Loading [MathJax]/extensions/AssistiveMML.js



11th Public Exam March 2019 Important 5 Marks Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 200
    40 x 5 = 200
  1. SI முறையில் ஈர்ப்பியல் மாறிலியின் மதிப்பு GSI = 6.6 × 10-11 Nm2 kg−2, எனில் CGS முறையில் அதன் மதிப்பைக் கணக்கிடுக?

  2. \({1\over 2}mv^2=mgh\) என்ற சமன்பாட்டை பரிமாணப்பகுப்பாய்வு முறைப்படி சரியானதா என கண்டறிக.

  3. பிழைகளின் வெவ்வேறு வகைகளை விளக்குக

  4. பரிமாணத்தின் ஒருபடித்தான நெறிமுறை என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை? எடுத்துக்காட்டு தருக

  5. பல்வேறு அளவிடும் முறைகள் பற்றி விவரி 

  6. SI அலகுமுறை என்பது யாது? அதன் சிறப்பியல்புகளைக் கூறு.SI அலகு முறையின் ஏழு அடிப்படை அளவுகளையும் அட்டவணைப்படுத்து.

  7. \(\overrightarrow{A}\) மற்றும் \(\overrightarrow{B}\) என்ற இரணடு வெக்டர்கள் ஒன்றுக்கொன்று 60° கோணத்தில் சாய்ந்த நிலையில் உள்ளன. அவற்றின் எண்மதிப்புகள் முறையே 5 அலகுகள் மற்றும் 7 அலகுகள் ஆகும். தொகுபயன் வெக்டரின் எண்மதிப்பு மற்றும் \(\overrightarrow{A}\) யைப் பொருத்து தொகுபயன் வெக்டரின் திசை ஆகியவற்றைக் காண்க.

  8. ஸ்கேலார் மற்றும் வெக்டர் பெருக்கல்களின் பண்புகளை விவரி.

  9. மையநோக்கு முடுக்கத்திற்கான கோவையைப் பெறுக.

  10. ஒழுங்கற்ற வளைகோட்டின் கீழே அமையும் பரப்பை எவ்வாறு காண்பாய்?

  11. பறக்கும் நேரம், கிடைத்தள நெடுக்கம் மற்றும் தொகுபயன் திசைவேகம்-இவற்றின் சமன்பாடுகளைத் தருவி.

  12. ஒரு மையவிசைகள் என்றால் என்ன? லாமியின் தேற்றத்தைக் கூறு.

  13. நியூட்டனின் மூன்று விதிகளின் முக்கியத்துவத்தை விளக்குக.

  14. புவியினை நோக்கி நிலவின் மையநோக்கு முடுக்கத்தைக் காண்க.

  15. உராய்வுக் கோணம் விளக்குக.

  16. மாறா விசை மற்றும் மாறும் விசையால் செய்யப்ட்ட வேலைகளுக்கிடையே உள்ள வேறுபாடுகளை வரைபடங்களுடன் விளக்குக.

  17. ஒரு பரிமாண மிட்சி மோதலில் பொருட்களின்  திசைவேகத்திற்கான சமன்பாட்டைத் தருவித்து , அதன் பல்வேறு நேர்வுகளை விவரி. 

  18. ஆற்றல் மாறாவிதி சுருக்கமாக விளக்குக.

  19. ஒழுங்கற்ற வடிவமுடைய பொருட்களின் நிறை மையம் காணும் முறையை விளக்குக.

  20. ஈர்ப்பியல் விதியின் முக்கிய கூறுகளை விளக்குக.

  21. ஈர்ப்பு நிலை ஆற்றலுக்கான கோவையைத் தருவி.

  22. குறுக்குக்கோட்டைப் பொறுத்து g எவ்வாறு மாறுபடும்?

  23. புவி நிலை துணைக்கோள் மற்றும் துருவத் துணைக்கோள்- விரிவாக விளக்குக.

  24. மீட்சிக்குணத்தின் வகைகளை விளக்குக.

  25. பாய்மங்களில் பாஸ்கல் விதியைக் கூறி அதனை நிரூபி.

  26. நிறை மாறா நிலையின் அடிப்படையில் பாய்மம் ஒன்றின் ஓட்டத்திற்கான தொடர் மாறிலிச் சமன்பாட்டைத் தருவி.

  27. தகைவு -திரிபு விவரப் படத்தினை வரைந்து விவரி. 

  28. பெர்னௌலி தேற்றத்தின் பயன்பாடுகள் மூன்றினை விவரி.

  29. நல்லியல்பு வாயு விதியை விவரி.

  30. வெப்பம் பரவும் வெவ்வேறு வழிமுறைகளை விரிவாக  விளக்குக.

  31. நல்லியல்பு வாயு ஒன்றிற்கான மேயர் தொடர்பைப் பெறுக. 

  32. மீளா செயல்முறைக்கான சில எடுத்துக்காட்டுகளை கூறுக.

  33. அறை ஒன்றில் இயக்கத்திலுள்ள பத்து வாயு மூலக்கூறுகளின் வேகங்கள் முறையே 2, 3, 4, 5, 5, 5, 6, 6, 7மற்றும்  9 m s-1 ஆகும். இவற்றின் சராசரி இருமுடி மூல வேகம், சராசரி வேகம் \((\bar { V } )\)மற்றும் மிகவும் சாத்தியமான வேகம் \((V_{ mp })\)இவற்றைக் காண்க. 

  34. வாயுக்களின் இயக்கவியற் கொள்கையிலிருந்து பெறப்பட்ட சில அடிப்படை விதிகளைத் தருவித்து விவாதி.

  35. சீரான வட்ட இயக்கத்தின் வீழல் சீரிசை இயக்கம் என்பதை விவரி.

  36. சுருள்வில்லின் செங்குத்து அலைவுகளை விவரி.

  37. ஒரு சீரான வட்டம் ஆரம் r =0.6m மற்றும் நிறை m=2.5kg ஒரு கிடைத்தள முள்ளிலிருந்து தன்னிச்சையாக சுழலுமாறு மையத்திலிருந்து ஆரத்தொலைவு 30m தொங்கவிடப்பட்டுள்ளது. சிறும வீச்சில் வட்டின் அலைவுகளுக்கான கோண அதிர்வெண் யாது? 

  38. நீரின் மேற்பரப்பில் சுருள் வடிவில் மேடு, பள்ளங்கள் ஏற்படுவது ஏன்?

  39. மீட்சித் தன்மை கொண்ட ஊடகத்தில் நெட்டிலையின் திசைவேகத்தைத் தருவி.

  40. வாயுவில் ஒலியின் திசைவேகத்தை பாதிக்கும் காரணிகள் யாவை? விளக்குக.

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 இயற்பியல் முக்கிய 5 மதிப்பெண் வினாக்கள் ( 11th Standard Physics Public Exam March 2019 Important 5 Marks Questions )

Write your Comment