11th First Revision Test Creative Question

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 120
    30 x 2 = 60
  1. setw( ) வடிவமைப்பு கையாளும் செயற்கூறின் பயன் என்ன? 

  2. பின்வரும் கூற்றின் மதிப்பு யாது? if i = 20 முதலில் 
    a) ++i < = 20  b) i++ < = 20

  3. if கூற்றுடன்,?:மும்ம செயற்குறியை ஒப்பிடுக.

  4. அடிப்படை செயல்பாடுகளுக்கான கூற்றுகளை எழுதுக.

  5. break கூற்று பற்றி சிறு குறிப்பு வரைக 

  6. உள்ளமை வரையெல்லை பற்றி சிறுகுறிப்பு வரைக.

  7. கீழே கொடுக்கப்பட்டுள்ள நிரலின் வெளியீட்டை எழுதுக.
    #include < string.h >
    #include < iostream >
    using namespace std;
    int main()
    {
    char target [50] = ''Learning C++ is fun'' ;
    char source [50] = '' , easy and very useful'' ;
    strcat (target, source);
    Cout << target ;
    return 0;
    }
     

  8. வர்க்க மூலக்கை  கணக்ககிடும்  செயற்கூற்றினை பற்றி சிறுகுறிப்பு வரைக.     

  9. வரையறு-கட்டுரு.அதன் பயன் என்ன?

  10. பின்வரும்  நிரல்  தொகுதி முழுவதும் சரியானதா? பிழை இருந்தால் அடையாளம் காண்க?
    struct sum1{ int n1,n2;}s1;
    struct sum2{int n1,n2}s2;
    cin >> s1.n1 >> s1.n2;
    s2=s1;

  11. அணியின் நினைவக ஒதுக்கீட்டை கணக்கிட பயன்படும் வாய்பாட்டை எழுதுக.

  12. char str[2]={'5', '+', 'A', 'B'}; என்ற கூற்று ஏன் தவறானது?

  13. உறைபொதியாக்கம் மற்றும் அருவமாக்குதல் எவ்வாறு தொடர்பு படுத்தப்படுகிறது?

  14. C++- ன் இனக்குழு என்றால் என்ன?

  15. தரவு பிணைப்பு என்றால் என்ன?

  16. பொருள் நோக்கு நிர்லாக்கு குறிமுறை  (OOP) அடிப்படையில்  இனக்குழு மற்றும் பொருள் பற்றி வேறுபடுத்திக் காட்டுக.

  17. அழிப்பி-சிறு குறிப்பு வரைக.

  18. அழிப்பி எப்போது அழைக்கப்படுகிறது?

  19. செயற்கூறு பணிமிகுப்பு என்றால் என்ன?

  20. பல்லுருவாக்கம் ஏதன் மூலம் நிறைவேற்றப்படுகிறது?

  21. எப்பொழுது இரண்டு செயற்கூறுகள் பணிமிகுக்க முடியாது?

  22. அடிப்படை இனக்குழு என்றால் என்ன?

  23. தருவிக்கப்பட்ட இனக்குழுவை வரையறுக்கும் கட்டளையமைப்பை எழுதுக.

  24. ஓர் இனக்குழு எந்த அறிவிப்புகளும் இல்லாமல் வரையறுக்கும்போது எவ்வளவு பைட் அளவுள்ளதாக இருக்கும்? 

  25. கிராக்கிங் சிறு குறிப்பு வரைக.

  26. இணைய பாதுகாப்பு என்றால் என்ன?

  27. தீம்பொருள் என்றால் என்ன?

  28. ஆண்ட்ராய்டு பயன்படும் விசைப்பலகை என்றால் என்ன?

  29. தமிழ் தட்டச்சு இடைமுக மென்பொருளின் பயன் யாது?

  30. மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்பு திட்டம் பற்றி எழுதுக.

  31. 20 x 3 = 60
  32. main செயற்கூற்றின் சிறப்பு யாது? 

  33. C++ ன் வரலாறு பற்றி எழுதுக.

  34. int ch = 30;
    cout << ++ ch;
    cout << ch;
    (i) மேலே உள்ள கோப்பின் வெளிப்பாடு யாது?
    (ii) ++ch க்கு பதிலாக ch+1 என மாற்றியமைத்தால் வரும் வெளிப்பாடு யாது?

  35. பின்வரும் if - else கூற்றுக்கு நிகரான நிபந்தனை கூற்றாக மாற்றுக:
    if (x >= 10)
    a = m + 5;
    else
    a = m;
     

  36. பின்னலான if கூற்று என்றால் என்ன?அவற்றின் மூன்று வடிவங்களை எழுதுக.

  37. வேறுபடுத்துக break கூற்று மற்றும் continue கூற்று 

  38. முன்னிலைப்பு செயலுறுப்புக்கள் என்றல் என்ன? எடுத்துக்காட்டு தருக.

  39. பின்வரும் செயற்கூறுவின் செயல்பாட்டை எழுதுக.
    (i) display () , (ii) display (x , y ), (iii) x  = display (), (iv) x = display (x, y  )    

  40. கட்டுருவை அறிவித்தலுக்கான தொடரியலை எழுது. எடுத்துக்காட்டு கொடு.

  41. பெயரற்ற கட்டுரு என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

  42. அணியின் உறுப்புகளை அணுக கீழொட்டின் மதிப்பு எவ்வாறாக இருக்கலாம்?

  43. கூறுநிலையாக்குதல் மற்றும் மென்பொருள் மறு பயணாக்கம் வரையறு.

  44. Public அணுகுமுறையில் ஆக்கிகள், அழிப்புகள், அறிவிப்பினால விளையும் நன்மைகள் யாவை?  

  45. கீழே உள்ள கொடுக்கப்பட்டுள்ள (i), (ii) மற்றும் (iii) என்ற இடத்தில் குறிப்பிடப்படுபவை எவை?
    #include <iostream>
    using namespace std;
    class Box
    {
       double width; ..(i)
    public;
        double length;
    void printWidth( ) ...(ii)
        {
        cout << "\n The Width of the box is.." << width;
    }
    void setWidth( double w);
    };
    void Box : : setWidth(double w) ..iii
    {
    width=w;
    }

  46. உள்ளார்ந்த அழைப்பு மற்றும் வெளிப்படையான அழைப்பின் வேறுபாட்டை எழுதுக.

  47. செயற்குறி பணிமிகுப்பு என்றால் என்ன? பணிமிகுப்பு செய்யக்கூடிய செயற்குறிகளுள் செலவற்றை கூறு.

  48. private காண்புநிலையில் இருக்கும் உறுப்புகளுக்கும், public காண்புநிலையில் இருக்கும் உறுப்புகளுக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

  49. மேலிடல் சிக்கல் எப்போது நிகழும்? அதனைத் தீர்க்க வழி யாது? 

  50. பையர்வாலின் பங்கு பற்றி எழுதுக?

  51. இணைய உலகில் உள்ள சில தர நிலைகள் பற்றி எழுதுக.

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு கணினி அறிவியல் முதல் திருப்புதல் தேர்வு கூடுதல் வினாக்கள் ( 11th Standard Computer Science First Revision Test Creative Questions )

Write your Comment