11th Unit Test

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 95

    குறுகிய விடையளி :

    25 x 2 = 50
  1. சமநிலை செறிவில் எவ்வித மாற்றமும் இல்லை எனினும் சமநிலையானது ஏன் இயங்குச் சமநிலை என கருதப்படுகிறது?

  2. 3H2(g) + N2(g) ⇌ 2NH3(g) என்ற வினையின் சமநிலை மாறிலி KP மற்றும் Kக்கான பொதுவான சமன்பாட்டினை வருவி.

  3. உருகுநிலை அல்லது உறைநிலை என்பது யாது?

  4. \({ H }_{ 2 }(g)+{ I }_{ 2 }\rightleftharpoons 2HI(g)\) என்றள வினைக்கு 717K  வெப்பநிலையில் KC ன் மதிப்பு 48. ஒரு குறிப்பிட்ட நிலையில், H2, I2, மற்றும் HI ன் செறிவுகள் முறையே 0.2 mol L-1, 0.2 mol L-1 மற்றும் 0.6 mol L-1 என கண்டறியப்படுகிறது. எனில் வினைநிகழும் திசையினை கண்டறி.  

  5. BF3 மூலக்கூறில் காணப்படும் Sp2 இனக்கலப்பை விளக்குக.

  6. CO இன் மூலக்கூறு ஆர்பிட்டாட்டால் MO வரைபடத்தை வரைக, மேலும் அதன் பிணைப்புத் தரத்தை கணக்கிடுக.

  7. சகபிணைப்பு எவ்வாறு உருவாகிறது?

  8. கெல்டால் முறை யில் 0.20g கரிமச் சேர்மத்திலிருந்து வெளிப்படும் அம்மோனியா 15 ml N/20 கந்தக அமிலக் கரைசலால் நடுநிலையாக்கப்படுகிறது. நைட்ரஜனின் சதவீதத்தினைக் காண்க.

  9. டுமாஸ் முறையை பயன்படுத்தி நைட்ரஜனை அளவிடும்போது, 0.35g கரிமச்சேர்மமானது 150oC மற்றும் 760mm Hg அழுத்தத்தில் 20.7mL நைட்ரஜனை தருகிறது. அச்சேர்மத்தில் காணப்படும் நைட்ரஜனின் சதவீதத்தினைக் காண்க.

  10. கரிமச் சேர்மங்களின் அமைப்பினை குறித்துக்காட்டும் முறைகள் யாவை?

  11. கருக்கவர் பொருள் மற்றும் எலக்ட்ரான் கவர் பொருள் என்றால் என்ன? ஒவ்வொன்றிற்கும் தகுந்த உதாரணம் தருக

  12. C6H13Br என்ற மூலக்கூறு வாய்பாடுடைய ஒரு ஆல்கைல் ஹாலைடானது ஹைட்ரோ ஹாலஜன் நீக்க வினைக்கு உட்பட்டு X மற்றும் Y ஆகிய C6H12 மூலக்கூறு வாய்பாட்டினை உடைய இரு மாற்றிய ஆல்கீன்களைத் தருகிறது. ஒடுக்க ஓசேனேற்றத்திற்கு உட்படுத்தும் போது  X மற்றும் Y ஆகியன CH3COCH3, CH3CHO, CH3CH2CHO and (CH3)2 CHCHOஆகியனவற்றைத் தருகின்றன. ஆல்கைல் ஹாலைடைக் கண்டறிக


  13. (A) பெருமளவு முதன்மை விளைபொருள் 
    (B) பெருமளவு முதன்மை (A) மற்றும் (B) ஐக் கண்டறிக

  14. சாபாடியர்  - சண்டர்சன்ஸ் வினையை எழுதுக.      

  15. உர்ட்ஸ் வினையை எழுது.    

  16. ஆல்கஹால்களிலிருந்து ஹேலோ ஆல்கேன்கள் தயாரிக்க உதவும் ஏதேனும் மூன்று முறைகளைத் தருக.

  17. குளோரோ  பென்சீனின் அரோமேட்டிக் கருக்கவர் பொருள் பதிலீட்டு வினையை விளக்குக.

  18. 2-புரோமோ பியூட்டேன் ஆல்கஹால் கலந்து KOH உடன் எவ்வாறு வினைபுரிகிறது?

  19. கிரிக்னார்டு வினைப்பொருடன் நீரின் வினையை எழுதுக.

  20. நீரில் கரைந்ரைந்துள்ள ஆக்சிஜன் நீர்சூழ் வாழ்க்கைக்கு பொறுப்பாகிறது. நீரில் கரைந்துள்ள ஆக்சிஜன் அளவு குறைவதற்கு எந்தெந்த  செயல்பாடுகள் பொறுப்பாகின்றன?

  21. மக்கும் மாசுபடுத்திகள் மற்றும் மக்கா மாசுபடுத்திகள் என்றால் என்ன?

  22. ஒரு லிட்டர் 10-4 M பொட்டாசியம் சல்பேட் கரைசலில் உள்ள கரைபொருள் துகள்களின் மோல்களின் எண்ணிக்கை யாது?

  23. 1.05 கி.கி எடையுள்ள 1 லிட்டர் ஆக்சிஜனை (O2)கொண்டுள்ளது. கரைந்துள்ள ஆக்சிஜனின் செறிவை ppm அலகில் குறிப்பிடுக.

  24. நியோமைசின் எனும், அமினோகிளைக்கோசைடு வகை எதிர் நுண்ணுயிர் களிம்பானது, 30 கிராம் களிம்பு அடிப்படைப் பொருளில், செயலாக்க கூறான 300 மி.கி நியோமைசின் சல்பேட்டினைக் கொண்டுள்ளது. நியோமைசினின் நிறைச் சதவீதம் காண்க.

  25. எதிர் சவ்வூடு பரவலின் பயன்கள் யாவை?

  26.  விடையளி :

    15 x 3 = 45
  27. 717K வெப்பநிலையில் பின்வரும் வினைக்கு Kcன் மதிப்பு 48.
    H2(g) + I2(g) ⇌⇌ 2HI(g)

  28. மீளும் வினைகளின் சமநிலை மாறிலிகளுக்கிடையேயானத் தொடர்பை எழுதுக.

  29. பின்வரும் வினையினைக் கருதுக.
    \(Fe_{ (aq) }^{ 3+ }+SCN_{ (aq) }^{ - }\rightleftharpoons \left[ Fe(SCN) \right] _{ (aq) }^{ 2+ }\)
    Fe3+ மற்றும் SCN- ஆகியன முறையே 1x 10-3 M என்ற துவக்க மோலார் செறிவினை பெற்றுள்ள கரைசல் தயாரிக்கப்படுகிறது. சமநிலையில் [Fe(SCN)]2+ ன் செறிவு 2 x 10-4 M சமநிலை மாறிலியின் மதிப்பினைக் கண்டறிக. 

  30. முறைசார் மின்சுமையினை கொண்டு லூயிஸ் அமைப்பில் சிறந்த வடிவமைப்பை குறிக்கும் வடிவத்தினை தெரிவு செய்யும் வழிமுறைகளை எழுதுக.

  31. C4H10O என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டினைப் பெற்றுள்ள சாத்தியமான மாற்றியங்கள் அனைத்தையும் எழுதுக அவைகளில் காணப்படும் மாற்றியங்களைக் கண்டறிக.

  32. பின்வரும் சேர்மங்களுக்கு வடிவ வாய்ப்பாடுகளை எழுதுக.
    i. m-டைநைட்ரோ பென்சீன்
    ii.p-டைகுளோரோ பென்சீன்
    iii.1, 3, 5-ட்ரைமீத்தைல் பென்சீன்

  33. n-ஹெக்சேனில் இருந்து பென்சீன் எவ்வாறு உருவாகிறது?      

  34. C3H6 என்ற (A) ஹைட்ரோ கார்பன் HBr உடன் வினைபுரிந்து (B) ஐத் தருகிறது. (B) நீர்த்த KOH உடன் வினைபுரிந்து C3H6O என்ற மூலக்கூறு வாய்ப்பாடுடைய (C) ஐத் தருகிறது. (A), (B) மற்றும் (C) ஐக் கண்டறிக. வினைகளை விளக்குக.

  35. அசிட்டிலுடனான HCIன் வினையை எழுதுக.

  36. கார்பன்டையாக்சைடு எவ்வாறு உருவாகிறது? அதன் தீய விளைவுகள் யாவை?

  37. நீர் மாசுபடுதல் என்றால் என்ன?

  38. 2.82 கிராம் குளுக்கோஸ் ஆனது 30 கிராம் நீரில் கரைக்கப்பட்டள்ளது. குளுக்கோஸ் மற்றும் நீரின் மோல் பின்னங்களை கணக்கிடுக.

  39. 27°C வெப்பநிலையில் A எனும் தூய திரவத்தின் ஆவிஅழுத்தம் 10.0 torr. 20 கிராம் A இல் 1 கிராம் B ஐ கரைப்பதன்மூலம் ஆவிஅழுத்தம் 9.0 torr க்கு குறைக்கப்படுகிறது. A யின் மோலார் நிறை 200 எனில், B யின் மோலார் நிறையை கணக்கிடுக.

  40. நல்லியல்புக் கரைசல்கள் என்பவை யாவை?

  41. வாண்ட் ஹாஃப் காரணி மதிப்பு பல்வேறு கரைபொருளுக்கு எவ்வாறு மாறுபடுகிறது என விளக்கு.

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு வேதியியல் பருவத் தேர்வு வினாத்தாள் 2018 ( 11th Standard Chemistry Unit Test Question Paper 2018 )

Write your Comment