XI STD One Mark Test ( Volume -1 )

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 50
    50 x 1 = 50
  1. கார்பன், கார்பன் மோனாக்ஸைடு கார்பன் டையாக்ஸைடு எனும் இரண்டு ஆக்ஸைடுகளை உருவாக்குகிறது. எந்த தனிமத்தின் சமான நிறை மாறாமல் உள்ளது?

    (a)

    கார்பன்

    (b)

    ஆக்ஸிஜன்

    (c)

    கார்பன் மற்றும் ஆக்ஸிஜன்

    (d)

    கார்பன், ஆக்ஸிஜன் இரண்டுமில்லை

  2. SO42-, SO32- , S2O42-, S2O62-  ஆகிய எதிரயனிகளில் சல்பரின் ஆக்ஸிஜனேற்ற எண்களின் அடிப்படையில் சரியான ஏறுவரிசை எது? 

    (a)

    SO32- < SO42- < S2O42-< S2O62-

    (b)

    SO42- < S2O42- < S2O62-< SO32-

    (c)

    S2O42- < SO32- < S2O62-< SO42-

    (d)

    S2O62- < S2O42- < SO42-< SO32-

  3. பெர்ரஸ் ஆக்சலேட்டின் சமான நிறை

    (a)

    (b)

    (c)

    (d)

    மேற்கண்ட எதுவுமில்லை.

  4. கீழ்க்கண்டவற்றுள் கேள்விக்குறி இடப்பட்ட இடத்தில் வரும் சேர்மம் எது?
    CH4+2O2 \(\rightarrow \)? = 2H2

    (a)

    CH3

    (b)

    CO2

    (c)

    H2

    (d)

    CH2O

  5. திட்ட வெப்ப அழுத்த நிலைகளில் 1 மோல் CO2 ஆனது 22.7 லிட்டர் கனஅளவை அடைத்துள்ளும் எனில் 50g CaCO3 முற்றிலுமாக எரிப்பதால் உருவாகும் கார்பன்டை ஆக்சைடின் அளவு 

    (a)

    72 லிட்டர் 

    (b)

    15 லிட்டர் 

    (c)

    22.4 லிட்டர் 

    (d)

    11.35 லிட்டர் 

  6. E=-2.178x10-18 J(z2/n2) என்ற சமன்பாட்டின் அடிப்படையில், சில முடிவுகள் தரப்பட்டுள்ளன. அவற்றுள் சரியாக இல்லாதது எது?

    (a)

    எலக்ட்ரானானது ஒரு ஆர்பிட்டிலிருந்து மற்றொரு ஆர்பிட்டிற்கு மாறும்போது, ஆற்றல்மாறுபாட்டினை கணக்கிட இச்சமன்பாட்டினைப் பயன்படுத்தலாம்.

    (b)

    n= 6 வட்டப்பாதையில் இருப்பதைக் காட்டிலும் n= 1 ல் எலக்ட்ரானானது அதிக எதிர்குறி ஆற்றலைப் பெற்றிருக்கும். இது எலக்ட்ரானானது சிறிய அனுமதிக்கப்பட்ட ஆர்பிட்டில் உள்ளது வலிமைக்குறைவாக பிணைக்கப்பட்டுள்ளது என பொருள்படும்.

    (c)

    இச்சமன்பாட்டில் உள்ள எதிர்குறியானது, அணுக்கருவோடு எலக்ட்ரான் பிணைக்கப்பட்டுள்ள போது உள்ள ஆற்றலானது, எலக்ட்ரான்கள் அணுக்கருவிலிருந்து ஈறிலாத் தொலைவில் உள்ள போது பெற்றுள்ள ஆற்றலைக் காட்டிலும் குறைவு.

    (d)

    n ன் மதிப்பு அதிகமாக இருப்பின், ஆர்பிட்டால் ஆர மதிப்பும் அதிகம்.

  7. அணு எண் 105 உடைய அணுவில் உள்ள எத்தனை எலக்ட்ரான்கள் (n+l) = 8 என்ற மதிப்பினை பெற்றிருக்க முடியும்.

    (a)

    30

    (b)

    17

    (c)

    15

    (d)

    தீர்மானிக்க இயலாது

  8. டியூட்ரியத்தின் திசைவேகம், α – துகளைக் காட்டிலும் ஐந்து மடங்காக இருக்கும்போது, டியூட்ரியம் அணுவிற்கும் α – துகளிற்கும் இடையேயான அலைநீளங்களின் விகிதம்

    (a)

    4

    (b)

    0.2

    (c)

    2.5

    (d)

    0.4

  9. ஹெய்சன்பர்க்கின் நிச்சயமற்ற தன்மை கோட்பாடு பின்வரும் எதற்கு முக்கியத்துவம் வாய்ந்தது?

    (a)

    பெரிய துகளிற்கு

    (b)

    அதிக நிறையுடைய துகளிற்கு

    (c)

    கிரிக்கெட் பந்திற்கு

    (d)

    நுண்துகளிற்கு

  10. பின்வருவனவற்றுள் எதற்கு ஷ்ரோடிங்கர் அலைச்சமன்பாடு சிக்கலானது?
    I. ஹைட்ரஜன் II. நைட்ரஜன் இவற்றுள்

    (a)

    I மட்டும்

    (b)

    II மட்டும்

    (c)

    இரண்டும்

    (d)

    இரண்டும் இல்லை

  11. சம ஆற்றலுடைய ஆர்பிட்டால்கள் எவ்வரிசையில் நிரப்பப்பட வேண்டும் என்ற வினாவிற்கு உரிய விடையினைத் தருவது எது? 

    (a)

    ஆஃபா தத்துவம்

    (b)

    பௌலியின் தவிர்க்கை விதி

    (c)

    ஹீண்ட் விதி

    (d)

    இவை அனைத்தும்

  12. ஒரு தனிமத்தினுடைய அடுத்தடுத்த அயனியாக்கும் ஆற்றல் மதிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன (kJ mol-1)

    IE1 IE2 IE3 IE4 IE5
    577.5 1,810 2,750 11,580 14,820

     இத்தனிமானது

    (a)

    பாஸ்பரஸ்

    (b)

    சோடியம்

    (c)

    அலுமினியம்

    (d)

    சிலிகான்

  13. தனிம வரிசை அட்டவணையில் இடமிருந்து வலமாக செல்லும்போது எலக்ட்ரான் நாட்ட மதிப்பு எவ்வாறு மாறுபடுகிறது?

    (a)

    பொதுவாக அதிகரிக்கின்றது

    (b)

    பொதுவாக குறைகின்றது

    (c)

    எவ்வித மாற்றமுமில்லை

    (d)

    முதலில் அதிகரிக்கிறது பின்பு குறைகிறது

  14. பின்வரும் தனிம ஜோடிகளுள் மூலைவிட்ட தொடர்பினை காட்டுவது எது?

    (a)

    Be மற்றும் Mg

    (b)

    Li மற்றும் Mg

    (c)

    Be மற்றும் B

    (d)

    Be மற்றும் Al

  15. கூற்று: கண்டுபிடிக்கப்பட்டுள்ள அனைத்து தனிமங்களுள் ஹீலியம் அதிக அயனியாக்கும் ஆற்றல் மதிப்பினை பெற்றுள்ளது.
    காரணம்: கண்டுபிடிக்கப்பட்டுள்ள அனைத்து தனிமங்களுள் ஹீலியம் அதிக எலக்ட்ரான் நாட்ட மதிப்பினை பெற்றுள்ளது.

    (a)

    கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரியானது, மேலும் காரணமானது கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்.

    (b)

    கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரியானது, ஆனால் காரணமானது கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.

    (c)

    கூற்று சரியானது ஆனால் காரணம் தவறானது

    (d)

    கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் தவறானது

  16. வெளிக்கூட்டில் உள்ள எலக்ட்ரான் மீதான அணுக்கருவில் ஈர்ப்புவிசை குறைவதே மறைத்தல் விளைவு எனபப்டுகிறது. திரைவிளைவு அதிகரிக்கும் போது அயனியாக்கும் ஆற்றல்.

    (a)

    குறைகிறது

    (b)

    அதிகரிக்கிறது

    (c)

    அதிகரித்து பின்னர் குறைகிறது

    (d)

    பூஜ்ஜியமாகிறது

  17. பின்வரும் எலக்ட்ரான் அமைப்புகளை கவனி
    I. d8s2 II. d9s1 III. d10s2  iv. s2p2
    இவற்றுள் எது எலக்ட்ரான் நட்ட மதிப்பு பூஜ்ஜியத்தைக் கொண்ட அமைப்பு

    (a)

    I

    (b)

    II

    (c)

    III

    (d)

    IV

  18. பின்வருவனவற்றுள் எலக்ட்ரான் நாட்டம் ஒரு

    (a)

    வெப்ப உமிழ்வினை

    (b)

    வெப்ப மாறா வினை

    (c)

    அழுத்தம் மாறா வினை

    (d)

    வெப்ப கொள் வினை

  19. கூற்று (A): F ஐவிட Cl- எலக்ட்ரான் நாட்ட மதிப்பு அதிகம்
    காரணம் (R): 2P ஆர்பிட்டால்கள் அணுக்கருவை ஈர்ப்பதில்லை

    (a)

    கூற்று (A) சரி, காரணம் (R) தவறு

    (b)

    (A) என்பது சரியான கூற்று (R) என்பது தவறான விளக்கம்

    (c)

    (A) சரி, (R) சரி, (R) என்பது சரியான விளக்கம்

    (d)

    (A) தவறு, (R) தவறு

  20. அயனி ஹைட்ரைடுகளை உருவாக்குபவை.

    (a)

    ஹேலஜன்கள்

    (b)

    சால்கோஜென்கள்

    (c)

    மந்த வாயுக்கள்

    (d)

    தொகுதி 1 – தனிமங்கள்

  21. வேதிவினைக்கூறு விகிதத்தின் அடிப்படையில் அமையாத (non-stoichiometric) ஹைட்ரைடுகளை உருவாக்குபவை

    (a)

    பெலேடியம், வெனேடியம்

    (b)

    கார்பன், நிக்கல்

    (c)

    மாங்கனீசு, லித்தியம்

    (d)

    நைட்ரஜன், குளோரின்

  22. வணிக ரீதியான ஹைட்ரஜன் பெராக்சைடில் (H2O2) 100-கன அளவு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பொருள்

    (a)

    திட்டவெப்ப அழுத்த நிலையில் (STPல்), 1mL H2O2 ஆனது 100mL O2ஐத் தரும்.

    (b)

    திட்டவெப்ப அழுத்த நிலையில் (STPல்), 1L H2O2 ஆனது 100mL O2ஐத் தரும்.

    (c)

    1L H2O2 ஆனது 22.4L O2ஐத் தரும்.

    (d)

    திட்டவெப்ப அழுத்த நிலையில் (STPல்), 1mL H2O2 ஆனது ஒரு மோல் O2ஐத் தரும்.

  23. H3PO2 + D2O → H2DPO2 + HDO என்ற வினையிலிருந்து ஹைப்போ பாஸ்பரஸ் அமிலம் ஒரு

    (a)

    முக்காரத்துவ அமிலம்

    (b)

    இருகாரத்துவ அமிலம்

    (c)

    ஒரு காரத்துவ அமிலம்

    (d)

    இவற்றுள் ஏதுமில்லை

  24. தொகுதியில் மேலிருந்து கீழாகச் செல்லும் போது கார உலோகங்களின் அடர்த்தி  

    (a)

    அதிகரிக்கிறது

    (b)

    குறைகிறது

    (c)

    அதிகமாகிப் பின் குறைகிறது

    (d)

    குறைந்து பின் அதிகரிக்கிறது

  25. பின்வருவனற்றை கவனமாகப் விடையளி: டியூட்ரியம் ஆக்ஸிஜனோடு சேர்ந்து கொடுப்பது. 

    (a)

    ஆக்சி டியூட்ரியம் 

    (b)

    நீர்

    (c)

    கனநீர்

    (d)

    மேற்கூரிய அனைத்தும் 

  26. பின்வருவனற்றுள் கார உலோகங்களின்  ஆக்ஸிஜனேற்ற நிலை 

    (a)

    +2

    (b)

    0

    (c)

    +1

    (d)

    +3

  27. அறை வெப்பநிலையில் சாதாரண ஹைட்ரஜனில் உள்ளவை 

    (a)

    25% பாராவும் 75% ஆர்த்தோவும்

    (b)

    1% பாரா 99% ஆர்த்தோ

    (c)

    75% பாராவும் 25% ஆர்த்தோவும்

    (d)

    99% பாரா 1% ஆர்த்தோ

  28. சோடியம் எதில் சேமிக்கப்படுகிறது?

    (a)

    ஆல்கஹால்

    (b)

    நீர்

    (c)

    மண்ணெண்ணெய்

    (d)

    இவற்றில் ஏதுமில்லை

  29. கீழ்காண்பவற்றுள் எது அதிகபட்ச நீரேற்ற ஆற்றலைக் கொண்டுள்ளது?

    (a)

    MgCl2

    (b)

    CaCl2

    (c)

    BaCl2

    (d)

    SrCl2

  30. ஒரு நிறமற்ற திண்மம் (A) ஐ வெப்பப்படுத்தும்போது CO2 வாயுவை வெளியேற்றுகிறது, மற்றும் நீரில் கரையும் வெண்ணிற வீழ்படிவைத் தருகிறது. அந்த வீழ்படிவும் நீர்த்த HCl உடன் வினைப்படுத்தும்போது CO2 ஐ தருகிறது.எனில் அந்த திண்மப்பொருள் A

    (a)

    Na2CO3

    (b)

    NaHCO3

    (c)

    CaCO3

    (d)

    Ca(HCO3)2

  31. பின்வரும் எந்த 13-ம் தொகுதி தனித்தோடு பெரிலியம் ஒத்த பண்புடையது?

    (a)

    Si

    (b)

    Al

    (c)

    P

    (d)

    S

  32. பொருத்துக.

      சேர்மம்   

    வாய்பாடு

    அ) ஜிப்சம்   1.

    3(Ca3(PO4)2CaF2)

    ஆ) கார்னலைட்  2.

    BC3Al2Si6O18

    இ) பெரைல் 3.

    MgC12.KCl.6H2O

    ஈ) புளுரோலடைட்  4.

    CuSO4.2H2O

    (a)
    A B C D
    1 2 3 4
    (b)
    A B C D
    2 3 4 1
    (c)
    A B C D
    4 3 2 1
    (d)
    A B C D
    4 2 1 3
  33. கீழ்க்கண்டவற்றுள் எது சலவை தூளின் வாய்பாடு?

    (a)

    CaCl2.H2O

    (b)

    CaOCl2.H2O

    (c)

    CaSO4.2H2O

    (d)

    CaSO4.\(\frac{1}{2}\)H2O

  34. பின்வருவனவற்றை கவனி:
    I.கர்மலைட் II.NaCl 
    இவற்றுள், உருகிய ________ மின்னாற் பகுப்பின் மூலம் மெக்னீசியம் தயாரிக்கப்படுகிறது.

    (a)

    I மட்டும்

    (b)

    II மட்டும்

    (c)

    இரண்டும்

    (d)

    இரண்டுமில்லை

  35. வாயுக்கள் அதிக அழுத்தத்தில் நல்லியல்பு பண்பிலிருந்து விலகலடைகின்றன. கீழ்கண்ட
    கூற்றுகளில் நல்லியல்பு அல்லா தன்மைக்கு பொருந்தும் சரியான கூற்று எது? எவை

    (a)

    அதிக அழுத்தத்தில் மூலக்கூறுகளுக்கிடையே மோதல் அதிகரிக்கின்றன.

    (b)

    அதிக அழுத்தத்தில் வாயு மூலக்கூறுகள் ஒரே திசையில் நகர்கின்றன.

    (c)

    அதிக அழுத்தத்தில் வாயுவின் கனஅளவு புறக்கணிக்கத்தக்கதாகும்.

    (d)

    அதிக அழுத்தத்தில் மூலக்கூறுகளுக்கிடையேயான கவர்ச்சிவிசை புறக்கணிக்கத்தக்கதன்று.

  36. கீழ்க்கண்டவற்றுள் எது வாயுநிலைக்கான சரியான வாண்டர் வால்ஸ் சமன்பாடாகும்.

    (a)

    \(\left( P+\frac { a }{ { n }^{ 2 }{ V }^{ 2 } } \right) \left( V-nb \right) =nRT\)

    (b)

    \(\left( P+\frac { na }{ { n }^{ 2 }{ V }^{ 2 } } \right) \left( V-nb \right) =nRT\)

    (c)

    \(\left( P+\frac { an^2 }{ { V }^{ 2 } } \right) \left( V-nb \right) =nRT\)

    (d)

    \(\left( P+\frac { n^2a^2 }{ { V }^{ 2 } } \right) \left( V-nb \right) =nRT\)

  37. ஒரு சமவெப்ப அழுத்த நிலையில் CnH2n-2 என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட ஹைட்ரோகார்பன் போன்று ஹைட்ரஜன் வாயு 3\(\sqrt{3}\) மடங்கு விரவுதல் வீதம் கொண்டதெனில் 'n' ன் மதிப்பு என்ன?

    (a)

    8

    (b)

    4

    (c)

    3

    (d)

    1

  38. 25 கிராம் நிறையுள்ள கீழ்கண்ட வாயுக்கள் 27oயில் 600mm Hg அழுத்தத்தில் எடுக்கப்பட்டு உள்ளன. இவற்றில் குறைந்த கன அளவு கொண்ட வாயு எது?

    (a)

    HBr

    (b)

    HCl

    (c)

    HF

    (d)

    HI

  39.  வாண்டாவால்ஸ் சமன்பாட்டில் அழுத்தத்திற்கான திருத்தம் 

    (a)

    \(P+\frac { { V }^{ 2 } }{ { a }^{ 2 }n } \)

    (b)

    \(P+\frac { { { a }^{ 2 }n }^{ 2 } }{ { v }^{ 2 } } \)

    (c)

    \(P+\frac { { n }^{ 2 }a }{ { v }^{ 2 } } \)

    (d)

    \(P+\frac { { n }^{ 2 }a }{ { v } } \)

  40. ஹீலியத்தை திரவமாக்க பெரும்பான்மையாகப் பயன்படுத்தும் முறை 

    (a)

    லிண்டே முறை 

    (b)

    ஜூல் -தாம்சன் விளைவு 

    (c)

    கிளாட் முறை 

    (d)

    கார்னாட் முறை 

  41. மாறா வெப்பநிலையில் வரையப்படும் வரைகோடு சமவெப்பநிலைக் கோடு எனப்படும்.இக்கோடு காட்டும் தொடர்பு 

    (a)

    p மற்றும் \(\frac { 1 }{ v } \)

    (b)

    pv  மற்றும் v 

    (c)

    p  மற்றும் v 

    (d)

    v  மற்றும் \(\frac { 1 }{ p } \)

  42. 227°C மற்றும் 4 வளிமண்டல அழுத்தத்திலுள்ள ஆகிஸிஜன் வாயுவின் அடர்த்தி என்ன?(R = 0.082 L atom k-1 mol-1)

    (a)

    3.12 g/L

    (b)

    3.41 g/L

    (c)

    2.81 g/L

    (d)

    இவை எதுவுமில்லை 

  43. மீத்தேன் மற்றும் ஈத்தேன் ஆகியவற்றின் பிணைப்பு பிளத்தல் ஆற்றல்கள் முறையே,  360 kJ mol-1 மற்றும் 620 kJ mol-1 எனில் C-C ஒற்றை பிணைப்பின் பிளத்தல் ஆற்றல்

    (a)

    170 kJ mol–1

    (b)

    50 kJ mol–1

    (c)

    80 kJ mol–1

    (d)

    220 kJ mol–1

  44. இயற்கையில் நிகழும் அனைத்து செயல்முறைகளை _________ திசையில் நடக்கின்றன.

    (a)

    என்ட்ரோபி குறையும்

    (b)

    என்தால்பி அதிகரிக்கும்

    (c)

    கட்டிலா ஆற்றல் அதிகரிக்கும்

    (d)

    கட்டிலா ஆற்றல் குறையும்

  45. ஒரு நல்லியல்பு வாயு வெப்பம் மாறா முறையில் விரிவடைதலில்

    (a)

    w=-Δu

    (b)

    w=Δu+ΔH

    (c)

    Δu=0

    (d)

    w=0

  46. C (வைரம்) ➝ C(கிராஃபைட்) ΔHஎதிர்க்குறியுடையது இது குறிப்பிடும்போது

    (a)

    வைரத்தைவிட கிராஃபைட் அதிக நிலைப்புத்தன்மை கொண்டது

    (b)

    வைரத்தைவிட கிராஃபைட் அதிக நிலைப்புத்தன்மை கொண்டது

    (c)

    இரண்டும் சமநிலைப்புத் தன்மை கொண்டவை

    (d)

    நிலைப்புத்தன்மை நிர்ணயிக்க இயலாது

  47. தன்னிச்சையான வினைகள் நிகழும் விதம் 

    (a)

    என்ட்ரோபி அதிகரிக்கும் 

    (b)

    வினைவெப்பம் எதிர்குறியீடு 

    (c)

    கட்டிலா ஆற்றல் மாற்றம் எதிர்குறியீடு 

    (d)

    இவை அனைத்தும் 

  48. மொத்த வேலையைக் குறிப்பது 

    (a)

    w + P\(\triangle\)V

    (b)

    w - P\(\triangle\)V

    (c)

    P\(\triangle\)V-w

    (d)

    P\(\triangle\)V

  49. cgs முறையில் என்ட்ரோபியின் அலகு 

    (a)

    Cal K-1mol-1

    (b)

    Cal K-1

    (c)

    JK-1

    (d)

    Cal mol-1

  50. ஒரு வெப்பமாறாச் செயல்முறையில் கீழ்க்கண்டவற்றில் எது உண்மை? 

    (a)

    q = w

    (b)

    q = 0

    (c)

    E = q

    (d)

    P\(\triangle \)V=0

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு வேதியியல் தொகுப்பு 1 முக்கிய ஒரு மதிப்பெண் கேள்வித்தாள் (11th Standard Physics Volume 1 Important One Mark Questions)

Write your Comment