துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப்பொருட்களின் இயக்கம் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. துகள்களால் ஆன அமைப்பின் நிறை மையம் சாராதிருப்பது ______.

    (a)

    துகள்களின் நிலை

    (b)

    துகள்களுக்கிடையே உள்ள தொலைவு

    (c)

    துகள்களின் நிறை

    (d)

    துகளின் மீது செயல்படும் விசை

  2. திண்பொருள் ஒன்று கோண உந்தம் L உடன் சுழல்கிறது இதன் இயக்க ஆற்றல் பாதியானால் கோண உந்தமானது ______.

    (a)

    L

    (b)

    L/2

    (c)

    2L

    (d)

    \(\frac { L }{ \sqrt { 2 } } \)

  3. M நிறையும் R ஆரமும் கொண்ட திண்மக் கோணமானது ፀ கோணம் உள்ள சாய்தளத்தில் கீழ்நோக்கி நழுவாமல் உருளுதலின் போதும் உருளாமல் சறுக்குதலின் போதும் பெற்றிருக்கும் முடுக்கங்களின் விகிதம்______.

    (a)

    5:7

    (b)

    2:3

    (c)

    2:5

    (d)

    7:5

  4. திண்மக்கோளம் ஒன்று சறுக்காமல் உச்சியிலிருந்து கீழ்நோக்கி அமைதி நிலையிலிருந்து h குத்துயரம் கொண்ட சாய்தளத்தை கடக்கும்போது அதன் வேகம்______.

    (a)

    \(\sqrt { \frac { 4 }{ 3 } gh } \)

    (b)

    \(\sqrt { \frac { 10 }{ 7 } gh } \)

    (c)

    \(\sqrt { 2gh } \)

    (d)

    \(\sqrt { \frac { 1 }{ 2 } gh } \)

  5. சாய்தளத்தில் M நிறையும் R ஆரமும் கொண்ட உருளை வடிவப்பொருள் நழுவாமல் கீழ்நோக்கி உருள்கிறது. அது உருளும் உராய்வு விசையானது ______.

    (a)

    இயக்க ஆற்றலை வெப்ப ஆற்றலாக மாற்றும்

    (b)

    சுழற்சி இயக்கத்தை குறைக்கும்

    (c)

    சுழற்சி மற்றும் இடப்பெயர்ச்சி இயக்கங்களை குறைக்கும்

    (d)

    இடப்பெயர்ச்சி ஆற்றலை சுழற்சி ஆற்றலாக மாற்றும்

  6. 3 x 2 = 6
  7. மரம் வெட்டப்படும் போது, மரமானது வெட்டி வீழ்த்த வேண்டிய திசையின் பக்கமே வெட்டப்பட வேண்டியது ஏன்?

  8. செவ்வக கட்டையானது மேசையின் மீது அமைதி நிலையில் உள்ளது. கட்டையை நகரச் செய்ய மேசையின் தளத்திலிருந்து 'h' உயரத்தில் கிடைத்தள விசை செலுத்தப்படுகிறது. மேசை கட்டையின் மீது செலுத்தும் செங்குத்து விசை N, h-ஐச் சார்ந்து இருக்குமா?

  9. X-Y தளத்தில் m நிறை கொண்ட சிறிய துகள் X அச்சுடன் \(\theta \)கோணத்தில் v என்ற ஆரம்ப திசைவேகத்துடன் படத்தில் காட்டியுள்ளவாறு எறியப்படுகிறது. அப் பொருளின் கோண உந்தத்தை காண்க.

  10. 3 x 3 = 9
  11. நிறைமையம் வரையறு.

  12. திருப்புவிசை வரையறு. அதன் அலகு யாது?

  13. சுழற்சி ஆரம் என்றால் என்ன?

  14. 2 x 5 = 10
  15. R ஆரமுடைய சீரான பரப்பு நிறை அடர்த்தி கொண்ட வட்டத்தட்டிலிருந்து \(\frac { R }{ 2 } \) ஆரமுடைய ஒரு சிறு தட்டு வடிவப் பகுதி படத்தில் காட்டியுள்ளவாறு வெட்டி எடுக்கப்படுகிறது. மீதமுள்ள பகுதியின் நிறை மையத்தைக் கணக்கிடுக.

  16. 3 kg நிறையும் 50 cm ஆரமும் கொண்ட வட்டத் தட்டு ஒன்றின் நிலைமத்திருப்புத்திறனை பின்வரும் அச்சுகளைப் பொருத்து காண்க.
    (i) வட்டத்தட்டின் மையத்தில் தளத்திற்கு செங்குத்தாக செல்லும் அச்சு.
    (ii) வட்டத்தட்டின் பரிதியின் ஏதேனும் ஒரு புள்ளியின் வழிச்செல்வதும் தளத்திற்கு செங்குத்தானதுமான அச்சு.
    (iii) வட்டத்தட்டின் மையம் வழியாகவும் அதே தளத்திலேயே செல்வதுமான அச்சு.

*****************************************

Reviews & Comments about 11th Standard இயற்பியல் - துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப்பொருட்களின் இயக்கம் Book Back Questions ( 11th Standard Physics - Motion of System of Particles and Rigid Bodies Book Back Questions )

Write your Comment