திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 03:00:00 Hrs
Total Marks : 70

    பகுதி - I

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

    15 x 1 = 15
  1. CGS முறையில் ஒரு பொருளின் அடர்த்தி 4 g cm-3 ஆகும். நீளம் 10 cm, நிறை 100 g கொண்டிருக்கும் ஓர் அலகு முறையில் அப்பொருளின் அடர்த்தி_______.

    (a)

    0.04

    (b)

    0.4

    (c)

    40

    (d)

    400

  2. ஒப்படர்த்தி இதற்கு ஒரு எடுத்துக்காட்டு ______

    (a)

    பரிமாணமுள்ள மாறிகள் 

    (b)

    பரிமாணமற்ற மாறிகள் 

    (c)

    பரிமாணமுள்ள மாறிலிகள் 

    (d)

    பரிமாணமற்ற மாறிலிகள் 

  3. கோள் ஒன்றில், 50 m உயரத்திலிருந்து பொருளொன்று கீழே விழுகிறது. அது தரையை அடைய எடுத்துக்கொள்ளும் நேரம் 2 வினாடி எனில், கோளின் ஈர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு என்ன?

    (a)

    g = 20 m s–2

    (b)

    g = 25 m s–2

    (c)

    g = 15 m s–2

    (d)

    g = 30 m s–2

  4. துகளொன்று வட்டப்பாதையில் இயங்கும்போது அதன் மையநோக்கு விசை எதற்கு எதிர்த்தகவில் இருக்கும்?

    (a)

    துகளின் நிறைக்கு

    (b)

    பாதையின் ஆரத்திற்கு

    (c)

    துகளின் வேகத்திற்கு

    (d)

    துகளின் நிறைக்கும் அதன் வேகத்திற்கும்

  5. மனிதரொருவர் புவியின் துருவத்திலிருந்து, நடுவரைக் கோட்டுப் பகுதியை நோக்கி வருகிறார். அவரின்மீது செயல்படும் மையவிலக்கு விசை _______.

    (a)

    அதிகரிக்கும்

    (b)

    குறையும்

    (c)

    மாறாது

    (d)

    முதலில் அதிகரிக்கும் பின்பு குறையும்

  6. வேலை செய்யப்படும்போது ஒரு அமைப்பின் நிலை ஆற்றல் உயருகிறது எனில்

    (a)

    அமைப்பின் மீது செயல்படும் ஒரு மாற்றமுள்ள விசை

    (b)

    அமைப்பின் மீது செயல்படும் ஒரு மாற்றமில்லா விசை

    (c)

    ஒரு அமைப்பிற்கு எதிரான மாற்றமில்லா விசை

    (d)

    ஒரு அமைப்பிற்கு எதிரான மாற்றமுள்ள விசை

  7. சமமான நிலைமத் திருப்புத்திறன் கொண்ட வட்டத்தட்டுகள் மையம் வழியே வட்டத்தட்டுகளின் தளத்திற்கு செங்குத்தாக செல்லும் அச்சைப் பற்றி ω1 மற்றும் ω2 என்ற கோண திசைவேகங்களுடன் சுழல்கின்றன. இவ்விரு வட்டத்தட்டுகளின் அச்சுகளை ஒன்றிணைக்குமாறு அவை ஒன்றுடன் ஒன்று பொருத்தப்படுகின்றன எனில், இந்நிகழ்வின்போது ஆற்றல் இழப்பிற்கான கோவையானது ______.

    (a)

    \(\frac { 1 }{ 4 } I({ \omega }_{ 1 }-{ \omega }_{ 2 })^{ 2 }\)

    (b)

    \(I({ \omega }_{ 1 }-{ \omega }_{ 2 })^{ 2 }\)

    (c)

    \(\frac { 1 }{ 8 } I({ \omega }_{ 1 }-{ \omega }_{ 2 })^{ 2 }\)

    (d)

    \(\frac { 1 }{ 2 } I({ \omega }_{ 1 }-{ \omega }_{ 2 })^{ 2 }\)

  8. 55 kg மற்றும் 65 kg நிறை கொண்ட இரு மனிதர்களை 3 மீ நீளமும், 100 kg நிறையும் கொண்ட படகு ஒன்றின் எதிரெதிர் முனைகளில் அமர்ந்துள்ளனர். 55 kg நிறை கொண்ட மனிதன் படகில் நடந்து சென்று 65 kg  மனிதனோடு சேர்ந்து அமர்கின்றான். படகு நிலையாக உள்ள நீரில் மிதந்தால், படகின் நிறையின் மையம் இடம்பெயரும் தொலைவு 

    (a)

    3 m 

    (b)

    2.3 m 

    (c)

    சுழி 

    (d)

    0.75 m 

  9. ஒரு துணைக்கோளில் வைக்கப்பட்டுள்ள ஒரு சுருள்வில்லிலிருந்து ஒரு பொருள் தொங்கவிடப்பட்டுள்ளது. அது சுற்றுப் பாதையின் ஆரம் R ல் செல்லும்போது சுருள் வில்லின் அளவீடு w1 மற்றும் சுற்றுப்பாதையில் ஆரம் 2R ஆக உள்ளபோது அளவீடு w2

    (a)

    w1>w2

    (b)

    w1  ≠w2

    (c)

    w1=w2

    (d)

    w1<w2

  10. கீழ்க்கண்டவற்றுள் எது ஸ்கேலர் அல்ல?

    (a)

    பாகுநிலை 

    (b)

    பரப்பு இழுவிசை 

    (c)

    அழுத்தம் 

    (d)

    தகைவு 

  11. மூடப்பட்ட பாத்திரத்தினுள் உணவு சமைக்கப்படுகிறது. சிறிது நேரத்திற்குப்பின் நீராவி பாத்திரத்தின் மூடியை சற்றே மேலே தள்ளுகிறது. நீராவியை வெப்ப இயக்க அமைப்பு என்று கருதினால் இந்நிகழ்விற்கு பொருத்தமான கூற்று எது?

    (a)

    Q > O , W > O ,

    (b)

    Q < O , W > O ,

    (c)

    Q >O , W

    (d)

    Q < O , W < O ,

  12. ஒரு வெப்பப்பரிமாற்றமில்லா நிகழ்வில் பின்வரும் கூற்றில் எது சரி?  

    (a)

    \({ P }^{ \Upsilon }{ T }^{ \Upsilon -1 }\) =மாறிலி  

    (b)

    \({ P }^{ \Upsilon }{ T }^{ 1-\Upsilon }\) =மாறிலி 

    (c)

    \({ P }{ T }^{ \Upsilon }\) =மாறிலி 

    (d)

    \({ P }^{ 1-\Upsilon }{ T }^{ \Upsilon }\) =மாறிலி 

  13. கொள்கலம் ஒன்றில் ஒரு மோல் அளவுள்ள நல்லியல்பு வாயு உள்ளது. ஒவ்வொரு மூலக்கூறின் சுதந்திர இயக்கக்கூறுகளின் எண்ணிக்கையும் f எனில் \(\gamma ={C_p\over C_v}\)யின் மதிப்பு என்ன?

    (a)

    f

    (b)

    \(f\over 2\)

    (c)

    \(f\over f +2\)

    (d)

    \(f+2\over f\)

  14. m நிறை கொண்ட பொருளானது புறக்கணித்தக்க நிறை கொண்ட கப்பியின் வழியாக k1,k2 சுருள் மாறிலி கொண்ட நல்லியியல்பு சுருள்கள் மூலம் படத்தில் காட்டியுள்ளவாறு தொங்கவிடப்பட்டுள்ளது அதன் செங்குத்து அலையின் அலைவுநேரம் _______.

    (a)

    \(T =4\pi \sqrt {m\left({1\over k_1}+{1\over k_2}\right)}\)

    (b)

    \(T =2\pi \sqrt {m\left({1\over k_1}+{1\over k_2}\right)}\)

    (c)

    \(T =4\pi \sqrt {m(k_1+k_2)}\)

    (d)

    \(T =2\pi \sqrt {m(k_1+k_2)}\)

  15. ஒரு ஆர்கன் குழாயின் திறந்தமுனை முதல் மேற்சுரத்தில் அதிர்வடைகிறது. இது இரு முனையும் திறந்த மற்றொரு குழாயுடன் ஒத்ததிர்வில் உள்ளது. மூன்றாம் சீரிசையில் அதிர்வுறுகிறது இரு குழாய்களின் நிலத்தின் விகிதம்  

    (a)

    1 : 2

    (b)

    4 : 1

    (c)

    8 : 3

    (d)

    3 : 8

  16. பகுதி - II

    எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 24க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    6 x 2 = 12
  17. ஒரு வெப்பநிலைமானி கொண்டு அளவிடப்பட்ட இரு பொருட்களின் வெப்பநிலை t1 = (20 ± 0.5)°C மற்றும் t2 = (50 ± 0.5)°C எனில் அவற்றின் வெப்பநிலை வேறுபாட்டையும், பிழையையும் கணக்கிடுக

  18. பரப்புகளை ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் வழுவழுப்பாக்கினால் அவற்றின் உராய்வுத் தடை குறைவதற் குப்பதிலாக அதிகரிப்பதன் காரணம் என்ன?

  19. ஒரு உராய்வற்ற கிடைத்தளத்தில் 5 ms-1 திசைவேகத்தைக் கொண்ட பந்து ஒன்று செங்குத்துடன் 60° கோணத்தில் மோதுகிறது .மீட்சியளிப்பு குணகம் 0.5 எனில் மோதலுக்கு பிறகு பந்தின் திசைவேகம்  மற்றும் திசையைக் காண்க.

  20. ஆற்றலின் முக்கியமான அம்சம் யாது? [அ] ஆற்றல் மாறா விதி: வரையறு.

  21. சூழல் காற்றின் வேகம் அதிகமாக இருப்பது ஏன்?

  22. ஈர்ப்புத் தன்னிலை ஆற்றல் - வரையறு 

  23. மேல்நோக்கி உந்து விசை அல்லது மிதக்கும் தன்மை என்றால் என்ன?

  24. 25 m3 பருமனுள்ள அறை ஒன்றின் வெப்பநிலை 270C இவ்வறையினுள் உள்ள காற்று மூலக்கூறுகளின் எண்ணிக்கையைக் காண்க.

  25. வெளவால் ஒன்று 100KHz அதிர்வெண் உடைய மீயொலியை உமிழ்கிறது. நீர்ப்பரப்பிலிருந்து ஒளி எதிரொலிக்கப்படுகிறது. எதிரொலித்த மற்றும் ஊடுருவிய ஒளியின் அலைநீளங்களைக் கணக்கீடுக. [காற்றில் ஒலியின் திசைவேகம் 340 ms-1 மற்றும் நீரில் ஒலியின் வேகம் 1486ms-1)

  26. பகுதி - III

    எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 33க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    6 x 3 = 18
  27. திசைவேகம் மற்றும் வேகத்தை வரையறு.

  28. உந்தம் மற்றும் இயக்க ஆற்றல் இடையே உள்ள தொடர்பு -விளக்குக.

  29. ω கோணத் திசைவேகத்துடன் சுழலும் வட்ட மேசையின் மீது சர்க்கஸ் வீரர் ஒருவர் கைகளை நீட்டிய நிலையில் உள்ளார். அவர் கைகளைத் தன்னை நோக்கி உட்புறமாக மடக்கும் போது நிலைமத்திருப்புத் திறனானது ஆரம்ப மதிப்பிலிருந்து மூன்றில் ஒரு பங்காகக் குறைகிறது அவரது புதிய நிலையில் கோண திசை வேகத்தை காண்க.(தகவல் புறத்திருப்பு விசை செயல்படாத நிலையில்)

  30. ஈர்ப்பியல் மாறிலியின்  மதிப்பின்றி 'g' ன் மதிப்பால் விசையை கணக்கிட முடியும். கூற்றினை விளக்கு.

  31. பாகுநிலையின் முக்கியத்துவம் யாது? [அல்லது ]  பாகுநிலையின் பயன்பாடுகள் யாவை? 

  32. அழுத்தம் மாறா நிகழ்விற்கான எடுத்துக்காட்டுகள் தருக.
     

  33. இயக்கவியற் கொள்கையின் அடிப்படையில் வெப்பநிலையைப் பற்றி விரிவாக விளக்கவும்.

  34. ஒரு செவிலியர் நோயாளி ஒருவரின் சராசரிஇதயத்துடிப்பை அளவிட்டு மருத்துவரிடம் 0.8s என்ற அலைவு நேரத்தில் குறிப்பிட்டார். நோயாளியின் இதயத்துடிப்பை ஒரு நிமிடத்திற்கான துடிப்புகளின் எண்ணிக்கையில் கூறவும்.

  35. சோனார் - குறிப்பு வரைக.

  36. பகுதி - IV

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    5 x 5 = 25
    1. 27oC வெப்பநிலையில் உள்ள 1 மோல் நல்லியல்பு வாயு 1MPa அழுத்தத்தில் உருளை ஒன்றினுள் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. அதன் பருமன் இருமடங்காகும் வரை அதனை விரிவடைய அனுமதித்து பின்னர் கீழ்கண்டவற்றைக் கணக்கிடுக.
      a. (i) இப்பரும  விரிவு வெப்பரிமாற்றமில்லா முறையில் நடந்தால், வாயுவால் செய்யப்பட்ட வேலை என்ன?
      (ii) இப்பரும  விரிவு அழுத்தம் மாறா முறையில் நடந்தால், வாயுவால் செய்யப்பட்ட வேலை என்ன? 
      (iii) இப்பரும  விரிவு வெப்பநிலை மாறா முறையில் நடந்ததால், வாயுவால் செய்யப்பட்ட வேலை என்ன?
      b. மேற்கண்ட மூன்று நிகழ்வுகளிலும், எந்நிகழ்வில் வாயுவால் அதிக வேலை செய்யப்படுகிறது மற்றும் எந்நிகழ்வில் வாயுவால் குறைந்த வேலை செய்யப்படுகிறது என்று காண்க
      c. இம்மூன்று நிகழ்வுகளுக்கான PV வரைபடத்தை வரையவும் 
      d.  இம்மூன்று நிகழ்வுகளில் எந்நிகழ்வில் வெப்பம் வாயுவுக்கு அதிக வெப்பம் அளிக்கப்பட்டிருக்கும் மற்றும் எந்நிகழ்வில் வாயுவுக்கு குறைவாக வெப்பம் அளிக்கப்பட்டிருக்கும்?
      \(\gamma =\frac { 5 }{ 3 } \)மற்றும் R = 8.3 J mol-1 K-1

    2. f என்பது கம்பியின் அடிப்படை அதிர்வெண் என்க. கம்பியை l1, l2, l3 நீளம் கொண்ட மூன்று பகுதிகளாக பிரிக்கும்போது f1, f2, மற்றும் f3 என்பன முறையே மூன்று பகுதிகளின் அடிப்படை அதிர்வெண்கள் என்க. எனில் \({1\over f}={1\over f_1}+{1\over f_2}+{1\over f_3}\)என நிறுவுக.

    1. x- அச்சுத் திசையில் இயங்கும் துகளொன்றின் திசைவேகம் – நேரம் வரைபடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து கீழ்க்கண்டவற்றைக் காண்க.

      அ) 0 முதல் 55 வினாடி கால இடைவெளியில் துகளின் இயக்கத்தினை விளக்கவும்.

    2. அறை ஒன்றில் இயக்கத்திலுள்ள பத்து வாயு மூலக்கூறுகளின் வேகங்கள் முறையே 2, 3, 4, 5, 5, 5, 6, 6, 7மற்றும்  9 m s-1 ஆகும். இவற்றின் சராசரி இருமுடி மூல வேகம், சராசரி வேகம் \((\bar { V } )\)மற்றும் மிகவும் சாத்தியமான வேகம் \((V_{ mp })\)இவற்றைக் காண்க. 

    1. தொடாவிசையின் [ஈர்ப்புப் புலத்தின்] வலிமையை எவ்வாறு கணக்கிடுவாய்?

    2. ஒரு சுருள்வில் 10cm க்கு அமுக்கப்படுகிறது. அதன் திருப்புவிசை 10N உருவாகிறது. நிறையுள்ள பொருள் அதன் மீது 9 kg வைக்கப்படுகிறது. சுருள்விழின் விசை மாறிலி யாது? பொருளின் எடையினால் சுருள் வில்லில் ஏற்படும் தொய்வு யாது?பொருளானது சமநிலைப்புள்ளியிலிருந்து விளக்கப்பட்டால் அதன் அலைவுக்காலம் என்ன?  

    1. ஒரு துப்பாக்கி குண்டின் நிறை 300 அது 500 ms-1 அளவேகத்தில் இயங்குகிறது. ஒரு நிலையான இலக்கினை 10 cm துளைத்துக் கொண்டு செல்கிறது. இலக்கினால் குண்டின் மீது செலுத்தப்படும் சராசரி விசையைக் கணக்கிடுக. 

    2. நீர்மங்களின் அழுத்த, இயக்க மற்றும் நிலை ஆற்றலுக்கான கோவையைத் தருவி.

    1. ஓய்வுநிலை உராய்வு மற்றும் இயக்கஉராய்வு-ஒப்பிடுக

    2. m நிறை கொண்ட துகளானது v என்ற மாறாத திசை வேகத்துடன் இயங்குகிறது. ஏதேனும் ஒரு புள்ளியைப் பொருத்து இயக்கம் முழுவதிலும் இதன் கோண உந்தம் மாறாதது எனக் காட்டுக.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு இயற்பியல் திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள்  ( 11th Standard Physics Revision Model Question Paper )

Write your Comment