11th Business Maths- Financial Mathematics Solutions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகக் கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 60

    அனைத்து வினாக்களுக்கும்  விடையளி :

    15 x 2 = 30
  1. ஒரு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் வணிக கணிதத்தில் அதிக மதிப்பெண் பெறுகின்ற மாணவர்களுக்கு தங்கப் பதக்கத்தை விருதாக அளிக்க விரும்புகிறார்.அப்பதக்கத்திற்கான செலவு ஒவ்வொரு ஆண்டிற்கும் ரூ.9,000 மற்றும் இத்தொகைக்கான கூட்டு வட்டி ஆண்டிற்கு 15% எனில்,தற்போது அவர் எவ்வளவு முதலீடு வைப்புத் தொகையாக அளிக்க வேண்டும்?

  2. ஆண்டிற்கு 10% வட்டியில் 14 வருடங்களுக்கான ரூபாய் ரூ.2,000 ன் தற்போதைய மதிப்பினைக் காண்க [ (1.1)-14= 0.2632]

  3. ரூ.18 அதிக விலையில் உள்ள ரூ.100 மதிப்பைக் கொண்ட 325 பங்குகளின் சந்தை மதிப்பைக் காண்க

  4. ரூ.25 முகமதிப்புள்ள 10% வீதம் பங்குகளின் மூலம் கிடைக்கும் மொத்த ஈவுத் தொகை ரூ.2000 எனில் பங்குகளின் எண்ணிக்கைக் காண்க

  5. ரூ.100 முக மதிப்புள்ள 12% சரக்கு முதலின் ஆண்டு வருமானம் ரூ.3,600 எனில் பங்குகளின் எண்ணிக்கையைக் காண்க

  6. ஒருவர் 17% கழிவில் 12% சரக்கு முதல்களை ரூ.54,000-க்கு வாங்கினார்.அவர் செலுத்திய தரகு 1% எனில் அவரின் வருமானத்தின் சதவிகிதத்தைக்  காண்க

  7. ரூ.100 சம மதிப்புள்ள ரூ.132-ல் கிடைக்கும் 62 பங்குகளின் சந்தை மதிப்பைக் காண்க

  8. ரூ.7 கழிவிற்கு ரூ.25 மதிப்புள்ள பங்குகள் கிடைக்குமெனில் 125 பங்குகள் வாங்குவதற்கு தேவைப்படும் தொகை எவ்வளவு?

  9. ரூ.100 மதிப்புள்ள 7% பங்குகள் ரூ.120 க்கு அல்லது 10% பங்குகள் ரூ.135 க்கு,இவற்றுள் எது சிறந்த முதலீடு?

  10. ரூ.140-ல் உள்ள 20% சரக்கு முதல் அல்லது ரூ.70-ல் உள்ள 10% சரக்கு முதல்,இவற்றுள் எது சிறந்த முதலீடு?

  11. ஆண்டுக்கு 10% கூட்டு வட்டி சேர்க்கப்படும் போது ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் ரூ.2000 வீதம் 4 ஆண்டுகளுக்கு செலுத்தப்படும் தவணைப் பங்கீட்டுத் தொகையின் மொத்த தொகையைக் காண்க  [log(1.1) = 0.0414 ; antilog(0.1656) = 1.464]

  12. பொருளியல் தேர்வில் முதல் மதிப்பெண் பெரும் மாணவர்களுக்கு ஒரு நபர் ரூ.1,500 யை பரிசுத் தொகையாக ஒவ்வொரு வருடமும் வழங்குகிறார்.இத்தொகையை வழங்குவதற்கு அவர் முதலீடு செய்வதற்கு தேவைப்படும் மொத்ததொகை காண்க.ஆண்டிற்கு 12% வட்டி கணக்கிடப்படுகிறது

  13. பொருளியியல் தேர்வில் முதல் மதிப்பெண் பெரும் மாணவர்களுக்கு ஒரு நபர் ரூ.1,500 யை பரிசுத் தொகையாக ஒவ்வொரு வருடமும் வழங்குகிறார். இத்தொகையை வழங்குவதற்கு அவர் முதலீடு செய்வதற்கு தேவைப்படும் மொத்ததொகை காண்க. ஆண்டிற்கு 12% வட்டி கணக்கிடப்படுகிறது.

  14. இயந்திரம் A வின் விலை ரூ.15,000 இயந்திரம் B யின் விலை ரூ.20,000 அவற்றிலிருந்து கிடைக்கும் ஆண்டு வருமானம் முறையே ரூ.4,000 மற்றும் ரூ.7,000 ஆகும். இயந்திரம் A-ன் ஆயுட்காலம் 4 ஆண்டுகள் மற்றும் B ன் ஆயுட்காலம் 7 ஆண்டுகள் எனில், எந்த இயந்திரத்தை வாங்குவது சிறந்தது. (ஆண்டுக்கு 8% கழிவு எனக் கொள்க.)

  15. ரூ.80 க்கு 100 மதிப்புள்ள பங்கின் 7% ரூ.8,000 கோபால் என்பவர் முதலீடு செய்துள்ளார். ஒரு வருடத்திற்குப் பிறகு அந்தப் பங்குகளை. 1பங்கிற்கு ரூ.75 க்கிற்கு விற்கிறார். (வருமானம் உட்பட) மற்றும் ரூ 41-க்கு ரூ 75 மதிப்புள்ள பங்கின் 18% ல் முதலீடு செய்ய முன்வருகிறார் எனில்
    (i) முதல் வருடத்தில் அவருடைய ஈவுத் தொகை
    (ii) இரண்டாம் வருடத்தில் அவருடைய ஆண்டு வருமானம்
    (iii) அவருடைய அசல் மூலதனத்திற்கு அதிகரித்த சதவீதம் ஆகியவைகளைக் காண்க.

  16. அனைத்து வினாக்களுக்கும்  விடையளி :

    10 x 3 = 30
  17. ஆண்டுக்கு 15% வட்டி வீதம் எனில் 16 வருடங்கள் கழித்து ஒரு நபர் ரூ.1,67,160 பெறுவதற்கு எவ்வளவு தொகையை ஆண்டு தோறும் செலுத்த வேண்டும் [(1.15)16=9.358)]

  18. ஒரு நபர் ஒவ்வொரு வருடத்தின் ஆரம்பத்திலும் ரூ.4,000 முதலீடு செய்கிறார்.ஆண்டுக்கு 14% சதவீதம் வட்டி கிடைக்குமெனில் 10 வருடங்கள் கழித்து கிடைக்கும் தொகையினைக் காண்க [(1.14)10=3.707] 

  19. ஒரு நிதிநிறுவனத்திலிருந்து ஒருவர் 16%வட்டி விகிதத்தில் ரூ.7,00,00,000 கடனாக பெறுகிறார்.திருப்பி செலுத்துவதற்கான கால அளவு 15 வருடங்கள் எனில் ஒவ்வொரு மாதத்தின் ஆரம்பத்தில் அவர் செலுத்தக் கூடிய தவணைத் தொகையினைக்  காண்க [(1.0133)180=9.772]

  20. ஆண்டிற்கு 10% வட்டி வீதத்தில் சாதாரண தவணை பங்கீட்டுத் தொகை ரூ.3,200 க்கு 12 ஆண்டுகளுக்கான தொகையினைக் காண்க [(1.1)12 = 3.3184]

  21. காலாண்டுக்கு ஒருமுறை 8% வட்டியில் ரூ.2,000 த்தை 10 ஆண்டுகளுக்கு செலுத்தினால் தவணை பங்கீட்டுத் தொகையின் தொகையினைக் காண்க [(1.02)40=2.2080]

  22. 10% கூட்டு வட்டியில் ஒவ்வொரு வருடத்தின் ஆரம்பத்தில் செலுத்தக் கூடிய தவணை பங்கீட்டுத் தொகை ரூ.5,000 க்கு 12 வருடங்களின் முடிவில் கிடைக்கும் தொகையினைக் காண்க

  23. ஒரு நிறுவனத்திலிருந்து சமமதிப்பு ரூ.10 உடைய 9% பங்கு வீதம் அளிக்கும் 20 பங்குகளை ஒருவர் வாங்குகிறார்.அந்த 20 பங்குகள் மூலம் கிடைக்கும் பணத்தில் 12% பங்கு வீதம் பெற வேண்டுமெனில் ஒரு பங்கின் சந்தை மதிப்பு காண்க

  24. எது சிறந்த முதலீடு 12% ரூ.20 முகமதிப்புள்ள ரூ.16(அல்லது) 15% ரூ.20 முகமதிப்புள்ள ரூ.24

  25. ஆண்டுக்கு 7% சதவீதம் கூட்டு வட்டி சேர்க்கப்படும் போது ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் ரூ.500 வீதம் 7 ஆண்டுகளுக்கு செலுத்தப்படும் தவணைப் பங்கீட்டுத் தொகையின் மொத்தத் தொகையைக்  காண்க

  26. நவீன் என்பவர் ஒவ்வொரு மாதத்தின் ஆரம்பத்தில் ரூ.250 கணக்கில் செலுத்துகிறார்.6% ஆண்டு கூட்டு வட்டியில் மாதந்தோறும் கூட்டு வட்டி சேர்க்கப்படுகிறது.அவரின் வைப்புத் தொகை குறைந்து ரூ.6390 எத்தனை மாதங்களில் கிடைக்கும்

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு வணிகக் கணிதம் நிதியியல் கணிதம் பாடத்தின் முக்கிய 2 & 3 மதிப்பெண் வினா ( 11th Standard Business Maths Financial Mathematics Important 2 & 3mark Questions

Write your Comment