கார மற்றும் காரமண் உலோகங்கள் ஒரு மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 25
    25 x 1 = 25
  1. கார உலோகங்களுக்கு, பின்வருவனவற்றுள் எந்த வரிசைப்பண்பு தவறானது?

    (a)

    நீரேற்றும் ஆற்றல் : Li > Na > K > Rb

    (b)

    அயனியாக்கும் ஆற்றல் : Li > Na > K > Rb

    (c)

    அடர்த்தி : Li < Na < K < Rb

    (d)

    அணு உருவளவு : Li < Na < K < Rb

  2. பின்வரும் சேர்மங்களில் எது கார உலோகங்களுடன் வினைப்பட்டு H2 வாயுவை வெளியேற்றுவதில்லை?

    (a)

    எத்தனாயிக் அமிலம்

    (b)

    எத்தனால்

    (c)

    பீனால்

    (d)

    இவற்றில் ஏதுமில்லை

  3. கீழ்க்கண்ட வினை நிகழ்வதற்கு பின்வருவனவற்றுள் எது மிக அதிக இயல்பினைக் (tendency) கொண்டுள்ளது.
    \({ M }^{ + }\left( g \right) \xrightarrow [ Aqueous ]{ Medium } { M }^{ + }\left( aq \right) \)

    (a)

    Na

    (b)

    Li

    (c)

    Rb

    (d)

    K

  4. தவறான கூற்றைக் கண்டறியவும்

    (a)

    உலோக சோடியம் ,கரிம பண்பறி பகுப்பாய்வில் பயன்படுத்தப்படுகிறது.

    (b)

    சோடியம் கார்பனேட் நீரில் கரையக்கூடியது, மேலும் இது கனிம பண்பறி பகுப்பாய்வில் பயன்படுத்தப்படுகிறது.

    (c)

    சால்வே முறையில் பொட்டாசியம் கார்பனேட்டை தயாரிக்க முடியும்

    (d)

    பொட்டாசியம் பைகார்பனேட் அமிலத் தன்மை உடைய உப்பு

  5. லித்தியம் எதனுடன் மூலைவிட்ட தொடர்பு உடையது?

    (a)

    சோடியம்

    (b)

    மெக்னீசியம்

    (c)

    கால்சியம்

    (d)

    அலுமினியம்

  6. கார உலோக ஹேலைடுகளின் , அயனித் தன்மையின் ஏறுவரிசை

    (a)

    MF < MCl < MBr < MI

    (b)

    MI < MBr < MCl < MF

    (c)

    MI < MBr < MF < MCl

    (d)

    இவற்றில் ஏதுமில்லை

  7. எம்முறையில், உருகிய சோடியம் ஹைட்ராக்சைடு மின்னாற்பகுக்கப்பட்டு, சோடியம் பிரித்தெடுக்கப்படுகிறது?

    (a)

    காஸ்ட்னர் முறை

    (b)

    சயனைடு முறை

    (c)

    டெளன் முறை

    (d)

    இவை அனைத்தும்

  8. கீழ்காண்பவற்றுள் எது அதிகபட்ச நீரேற்ற ஆற்றலைக் கொண்டுள்ளது?

    (a)

    MgCl2

    (b)

    CaCl2

    (c)

    BaCl2

    (d)

    SrCl2

  9. கார மண் உலோகங்களின், கார்பனேட்டுகளின் ,கரைதிறன்களின் சரியான வரிசை

    (a)

    BaCO3 > SrCO3 > CaCO3 > MgCO3

    (b)

    MgCO3 > CaCO3 > SrCO3 > BaCO3

    (c)

    CaCO3 > BaCO3 > SrCO3 > MgCO3

    (d)

    BaCO3 > CaCO3 > SrCO3 > MgCO3

  10. நீரில் இட்ட நீற்றுச் சுண்ணாம்பின் தொங்கல் கரைசல் _____ என அறியப்படுகிறது?

    (a)

    சுண்ணாம்பு நீர்

    (b)

    சுட்ட சுண்ணாம்பு

    (c)

    சுண்ணாம்பு பால்

    (d)

    நீற்ற சுண்ணாம்புக் கரைசல்

  11. சேர்மம் (X) ஐ வெப்பப்படுத்தும்போது நிறமற்ற வாயுவையும், ஒரு வீழ்படிவையும் தருகிறது. அந்த வீழ்படிவை நீரில் கரைத்து சேர்மம் (B) பெறப்படுகிறது. சேர்மம் (B) ன் நீர்க்கரைசலில் அதிகளவு CO2 ஐ குமிழிகளாக செலுத்தும்போது சேர்மம் (C ) உருவாகிறது. (C) ஐ வெப்பபடுத்தும்போது மீண்டும் (X)ஐத் தருகிறது. சேர்மம் (B) ஆனத

    (a)

    CaCO3

    (b)

    Ca(OH)2

    (c)

    Na2CO3

    (d)

    NaHCO3

  12. பின்வரும் சேர்மங்களில் எதற்கு “Blue John” எனும் பெயர் வழங்கப்பட்டுள்ளது?

    (a)

    CaH2

    (b)

    CaF2

    (c)

    Ca3(PO4)2

    (d)

    CaO

  13. பின்வருவனவற்றுள் மிகக் குறைந்த வெப்ப நிலைப்புத்தன்மை கொண்டது

    (a)

    K2CO3

    (b)

    Na2CO3

    (c)

    BaCO3

    (d)

    Li2CO3

  14. கூற்று : BeSO4 நீரில் கரைகிறது, ஆனால் BeSO4 நீரில் கரைவதில்லை.
    காரணம் : தகுதியில் Be லிருந்து Ba வரை செல்ல செல்ல நீரேற்ற ஆற்றல் குறைகிறது.மேலும் படிகக்கூடு ஆற்றல் மாறாமல் உள்ளது.      

    (a)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மற்றும் காரணம், கூற்றிற்கான சரியான விளக்கமாகமாகமாகும்.      

    (b)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மற்றும் காரணமானது, கூற்றிற்கான சரியான விளக்கம் இல்லை.   

    (c)

    கூற்று சரி, ஆனால் காரணம் தவறு.  

    (d)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.  

  15. பின்வரும் சேர்மங்களை கவனி:
    I.ஜிப்சம்
    II.பாரீஸ் சாந்து
    ஈசி.கால்சியம் சல்பைடு
    IV.எப்சம் உப்பு
    இவற்றுள்,சிலை செய்வதற்கான வார்ப்புகள்செய்ய பயன்படும் சேர்மம்

    (a)

    I

    (b)

    II

    (c)

    III

    (d)

    IV

  16. கீழ்க்கண்டவற்றுள் காரமண் உலோகங்களின் இணைதிறன்

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    0

  17. கார உலோகங்களின் அயனி ஆரம் அமைந்துள்ள வரிசை

    (a)

    Li<Na<K<Rb<Cs

    (b)

    Na<Li<K<Rb<Cs

    (c)

    Li<Na<K<Rb<Cs

    (d)

    Na<Li<Rb<K<Cs

  18. கீழ்க்கண்டவற்றுள் எது சலவை தூளின் வாய்பாடு?

    (a)

    CaCl2.H2O

    (b)

    CaOCl2.H2O

    (c)

    CaSO4.2H2O

    (d)

    CaSO4.\(\frac{1}{2}\)H2O

  19. மத்தாப்புத் தொழிலில் பின்வரும் எந்தத் தனிமம் பயன்படுகிறது.

    (a)

    பேரியம்

    (b)

    கால்சியம்

    (c)

    மெக்னீசியம்

    (d)

    பெரிலியம்

  20. கடல் நீரில் அதிக அளவில் கரைந்துள்ள மூன்றாவது தனிமம்

    (a)

    பெரிலியம்

    (b)

    பேரியம்

    (c)

    கால்சியம்

    (d)

    மெக்னீசியம்

  21. பின்வருவனவற்றை கவனி:
    I.கர்மலைட் II.NaCl 
    இவற்றுள், உருகிய ________ மின்னாற் பகுப்பின் மூலம் மெக்னீசியம் தயாரிக்கப்படுகிறது.

    (a)

    I மட்டும்

    (b)

    II மட்டும்

    (c)

    இரண்டும்

    (d)

    இரண்டுமில்லை

  22. பின்வருவனவற்றுள் எது பாரீஸ் சாந்து என அறியப்படுகிறது?

    (a)

    CaSO4.2H2O

    (b)

    CaCl2

    (c)

    CaSO4

    (d)

    CaSO4.\(\frac{1}{2}\)H2O

  23. பின்வருவனவற்றுள் பொருந்தாத இணையை கண்டறி.
    சுடரில் தனிமங்களால் கொடுக்கப்படும் நிறங்கள் கீழே தரப்பட்டுள்ளன.அவற்றில் பொருந்தாததை கண்டறி.

    (a)

    பேரியம் - பச்சை ஆப்பிள் நிறம்

    (b)

    ரேடியம் - கிரிம்சன்சிவப்பு

    (c)

    கால்சியம் செங்கல் சிவப்பு நிறம்

    (d)

    ஸ்டிரான்சியம் - நீல நிறம்

  24. பின்வரும் காரமண் உலோகங்களை கவனி:
    அ] பெரிலியம்
    ஆ] மெக்னீசியம்
    இ] கால்சியம்
    ஈ] பேரியம்
    இவற்றுள், மிகவும் அதிக அயனியாக்கும் ஆற்றலை உடையது.

    (a)

    I

    (b)

    II

    (c)

    III

    (d)

    IV

  25. பின்வருவனவற்றுள் சரியானது எது?

    (a)

    லித்தியம் நைட்ரஜனுடன் நேரடியாக இணைந்து Li3N ஐ தருகிறது.

    (b)

    மெக்னீசியம் நைட்ரஜனுடன் நேரடியாக இணைந்து Mg3N ஐ தருகிறது

    (c)

    (அ) மற்றும் (ஆ) சரி

    (d)

    லித்தியம் மற்றும் மெக்னீசியம் ஆகிய இரண்டும் பைகார்பனேட்டுகளை உருவாக்குகின்றன.

*****************************************

Reviews & Comments about 111th Standard வேதியியல் கார மற்றும் காரமண் உலோகங்கள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்கள் ( 11th Standard Chemistry Alkali and Alkaline Earth Metals One Marks Question and answer )

Write your Comment