2 mark & 3 mark Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல் தொகுதிII

Time : 01:30:00 Hrs
Total Marks : 85
    குறுகிய விடைத் தருக.
    20 x 2 = 40
  1. இரு நிறைகளும் மற்றும் அந்நிறைகளுக்கு இடையேயான தொலைவு இரு மடங்கு ஆக்கப்பட்டால் அவற்றுக்கு இடையே உள்ள ஈர்ப்பு விசையில் ஏற்படும் மாற்றம் யாது?

  2. புவிப்பரப்புக்கு மேலே 200km உயரத்திலும் மற்றும் கீழே  200km ஆழத்திலும் ஈர்ப்பின் முடுக்கம் g மதிப்பு குறைவாக இருக்கும்?

  3. ஈர்ப்பின் முடுக்கச் சமன்பாட்டிலிருந்து அறிவான யாவை?

  4. ரெனால்டு எண் என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் யாது?

  5. நீர்மம் ஒன்றின் பரப்பு இழுவிசையை வரையறு. அதன் SI அலகு மற்றும் பரிமாணத்தைக் கூறுக. 

  6. ஒப்படர்த்தி வரையறு.  

  7. பரப்பு இழுவிசைக்கு எடுத்துக்காட்டுகளை கூறு.  

  8. வாயுவால் செய்யப்பட்ட வேலைக்கான சமன்பாட்டை வருவி.

  9. அழுத்தம் மாறாத் தன்வெப்ப ஏற்புத்திறன், பருமன் மாறாத் தன்வெப்ப ஏற்புத்திறனைவிட ஏன் அதிகமாக உள்ளது? விளக்குக.

  10. வெப்பம் ஏன் சூடான பொருளிலிருந்து, குளிர்ச்சியான பொருளுக்கு பாய்கிறது?

  11. சூடான, வேகவைக்கப்பட்ட முட்டையிலிருந்து ஓட்டினை பிரிப்பதன் தத்துவம் யாது?

  12. நடைமுறை வெப்ப இயந்திரங்களுக்கு எடுத்துக்காட்டு தருக.

  13. இயக்கவியற் கொள்கையின் அடிப்படையில் பாயில் விதியினை வருவி.

  14. 2 x  103ms-1 வேகத்தில் இயங்கும் ஆக்சிஜன் மூலக்கூறுகள் கொள்கலன் ஒன்றில் அடைத்துவைக்கப்பட்டுள்ள்ளன. 4cmசுவரின் பரப்பை ஒரு வினாடிக்கு 1020 முறை இந்த ஆக்சிஜன் மூலக்கூறுகள் செங்குத்துத்தளத்துடன் 300 கோணத்தில் தாக்குகின்றன.எனில், அம்மூலக்கூறுகள் சுவற்றில் ஏற்படுத்தும் அழுத்தத்தினைக் காண்க. (ஒரு அணுவின் நிறை = 1.67 x  10-27kg)

  15. \({ v }_{ rms },\overline { v } \)மற்றும் \({ v }_{ mp }\) ஒப்பிடுக.

  16. கட்டற்ற அலைவுகள் என்றால் என்ன?

  17. கிடைத்தளத்துடன் 450 கோணம் ஏற்படுத்தும் சாய்தளத்தில் வைக்கப்பட்டுள்ள உருளும் டிராலியில் l =0.9m நீளமுள்ள தனிஊசல் முறையாக பொருத்தப்பட்டுள்ளதாக கொள்வோம். சாய்தளமான ஊராய்வற்றது எனில் தனிஊசலின் அலைவுக்காலத்தை கணக்கிடுக.

  18. ஒரு தனி ஊசலின் அலைவு நேரம் 2.00s அதன் நீளத்தைக் காண்.

  19. ஒலியின் செறிவு மற்றும் உரப்பு ஆகியவற்றை விளக்குக.

  20. அலை இயக்கத்தின் பண்புகள் யாவை?

  21. விடைத் தருக.

    15 x 3 = 45
  22. ஒரு புவி துணை செயற்கைக்கொள் துகள்கள் புவியை ஒரு வட்டப்பாதையில் சுற்றும்போது  அதன் ஆரம் 36,000m எனில் ஒரு நுறு கிமீ புவிபரப்பின் மீதான சுற்றுப் பாதையில் சுற்றுக்காலம் யாது?           

  23. புவியைவிட இருமடங்கு நிறையும், விட்டமும் வுடைய ஒரு கோளைக் கருதுக. இக்கோளில் ஊசலின் அலைவு நேரம் என்னவாக இருக்கும்? புவியின் மீது ஒரு வினாடி ஊசல் என்பது யாது? 

  24. நுண்புழைக் குழாய் ஒன்றில் நீர் 2.0 cm உயரத்திற்கு மேலேறுகிறது. இக்குழாயின் ஆரத்தைப்போல மூன்றில் ஒரு பகுதி ஆரமுடைய மற்றொரு நுண்புழைக் குழாயில் நீர் எந்த அளவிற்கு மேலேறும்?

  25. வெற்றிடத்தில் ஒரு சோப்புக் குமிழின் ஆரம் 3cm. மற்றொரு சோப்பு குமிழின் ஆரம் 4cm . இரு குமிழிகள்  ஒத்த வெப்ப நிலையில் இணைகின்றன எனில் புதிய குமிழின் ஆரம் என்ன?     

  26. ஒரு பளு W ஆனது கம்பியில் தொங்கவிடப்படும் அது 1mm நீட்சி அடைகிறது.கம்பியானது ஒரு கப்பயின்  வழியே செல்லும்போது  இரு எடைகள் W இரு முனைகளிலும் தொங்கவிடப்பட்டால் கம்பியின் நீட்சி என்னவாக இருக்கும்? மி.மில் கூறு.        

  27. 300 k வெப்பநிலையுள்ள 0.5 மோல் வாயு ஒன்று தொடக்கப்பருமன் 2L இல் இருந்து இறுதிப்பருமான் 6L க்கு வெப்பநிலை மாறா நிகழ்வில் விரிவடைகிறது எனில், பின்வருவானவற்றைக் காண்க. 
    a. வாயுவால் செய்யப்பட்ட வேலை?
    b. வாயுவிற்குக் கொடுக்கப்பட்ட வெப்பத்தின் அளவு?
    c. வாயுவின் இறுதி அழுத்தம்?
    (வாயுமாறிலி, R= 8.31 J mol-1 K-1)

  28. நிலைமாற்றம் குறிப்பு வரைக. எடுத்துக்காட்டு தருக.

  29. அழுத்தம் மாறா நிகழ்விற்கான எடுத்துக்காட்டுகள் தருக.
     

  30. பிரௌனியன் இயக்கத்தினை விளக்குக.

  31. வாயு மூலக்கூறுகளால் ஏற்படும் அழுத்தம் சார்ந்திருக்கும் காரணிகளை விளக்குக?

  32. ஒரு அலைவுறும் தக்கை சுருள்வில் அமைப்பானது. 1.00 J எந்திர ஆற்றலுடையது. வீச்சு 10.0cm மற்றும் பெரும வேகம் 1.20m/s. சுருள்வில்லில் மாறிலி தக்கையின் நிறை மற்றும் அலைவுகளின் அதிர்வெண் இவற்றைக் காண்க.

  33. சுருள்வில் தராசு 0.25 m நீளமும் 0 முதல் 25 kg வரை நிறையை அளவிடும் வகையிலும் அமைக்கப்படடுள்ளது. இச்சுருள்வில் தராசானது 11.5 ms-2 ஈரப்பு முடுக்கம் கொண்ட X என்ற நாம் அறிந்திராத கோள் ஒன்றில் எடுததுக் கொள்ளப்படுகிறது. M kg நிறை கொண்ட ஒரு பொருள் சுருள் வில்லில் தராசில் தொங்க விடப்படும் பொழுது 0.50-s அலைவுக்காலத்துடன் அலைவுறுகிறது. பொருளின் மீது செயல்படும் ஈரப்பியல் விசையை கணக்கிடுக.

  34. படத்தில் காட்டியபடி நீள் நிறை அடர்த்தி 0.25kgm-1 கொண்ட கம்பியில் இயக்கத்தில் உள்ள துடிப்பின் திசைவேகம் காண்க. மேலும் துடிப்பு 30cm யைக் கம்பியில் கடக்க எடுத்துக்கொள்ளும் நேரத்தையும் காண்க.

  35. அதிர்வுறும் இரு இசைக்கவைகள் தோற்றுவிக்கும் அலைகளின் அலைச் சமன்பாடுகள் y1 = 5 sin(240\(\pi\) t) மற்றும் y2 = 4 sin(244\(\pi\)t) தோன்றும் விம்மல்களின் எண்ணிக்கையை கணக்கிடுக.

  36. ஒலி அலைகள் ஒரு ஊடகத்திலிருந்து மற்றொருஊடகத்திற்குச் செல்லும் போது ஏற்படும் நிகழ்வுகள் யாவை? 

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு இயற்பியல் 2 & 3 மதிப்பெண் வினாக்கள் ( 11th Physics - 2 mark & 3 mark Questions )

Write your Comment