11th Public Exam March 2019 Important Creative One Mark Test

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 75
    75 x 1 = 75
  1. கட்டிடவரைபடத் திட்டம், பிளக்ஸ் அட்டை போன்றவற்றை அச்சிடப்பயன்படும் வெளியீட்டு சாதனம் எது?

    (a)

    வெப்ப அச்சுப்பொறி

    (b)

    வரைவி

    (c)

    புள்ளி அச்சுப்பொறி

    (d)

    மைபீச்சு அச்சுப்பொறி

  2. எந்தவகை அச்சுப்பொறி காகிதத்தின் மீது தட்டுவதால் எழுத்து உருவாகிறது?

    (a)

    தட்டல்வகை

    (b)

    வெப்பவகை

    (c)

    லேசர்வகை

    (d)

    மைபீச்சுவகை

  3. பற்று அட்டை மற்றும் ஏடிஎம் அட்டையின் உரிமையாளரை விரைவாக அடையாளம் காண உதவும் சாதனம் எது?

    (a)

    ஒளிப்பேனா

    (b)

    காந்தப்படிப்பான்

    (c)

    காந்த மை எழுத்து உணர்தல்

    (d)

    ஒளிவழி எழுத்து உணர்தல்

  4. படங்களை உள்ளிட உதவும் சாதனம்

    (a)

    ஒளிப்பேனா

    (b)

    காந்தப்படிப்பான்

    (c)

    இலக்கவகைக் கேமரா

    (d)

    ஒலிப்பெருக்கி

  5. NAND பொதுமைவாயில் என்பது ------------- வாயில் எனப்படும்.

    (a)

    அடிப்படை வாயில்

    (b)

    தருவிக்கப்பட்ட வாயில்

    (c)

    தருக்க வாயில்

    (d)

    மின்னணு வாயில்

  6. எண்ணிலை எண் முறையில் உள்ள எண் உருக்கள்     

    (a)

    0 முதல் 7

    (b)

    0 முதல் 8

    (c)

    0 முதல் 10

    (d)

    0 முதல் 6

  7. உலகின் அனைத்தும் மொழிகளுக்கும் ஒரேகுறியீட்டு முறையை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டது.

    (a)

    BCD

    (b)

    ASCII

    (c)

    ISCII

    (d)

    Unicode

  8. எல்லாம் வாயில் (AND GATE).....அல்லது ........ என அழைக்கப்படுகின்றது

    (a)

    ஒன்று ஒன்றுக்கு மேற்பட்ட

    (b)

    ஐந்து ஐந்துக்கு மேற்பட்ட

    (c)

    மூன்று மூன்றுக்கு மேற்பட்ட

    (d)

    இரண்டு இரண்டுக்கு மேற்பட்ட 

  9. NAND என்பது AND மற்றும்....என்பதன் தொகுப்பாகும் 

    (a)

    NOT

    (b)

    AND

    (c)

    OR

    (d)

    NOR

  10. கணிப்பொறியின் திரைச்சாதனத்தை இணைக்க உதவும் தொடர்பு சாதனம் எது?

    (a)

    USB

    (b)

    Ps/2

    (c)

    SCSI

    (d)

    VGA

  11. படிக்க மட்டும் நினைவகம் _______ 

    (a)

    ROM

    (b)

    PROM

    (c)

    EPROM

    (d)

    EEPROM

  12. கேச் நினைவகம் _________ நினைவகம் ஆகும்.

    (a)

    அதிவேகமான

    (b)

    வேகமான

    (c)

    மெதுவான

    (d)

    மிக மெதுவான

  13. மொபல்கள் போன்ற வெளிப்புற கருவிகளை இணைப்பதற்கு பயன்படுத்தப்படுவது _____ 

    (a)

    தொடர் தொடர்முகம்

    (b)

    இணையான தொடர்புமுகம்

    (c)

    USB தொடர்புமுகம்

    (d)

    பல்லூடக இடைமுகம்

  14. கோப்பு மேலாண்மை எவற்றை நிர்வகிக்கிறது

    (a)

    கோப்புகள் 

    (b)

    கோப்புறைகள்

    (c)

    அடைவு அமைப்புகள்

    (d)

    இவை அனைத்தும்

  15. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது Linux இயக்க அமைப்பை சார்ந்ததல்ல

    (a)

    Ubuntu

    (b)

    RedHat

    (c)

    CentOS

    (d)

    BSD

  16. பணிக்குத் தகுதியற்ற விவரங்களைத் தவிர்த்து, அவசியமானவற்றை மட்டுமே குறிக்கும் பணியின் அம்சங்கள் என அழைக்கப்படுவது எது?

    (a)

    விவரக்குறிப்பு

    (b)

    சாராம்சம்

    (c)

    ஒருங்கினைத்தல்

    (d)

    பிரித்தல்

  17. நெறிமுறை (Algorithm)-யை செயல்படுத்துவதன் மூலம் _________ உருவாக்கப்படுகின்றன.

    (a)

    விவரக்குறிப்பு

    (b)

    கூற்றுக்கள்

    (c)

    செயல்முறைகள்

    (d)

    வரையறை

  18. C1 என்பது பொய் மற்றும் C2 என்ப து மெய் எனில், இயக்கப்படும் கூட்டு கூற்று எது?
    1   if C1
    2         S1
    3   else
    4        if C2
    5            S2
    6       else
    7             S3

    (a)

    S1

    (b)

    S2

    (c)

    S3

    (d)

    இவற்றில் ஏதுமில்லை

  19. பாய்வுப்பாடம்  என்பது, நெறிமுறைகளை ____ வடிவில் குறிப்படும் ஒரு வழிமுறை

    (a)

    நிரலாக்க

    (b)

    பட

    (c)

    போலிக்

    (d)

    வரையறை

  20. மடக்கு மாற்றமிலி உண்மையாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை

    (a)

    மடக்கின் தொடக்கத்தில்

    (b)

    ஒவ்வொரு சுழற்சியின் தொடக்கத்தில்

    (c)

    ஒவ்வொரு தற்சுழற்சியின் முடிவில்

    (d)

    நெறிமுறையின் தொடக்கத்தில்

  21. நேரடியாகத் தீர்க்கும் அளவுக்குச் சிக்கலின் அளவு சரியாக இருந்தால் 

    (a)

    அடிப்படை நிலை

    (b)

    தற்சுழற்சிப் படிநிலை 

    (c)

    அடக்கு நிலை 

    (d)

    நெறிமுறை

  22. C++ -யை உருவாக்கியவர் யார்?

    (a)

    சார்லஸ் பாபேஜ் 

    (b)

    ஜேர்ன் ஸ்டரெளஸ்ட்ரப் 

    (c)

    பில் கேட்ஸ் 

    (d)

    சுந்தர் பிச்சை

  23. பின்வருவனவற்றுள் எது தரவினங்களின் பண்புணர்த்தி அல்ல?

    (a)

    signed

    (b)

    int

    (c)

    long

    (d)

    short

  24. C++ மொழி எவற்றால் தரப்படுத்தப்பட்டது?

    (a)

    OSI 

    (b)

    ISO

    (c)

    AT & T 

    (d)

    ANSI 

  25. C++ மொழி முதலில் எந்த மொழியில் இருந்து தருவிக்கப்பட்டது?

    (a)

    C

    (b)

    பேசிக் 

    (c)

    போர்ட்டான்

    (d)

    இவை அனைத்தும்

  26. A-ன் ASCII மதிப்பு 

    (a)

    65

    (b)

    70

    (c)

    75

    (d)

    90

  27. எந்த செயற்குறியில் ஒரே ஒரு செயலேற்பின் மதிப்பு 1 என இருக்கும் 1 என்ற விடையை தரும் 

    (a)

    ^

    (b)

    !

    (c)

    &

    (d)

    ||

  28. உள்ளீடு வெளியீடு செயல்பாடுகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமெனில் எந்த தலைப்பு கோப்பை பயன்படுத்த வேண்டும்? 

    (a)

    1 stream

    (b)

    0 stream

    (c)

    como 

    (d)

    iostream 

  29. எந்த ஆண்டில் இனக்குழுவுடன் சி என்பது C++ மாற்றப்பட்டது?

    (a)

    1979

    (b)

    1984

    (c)

    1983

    (d)

    1980

  30. UTF-ன் விரிவாக்கம் தருக.

    (a)

    Uniform Transformation File

    (b)

    Unicode Transformation Format 

    (c)

    Unicode Transfer File

    (d)

    Uniform Transfer Format

  31. பின்வருவனவற்றுள் எது நுழைவு சோதிப்பு மடக்கு?

    (a)

    for 

    (b)

    while 

    (c)

    do ...while 

    (d)

    if...else 

  32. அனைத்து நிரலாக்க மொழிகளும் பின்வருவனவற்றுள் எதனை கொண்டுள்ளது?
    (i) வரிசைமுறை கூற்று 
    (ii) தேர்ந்தெடுப்புக் கூற்று 
    (iii) மடக்கு கூற்று 

    (a)

    (i) மட்டும் 

    (b)

    (ii) மட்டும் 

    (c)

    (i) மற்றும் (ii)

    (d)

    i, ii மற்றும் iii 

  33. பின்வரும் எந்த குறியுடன் வரிசைமுறை கூற்று முற்றுப்பெறும்?

    (a)

    ;

    (b)

    //

    (c)

    #

  34. பின்வருவனவற்றுள் தீர்மானிப்புக் கூற்று எது?

    (a)

    for 

    (b)

    while 

    (c)

    do-while 

    (d)

    if 

  35. பின்வருவனவற்றுள் எந்த மடக்கு நுழைவு சோதனை மடக்காகும்?
    (i) for 
    (ii) while 
    (iii) do-while 

    (a)

    (i) மற்றும் (iii)

    (b)

    (ii) மற்றும் (iii)

    (c)

    (i) மற்றும் (ii) 

    (d)

    (ii) மற்றும் (iii) 

  36. இவற்றுள் எந்த செயற்கூறு  ஒரு மதிப்பை திருப்பி  அனுப்பி மற்றும் செயலுருபுகளை ஏற்காத செயற்கூறு  ஆகும்?      

    (a)

    x =display (int , int )

    (b)

    x  = display ()

    (c)

    y  = display (float )

    (d)

    display (int )

  37. C++-ல்  நிரல்ர்கள்  பய்னபடுத்தும்  செயற்கூறுகளின்  வகைகள் எத்தனை?     

    (a)

    4

    (b)

    5

    (c)

    3

    (d)

    2

  38. பிவரும் எந்த செயற்கூறு '\0' சரத்தின் நீள கணக்கீட்டில் எடுத்துகொள்ளாது?   

    (a)

    strlen()

    (b)

    strlur()

    (c)

    islength() 

    (d)

    length() 

  39. அழைப்பு செயற்கூறில் உள்ள மாறிகள்  எவ்வாறு அழைக்கப்படும்?  

    (a)

    மெய்யான அளபுருக்கள்     

    (b)

    முறையான அளபுருக்கள்     

    (c)

    main அளபுருக்கள்     

    (d)

    உள்ளமை அளபுருக்கள்     

  40. பின்வருவனவற்றுள் எது வரையெல்லை  கிடையாது?     

    (a)

    local வரையெல்லை 

    (b)

    file வரையெல்லை 

    (c)

    function வரையெல்லை 

    (d)

    inline வரையெல்லை 

  41. இவற்றுள் எது ஒரே தரவினத்தைச் சேர்ந்த மாறிகளின் திரட்டு மற்றும் அனைத்து உறுப்புகளையும் ஒரே பொதுப் பெயரால் குறிப்பிட இயலும்?

    (a)

    int

    (b)

    float

    (c)

    Array

    (d)

    class

  42. C++ மொழியின் அடிப்படை தொகுதிகளாக விளங்குவது எது?

    (a)

    மாறிகள்

    (b)

    மாறிலிகள்

    (c)

    அணிகள்

    (d)

    செயற்கூறுகள்

  43. ஒரே தரவினத்தைச் சார்ந்த மாறிகளின் திரட்டு என்பது

    (a)

    செயற்கூறு

    (b)

    செயற்குறி

    (c)

    பணிமிகுப்பு

    (d)

    அணி

  44. int n[5] என்பது n என்ற அணியின் எந்த உறுப்பைச் சுட்டும்?

    (a)

    5

    (b)

    0

    (c)

    6

    (d)

    -1

  45. ஓர் அணியில் ஒன்றிற்க்கு மேற்பட்ட மதிப்புகளை உள்ளீடு செய்ய வேண்டுமெனில் பின்வரும் எந்த கூற்றை பயன்படுத்தலாம்?

    (a)

    தேர்ந்தெடுப்பு கூற்று

    (b)

    மடக்கு கூற்று

    (c)

    வரிசைமுறை கூற்று

    (d)

    if-else அடுக்கு

  46. பின்வருவனவற்றுள் எந்த கருத்துரு ஒரு பொருளின் அவசியமான பண்புகளை உருவாக்கப்படும் பொருளுக்குள் மறைத்து வைக்கிறது? 

    (a)

    இனக்குழு 

    (b)

    உறை பொதியாக்கம் 

    (c)

    பல்லுருவாக்கம் 

    (d)

    அருவமாக்கம் 

  47. பின்வருவனவற்றுள் ஆற்றல் மிகு வழியில் மென்பொருள்களை உருவாக்குவதில் மிக முக்கியமானது என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது எது ?  
     

    (a)

    நடைமுறை நிரலாக்கம் 

    (b)

    கூறுநிலை நிரலாக்கம் 

    (c)

    பொருள் நோக்கு நிரலாக்கம் 

    (d)

    உரைபொதியாக்க நிரலாக்கம் 

  48. பொருள் நோக்கு நிரலாக்க வழிமுறை பின்வருவனவற்றுள் எவற்றை  ஊக்குவிக்கிறது?
    (i) கூறு நிலையாக்கம் 
    (ii) மென்பொருள் மறுபயனாக்கம் 

    (a)

    i- சரி, ii - தவறு 

    (b)

    i- தவறு , ii - தவறு 

    (c)

    i- சரி, ii - சரி  

    (d)

    i-தவறு , ii - சரி 

  49. பின்வருவனவற்றுள் அருவமாக்கத்தை செயல்படுத்துவது எது?

    (a)

    மரபுரிமம் 

    (b)

    உறைபொதியாக்கம் 

    (c)

    கூறுநிலையாக்கம் 

    (d)

    பல்லுருவாக்கம் 

  50. ஓர் இனக்குழுவுக்குள் அறிவிக்கப்படும் மாறிகளை தரவு உறுப்புகள் என குறிப்பிடுகின்றோம் செயல்கூறுகளை எவ்வாறு குறிப்பிடுகிறோம்.

    (a)

    தரவு செயற்கூறிகள் 

    (b)

    inline செயற்கூறிகள் 

    (c)

    உறுப்பு செயற்கூறிகள் 

    (d)

    பண்புக் கூறுகள் 

  51. இனக்குழுவின் உடற்பகுதி எத்தனை அணுகியல்பு வரையறுப்பிகளை கொண்டுள்ளது?

    (a)

    2

    (b)

    4

    (c)

    2+1

    (d)

    4+1

  52. இனக்குழுவின் எத்தனை உறுப்புகள் உள்ளன? 

    (a)

    2

    (b)

    4

    (c)

    3

    (d)

    4+1

  53. அணுகியல்பை குறிப்பிடும் குறியுரு  

    (a)

    ;

    (b)

    .

    (c)

    : :

  54. செயற்கூறுகளுக்குப் பொருளை அளபுருக்களாக எத்தனை விதங்களில் அனுப்பி வைக்க முடியும்? 

    (a)

    0

    (b)

    1

    (c)

    3

    (d)

    2

  55. Test T1, T2(T1), என்ற கூற்று எதனுடைய எடுத்துக்காட்டு?

    (a)

    நகல் ஆக்கி 

    (b)

    தானமைவு ஆக்கி 

    (c)

    அளபுருக்களை ஏற்கும் ஆக்கி 

    (d)

    உள்ளார்ந்த அழைப்பு ஆக்கி 

  56. பின்வருவனவற்றுள் எது பிழையான செயற்கூறு பணிமிகுப்பு முன்வடிவாகும்?

    (a)

    Void fun (int x);
    Void fun (char ch);

    (b)

    Void fun (int x);
    Void fun (int y);

    (c)

    Void fun (double d);
    Void fun (char ch);

    (d)

    Void fun (double d);
    Void fun (int y);

  57. பின்வருவனவற்றுள் எவற்றை செயற்கூறு பணிமிகப்பு C++ல் கருதிக் கொள்ளாது?

    (a)

    முன்னியல்பு செயலுருபுகள் 

    (b)

    திருப்பியனுப்பும் தரவினம் 

    (c)

    செயற்கூறு

    (d)

    அ மற்றும் ஆ

  58. பின்வருவனவற்றுள் எந்தச் செயற்குறி ஆனது பணிமிகப்பு செய்ய இயலாது?

    (a)

    : :

    (b)

    ? :

    (c)

    size of ( )

    (d)

    இவை அனைத்தும்

  59. தருவிக்கப்பட்ட ஓர் இனக்குழுவை அடிப்படையாக கொண்டு இன்னொரு தருவிக்கப்பட்ட இனக்குழுவை உருவாக்குவது 

    (a)

    பலவழி மரபுரிமம்

    (b)

    பலநிலை மரபுரிமம்

    (c)

    ஒருவழி மரபுரிமம்

    (d)

    இரட்டை மரபுரிமம்

  60. ஒரு தருவிக்கப்பட்ட இனக்குழுவின் பொருளை உருவாக்கும்போது, நிரல் பெயர்ப்பி, முதலில் பின்வருவனவற்றுள் எதை அழைக்கும்.

    (a)

    அடிப்படை இனக்குழுவின் அழிப்பி 

    (b)

    அடிப்படை இனக்குழுவின் உறுப்பு செயற்கூறுகள்

    (c)

    அடிப்படை இனக்குழுவின் ஆக்கி

    (d)

    அடிப்படை இனக்குழுவின் தரவு உறுப்பு

  61. பின்வருவனவற்றில் எது தலைகீழ் வரிசையில் இயக்கப்படும்?

    (a)

    ஆக்கிகள்

    (b)

    தரவு உறுப்பு

    (c)

    அழிப்பிகள்

    (d)

    உறுப்பு செயற்கூறுகள்

  62. பின்வருவனவற்றுள் எது நடப்பு பொருளின் நினைவக முகவரியை நிறுத்தி வைக்கிறது. 

    (a)

    size of ( )

    (b)

    this சுட்டு

    (c)

    சுட்டு

    (d)

    . சுட்டு

  63. மேலிடல் சிக்கலை தீர்க்க பின்வருவனவற்றுள் எக்குறியீடு பயன்படுகிறது?

    (a)

    .

    (b)

    ;

    (c)

    : :

    (d)

    this

  64. பின்வருவனவற்றுள் எவை அடிப்படை இனக்குழுவின் பண்புக்கூறுகளை தருவிக்கப்பட்ட இனக்குழுவின் உறுப்புகள் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும்.

    (a)

    private

    (b)

    protected

    (c)

    public

    (d)

    அ அல்லது இ 

  65. கீழ்கண்டவற்றுள்   எது பயனர் இணைய தளத்தைப் பார்வையிடுகிறது?

    (a)

    ஸ்பைவேர் 

    (b)

    குக்கிகள் 

    (c)

    வார்ம்ஸ் 

    (d)

    ட்ரோஜன் 

  66. பின்வரும் கூற்றில் எது தவறானது?
    (i) இணையத்தை பயன்படுத்தும் பயனர் உண்மையுள்ளவராக இருத்தல் கூடாது.
    (ii) மற்ற பயனருக்கு உள்ள தனி உரிமைக்கு உரிய மரியாதையை ஒவ்வொரு பயனரும் கொடுத்தல்.
    (iii) இணைய பயனர் அனைவரும் இணைய சட்டத்திற்கு கண்டிப்பாக கீழ்படிதல் வேண்டும்.
    (iv) பயனர் அங்கீகரிக்கப்படாதவர்களிடம் முக்கிய தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.     

    (a)

    (iv) மட்டும் 

    (b)

    (ii) மற்றும் (iii)

    (c)

    (i) மற்றும் (iv)

    (d)

    (i)  மட்டும் 

  67. ஹேக்கிங் கட்டுப்படுத்த எதை நடைமுறைப்படுத்த வேண்டும்.

    (a)

    சோதனைகள்

    (b)

    நச்சுநிரல் 

    (c)

    தீம்பொருள் 

    (d)

    இவை அனைத்தும் 

  68. பின்வருவனவற்றுள் எது மோசடி மற்றும் திருட்டிற்கு வழிவகுக்கும் அடையாளத் திருட்டு 

    (a)

    ஃபிஷிங்  

    (b)

    பார்மிங் 

    (c)

    அ மற்றும் ஆ 

    (d)

    தீம்பொருள் 

  69. பின்வருவனவற்றுள் எவை அடிக்கட்டி பார்வையிடும் தளமுகவரிகள் அதன் தற்காலிக சேமிப்பில் மேம்பட பதிலளிப்பு  நேரத்திற்கு வழிவகுக்கும்.  

    (a)

    ஃபயர்வால் 

    (b)

    வலைதளம் 

    (c)

    வலைபயனர் 

    (d)

    பிராக்ஸி வேவையகம் 

  70. குறியாக்கம் மற்றும் மறையாக்கம் ஆகிய இரண்டும் எதனைக் கொண்டு செய்யப்படுகிறது? 

    (a)

    தரவுகள் 

    (b)

    புளூடுத் 

    (c)

    குறியாக்கத்தை 

    (d)

    இவற்றில் ஏதும் இல்லை 

  71. எத்தனை சதவீதம் இணைய பயனாளிகள் ஆங்கிலத்தை காட்டிலும் தங்களது பகுதி மொழியானது எளிமையாகவும், புரிந்து கொள்ளவும் முடிகிறது என தெரிவித்துள்ளனர்.

    (a)

    68%

    (b)

    58%

    (c)

    75%

    (d)

    50%

  72. பின்வருவனவற்றுள் எவை தமிழில் தேடுவதற்கு வசதியாக, தமிழ் தட்டச்சு வசதியை வழங்குகின்றது?

    (a)

    பிங்

    (b)

    சபாரி

    (c)

    யாஹூ

    (d)

    கூகுள்

  73. பின்வருவனவற்றுள் எது தட்டச்சுமுறையில் வேலை செய்யும் தமிழ் விசைப் பலகை இடைமுக மென்பொருள் கிடையாது?

    (a)

    NHM Writer

    (b)

    e-கலப்பை

    (c)

    பொன்மடல்

    (d)

    லிப்பிகார்

  74. இந்திய மொழிகளை கையாளுவதற்காக வடிவமைக்கப்பட்ட குறியீட்டு முறை

    (a)

    TSCII 

    (b)

    ASCII

    (c)

    ISCII

    (d)

    இவை அனைத்தும்

  75. முதல் தமிழ் நிரலாக்க மொழி எது?

    (a)

    எழில்

    (b)

    குறள்

    (c)

    தமிழ்ப்பொறி

    (d)

    கம்பன்

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி அறிவியல் முக்கிய கூடுதல் 1 மதிப்பெண் தேர்வு ( 11th Standard Computer Science Public Exam March 2019 Important Creative One Mark Test )

Write your Comment