Important Question Part-II

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 03:10:00 Hrs
Total Marks : 200

    பகுதி  - I

    50 x 1 = 50
  1. கிளாடோகிராம் என்பது கீழ்க்கண்ட பண்புகளைக் கொண்டுள்ளது.    

    (a)

    உடற்செயலியல் மற்றும் உயிர்வேதியியல் 

    (b)

    பரிணாமப் பண்புகள் மற்றும் மரபுவழிப்  பண்புகள் 

    (c)

    பல்லுயிர் தன்மை மற்றும் இனத்தொடர்பு தொகுப்பமைவு 

    (d)

    மேற்குறிப்பிட்ட ஏதுமில்லை 

  2. மூலக்கூறு வகைப்பாட்டின் கருவியில் இது அடங்கியுள்ளது. 

    (a)

    டி.என்.ஏ & ஆர்.என்.ஏ         

    (b)

    மைட்டோகான்டிரியா மற்றும் எண்டோ பிளாசவலை     

    (c)

    செல்சுவர் மற்றும் பிளாஸ்மா புரோட்டின் 

    (d)

    மேற்கூறிய அனைத்தும் 

  3. யூகேரியா என்பது இதனை உள்ளடக்கியது ________ 

    (a)

    சையனோபாக்டீரியா

    (b)

    யூகேரியோட்டுகள்

    (c)

    மெத்தனோஜென்கள்

    (d)

    யூபாக்டீரியா

  4. குரோமிஸ்டா உலகம் இவ்வுலக வகைப்பாட்டில் காணப்படுகிறது.

    (a)

    மூவுலக வகைப்பாடு

    (b)

    ஐந்துலக வகைப்பாடு

    (c)

    ஆறுஉலக வகைப்பாடு

    (d)

    ஏழுஉலக வகைப்பாடு

  5. கிளோடோகிராம் என்னும் மன வரைபடத்தினை அறிமுகப்படுத்தியவர்

    (a)

    அரிஸ்டாட்டில் 

    (b)

    R.H. விட்டேக்கர் 

    (c)

    எர்ணஸ்ட் 

    (d)

    கரோலஸ் லின்னயஸ் 

  6. இவற்றுள் பொருத்தமற்ற இணையைத் தேர்ந்தெடு.  

    (a)

    மனிதர்கள் -யூரியோடெலிக்   

    (b)

    பறவைகள் -யூரியோடெலிக்   

    (c)

    பல்லிகள் -யூரிகோடெலிக்   

    (d)

    திமிங்கலம் - அம்மோனோடெலிக்   

  7. கீழ்க்கண்ட எத்தொகுதியில் முதிர் உயிர்கள் ஆரசமச்சீரமைப்பையும், லார்வாக்கள் இருபக்க சமச்சீரமைப்பையும் கொண்டுள்ளன?

    (a)

    மெல்லுடலிகள்

    (b)

    முட்தோலிகள்

    (c)

    கணுக்காலிகள்

    (d)

    வளைத்தசைப் புழுக்கள்

  8. முட்தோலிகள் வகுப்பைச் சார்ந்த விலங்குகளின் சமச்சீர் தன்மை யாது?

    (a)

    சமச்சீரற்ற தன்மை

    (b)

    ஆரச்சமச்சீர் தன்மை

    (c)

    ஐந்தாரச் சமச்சீர் தன்மை

    (d)

    இருபக்கச் சமச்சீர் தன்மை

  9. மெல்லுடலிகளில் நீரின் தரத்தை கண்டறிவதற்கு பயன்படும் உறுப்பு

    (a)

    உணர்நீட்சிகள்

    (b)

    ஆஸ்ஃபிரேடியம்

    (c)

    ராடுலா

    (d)

    மேன்டில்

  10. தொகுதி: எக்கினோடெர்மேட்டாவில் காணப்படும் ஆம்புலேக்ரல் மண்டலத்தின் பணி இதுவல்ல.

    (a)

    இடப்பெயர்ச்சிக்கு பயன்படுகிறது

    (b)

    கழிவு நீக்கத்தில் பங்குகொள்கிறது

    (c)

    உணவைப் பிடித்து கடத்துகிறது

    (d)

    சுவாசத்தில் பங்கு கொள்கிறது

  11. குறு இழை கொண்ட எபிதீலியம் காணப்படும் இடம் _______.

    (a)

    தோல்

    (b)

    செரிப்புபாதை

    (c)

    பித்தப்பை

    (d)

    மூச்சுக்குழல்

  12. திசுக்களுக்கிடையில் பொருட்கள் கசிவதைத் தடுக்கும் அமைப்பு _______.

    (a)

    இறுக்கமான சந்திப்புகள்

    (b)

    ஒட்டும் சந்திப்புகள்

    (c)

    இடைவெளி சந்திப்புகள்

    (d)

    மீள் தன்மை சந்திப்புகள்

  13. நாளமில்லா சுரப்பிகளுக்கு எடுத்துக்காட்டு

    (a)

    எண்ணெய் சுரக்கும் சுரப்பி

    (b)

    ஹார்மோன்களை சுரக்கும் சுரப்பி

    (c)

    நொதிகளை சுரக்கும் சுரப்பி

    (d)

    மெழுகினை சுரக்கும் சுரப்பி

  14. பொருத்துக

      எபிதீலியம்   பண்பு
    (அ) தூண்வடிவ எபிதீலியம் a கனசதுர வடிவ தூண் வடிவ ஓரடுக்கு செல்கள்
    (ஆ) எளிய எபிதீலியம் b வட்ட மற்றும் நீள்வட்ட உட்கருவை செல்லின் அடிப்பகுதியில் கொண்டுள்ளது
    (இ) இடைநிலை எபிதீலியம்  c ஓரடுக்கு செல்களால் ஆனது
    (ஈ) சுரப்பு எபிதீலியம் d இவ்வகை எபிதீலியம் நீட்சியடையவும் தளரவும் செய்து உறுப்புகளை பாதுகாக்கிறது.
    (a)
    b a d c
    (b)
    d b c a
    (c)
    a c b d
    (d)
    b c d a
  15. தவறான ஜோடியை கண்டுபிடி

    (a)

    எலும்பு - எரித்ரோசைட்

    (b)

    குருத்தெலும்பு - காண்ட்ரோசைட்

    (c)

    அடிபோஸ் - திசு

    (d)

    திரவ இணைப்புத் திசு - இரத்தம்

  16. லாம்பிட்டோ மாரிட்டீ மண்புழுவின் சிறப்புப்பகுதியான கிளைடெல்லம்  காணப்படுவது _______.

    (a)

    13 முதல் 14 வரை உள்ள கண்டங்களில் 

    (b)

    14 முதல் 17 வரை உள்ள கண்டங்களில் 

    (c)

    12 முதல் 13 வரை உள்ள கண்டங்களில் 

    (d)

    14 முதல் 16 வரை உள்ள கண்டங்களில் 

  17. ஆண் மற்றும் பெண் கரப்பான் பூச்சியில் எத்தனை வயிற்றுக் கண்டங்கள் காணப்படுகின்றன.

    (a)

    10,10

    (b)

    9,10

    (c)

    8,10

    (d)

    9,9

  18. மண்புழுவின் மூளை எனப்படுவது

    (a)

    தொண்டைமேல் நரம்பு செல்

    (b)

    தொண்டை கீழ் நரம்பு செல் திரள்கள்

    (c)

    தொண்டை சூழ் இணைப்பு நரம்புகள்

    (d)

    மைய நரம்பு மண்டலம்

  19. கரப்பான் பூச்சி தம் வாழ்க்கைச் சுழற்சியின் போது  _______ முறை தோலுரித்துக்கொள்கிறது 

    (a)

    3

    (b)

    8

    (c)

    10

    (d)

    13

  20. தவளையின் பார்வை வென்ட்ரிக்கிள்கள் காணப்படும் இடம்

    (a)

    கண்

    (b)

    முகுளம்

    (c)

    நடுமூளை

    (d)

    தண்டுவடம்

  21. கீழ் உள்ளனவற்றுள் பொருந்தாத இணை எது?

    (a)

    பிலிரூபின் மற்றும் பிலிவிரிடின்-சிறுகுடல் நீர்

    (b)

    ஸ்டார்ச்சை நீராற் பகுத்தல்-அமைலேஸ்கள்

    (c)

    கொழுப்பு செரித்தல்-லிபேஸ்கள்

    (d)

    உமிழ்நீர் சுரப்பி-பரோடிட்

  22. சரியான இணைகளை உருவாக்குக

    வரிசை –I வரிசை –II
    P) லிபேஸ் i) ஸ்டார்ச்
    Q)பெப்சின் ii) காசின்
    R) ரென்னின் iii) புரதம்
    S) டயலின் iv) லிபிட்
    (a)
    P Q R S
    iv  ii iii
    (b)
    P Q R S
    iii iv  ii i
    (c)
    P Q R S
    iv  iii ii i
    (d)
    P Q R S
    iii ii iv i
  23. பர்தோலினின் நாளம் இதனோடு தொடர்புடையது  

    (a)

    கல்லீரல் 

    (b)

    கணையம்

    (c)

    இரைப்பை

    (d)

    நாவடி உமிழ் நீர்ச் சுரப்பி

  24. கூற்று:கணையம் ஒரு கூட்டுச் சுரப்பியாகும். காரணம்: கணையத்தில் நாளமுள்ள சுரப்பி பகுதி நொதிகளையும் நாளமில்லா சுரப்பி  பகுதி ஹார்மோன்களையும் சுரக்கிறது. 

    (a)

    கூற்றும் சரி, காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

    (b)

    கூற்றும் சரி, காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை.

    (c)

    கூற்று சரி, காரணம் தவறு.

    (d)

    கூற்று மற்றும், காரணம் தவறு. 

  25. முன் சிறுகுடலில் காணப்படும் உணவின் அமில காரத்தன்மை

    (a)

    pH 1.5

    (b)

    pH 7.8

    (c)

    pH 5

    (d)

    pH 8.8

  26. நீண்ட ஆழ்ந்த மூச்சுக்குப்பின் சில வினாடிகள் நாம் காற்றை சுவாசிப்பதில்லை இதற்குக் காரணம்.

    (a)

    இரத்தத்தில் அதிக CO2 இருப்பதால் 

    (b)

    இரத்தத்தில் அதிக O2 இருப்பதால் 

    (c)

    இரத்தத்தில் குறைவான CO2 இருப்பதால் 

    (d)

    இரத்தத்தில் குறைவான O2 இருப்பதால் 

  27. சரியான இணையைப். தேர்ந்தெடு

    பகுதி - I பகுதி - II
    (P) மூச்சுக் காற்று அளவு i. 1000 முதல் 1100 மி.லி. வரை
    (Q) எஞ்சிய கொள்ளளவு ii. 500 மி.லி.
    (R) வெளிச்சுவாச
    சேமிப்புக் கொள்ளளவு
    iii.2500 முதல் 3000 மி.லி. வரை
    (S) உட்சுவாச சேமிப்புக்
    கொள்ளளவு
    iv.1100 முதல் 1200 மி.லி. வரை
    (a)
    P Q R S
    ii  iv i iii
    (b)
    P Q R S
    iii ii iv i
    (c)
    P Q R S
    ii iv iii i
    (d)
    P Q R S
    iii iv i ii
  28. மனிதனுடைய சுவாசமண்டலத்தின் கடத்தும் பாதையில் காணப்படாத பகுதி _________________

    (a)

    தொண்டை

    (b)

    மூச்சுக்குழல்

    (c)

    காற்று நுண்ணறை

    (d)

    மூச்சுக்கிளை நுண்குழல்

  29. குரல்வலைத்துளை இதனுள் திறக்கிறது.

    (a)

    குரல்வளை

    (b)

    தொண்டை

    (c)

    உணவுக்குழல்

    (d)

    மூச்சுக்குழல்

  30. கோப்பைச் செல்களின் பணி

    (a)

    நுண்கிருமிகளை வடிகட்டுவது

    (b)

    துத்துகளை வடிகட்டுவது

    (c)

    கோழையைச் சுரப்பது

    (d)

    வாயுபரிமாற்றத்தில் ஈடுபடுகிறது

  31. இரத்தம் உறைதலில் பங்கேற்காதது எது?

    (a)

    ஃபைப்ரின்

    (b)

    கால்சியம்

    (c)

    இரத்தத் தட்டுகள்

    (d)

    பிலிரூபின்

  32. இரத்த நுண்நாளங்களுள் இரத்த ஓட்டத்தின் வேகம் மிகவும் குறைவது ஏன்?

    (a)

    வலது வென்ட்ரிக்கிளை விடக் குறைந்தளவு இரத்த வெளியேற்றத்தைக் கொண்ட இடது வென்ட்ரிக்கிள் மூலம் சிஸ்டமிக் இரத்த நுண்நாளங்களுக்கு இரத்தம் அளிக்கப்படுவதால்.

    (b)

    இரத்த நுண்நாளங்கள் இதயத்தை விட்டுத் தள்ளியிருப்பதால் இரத்த ஓட்டம் மெதுவாக நடைபெறுகிறது

    (c)

    இரத்த நுண்நாளங்களின் மொத்தப் பரப்பு நுண்தமனிகளின் மொத்த பரப்பைவிடப் பெரியது

    (d)

    இரத்த நுண்நாளங்களின் சுவர், செல்களுக்குள் ஆக்ஸிஜனைப் பரிமாறும் அளவிற்கு மெல்லியதாக இல்லை.

    (e)

    இரத்த நுண் நாளங்களில் இரத்தத்தைச் செலுத்த இயலாத அளவுக்கு டயஸ்டோலிக் அழுத்தம் குறைவாக உள்ளது.

  33. யூரியா, கல்லீரலில் இதன் வளர்ச்சிதை மாற்றத்தினால் உருவாகிறது.

    (a)

    கார்போஹட்ரேட் 

    (b)

    அமினோ அமிலங்கள் 

    (c)

    தாதுப் பொருட்கள் 

    (d)

    கொழுப்பு அமிலங்கள் 

  34. கீழ்கண்ட அட்டவணையில் உள்ள இரத்த வெள்ளையணுக்களின் வகைகளை அதனுடைய செல்கள் அல்லது பண்புகளோடு பொறுத்துக.

      இரத்த வெள்ளையணுக்கள்  செயல்/பணிகள் 
    மோனோ சைட்டுகள்   a. வீக்கங்களின் காரணம் 
    II  பேசாஃபில்கள்  b பல்லுரு உட்கரு 
    III  ஈசினோஃபில்கள் c  கப்ஃபர் செல்கள் 
    IV   நியூட்ரோஃபில்கள் d ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது.
    (a)
    II  III   IV 
    a d c b
    (b)
    II  III   IV 
    b d a c
    (c)
    II  III   IV 
    d b c a
    (d)
    II  III   IV 
    c a d b
  35. இதயத்தைச் செல்களுக்கு இரத்தத்தை வழங்குவது எது?

    (a)

    பெருந்தமனி 

    (b)

    நுரையீரல் தமனி 

    (c)

    கரோனரி சிரை 

    (d)

    கரோனரி தமனி 

  36. கிராம் நேர் பாக்டீரியங்களைப் பற்றிய தவறான கூற்றைக் கண்டறிக

    (a)

    டெக்காயிக் அமிலம் காணப்படுவதில்லை

    (b)

    செல்சுவரில் அதிகளவு பெப்டிடோ  கிளைக்கான் உள்ளது.

    (c)

    செல்சுவர் ஓரடுக்கால் ஆனது.

    (d)

    லிப்போபாலிசாக்கராக்கரைட்கள் கொண்ட செல்சுவர்

  37. ஆர்க்கிபாக்டீரியம் எது?

    (a)

    அசட்டோபாக்டர்

    (b)

    எர்வினீயா

    (c)

    டிரிப்போனிமா

    (d)

    மெத்தனோ பாக்டீரியம்

  38. வைரஸின் உயிரற்ற பண்பினைக் கன்டுபிடி.   

    (a)

    உறுத்துணர்வு உள்ளவை 

    (b)

    படிகங்களாக்க முடியும் 

    (c)

    திடீர் மாற்றம் அடையும் திறன் 

    (d)

    உயிரினங்களில் நோயை உண்டாக்கும் திறன் 

  39. வைரஸின் எப்பாகம்,ஓம்புயிரி பாக்டிரீய செல்லின் செல் சுவருடன் ஃபாஜ்கள் ஒட்டிக்கொள்ள உதவுகின்றது?    

    (a)

    அடிதட்டு 

    (b)

    வால்நார்  

    (c)

    கழுத்துப்பட்டை 

    (d)

    புரத உறை 

  40. கிளைக்கோகேலிக்ஸ் எனப்படுவது பாக்டிரீயாவின்.  

    (a)

    செல் சுவர் 

    (b)

    வெளியுறை 

    (c)

    நுண்சிலும்பு 

    (d)

    ஃபிம்ரியெ    

  41. பீட் எனப்படும் எரிபொருள் இப்பாசிகளினால் உருவாக்கப்படுகிறது 

    (a)

    ஸ்பேக்னம் 

    (b)

    பிரையம் 

    (c)

    மார்கான்ஷியா  

    (d)

    ஃபியூனேரியா 

  42. வாஸ்குலத் தொகுப்புடைய பூவாத்தாவரங்கள் -எவை?

    (a)

    தாலோஃபைட்டா 

    (b)

    பிரையோஃபைட்டா

    (c)

    டெரிடோஃபைட்டா

    (d)

    ஸ்பெர்மெட்டோஃபைட்டா 

  43. மேக்னோலியோஃபைட்கள் என்பது _____ தாவரங்களாகும்.

    (a)

    மூடுவிதைத்தாவரங்களாகும்

    (b)

    பலகாய்ப்புத் தாவரங்களாகும்

    (c)

    திறந்த விதைத்தாவரங்களாகும்

    (d)

    ஒரு காய்ப்புத் தாவரங்கள்

  44. வேர்த்தூவிகள் ஒருவேரில் இப்பகுதியில் காணப்படுகிறது.

    (a)

    வளர்ச்சிக்குத்திசு மண்டலம்

    (b)

    நீட்சி மண்டலம்

    (c)

    செல்பகுப்பு நடைபெறும் பகுதி

    (d)

    முதிர்ச்சி மண்டலம்

  45. கீழ்கொடுக்கப்பட்டுள்ளவைகளில் இது புறத்தோன்றியாகும்.

    (a)

    முதன்மை வேர்கள் மற்றும் பக்கக்கிளைகள்

    (b)

    பக்கவேர்கள் மற்றும் இலைத்தொகுதி

    (c)

    பக்கக்கிளைகள் மற்றும் பக்க வேர்கள்

    (d)

    பக்கக்கிளைகள் மற்றும் இலைகள்

  46. இவ்வகை மஞ்சரியில் குட்டையான காம்புடைய மலர்கள் மஞ்சரித்தண்டின் நுனியிலும், நீள காம்புடைய மலர்கள் அடிப்பகுதியிலும் காணப்படுவதால், மலர்கள் யாவும் ஒரே மட்டத்தில் அல்லது குவிய வடிவில் காணப்படும்.

    (a)

    அம்பெல் 

    (b)

    காரிம்ப் 

    (c)

    ஸ்பாடிக்ஸ் 

    (d)

    பானிக்கிள் 

  47. வ.எண்  பகுதி I  பகுதி II 
    பொல்லினியம்  மகரந்தக் கம்பிகளும், மகரந்தப்பைகளும் முழுமையாக
    இணைந்து இருக்கும்.
    II  சிஞ்சினிசஷியஸ்  மகரந்தத்தூள்கள் ஒன்றாக இணைந்து ஒரே தொகுப்பாக
    காணப்படும்.
    III  சினான்ட்ரஸ்  மகரந்தத் தாள்களுடன் சூல் முடி இணைந்து உருவாகுவது. 
    IV  கைனோஸ் பீஜியம்  மகரந்தக் கம்பிகள் இணையாமல் தனித்தும், மகரந்தப் பைகள்
    இணைந்தும் காணப்படும்.
    (a)

    I. a, II.d, III.c, IV.b 

    (b)

    I. d, II.c, III.b, IV.a 

    (c)

    I. b, II.d, III.a, IV.c 

    (d)

    I. c, II.b, III.a, IV.d

  48. பெந்தாம் மற்றும் ஹீக்கர் வகைப்பாட்டில் துணை வகுப்பு அல்லி தனித்தவையின் கீழ் வகைப்படுத்தபட்டுள்ள வரிசை             

    (a)

    பூத்தளக் குழுமம்    

    (b)

    பூத்தட்டுக் குழுமம்     

    (c)

    கோப்பை வடிவ பூத்தளக் குழுமம்    

    (d)

    இவை அனைத்தும் 

  49. பேபேசி குடும்பத்தில் காணப்படும் தக்கைத் தாவரத்தின் தாவரவியல் பெயர் யாது?   

    (a)

    செஸ்பேனியா    

    (b)

    பொங்கேமியா   

    (c)

    ஆஸ்கினோமின் ஆஸ்பிரா       

    (d)

    டால்பெர்ஜியா   

  50. இத்தாவரத்தண்டின் தண்டு கிழங்கு மகப்பேரு வலியைத் தூண்ட பயன்படுகிறது      

    (a)

    கோல்சிக்கம்  லூட்டியம்  

    (b)

    குளோரியோஸா சூப்பர் பா     

    (c)

    ஸ் மைலாக்ஸ் கிளாப்ரா      

    (d)

    ஊர்ஜினியா இன்டிகா  

  51. பகுதி  - II

    34 x 2 = 68
  52. வகைப்பாட்டியலின் அறிவியல் படிநிலைகளாக அமைந்துள்ளவை எவை?

  53. எனைமா மற்றும் அனைமா என்றால் என்ன?

  54. கருவளர் நிலையில் உள்ள மூல உடற்குழியானது பின்னாளில் எவ்விதம் மாறுகிறது?

  55. முதிர் உயிரி டியூனிகேட்டுகளில் தக்க வைக்கப்பட்டுள்ள முதுகு நாணிகளின் பண்புகளைக்ளைக் குறிப்பிடுக.

  56. திசு அளவிலான உடலமைப்பு பரிணாமத்தில் எவ்வுயிரியில் தோன்றியது?

  57. டியூட்டிரோஸ்டோம்கள் என்பவை யாவை?

  58. இணைப்புத்திசுவின் பணிகள் யாவை?

  59. இணைப்புத்திசுவின் முக்கிய கூறுகள் யாவை?

  60. மண்புழுவை அடையாளம் காணப்பயன்படும் பண்புகள் எவை?

  61. ஆண் தவளை புணர்ச்சிக்காக எவ்வாறு பெண் தவளையைக் கவர்கின்றது?

  62. தவளையின் சிறுநீரகம் எவ்வகையை சார்ந்தது?

  63. கருமுட்டை கூடு என்பது யாது? இனப்பெருக்கத்தில் அதன் முக்கியத்துவம் யாது?

  64. செரிமான மண்டலத்தின்  அவசியம் யாது?

  65. வயிற்றுப்புண் என்பது யாது?

  66. உணவு விழுங்கப்படும் போது குரல் வளையை மூடும் சுவாச அமைப்பு எது?

  67. இரத்த சிவப்பணுக்களில் பைகார்பனேட் உற்பத்தியை ஊக்குவிக்கும் நொதியின் பெயரைக் கூறு.

  68. மனித சுவாச மண்டலத்தில் கடத்தும் பகுதி மற்றும் சுவாசப்பகுதி என்பது யாது?

  69. மூச்சுக்குழாயில் காணப்படும் குருத்தெலும்பு வளையத்தின் பணியாது?  

  70. உடலின் அனைத்துப் பகுதியிலிருந்து வரும் நீணநீர் நாளங்கள் இறுதியில் எந்த இரத்தக் குழாயோடு இணைகிறது?

  71. மயோஜெனிக் வகை இதயம் என்றால் என்ன?

  72. ஹோமியோமிரஸ் மற்றும் ஹெட்டிரோமிரஸ் லைக்கென்களை வேறுபடுத்து

  73. பயிர் சுழற்சி மற்றும் கலப்புப்பயிர் முறைகளில் உழவர்கள் லெகூம் வகை தாவரங்களைப் பயிரிடுவது ஏன்?

  74. மைக்கோவைரஸ்கள் அல்லது மைக்கோஃபாஜ்கள் என்பது யாது?         

  75. கேப்னோஃபிலிக் பாக்டீரியங்கள் என்பவை யாவை?    

  76. ப்ளெக்டோஸ்டீல் என்றால் என்ன? ஓர் எடுத்துக்காட்டு தருக.

  77. பிரையோஃபைட்களின் கருவுறுதலுக்கு நீர் அவசியம் என்ற கருத்தை ஏற்கிறாயா? உனது விடையை நியாயப்படுத்துக.

  78. எம்பிரியோஃபைட்டாவில் அடங்கிய பிரிவுகள் யாவை?

  79. டெரிடோஃபைட்டுகள் வாஸ்குலத் தொகுப்புடை பூவாத்தாவரங்கள் என அழைக்கக் காரணம்  யாது?

  80. ஒளிசார் பரவிலை அமைவு என்றால் என்ன?

  81. மேல்கீழ் வேறுபாடு இலைகள் என்பவை யாவை? எடுத்துக்காட்டு தருக.

  82. மேற்புற/தொங்கும் சூல் ஒட்டு முறை என்பது யாது? எடுத்துக்காட்டு தருக.

  83. அல்லி ஒட்டிய மகரந்தத்தாள்கள் என்றால் என்ன?

  84. உள்ளூர் , தாவர  விளக்கபட்டியல் என்பது யாது? 

  85. குர்திநீர்ச்சார் வகைப்பாடு அல்லது ஊநீர் வகைப்பாடு என்பது யாது?     

  86. பகுதி  - III

    18 x 3 = 54
  87. ஃபெலிடே குடும்பத்தின் ஐந்து முக்கியப் பண்புகளை எழுதுக.    

  88. மலட்டுத்தன்மையுடைய சேய்கள் எங்ஙனம் உருவாகின்றன?

  89. தற்போது வாழும் தாடைகளற்றளற்ற மீன்களிலிருந்து குருத்தெலும்பு மீன்களை வேறுபடுத்திக் காட்டும் பண்புகளை எழுதுக

  90. கண்டமாக்கம் என்றால் என்ன?

  91. அடிபோஸ் திசு என்பது யாது?

  92. மண்புழுவின் பெரிஸ்டோமியம் மற்றும் புரோஸ்டோமியத்தை வேறுபடுத்துக.

  93. மண்புழு செறிவூட்டப்பட்ட நீர் என்பது யாது?

  94. செரிமான நொதி்கள் தேவையின்போது  மட்டுமே சுரக்கின்றது. விவாதிக்கவும்

  95. உணவுப் பாதையில் காணப்படும் நான்கு அடுக்குகளையும் அதில் உள்ள திசுக்களையும் தொகுத்து எழுது.

  96. கடல் மட்டத்திற்கு மேல் அதிக உயரத்தில் நீண்டநாள் வாழ ஒருவரின் உடல் எவ்வாறு சரிசெய்துகொள்கிறது?

  97. பல்வேறு உயிரிகளில் காணப்படும் சுவாச உறுப்புகளை அட்டவணைப்படுத்து.

  98. இதய ஒலிகள் என்றால் என்ன? அவை எப்போது, மற்றும் எப்படி உண்டாக்கப்படுகின்றன?

  99. திறந்த வகை சுற்றோட்ட மண்டலம் என்பது யாது?

  100. கிராம் நேர் மற்றும் எதிர் வகை பாக்டீரியங்களின் செல்சுவர் அமைப்பை படம் வரைந்து பாகம் குறி.

  101. ஒற்றை இரட்டைமடியு உயிரி வாழ்க்கைச் சுழல் என்பது யாது?

  102. இலையின் முதன்மை பணிகள் யாவை?

  103. மஞ்சரி வெவ்வேறு இடத்திலிருந்து உருவாவதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?ஒரு தாவரத்தில் மஞ்சரி எங்குள்ளது?தண்டு நுனியிலோ அல்லது இலைக் கக்கத்திலா?

  104. DNA வரிக்குறியிடுதலின் முக்கியத்துவம் யாது?         

  105. பகுதி  - IV

    12 x 5 = 60
  106. ஐம்பெரும்பிரிவு வகைப்பாட்டினை விவாதி,அதன் நிறை,குறைகளைப் பற்றி குறிப்பு சேர்க்கவும்.    

  107. சுறாமீனை, பூனைமீனில் இருந்து நீ எவ்வாறு வேறுபடுத்துவாய்?

  108. சுரப்பு எபிதீலியத்தை வகைப்படுத்து

  109. கரப்பான் பூச்சியின் சுவாசமண்டலத்தை படத்துடன் விளக்குக.

  110. கல்லீரல் மற்றும் கணையத்தின் அமைப்பை படம் வரைந்து பாகம் குறி. 

  111. சுவாச மண்டல பாதிப்புகள் - கருத்து வரைபடம்.

  112. ABO இரத்த வகையை விளக்கு.

  113. T4 பாக்டீரியஃபாஜின் அமைப்பை விளக்குக.    

  114. பாசிகளில் பொதுப்பண்புகள் யாவை?

  115. தரைகீழ் தண்டின் உருமாற்றம் என்பது யாது? அதன் வகைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  116. தனிச் சதைக்கனி என்பது யாது? அதன் வகைகளை படத்துடன் விளக்கு.

  117. பாரம்பரிய வகைப்பாட்டிற்கும் நவீன பாரம்பரிய வகைப்பாட்டிற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை? 

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு உயிரியல் Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் (11th Standard Tamil Medium Book Back and Creative Biology  Important Question) 

Write your Comment