+1 Public Exam March 2019 Important Creative Questions and Answers

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 200
    68 x 2 = 136
  1. ஒப்பு அணு நிறை வரையறு

  2. சமான நிறை வரையறு

  3. ஆக்சிஜனேற்றம், ஒடுக்கம் வேறுபடுத்துக.

  4. மோல் - வரையறு 

  5. எளிய விகித வாய்ப்பாடு வரையறு.

  6. ஆர்பிட்டாலின் வடிவம், ஆற்றல், திசையமைப்பு, உருவளவு ஆகியவற்றினை தரும் குவாண்டம் எண்கள் எவை?

  7. சரிபாதியளவு நிரப்பப்பட்ட ஆர்பிட்டால்கள் நிலைப்புத்தன்மை பெறுதல் p- ஆர்பிட்டாலைக் காட்டிலும் d – ஆர்பிட்டாலில் அதிகமாக உள்ளது. ஏன்?

  8. ஆர்பிட்டால் வரையறு. 3px மற்றும் 4\(d_{x^{2}-y ^{2} }\) ஆர்பிட்டாலில் உள்ள எலக்ட்ரானுக்கு n மற்றும் l மதிப்புகளைக் கூறுக

  9. பின்வரும் ஒவ்வொன்றிற்கும், துணைக்கூட்டின் குறியீடு, அனுமதிக்கப்பட்ட m மதிப்புகள் மற்றும் ஆர்பிட்டால்களின் எண்ணிக்கையினைத் தருக.
    i) n = 4, l =2, ii) n =5, l = 3 iii) n=7, l=0

  10. ஐசோ எலக்ட்ரானிக் அயனிகள் என்றால் என்ன? உதாரணங்கள் கொடு.

  11. அயனியாக்கும் ஆற்றலுக்கு கொடுக்கப்பட்டுள்ள பின்வரும் வரையறை சரியானதா? “ஒரு அணுவின் இணைதிற கூட்டில் இலகுவாக பிணைக்கப்பட்டுள்ள எலக்ட்ரானை நீக்க தேவைப்படும் ஆற்றல் அயனியாக்கும் ஆற்றல்.”

  12. எலக்ட்ரான் கவர்தன்மையை வரையறு.

  13. அயனி ஆரம் கணக்கிட உதவும் பாலிங்கின் இரு கூற்றுகள் யாவை?

  14. உலோகங்களை விட அலோகங்களின் எலக்ட்ரான் நாட்ட மதிப்புகளை ஏன் அதிகமாக உள்ளன?

  15. 0oCல் உள்ள ஒரு பனிக்கட்டி, 0oCல் உள்ள திரவ நீரில் வைக்கப்படும்போது மூழ்குகிறது – ஏன்?

  16. HCl மற்றும் NaH ஆகியனவற்றுள் எந்த ஹைட்ரைடு திடப்பொருள் மீதான வாயு. உனது விடைக்கான காரணத்தினைக் கூறு.

  17. NH3 ஆனது, 15ம் தொகுதியில் உள்ள பிற தனிமங்களின் ஹைட்ரைடுகளைக் காட்டிலும் அதிக உருகுநிலை மற்றும் கொதிநிலையைக் கொண்டுள்ளது – விளக்குக

  18. ஆர்த்தோ ஹைட்ரஜன் மற்றும் பாரா ஹைட்ரஜன் பண்புகளை வேறுபடுத்துக. 

  19. டியூட்ரியம் தயாரித்தல் முறையை அனுக்கரு மாற்ற வினையுடன் விவரி.

  20. மூலக்கூறினுள் நிகழும் ஹைட்ரஜன் பிணைப்பு என்றால் என்ன? ஒரு உதாரணம் கொடு.

  21. முதல் தொகுதி உலோக புளூரைடுகளில் லித்தியம் புளூரைடு மிகக்குறைந்த கரைதிறனை கொண்டுள்ளது – உறுதிப்படுத்து.

  22. கார உலோகங்களை விட கார மண் உலோகங்கள் கடினமானவை ஏன்?

  23. கால்சியம் ஹைட்ராக்சைடின் பயன்கள் யாவை?

  24. ஒரு வாயுவின் கன அளவு மற்றும் மோல்களை தொடர்புபடுத்தும் கணிதமுறை வாய்ப்பாட்டினை தருக

  25. விரவுதல் மற்றும் பாய்தல் வேறுபாடு தருக.

  26. ஹெஸ்ஸின் வெப்பம் மாறா கூட்டல் விதியை வரையறு.

  27. மோலார் வெப்ப ஏற்புத்திறன் வரையறு.அதன் அலகு யாது?

  28. பாம் கலோரி மீட்டரின் பயன்களை பட்டியலிடுக.

  29. சமநிலை செறிவில் எவ்வித மாற்றமும் இல்லை எனினும் சமநிலையானது ஏன் இயங்குச் சமநிலை என கருதப்படுகிறது?

  30. கீழ்கண்டுள்ள வினைகளைக் கருதுக
    a) H2(g) + I2(g) ⇌ 2 HI
    b) CaCO3 (s) ⇌ CaO (s) + CO2(g)
    c) S(s) + 3F2 (g) ⇌ SF6 (g)
    மேற்குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு வினைகளிலும், பெறப்படும் வினைவிளை பொருளின் அளவினை அதிகரிக்க கன அளவினை அதிகரிக்க அல்லது குறைக்க வேண்டுமா என்பதைக் கண்டுபிடி.

  31. சமநிலை மாறிலி மதிப்பு
    \({ K }_{ c }=\frac { { [{ NH }_{ 3 } }]^{ 4 }{ [{ O }_{ 2 } }]^{ 7 } }{ { [NO] }^{ 4 }{ [{ H }_{ 2 }O }]^{ 6 } } \) கொண்ட ஒரு சமநிலை வினை க்கான , தகுந்த சமன்செய்யப்பட்ட வேதி சமன்பாட்டை தருக.

  32. \(\triangle ng\) என்பதை பற்றி நீ அறிவதென்ன? 

  33. பலபடித்தான சமநிலை என்றால் என்ன?

  34. \({ H }_{ 2 }(g)+{ I }_{ 2 }\rightleftharpoons 2HI(g)\) என்றள வினைக்கு 717K  வெப்பநிலையில் KC ன் மதிப்பு 48. ஒரு குறிப்பிட்ட நிலையில், H2, I2, மற்றும் HI ன் செறிவுகள் முறையே 0.2 mol L-1, 0.2 mol L-1 மற்றும் 0.6 mol L-1 என கண்டறியப்படுகிறது. எனில் வினைநிகழும் திசையினை கண்டறி.  

  35. பை (π) பிணைப்பு என்றால் என்ன?

  36. BeCl2 மற்றும் MgCl2 ஆகியவற்றில் பிணைப்புகள் உருவாதலை விளக்குக .

  37. பிணைப்பு ஆற்றல் வரையறு.

  38. எத்திலீன் மற்றும் அசிட்டிலீனில் பிணைப்புகள் உருவாதலை விளக்குக.

  39. சகபிணைப்பு எவ்வாறு உருவாகிறது?

  40. பிணைப்புக் கோணம் வரையறு. அதை எவ்வாறு கண்டறியலாம்.

  41. ஒரினவரிசை (அ) படிவரிசை பற்றி குறிப்பெழுதுக.

  42. கெல்டால் முறை யில் 0.20g கரிமச் சேர்மத்திலிருந்து வெளிப்படும் அம்மோனியா 15 ml N/20 கந்தக அமிலக் கரைசலால் நடுநிலையாக்கப்படுகிறது. நைட்ரஜனின் சதவீதத்தினைக் காண்க.

  43. ஒரு சேர்மத்தின் மூலக்கூறு வாய்ப்பாடு என்பதை வரையறு?

  44. மாற்றியம் என்றால் என்ன?

  45. கருக்கவர் பொருள் மற்றும் எலக்ட்ரான் கவர் பொருள் என்றால் என்ன? ஒவ்வொன்றிற்கும் தகுந்த உதாரணம் தருக

  46. ஒரு ஆல்கைல் டைஹேலைடிலிருந்து புரப்பைனை எவ்வாறு தயாரிக்கலாம் ?

  47. ஒரு சேர்மத்தின் அரோமேட் டிக் தன்மையைப் ஹக்கல் விதிப்படி எவ்வாறு தீர்மானிக்கலாம்

  48. ஐசோ  பியூட்டைலினை அமிலம் கலந்த பொட்டாசியம் பெர்மாங்கனேட்டுடன் வினைபடுத்தும் போது என்ன நிகழும்

  49. 1- பியூட்டைன் மற்றும் 2 - பியூட்டைனை எவ்வாறு வேறுபடுத்தி அறிவாய்?

  50. கார்பாக்சில் நீக்க வினையை எழுதுக.    

  51. உர்ட்ஸ் வினையை எழுது.    

  52. பென்சீனின் ஹைட்ரஜனேற்ற  வினையை எழுதுக.          

  53. இருளில் மீத்தேனின் குளோரினேற்றம் சாத்தியமல்ல ஏன்?

  54. அசிட்டைல் குளோரைடை அதிகளவு CH3MgI உடன் வினைப்படுத்தும் போது என்ன நிகழும்?

  55. ஆல்கஹால்களிலிருந்து ஹேலோ ஆல்கேன்கள் தயாரிக்க உதவும் ஏதேனும் மூன்று முறைகளைத் தருக.

  56. பின்வருவனவற்றிற்கு காரணம் தருக
    1. t-பியூட்டைல் குளோரைடானது நீர்த்த KOH உடன் SN1 வினை வழிமுறையில் வினைபுரிகிறது. ஆனால் n-பியூட்டைல் குளோரைடானது SN2 வினை வழிமுறையைப் பின்பற்றுகிறது.
    2. O- மற்றும் m- டைகுளோரோ  பென்சீன்களைக் காட்டிலும் p-டைகுளோரோ பென்சீன் அதிக உருகு நிலையைக் கொண்டுள்ளது.

  57. புரோமோ ஈத்தேனை பின்வருவனவற்றுடன் வினைப்படுத்தும் போது உருவாகும் விளைபொருளைக் கண்டறிக.(i) KNO2 (ii) AgNO2

  58. பின்வரும் சேர்மங்களின் தயாரிப்பினை விளக்குக.
    i) DDT
    ii) குளோரோஃபார்ம்
    iii) பை பீனைல்
    iv) குளோரோ பிக்ரின்
    v) ஃப்ரீயான்-12

  59. மீத்தேனின் குளோரினேற்ற வினையை எழுதுக.

  60. வில்லியம்சன் ஈதர் தொகுத்தல் முறையை எழுதுக. 

  61. புமியின் வளிமண்டலத்திலிருந்து பசுமைக்குடில் வாயுக்கள் காணாமல் போனால் என்ன நிகழும்?

  62. ஒளிவேதி பனிப்புகையில் உள்ள ஓசோன் எங்கிருந்து வந்தது?

  63. துகள் மாசுக்கள் என்றால் என்ன? ஏதேனும் மூன்றை விளக்குக.

  64. அமில மழை எவ்வாறு உருவாகிறது? அதன் விளைவுகளை விளக்குக.

  65. திரவத்தின் ஆவி அழுத்தம் என்றால் என்ன? ஒப்பு ஆவி அழுத்தக் குறைவு என்றால் என்ன?

  66. வெளிப்புற பூச்சாக பயன்படும் ஐயோடோபோவிடோன் புரைதடுப்பான் கரைசலானது 10% w/v அயோடோபோவிடோனைக் கொண்டுள்ளது. வழக்கமாக ஒருமுறை பயன்படுத்தப்படும் அளவான 1.5 மி.லி உள்ள அயோடோபோவிடோனின் அளவைக் கணக்கிடுக.

  67. 5.85 கிராம் சோடியம் குளோரைடு நீரில் கரைக்கப்பட்டு, ஒரு திட்டக் குடுவையில் 500 மி.லி க்கு நீர்க்கப்பட்டது. அக்கர சைலின் வலிமை பார்மாலிட்டியில் கணக்கிடு.

  68. நல்லியல்பு கரைசல்களுக்கு எடுத்துக்காட்டுகள் தருக.

  69. 21 x 3 = 63
  70. திட்ட வெப்ப அழுத்த நிலைகளில் 50 g கால்சியம் கார்பனேட்டை முற்றிலுமாக எரிப்பதால் உருவாகும் கார்பன் டைஆக்ஸைடின் கனஅளவு எவ்வளவு?

  71. ஒரு தனிம அணுவின் நிறை 6.645 x 10-23 g ஆகும். 0.320 kgல் உள்ள அத்தனிமத்தின் மோல் எண்ணிக்கையைக் கணக்கிடுக.

  72. ஈத்தேன் எரிதல் வினையின் முடிவில் 44 கிராம் CO2 (g) வாயுவை உருவாக்கத் தேவைப்படும் ஈத்தேனின் மோல் எண்ணிகையைக் கணக்கிடுக

  73. சிதைவடையும் வினைகளை தக்க சான்றுடன் விளக்கு.

  74. காலத்தைச் சார்ந்து அமையாத ஷ்ரோடிங்கர் அலைச்சமன்பாட்டினை சுருக்கமாக விளக்குக.

  75. ஆஃபா தத்துவத்தினை விவரிக்க.

  76. குவாண்டம் இயக்கவியல் எவ்வாறு உருவாக்கப்பட்டது?

  77. Z = 118 ஐக் கொண்ட தனிமம், எந்த வரிசை மற்றும் தொகுதியில் இடம் பெற்றுள்ளது?

  78. கீழ்க்கண்ட வேதி வினைகளை பூர்த்தி செய்து.
    (அ) நீராற் பகுத்தல் (ஆ) ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினைகள் (இ) நீரேற்ற வினைகள் என வகைப்படுத்துக
    (i) KMnO4 + H2O2
    (ii) CrCl3 + H2O →
    (iii) CaO + H2O →

  79. ஹைட்ரஜனை சேமித்து வைக்க உலோக ஹைட்ரைடுகள் எவ்வகையில் பயன்படும் என நீ எதிர்பார்க்கின்றாய்?

  80. பாரீஸ் சாந்தின் பயன்களைக் குறிப்பிடுக

  81. கார உலோகங்களின் பயன்களை வரிசைப்படுத்துக.

  82. பாயிலின் விதியினை தருக.

  83. ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் வாயு ஒன்றின் கனஅளவு 3.8dm3  ஆகும்.அதனை OoCயில் உள்ள பனிக்கட்டி நீரில் மூழ்க வைக்கும் போது அதன் கனஅளவு 2.27dm3 எனில் அதன் ஆரம்ப வெப்பநிலை என்ன?

  84. வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதியின் பல்வேறு கூற்றுகளை கூறு.

  85. தன்னிச்சை செயல்முறைகளுக்கான அடிப்படை விதிமுறைகள் யாவை?

  86. SrCO3 (s) ⇌ SrO (s) + CO2(g), என்ற வினையில், 1002K ல் சமநிலை மாறிலி மதிப்பு KP = 2.2 \(\times \) 10–4.வினைக்கான KC மதிப்பினைக் கணக்கிடுக.

  87. 0.16g எடையுள்ள கரிம சேர்மம், காரியஸ் குழாயில் சூடுபடுத்தப்படுகிறது. உருவான H2SO4, BaCl2 சேர்த்து வீழ்படிவாக்கப்படுகிறது. வீழ்படிவான BaSO4 எனில் 0.35g சல்பரின் சதவீதத்தை காண் (30.04)

  88. A என்ற எளிய ஆல்கீன் HCl உடன் வினைபுரிந்து சேர்மம் (B) ஐத் தருகிறது. மேலும் (B) ஆனது அம்மோனியாவுடன் வினைபுரிந்து C2H7N என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டினை உடைய (C)ஐத் தருகிறது. (C)யானது கார்பைலமின் வினைக்கு உட்படுகிறது. (A), (B) மற்றும் (C)ஐக் கண்டறிக.

  89. (அ) 300 மி.லி மற்றும் (ஆ) 1 லிட்டர் கரைசலில் 5.6 கிராம் KOH கரைந்துள்ளது எனில், அக்கரைசல்கள் ஒவ்வொன்றின் மோலாரிட்டியைக் கணக்கிடுக.

  90. 500 மி.லி 2.5 M HCl கரைசலைப் பெறுவதற்கு, 4M HCl மற்றும் 2M HCl கரைசல்களை எந்த கன அளவுகளில் கலக்க வேண்டும்?

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 வேதியியல் முக்கிய கூடுதல் வினாக்கள் மற்றும் விடைகள் ( 11th Standard Chemistry Public Exam March 2019 Important Creative Questions and Answers )

Write your Comment