கார மற்றும் காரமண் உலோகங்கள் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. கார உலோகங்களுக்கு, பின்வருவனவற்றுள் எந்த வரிசைப்பண்பு தவறானது?

    (a)

    நீரேற்றும் ஆற்றல் : Li > Na > K > Rb

    (b)

    அயனியாக்கும் ஆற்றல் : Li > Na > K > Rb

    (c)

    அடர்த்தி : Li < Na < K < Rb

    (d)

    அணு உருவளவு : Li < Na < K < Rb

  2. சோடியம் எதில் சேமிக்கப்படுகிறது?

    (a)

    ஆல்கஹால்

    (b)

    நீர்

    (c)

    மண்ணெண்ணெய்

    (d)

    இவற்றில் ஏதுமில்லை

  3. லித்தியம் எதனுடன் மூலைவிட்ட தொடர்பு உடையது?

    (a)

    சோடியம்

    (b)

    மெக்னீசியம்

    (c)

    கால்சியம்

    (d)

    அலுமினியம்

  4. கீழ்காண்பவற்றுள் எது அதிகபட்ச நீரேற்ற ஆற்றலைக் கொண்டுள்ளது?

    (a)

    MgCl2

    (b)

    CaCl2

    (c)

    BaCl2

    (d)

    SrCl2

  5. நீரில் இட்ட நீற்றுச் சுண்ணாம்பின் தொங்கல் கரைசல் _____ என அறியப்படுகிறது?

    (a)

    சுண்ணாம்பு நீர்

    (b)

    சுட்ட சுண்ணாம்பு

    (c)

    சுண்ணாம்பு பால்

    (d)

    நீற்ற சுண்ணாம்புக் கரைசல்

  6. 3 x 2 = 6
  7. தூள் பூத்தல் (efflorescence) என்பதை விளக்கு

  8. பின்வரும் செயல்முறைகளுக்கு சமன்செய்யப்பட்ட சமன்பாடுகளை எழுதுக
    (அ) கால்சியம் ஹைட்ரஜன் கார்பனேட் கரைசலை ஆவியாக்குதல்
    (ஆ) கால்சியம் ஆக்சைடை கார்பனுடன் சேர்த்து வெப்பப்படுத்துதல்

  9. பாரீஸ் சாந்து எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

  10. 3 x 3 = 9
  11. நீரில் சோடியம் ஹைட்ராக்சைடின் கரைதிறன், சோடியம் குளோரைடின் கரைதிறனை விட மிக அதிகம் ஏன்?

  12. பின்வருவற்றிற்கு முறையான பெயர்களைத் தருக
    (i) மெக்னீசிய பால்மம்
    (ii) கடுங்காரம்
    (iii) சுண்ணாம்பு
    (iv) எரி பொட்டாஷ்
    (v) சலவை சோடா
    (vi) சோடா சாம்பல்
    (vii) ட்ரோனா(trona)

  13. பாரீஸ் சாந்தின் பயன்களைக் குறிப்பிடுக

  14. 2 x 5 = 10
  15. இரண்டாம் தொகுதி தனிமங்களின் முக்கியமான பொதுப்பண்புகளை விளக்குக

  16. ஜிப்சத்தின் பயன்களைத் தருக

*****************************************

Reviews & Comments about 11th Standard வேதியியல் - கார மற்றும் காரமண் உலோகங்கள் Book Back Questions ( 11th Standard Chemistry - Alkali and Alkaline Earth Metals Book Back Questions )

Write your Comment