணப்படுவது 

    (a)

    மென் தசைச்செல்கள் 

    (b)

    எண்னோதீலியம் 

    (c)

    கொலாஜன் இழைகள் 

    (d)

    இதயத்தசை செல்கள் 

  39. அனோஸ்டாமோசிஸ் என்பது 

    (a)

    நுண்தமனி இரத்தக்குழாய்களும், நுண் சிறைகளும் இணைவது 

    (b)

    கீழ் பெருஞ்சிரையும் மேல் பெருஞ்சிரையும் இணைவது 

    (c)

    நுரையீரல் தமனியும் நுரையீரல் சிரையும்  இணைவது 

    (d)

    சில இடங்களில் தமனிகள் இணைந்து பிரிவதற்குப் பதிலாக ஒன்றாக இணைவது 

  40. மாரடைப்பு ஏற்படக் காரணம், இந்த இரத்தக் குழாயில் திராம்பஸ் தோன்றுவதால் 

    (a)

    கரோனரி தமனி 

    (b)

    மேற்பெருஞ்சிரை 

    (c)

    கரோனரி சிரை 

    (d)

    கீழ்பெருஞ்சிரை 

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு உயிரியல் நீட் சார்ந்த 1 மதிப்பெண் வினாக்கள் 2019 ( 11th Standard Biology NEET 1 mark Questions 2019 )

Write your Comment