வெப்ப இயக்கவியல் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. ஒரு மூடிய கலனில், ஒரு மோல் அமோனியா மற்றும் ஒரு மோல் ஹைட்ரஜன் குளோரைடு கலக்கப்பட்டு அமோனியம் குளோரைடு உருவாக்கப்பட்டால் இவ்வினையில் 

    (a)

    \(\Delta\)H>\(\Delta\)U

    (b)

    \(\Delta\)H-\(\Delta\)U=0

    (c)

    \(\Delta\)H+\(\Delta\)U=0

    (d)

    \(\Delta\)H<\(\Delta\)U

  2. 25°C வெப்பநிலையில், திறந்த முகவையில் உள்ள ஹைட்ரோ குளோரிக் அமிலத்துடன், 55.85 கிராம் இரும்பு (( மோலார் நிறை 55.85 கிராம் மோல்-1) வினைப்பட்டு வெளியேறும் ஹைட்ரஜன் வாயுவினால் செய்யப்பட்ட வேலை

    (a)

    -2.48kJ

    (b)

    -2.22kJ

    (c)

    +2.22kJ

    (d)

    +2.48kJ

  3. ஒரு அமைப்பின் வெப்பநிலை பின்வரும் _________ ல் குறைகிறது

    (a)

    வெப்பநிலை மாறா விரிவடைதல் 

    (b)

    வெப்பநிலை மாறா சுருங்குதல்

    (c)

    வெப்பம் மாறா விரிவடைதல் 

    (d)

    வெப்பம் மாறா சுருங்குதல்

  4. இயற்கையில் நிகழும் அனைத்து செயல்முறைகளை _________ திசையில் நடக்கின்றன.

    (a)

    என்ட்ரோபி குறையும்

    (b)

    என்தால்பி அதிகரிக்கும்

    (c)

    கட்டிலா ஆற்றல் அதிகரிக்கும்

    (d)

    கட்டிலா ஆற்றல் குறையும்

  5. எரிதல் வெப்பம் எப்பொழுதும்

    (a)

    நேர்குறி மதிப்பு உடையது

    (b)

    எதிர்க்குறி மதிப்பு உடையது

    (c)

    பூஜ்ஜியம்

    (d)

    நேர்குறி அல்லது எதிர்குறி மதிப்பு உடையது

  6. 3 x 2 = 6
  7. வெப்ப இயக்கவியலின் முதல் விதியை கூறு.

  8. கிப்ஸ் கட்டிலா ஆற்றலை வரையறு 

  9. வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதியின் கெல்வின்-பிளாங்க் கூற்றை கூறுக.

  10. 3 x 3 = 9
  11. நிலைச்சார்புகள் மற்றும் வழிச்சார்புகள் என்றால் என்ன?இரு எடுத்துக்காட்டுகள் தருக.

  12. வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதியின் பல்வேறு கூற்றுகளை கூறு.

  13. ஒரு மோல் சோடியம் குளோரைடை உருக்க 30.4KJ அளவு ஆற்றல் தேவைப்படுகிறது.உருகுதலின் போது நிகழும் என்ட்ரோபி மாற்றம் 28.4JK-1mol-1 னில் சோடியம் குளோரைடின் உருகுநிலையை காண்க. 

  14. 2 x 5 = 10
  15. அகஆற்றலின் சிறப்பியல்புகளை விளக்குக.

  16. கிப்ஸ் கட்டிலா ஆற்றலின் சிறப்பியல்புகளை விளக்குக 

*****************************************

Reviews & Comments about 11th Standard வேதியியல் - வெப்ப இயக்கவியல் Book Back Questions ( 11th Standard Chemistry - Thermodynamics Book Back Questions )

Write your Comment