+1 Public Exam March 2019 Model Question

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70
    15 x 1 = 15
  1. 6.3g சோடியம் பைகார்பனேட்டை, 30g அசிட்டிக் அமில கரைசலுடன் சேர்த்தபின்னர், மீதமுள்ள கரைசலின் எடை 33g. வினையின்போது வெளியேறிய கார்பன்டையாக்ஸைடின் மோல் எண்ணிக்கை

    (a)

    3

    (b)

    0.75

    (c)

    0.075

    (d)

    0.3

  2. E = -2.178 x 10-18 து \((\frac {z^2}{n^2})\) என்ற சமன்பாட்டின் அடிப்படையில், சில முடிவுகள் தரப்பட்டுள்ளன. அவற்றுள் சரியாக இல்லாதது எது?

    (a)

    எலக்ட்ரானானது ஒரு ஆர்பிட்டிலிருந்து மற்றொரு ஆர்பிட்டிற்கு மாறும்போது ஆற்றல் மாறுபாட்டினை கணக்கிட இச்சமன்பாட்டினைப் பயன்படுத்தலாம்.

    (b)

    n =3, வட்டப்பாதையில் இருப்பதைக் காட்டிலும் n =5ல் எலக்ட்ரானானது அதிக எதிர்குறி ஆற்றலைப் பெற்றிருக்கும். இது எலக்ட்ரானானது சிறிய அனுமதிக்கப்பட்ட ஆர்பிட்டில் உள்ளபோது வலிமை அதிகமாக பிணைக்கப்பட்டுள்ளது என பொருள்படும்.

    (c)

    இச்சமன்பாட்டில் உள்ள எதிர்க்குறியானது அணுக்கருவோடு எலக்ட்ரான் பிணைக்கப்பட்டுள்ள போது உள்ள ஆற்றலானது. எலக்ட்ரான்கள் அணுக்கருவிலிருந்து ஈறிலாத் தொலைவில் உள்ளபோது பெற்றுள்ள ஆற்றலைக் காட்டிலும் குறைவு.

    (d)

    n ன் மதிப்பு குறைவாக இருப்பின் ஆர்பிட்டால் ஆர மதிப்பும் அதிகம்.

  3. பின்வரும் வகைப்பாடுகளில் குறைவான எலக்ட்ரான் நாட்டத்திலிருந்து அதிகமான எலக்ட்ரான் நாட்டத்தினை குறிப்பிடும் வரிசை எது?

    (a)

    Al < O < C < Ca < F

    (b)

    Al < Ca < O < C < F

    (c)

    C < F < O < Al < Ca

    (d)

    Ca < Al < C < O < F

  4. அல்குலி எனும் அரபுச் சொல்லின் பொருள் 

    (a)

    நிறமற்றது

    (b)

    மரச்சாம்பல்

    (c)

    மணமுடையது

    (d)

    சுவையுடையது

  5. கீழ்காண்பவற்றுள் எது அதிகபட்ச நீரேற்ற ஆற்றலைக் கொண்டுள்ளது?

    (a)

    MgCl2

    (b)

    CaCl2

    (c)

    BaCl2

    (d)

    SrCl2

  6. வானியல் ஆய்வுமையங்களில் உபயோகப்படும் அதிக வெப்பபலூன்களின் பயன்பாடு இவ்விதியின் அடிப்படையில் அமைகிறது 

    (a)

    பாயிலின் விதி

    (b)

    நியூட்டனின் விதி 

    (c)

    கெல்வினின் விதி

    (d)

    பிரௌனின் விதி

  7. cgs முறையில் என்ட்ரோபியின் அலகு 

    (a)

    Cal K-1mol-1

    (b)

    Cal K-1

    (c)

    JK-1

    (d)

    Cal mol-1

  8. Fe (OH)3 (s) ⇌ Fe3+(aq) + 3OH(aq), என்ற வினையில் OH- அயனியின் செறிவு ¼ மடங்காக குறைந்தால், Fe3+ன் சமநிலைச் செறிவானது

    (a)

    மாறாது

    (b)

    ¼ மடங்காக அதுவும் குறையும்

    (c)

    4 மடங்காக அதிகரிக்கும்

    (d)

    64 மடங்காக அதிகரிக்கும்

  9. ஒரு s மற்றும் மூன்று p ஆர்பிட்டால்கள் இனக்கலப்பிற்கு உட்படும்போது,

    (a)

    ஒன்றுக்கொன்று 90o ல் அமைந்துள்ள நான்கு சமான ஆர்பிட்டால்கள் உருவாக்கப்படும்.

    (b)

    ஒன்றுக்கொன்று 109o 28'-ல் அமைந்துள்ள நான்கு சமான ஆர்பிட்டால்கள் உருவாக்கப்படும்.

    (c)

    ஒரே தளத்தில் அமைந்துள்ள நான்கு சமான ஆர்பிட்டால்கள் உருவாக்கப்படும். 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  10. நைட்ரோபென்சீன் மற்றும் பென்சீனை பிரித்தெடுக்க பயன்படும் முறை

    (a)

    நீராவியால் காய்ச்சி வடித்தல்

    (b)

    படிகமாக்குதல்

    (c)

    பின்ன படிகமாக்குதல்

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  11. பின்வருவனவற்றுள் கருக்கவர் பொருளாக செயல்படாதது எது?

    (a)

    ROH

    (b)

    ROR

    (c)

    PCl3

    (d)

    BF3

  12. பின்வரும் ஆல்கீன்களுள் ஒடுக்க ஓசோனேற்ற வினை யின் மூலம் புரப்பனோனை மட்டும் தருவது எது?

    (a)

    2 - மெ த்தில் புரப்பீன்

    (b)

    2- மெ த்தில் பியூட் -1- ஈன்

    (c)

    2,3 - டை மெ த்தில் பியூட்-1- ஈன்

    (d)

    2,3 - டைமெ த்தில் பியூட் -2- ஈன்

  13. பின்வருவனவற்றுள் எது காயங்களிக்கும் புரை தடுப்பானாகப் பயன்படுவது

    (a)

    குளோரோஃபார்ம்  

    (b)

    அயோடாஃபார்ம்  

    (c)

    கார்பன் டெட்ரா குளோரைடு 

    (d)

    இவற்றுள் எதுவுமில்லை 

  14. பின்வருவனவற்றுள் எவை கரும்புகை துகள்களை உருவாக்குகின்றன?

    (a)

    கரிம கரைப்பான்கள் 

    (b)

    உலோகங்கள் 

    (c)

    உலோக ஆக்சைடுகள் 

    (d)

    இவை அனைத்தும் 

  15. ஒரே வெப்பநிலையில், பின்வருவரும் கரைசல்களுள் எந்த இணை ஐசோடானிக் இணையாகும் ?

    (a)

    0.2 M BaCl2 மற்றும் 0.2M urea

    (b)

    0.1 M குளுக்கோஸ் மற்றும் 0.2 M யூரியா

    (c)

    0.1 M NaCl மற்றும் 0.1 M K2SO4

    (d)

    0.1 M Ba (NO3)2 மற்றும் 0.1 M Na2 SO4

  16. 6 x 2 = 12
  17. சமான நிறை வரையறு

  18. அயனியாக்கும் ஆற்றலுக்கு கொடுக்கப்பட்டுள்ள பின்வரும் வரையறை சரியானதா? “ஒரு அணுவின் இணைதிற கூட்டில் இலகுவாக பிணைக்கப்பட்டுள்ள எலக்ட்ரானை நீக்க தேவைப்படும் ஆற்றல் அயனியாக்கும் ஆற்றல்.”

  19. பின்வரும் வேதி வினைகளை பூர்த்தி செய்து பின்வருமாறு வகைப்படுத்துக்க.
    [அ] நீராற்பகுத்தல்
    [ஆ] ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினைகள்
    [இ] நீரேற்ற வினைகள்
    (i) KMnO4 + H4O2
    (ii) CaO + H2O

  20. பெரிலியத்தின் ஹேலைடுகள் சகப்பிணைப்புத் தன்மை உடையவை ஆனால் மெக்னீசியத்தின் ஹேலைடுகள் அயனித்தன்மை உடையவை .ஏன்?

  21. KP மற்றும் KC க்கு இடையேயான தொடர்பினை வருவி.

  22. F2 மூலக்கூறு உருவாதலை விளக்குக.

  23. குளோரோபுரப்பேனின் ஒடுக்க வினையை எழுது.      

  24. மாசுபடுதலிருந்து நம் சுற்றுச்சூழலை பாதுகாக்க நீ பரிந்துரைக்கும் பல்வேறு வழிமுறைகள் யாவை?

  25. 1.05 கி.கி எடையுள்ள 1 லிட்டர் ஆக்சிஜனை (O2)கொண்டுள்ளது. கரைந்துள்ள ஆக்சிஜனின் செறிவை ppm அலகில் குறிப்பிடுக.

  26. 6 x 3 = 18
  27. வரையறு : கட்டுப்படுத்தும் காரணி.

  28. 66.26x10-28 kgms-1 உந்தத்தை உடைய துகள் ஒன்றின் டி - பிராக்ளி அலைநீளத்தை கணக்கிடு.

  29. கனநீரை குடிப்பதற்கு பயன்படுத்தலாம் என நீ கருதுகிறாயா?

  30. நமது வளிமண்டலத்தில் ஹைட்ரஜன் இல்லை.ஏன்?நிலவில் வளிமண்டலம் ஏன் இல்லை?

  31. 33k வெப்பநிலையில் ஐம்பது சதவீதம் N2O4 சிதைகிறது எனில் அந்த வெப்பநிலையில், 1 atm அழுத்தத்தில் ஏற்படும் திட்டகட்டிலா ஆற்றல் மாற்றத்தை கணக்கீடுக.

  32. பின்வரும் வினையினைக் கருதுக.
    \(Fe_{ (aq) }^{ 3+ }+SCN_{ (aq) }^{ - }\rightleftharpoons \left[ Fe(SCN) \right] _{ (aq) }^{ 2+ }\)
    Fe3+ மற்றும் SCN- ஆகியன முறையே 1x 10-3 M என்ற துவக்க மோலார் செறிவினை பெற்றுள்ள கரைசல் தயாரிக்கப்படுகிறது. சமநிலையில் [Fe(SCN)]2+ ன் செறிவு 2 x 10-4 M சமநிலை மாறிலியின் மதிப்பினைக் கண்டறிக. 

  33. 0.24 g எடையுள்ள பாஸ்பரஸை கொண்டுள்ள கரிமச் சேர்மம் 0.66g Mg2P2O7யை தந்தது. இச்சேர்மத்தில் உள்ள பாஸ்பரஸின் சதவீதத்தினை கணக்கிடுக.

  34. பின்வரும் Zn தூளுடன் புரியும் வினையை எழுதுக.
    (i) எத்திலின் குளோரைடு 
    (ii) எத்திலிடின் டைகுளோரைடு 

  35. 2.82 கிராம் குளுக்கோஸ் ஆனது 30 கிராம் நீரில் கரைக்கப்பட்டள்ளது. குளுக்கோஸ் மற்றும் நீரின் மோல் பின்னங்களை கணக்கிடுக.

  36. 5 x 5 = 25
  37. ஆக்ஸிஜவனற்ற எண் முறை விரிவாக விளக்குக.

  38. நிறை எண் 37 உடைய ஒரு அயனி ஒற்றை எதிர்மின் சுமையினைப் பெற்றுள்ளது. இந்த அயனியானது, எலக்ட்ரான்களைக் காட்டிலும் 11.1% அதிகமான நியூட்ரான்களைப் ப் பெற்றிருந்தால், அந்த அயனியின் குறியீட்டினைக் கண்டறிக.

  39. மின்னாற் பகுப்பு முறையில் ஹைட்ரஜன் தயாரித்தலை விளக்குக.

  40. வாண்டர் வால்ஸ் மாறிலிகளைக் கொண்டு நிலைமாறு மாறிகளைத் தருவி

  41. 00C வெப்பநிலையில் 1 மோல்பனிக்கட்டி நீராக உருகும்போது நிகழும் என்ட்ரோபி மாற்றத்தை கணக்கிடுக. பனிக்கட்டியின் மோலார் உருகுதல் வெப்பமதிப்பு 6008 J mol-1

  42. 1L மூடிய கலனில் 28g N2 மற்றும் 6g H2 கலக்கப்படுகிறது. சமநிலையில் 17g NH3 உருவாகிறது. நைட்ரஜன் மற்றும் ஹைட்ரஜனின் எடையினை சமநிலையில்கணக்கிடுக.

  43. எலக்ட்ரான் இரட்டைகளின் எண்ணிக்கை 5உடைய மூலக்கூறுகளை எழுதி, அவற்றின் பிணைப்பு எலக்ட்ரான் இரட்டைகளின் எண்ணிக்கை, தனித்த இரட்டை எலக்ட்ரான்கள் எண்ணிக்கை, வடிவம் மற்றும் மூலக்கூறு வடிவமைப்பை எழுதுக. 

  44. மெல்லிய அடுக்கு வண்ணப்பிரிகை முறையை விளக்கு.

  45. ஒரே மாதிரியான பிளைவு பற்றி விளக்குக.

  46. 128 கிராம் நாஃப்தலினை 39 கிராம் பென்சீனுடன் சேர்த்து, நல்லியல்பு திரவக் கரைசலை உருவாக்கும்போது, ஆவிநிலையிலுள்ள பென்சீன் மற்றும் நாஃப்தலீனின் மோல் பின்னங்களை கணக்கிடுக. 300 K வெப்பநிலையில், தூய பென்சீனின் ஆவிஅழுத்தம் 50.71 mmHg மற்றும் தூய நாஃப்தலீனின் ஆவிஅழுத்தம் 32.06 mmHg

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு வேதியியல் மாதிரி திருப்புதல் தேர்வு வினா விடை 2019 ( 11th Standard Chemistry Model Question Paper 2019 )

Write your Comment