வேதியியலின் அடிப்படைக் கருத்துக்கள் மற்றும வேதிக் கணக்கீடுகள் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 35
    5 x 1 = 5
  1. 40 மி.லி மீத்தேன் வாயுவானது 80 மி.லி ஆக்சிஜனைக் கொண்டு முழுமையாக எரிக்கப்படுகிறது. அறை வெப்பநிலைக்கு குளிர்விக்கப்பட்ட பிறகு எஞ்சியுள்ள வாயுவின் கனஅளவு

    (a)

    40 மி.லி CO2 வாயு

    (b)

    40 மி.லி CO2 மற்றும் 80 மி.லி H2O வாயு

    (c)

    60 மி.லி CO2 மற்றும் 60 மி.லி H2O வாயு

    (d)

    120 மி.லி CO2 வாயு

  2. கார்பன், கார்பன் மோனாக்ஸைடு கார்பன் டையாக்ஸைடு எனும் இரண்டு ஆக்ஸைடுகளை உருவாக்குகிறது. எந்த தனிமத்தின் சமான நிறை மாறாமல் உள்ளது?

    (a)

    கார்பன்

    (b)

    ஆக்ஸிஜன்

    (c)

    கார்பன் மற்றும் ஆக்ஸிஜன்

    (d)

    கார்பன், ஆக்ஸிஜன் இரண்டுமில்லை

  3. 0.018 கிராம் எடையுள்ள நீர்த்துளியில் உள்ள நீர் மூலக்கூறுகளின் எண்ணிக்கை 

    (a)

    6.022 × 1026

    (b)

    6.022 × 1023

    (c)

    6.022 × 1020

    (d)

    9.9 × 1022

  4. கார ஊடகத்தில் பொட்டாசியம் பெர்மாங்கனேட்டின் சமான நிறை மதிப்பு (MnO4- + 2H2O+3e-→ MnO2 +4OH-)

    (a)

    31.6

    (b)

    52.7

    (c)

    79

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  5. 0° C மற்றும் 1 atm அழுத்தத்தில் 7.5g வாயு 5.6 L கனஅளவை அடைத்துக்கொள்கிறது எனில், அந்த வாயு

    (a)

    NO

    (b)

    N2O

    (c)

    CO

    (d)

    CO2

  6. 4 x 2 = 8
  7. ஒப்பு அணு நிறை வரையறு

  8. சமான நிறை வரையறு

  9. ஆக்சிஜனேற்றம், ஒடுக்கம் வேறுபடுத்துக.

  10. பின்வரும் தரவுகளைக் கொண்டு, இயற்கையில் காணப்படும் மெக்னீஷியத்தின் சராசரி அணு நிறையைக் காண்க.

    ஐசோடோப்பு ஐசோடோப்பு அணு நிறை வளம் (%)
    Mg24 23.99 78.99
    Mg25 24.99 10.00
    Mg26 25.98 11.01
  11. 4 x 3 = 12
  12. 10 மோல் அம்மோனியாவை உருவாக்க எத்தனை மோல் ஹைட்ரஜன் தேவை?

  13. 273 K மற்றும் 1 atm அழுத்தத்தில், 11.2 L லிட்டர் HCl ஐ உருவாக்கத் தேவையான குளோரினின் கன அளவைக் கண்டறிக.

  14. ஒரு தனிம அணுவின் நிறை 6.645 x 10-23 g ஆகும். 0.320 kgல் உள்ள அத்தனிமத்தின் மோல் எண்ணிக்கையைக் கணக்கிடுக.

  15. ஈத்தேன் எரிதல் வினையின் முடிவில் 44 கிராம் CO2 (g) வாயுவை உருவாக்கத் தேவைப்படும் ஈத்தேனின் மோல் எண்ணிகையைக் கணக்கிடுக

  16. 2 x 5 = 10
  17. அலுமினியத்திற்கும், பெர்ரிக் ஆக்ஸைடிற்கும் இடையே நிகழும் வினை 3273K அளவிற்கு வெப்பத்தை உருவாக்குகிறது, இது உலோகங்களை வெட்டவும், ஒட்டவும் பயன்படுகிறது. Alன் அணு நிறை = 27u, 0 னின் அணு நிறை = 16 u)
    2Al + Fe2O3 → Al2O3 +2Fe; இந்த வினையில் 324 g அலுமினியத்தை 1.12 Kg பெர்ரிக் ஆக்ஸைடுடன் வினைப்படுத்தும்போது
    i) உருவாகும் Al2O3 இன் நிறையைக் காண்க
    ii) வினையின் முடிவில் வினைபுரியாமல் உள்ள "அதிகப்படியான வினைப்பொருள்" எவ்வளவு மீதமுள்ளது?

  18. ஆக்ஸிஜனேற்ற எண் முறையில் பின்வரும் வினைகளைச் சமன் செய்க
    i) K2Cr2O7 + KI + H2SO4 → K2SO4 + Cr2(SO4)3 +I2+H2O
    ii) KMnO4 + Na2SO3 → MnO2 + Na2SO4 + KOH
    iii) Cu+ HNO3 → Cu(NO3)2 + NO2+ H2O
    iv) KMnO4+H2C2O4 + H2SO4 → K2SO4 + MnSO4 + CO2 + H2O

*****************************************

Reviews & Comments about 11th Standard வேதியியல் - வேதியியலின் அடிப்படைக் கருத்துக்கள் மற்றும வேதிக் கணக்கீடுகள் Book Back Questions ( 11th Standard Chemistry - Basic Concepts of Chemistry and Chemical Calculations Book Back Questions )

Write your Comment