வாயு நிலைமை ஒரு மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
    20 x 1 = 20
  1. வாயுக்கள் அதிக அழுத்தத்தில் நல்லியல்பு பண்பிலிருந்து விலகலடைகின்றன. கீழ்கண்ட
    கூற்றுகளில் நல்லியல்பு அல்லா தன்மைக்கு பொருந்தும் சரியான கூற்று எது? எவை

    (a)

    அதிக அழுத்தத்தில் மூலக்கூறுகளுக்கிடையே மோதல் அதிகரிக்கின்றன.

    (b)

    அதிக அழுத்தத்தில் வாயு மூலக்கூறுகள் ஒரே திசையில் நகர்கின்றன.

    (c)

    அதிக அழுத்தத்தில் வாயுவின் கனஅளவு புறக்கணிக்கத்தக்கதாகும்.

    (d)

    அதிக அழுத்தத்தில் மூலக்கூறுகளுக்கிடையேயான கவர்ச்சிவிசை புறக்கணிக்கத்தக்கதன்று.

  2. கீழ்க்கண்டவற்றுள் எது வாயுநிலைக்கான சரியான வாண்டர் வால்ஸ் சமன்பாடாகும்.

    (a)

    \(\left( P+\frac { a }{ { n }^{ 2 }{ V }^{ 2 } } \right) \left( V-nb \right) =nRT\)

    (b)

    \(\left( P+\frac { na }{ { n }^{ 2 }{ V }^{ 2 } } \right) \left( V-nb \right) =nRT\)

    (c)

    \(\left( P+\frac { an^2 }{ { V }^{ 2 } } \right) \left( V-nb \right) =nRT\)

    (d)

    \(\left( P+\frac { n^2a^2 }{ { V }^{ 2 } } \right) \left( V-nb \right) =nRT\)

  3. ஒரு காலியாகவுள்ள கலனில் 298K யில் எடையுள்ள மீத்தேன் மற்றும் ஆக்சிஜன் நிரப்பப்படுகின்றன. மொத்த அழுத்தத்தில் ஆக்சிஜன் மூலக்கூறு கொடுக்கும் அழுத்த பின்னம்.

    (a)

    1/3

    (b)

    1/2

    (c)

    2/3

    (d)

    1/3 x 273 x 298

  4. இயல்பு வாயுக்கள் குறிப்பிட்ட அழுத்த வரம்பில் நல்லியல்பு வாயுக்களாக நடக்கும் வெப்பநிலை

    (a)

    நிலைமாறு வெப்பநிலை 

    (b)

    பாயில் வெப்பநிலை 

    (c)

    எதிர்மாறு வெப்பநிலை

    (d)

    குறைக்கப்பட்ட வெப்பநிலை 

  5. அம்மோனியா குடுவை மற்றும் HCl குடுவை இரண்டும் ஒரு நீண்டகுழாய் வழியே இணைக்கப்பட்டு இரண்டும் ஒரே நேரத்தில் திறக்கப்படுகின்றன. வெண்ணிற அம்மோனியம் குளோரைடு வளையம் முதன்முதலில் எங்கு உருவாகின்றது?

    (a)

    குழாயின் நடுப்பகுதியில்

    (b)

    ஹைட்ரஜன் குளோரைடு குடுவையருகில்

    (c)

    அம்மோனியா குடுவையருகில்

    (d)

    குழாயின் முழுநீளத்திலும் முழுமையாக 

  6. வாயுமாறிலியின் மதிப்பு 

    (a)

    0.082dm3atm.

    (b)

    0.987 cal mol-1 K-1

    (c)

    8.3 J mol-1K-1

    (d)

    8 erg mol-1K-1

  7. வானியல் ஆய்வுமையங்களில் உபயோகப்படும் அதிக வெப்பபலூன்களின் பயன்பாடு இவ்விதியின் அடிப்படையில் அமைகிறது 

    (a)

    பாயிலின் விதி

    (b)

    நியூட்டனின் விதி 

    (c)

    கெல்வினின் விதி

    (d)

    பிரௌனின் விதி

  8. 400K ல் 71.0 bar CO2 ன் அமுக்கத்திறன் காரணி 0.8697 இந்த நிலையில் CO2 ன் மோலார் கனஅளவு

    (a)

    22.04 dm3

    (b)

    2.24 dm3

    (c)

    0.41 dm3

    (d)

    19.5dm3

  9. ஒரு சமவெப்ப அழுத்த நிலையில் CnH2n-2 என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட ஹைட்ரோகார்பன் போன்று ஹைட்ரஜன் வாயு 3\(\sqrt{3}\) மடங்கு விரவுதல் வீதம் கொண்டதெனில் 'n' ன் மதிப்பு என்ன?

    (a)

    8

    (b)

    4

    (c)

    3

    (d)

    1

  10. மாறாத அழுத்தத்தில் வெப்பநிலை மாற்றத்தால் ஏற்படும் கனஅளவின் ஒப்பீட்டு அதிகரிப்பு ஆகும். அதாவது \(\alpha =\frac { 1 }{ V } { \left( \frac { \partial V }{ \partial T } \right) }_{ p }\)நல்லியல்பு வாயுக்களுக்கான α மதிப்பு

    (a)

    T

    (b)

    1/T

    (c)

    P

    (d)

    ஏதும் இல்லை

  11. நல்லியல்பு பண்பிலிருந்து அதிக விலக்கம் அடையும் வாயு

    (a)

    CH4(g)

    (b)

    NH3(g)

    (c)

    H2(g)

    (d)

    N2(g)

  12. 227°C யில் 5.00 atm அழுத்தத்திலுள்ள N2 வாயுவின் அடர்த்தி என்ன?

    (a)

    1.40 g/L

    (b)

    2.81g/L

    (c)

    3.41 g/L

    (d)

    0. 29 g/L

  13. 25 கிராம் நிறையுள்ள கீழ்கண்ட வாயுக்கள் 27oயில் 600mm Hg அழுத்தத்தில் எடுக்கப்பட்டு உள்ளன. இவற்றில் குறைந்த கன அளவு கொண்ட வாயு எது?

    (a)

    HBr

    (b)

    HCl

    (c)

    HF

    (d)

    HI

  14. எதிர்மாறு வெப்பநிலைக்கும், வாண்டர்வால்ஸ் மாறிலிக்கும் உள்ள தொடர்பு   

    (a)

    \({ T }_{ i }=\frac { Rb }{ 2a } \)

    (b)

    \({ T }_{ i }=\frac { 2a }{ Rb } \)

    (c)

    \({ T }_{ i }=\frac { 8a }{ 27{ R }^{ 2 }b } \)

    (d)

    \({ T }_{ i }=\frac { 8a }{ 27Rb } \)

  15. ஒரு இயல்பு வாயுவை வெப்பமாறாச் செயல்முறையில் விரிவடையச் செய்யும்போது 

    (a)

    வெப்பமடைகிறது 

    (b)

    குளிர்ச்சியடைகிறது 

    (c)

    வெடிக்கிறது 

    (d)

    a & b 

  16. வாயு A ன் மூலக்கூறுகள் வாயு Bன் மூலக்கூறுகளை விட நான்கு மடங்கு அதிக வேகத்தில் ஒரே வெப்பநிலையில் இயங்குகிறது எனில் அவற்றின் மூலக்கூறு எடைகளின் \(\left[ \frac { { M }_{ A } }{ { M }_{ B } } \right] \) விகிதம் 

    (a)

    \(\frac { 1 }{ 16 } \)

    (b)

    4

    (c)

    \(\frac { 1 }{ 4 } \)

    (d)

    16

  17. ஒரு வாயு கீழ்கண்ட நிலைகளில் நல்லியல்பு தன்மையிலிருந்து விலக்கம் அடைகிறது 

    (a)

    அதிக வெப்பநிலை மற்றும் குறைந்த அழுத்தம் 

    (b)

    குறைந்த அழுத்தம்

    (c)

    குறைந்த வெப்பநிலை மற்றும் அதிக அழுத்தம் 

    (d)

    அதிக வெப்பநிலை

  18. ஒரு வாயுவின் நிலைமாறு வெப்பநிலை என்பது 

    (a)

    ஒரு குறிப்பிட்ட வெப்பநிலைக்கு மேல் வாயுவானது திரவமாகும் 

    (b)

    ஒரு குறிப்பிட்ட வெப்பநிலைக்கு மேல் அழுத்தத்தை அதிகரிப்பதால் திரவமாக்க இயலாது  

    (c)

    குறிப்பிட்ட வெப்பநிலையில் திண்மமாகும் 

    (d)

    குறிப்பிட்ட வெப்பநிலையில் வாயுவின் கனஅளவு பூஜ்ஜியமாகும் 

  19. மாறா வெப்பநிலையில் வரையப்படும் வரைகோடு சமவெப்பநிலைக் கோடு எனப்படும்.இக்கோடு காட்டும் தொடர்பு 

    (a)

    p மற்றும் \(\frac { 1 }{ v } \)

    (b)

    pv  மற்றும் v 

    (c)

    p  மற்றும் v 

    (d)

    v  மற்றும் \(\frac { 1 }{ p } \)

  20. 227°C மற்றும் 4 வளிமண்டல அழுத்தத்திலுள்ள ஆகிஸிஜன் வாயுவின் அடர்த்தி என்ன?(R = 0.082 L atom k-1 mol-1)

    (a)

    3.12 g/L

    (b)

    3.41 g/L

    (c)

    2.81 g/L

    (d)

    இவை எதுவுமில்லை 

*****************************************

Reviews & Comments about 11th Standard வேதியியல் வாயு நிலைமை ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள் ( 11th Standard Chemistry Gaseous State One Marks Question And Answer )

Write your Comment