கார மற்றும் காரமண் உலோகங்கள் மூன்று மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 27
    9 x 3 = 27
  1. நீரில் சோடியம் ஹைட்ராக்சைடின் கரைதிறன், சோடியம் குளோரைடின் கரைதிறனை விட மிக அதிகம் ஏன்?

  2. சோடியம் கார்பனேட்டை தயாரிக்கும் சால்வே முறையில் நிகழும் வேதிவினைகளின் சமன்பாடுகளை எழுதுக

  3. பின்வரும் வேதி வினைகளுக்கு சமன்படுத்தப்பட்ட சமன்பாடுகளை எழுதுக.
    (i) நைட்ரஜன் வாயு உடன் லித்தியம் வினைபுரிதல்
    (ii) திட சோடியம் பைகார்பனேட்டை வெப்பப்படுத்துதல்
    (iii) ஆக்சிஜன் வாயு உடன் ருபீடியம் வினைபுரிதல்
    (iv) CO2 உடன் திண்ம பொட்டாசியம் ஹைட்ராக்சைடு வினைபுரிதல்
    (v) கால்சியம் கார்பனேட்டை வெப்பப்படுத்துதல்
    (vi) ஆக்சிஜன் வாயு உடன் கால்சியம் சேர்த்து வெப்பப்படுத்துதல்.

  4. பின்வருவற்றிற்கு முறையான பெயர்களைத் தருக
    (i) மெக்னீசிய பால்மம்
    (ii) கடுங்காரம்
    (iii) சுண்ணாம்பு
    (iv) எரி பொட்டாஷ்
    (v) சலவை சோடா
    (vi) சோடா சாம்பல்
    (vii) ட்ரோனா(trona)

  5. பாரீஸ் சாந்தின் பயன்களைக் குறிப்பிடுக

  6. மெக்னீசியம் ஆக்சைடு அல்லது மெக்னீசியம் புளூரைடு இவற்றில் எது அதிக உருகுநிலையை கொண்டிருக்கும் என்று நீ எதிர்பார்க்கிறாய்? அதற்கான காரணத்தை விளக்கு.

  7. பின்வருவனவற்றை குறித்து சிறு குறிப்பு எழுதுக.
    (i) கார உலோகங்களின் எலக்ட்ரான் அமைப்பு
    (ii) கார உலோகங்களின் பொதுவான ஆக்ஸிஜனேற்ற

     

  8. தனிமவரிசை அட்டவணையின் முதல் தொகுதியில் காணப்படும் தனிமங்கள் கார உலோகங்கள் எனப்படுகின்றன.அவற்றின் வேதிப்பண்புகளை பட்டியலிடு.

  9. கார உலோகங்களின் பயன்களை வரிசைப்படுத்துக.

*****************************************

Reviews & Comments about 11th Standard வேதியியல் - கார மற்றும் காரமண் உலோகங்கள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Standard Chemistry - Alkali And Alkaline Earth Metals Three Marks Questions )

Write your Comment