முதல் இடைத்தேர்வு மாதிரி வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. கூற்று (A): இரு மோல் குளுக்கோஸில் 12.044 × 1023 குளுக்கோஸ் மூலக்கூறுகள் உள்ளன.
    காரணம் (R): ஒரு மோல் அளவுள்ள எந்த ஒரு பொருளிலும் உள்ள உட்பொருட்களின் எண்ணிக்கை 6.02x1022 

    (a)

    கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, மேலும் காரணம் (R) ஆனது கூற்று (A)க்கான சரியான விளக்க

    (b)

    கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, மேலும் காரணம் (R)ஆனது கூற்று (A)க்கான சரியான விளக்கமல்ல

    (c)

    கூற்று (A) சரி மற்றும் காரணம் (R) தவறு

    (d)

    கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் தவறு

  2. 1.1 g வாயு, அறை வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் (25° c மற்றும் 1atm அழுத்தம்) 612.5 mL கனஅளவை அடைத்துக்கொள்கிறது. அந்த வாயுவின் மோலார் நிறை

    (a)

    66.25 g mol-1

    (b)

    44 g mol-1

    (c)

    24.5 g mol-1

    (d)

    662.5 g mol-1

  3. பின்வருவனவற்றை கவனி
    I. அணு ஆரம்  II. எலக்ட்ரான் நாட்டம்  III. எலக்ட்ரான் கவர்தன்மை  IV. எலக்ட்ரான் நாட்டம் இவற்றில் ஒப்பீட்டு ஆவர்த்தன பண்பு எது?

    (a)

    I

    (b)

    II

    (c)

    III

    (d)

    IV

  4. எதிர்மாறு வெப்பநிலைக்கும், வாண்டர்வால்ஸ் மாறிலிக்கும் உள்ள தொடர்பு   

    (a)

    \({ T }_{ i }=\frac { Rb }{ 2a } \)

    (b)

    \({ T }_{ i }=\frac { 2a }{ Rb } \)

    (c)

    \({ T }_{ i }=\frac { 8a }{ 27{ R }^{ 2 }b } \)

    (d)

    \({ T }_{ i }=\frac { 8a }{ 27Rb } \)

  5. மாறா வெப்பநிலையில் வரையப்படும் வரைகோடு சமவெப்பநிலைக் கோடு எனப்படும்.இக்கோடு காட்டும் தொடர்பு 

    (a)

    p மற்றும் \(\frac { 1 }{ v } \)

    (b)

    pv  மற்றும் v 

    (c)

    p  மற்றும் v 

    (d)

    v  மற்றும் \(\frac { 1 }{ p } \)

  6. 5 x 2 = 10
  7. எளிய விகித வாய்ப்பாடு வரையறு.

  8. 2s, 4p, 5d மற்றும் 4f ஆர்பிட்டால்களுக்கு எத்தனை ஆரக் கணுக்கள் (radial node) காணப்படுகின்றன? எத்தனை கோணக் கணுக்கள் (angular nodes) காணப்படுகின்றன.

  9. ஹைட்ரஜனை விட லித்தியத்தின் அயனியாக்கும் ஆற்றல் குறைவாக க் காணப்படுகிறது. உன் விடைக்கான காரணத்தை நியாயப்படுத்துக.

  10. மூன்று வகையான சகப்பிணைப்பு ஹைட்ரைடுகளைக் குறிப்பிடுக.

  11. ஜூல் தாம்சன் விளைவை எழுதுக. 

  12. 5 x 3 = 15
  13. ஈத்தேன் எரிதல் வினையின் முடிவில் 44 கிராம் CO2 (g) வாயுவை உருவாக்கத் தேவைப்படும் ஈத்தேனின் மோல் எண்ணிகையைக் கணக்கிடுக

  14. 66.26x10-28 kgms-1 உந்தத்தை உடைய துகள் ஒன்றின் டி - பிராக்ளி அலைநீளத்தை கணக்கிடு.

  15. Z = 118 ஐக் கொண்ட தனிமம், எந்த வரிசை மற்றும் தொகுதியில் இடம் பெற்றுள்ளது?

  16. மோட்டார் வாகன ஓட்டி பிரேக்கினை உபயோகிக்கும் போது பயணிகள் முன்பக்கமாக விழுவார்கள். ஆனால் ஹீலியம் பலூன் வண்டியின் பின்பக்கமாகத் தள்ளப்படும்.ஏன்?

  17. ஒரு சமவெப்ப அழுத்த நிலையில் \({ C }_{ n }{ H }_{ 2n-2 }\) என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஹைட்ரோகார்பன் போன்று ஹைட்ரஜன் வாயு \(3\sqrt { 3 } \) மடங்கு விரவுதல் வீதம் கொண்டதெனில் n ன் மதிப்பு என்ன?

  18. 4 x 5 = 20
  19. ஆக்சிஜனேற்ற எண்ணை வரையறு. பின்வரும் சமன்பாட்டை ஆக்சிஜனேற்ற எண் முறையை பயன்படுத்தி சமன்செய்க.
    AS2S3+ HNO3 + H2\(\rightarrow \) H3AsO4 + H2SO4 + NO

  20. எலக்ட்ரான் கவர்தன்மைக்கான பாலிங் முறையின் அடிப்படையை சுருக்கமாக தரவும்.

  21. 300K ல் 525g ஆக்சிஜன் மற்றும் 65.1g CO2 அடங்கியுள்ள தொட்டியில் கலவையின் மொத்த அழுத்தம் 9.21 atm. கலவையிலுள்ள ஒவ்வொரு வாயுவின் பகுதி அழுத்தங்களை கண்டறிக.

  22. நல்லியல்புத் தன்மையில் இருந்து விலகுதல் என்றால் என்ன?விளக்குக.

*****************************************

Reviews & Comments about 11th Standard வேதியியல் முதல் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாள் ( 11th Standard Chemistry First Mid Term Question Paper )

Write your Comment