New ! கணிதம் MCQ Practise Tests



முதல் இடைத்தேர்வு மாதிரி வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. \(A= \left\{ (x,y);y={e}^{x},x\in R \right\} \) மற்றும் \(B = \left\{ (x,y);y={e}^{-x},x\in R \right\} \) எனில், \(n(A\cap B)\) என்பது________.

    (a)

    \(\infty\)

    (b)

    0

    (c)

    1

    (d)

    2

  2. X =  { 1, 2, 3, 4 }, Y = { a, b, c, d } மற்றும் f = { (1, a), (4, b), (2, c), (3, d) ,(2, d) } எனில் f என்பது ________.

    (a)

    ஒன்றுக்கொன்றானச் சார்பு

    (b)

    மேற்கோர்த்தல் சார்பு

    (c)

    ஒன்றுக்கொன்று அல்லாத சார்பு

    (d)

    சார்பன்று

  3. log311 log11 13 log13 15 log15 27 log27 81-ன் மதிப்பு _______.

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    4

  4. 44 மூலைவிட்டங்கள் உள்ள ஒரு பலகோணத்தின் பக்கங்களின் எண்ணிக்கை ______.

    (a)

    4

    (b)

    4!

    (c)

    11

    (d)

    22

  5. 1+3+5+7+....+ 17-ன் மதிப்பு ______.

    (a)

    101

    (b)

    81

    (c)

    71

    (d)

    61

  6. 5 x 2 = 10
  7. கீழ்க்காண்பவைகளை பட்டியல் முறையில் எழுதுக
    {x ∈ N : x2 < 121 மற்றும் x ஒரு பகா எண்ணாகும்}

  8. கீழ்க்காணும் தொடர்புகள் சார்புகளா? என்பதனைச் சோதிக்கவும். சார்புகள் எனில் அவை ஒன்றுக்கொன்றா மற்றும் மேற்கோர்த்தலா எனச் சோதிக்கவும். சார்பு இல்லை எனில் காரணம் கூறவும்.
    X = {x,y,z} மற்றும் f = {(x,y), (x,z),(z,x)}; (f:X ⟶X)

  9. 3x3 + 8x2 + 8x + a என்ற பல்லுறுப்புக் கோவையின் ஒரு காரணி x2 + x + 1 எனில், a - ன்  மதிப்பைக் காண்க.

  10. முதலில் இரண்டு வெவ்வேறான ஆங்கில எழுத்துகளையும் அதனைத்தொடர்ந்து நான்கு வெவ்வேறான எண்களையும் அல்லது முதலில் இரண்டு வெவ்வேறான எண்களையும் அதனைத்தொடர்ந்து நான்கு வெவ்வேறான எழுத்துகளையும் கொண்டு எத்தனை வெவ்வேறான உரிமத் தட்டுகளை (Licence Plates) உருவாக்கலாம்?

  11. 5 x 3 = 15
  12. \(f(x)={\sqrt{4-x^3}\over \sqrt{x^2-9}}\) என்ற சார்பின் மீப்பெரு சார்பகத்தைக் காண்க

  13. \(\frac{32\pi}{3}\) கன அளவு கொண்ட கோள வடிவுடைய நீர்த்தேக்கத் தொட்டியின் ஆரத்தைக் காண்க.

  14. நிறுவுக. cos(30° - A)cos(30° +A) + cos (45° - A) cos (45° + A) = cos2A + \(\frac { 1 }{ 4 } \)

  15. 4 கணிதப் புத்தகங்கள், 3 இயற்பியல் புத்தகங்கள், 2 வேதியியல் புத்தகங்கள் மற்றும் 1 உயிரியல் புத்தகத்தை ஓர் அலமாரியில் ஒரே பாட புத்தகங்கள் ஒன்றாக வரும் வகையில் எத்தனை வழிகளில் அடுக்கலாம்?

  16. (i) BIRD என்ற ஆங்கில வார்த்தையில் உள்ள 4 எழுத்துக்களையும் பயன்படுத்தி எழுத்துகள் திரும்ப வராமல் எத்தனை எழுத்துச் சரங்களை உருவாக்கலாம்.
    (ii) PRIME என்ற ஆங்கில வார்த்தையில் உள்ள 5 எழுத்துக்களையும் பயன்படுத்தி எழுத்துகள் திரும்ப வராமல் எத்தனை எழுத்துச் சரங்களை உருவாக்கலாம்.

  17. 4 x 5 = 20
  18. கொடுக்கப்பட்டுள்ள \(y={x}^{({1\over3})}\) என்ற வளைவரையைப் பயன்படுத்திக் கீழ்க்காணும் சார்புகளை ஒரே தளத்தில் வரைக.
    1. \(y=-{x}^{({1\over 3})}\)
    2.\(y=-{x}^{({1\over 3})}+1 \)
    3.\(y={x}^{({1\over 3})}-1\)
    4. \(y={x+1}^{({1\over 3})}\)

  19. தீர்க்க \(\frac{x+1}{x+3}<3\)

  20. ஒர் ஆராய்ச்சியாளர் ஒர் குளத்தின் அகலத்தைக் கிழக்கிலிருந்து மேற்காகச் சரியாக அளவிட முடியாத போது அதைக் கண்டறிய விழைகிறார். P என்ற புள்ளியிலிருந்து குளத்தின் கிழக்குப்பகுதியின் முனை 8 கி.மீ. தொலைவிலும் அதே சமயத்தில் மேற்கு பகுதியின் முனை 6 கி.மீ. தொலைவிலும் உள்ளது மற்றும் P-யையும் கிழக்குப் பகுதியின் முனையை இணைக்கும் கோட்டிற்கும், P-யையும் மேற்கு பகுதியின் முனையையும் இணைக்கும் கோட்டிற்கும் இடைப்பட்டக் கோணம் 60° எனில் குளத்தின் அகலத்தைக் காண்க.

  21. GARDEN என்ற வார்த்தையில் உள்ள எழுத்துகளை வரிசை மாற்றத்திற்கு உட்படுத்திக் கிடைக்கும் எழுத்துச் சரங்களை ஆங்கில அகராதியில் உள்ளது போன்று வரிசைப்படுத்தும்போது, கீழ்க்காணும் வார்த்தைகளின் தரத்தைக் காண்க.
    (i) GARDEN
    (ii) DANGER

*****************************************

Reviews & Comments about 11th Standard கணிதம் முதல் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாள் ( 11th Standard Maths First Mid Term Model Question Paper )

Write your Comment