Important Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 03:10:00 Hrs
Total Marks : 200

    பகுதி  - I

    45 x 1 = 45
  1. சூடான அடர் கந்தக அமிலம் ஒரு மிதமான ஆக்சிஜனேற்றி, பின்வரும் வினைகளில் எது ஆக்ஸிஜனேற்றப் பண்பைக் குறிப்பிடவில்லை?

    (a)

    Cu+ 2H2SO4 → CuSO4 + SO2+2H2O

    (b)

    C+ 2H2SO4 → CO2+2SO2+2H2O

    (c)

    BaCl2 + H2SO4 → BaSO4+2HCl

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  2. கார்பன் -12 பொறுத்து பின்வருவனவற்றுள் எது உண்மையான கூற்று?

    (a)

    C -12 ன் ஒப்பு அணுநிறை 12 u

    (b)

    கார்பனின் அனைத்து சேர்மங்களிலும் அதன் ஆக்ஸிஜனேற்ற எண் +4

    (c)

    1 மோல் கார்பன் -12 ல் 6.022 × 1022 அணுக்கள் உள்ளன.

    (d)

    அனைத்தும்

  3. நிறையுள்ள, இடத்தை அடைத்துக்கொள்ளும் தன்மையுடைய அனைத்தும்

    (a)

    துகள்

    (b)

    அனு

    (c)

    பருப்பொருள்

    (d)

    அலை

  4. பின்வருவனவற்றில் தவறானது எது?

    (a)

    சோடியம் ஒரு பளப்பளப்பான அலோகம்

    (b)

    குளோரின் ஓர் எரிச்சலூட்டும் வாயு

    (c)

    சோடியம் குளோரைடு படிகத்தன்மையுடைய திண்மம்

    (d)

    மேற்கண்ட அனைத்தும் தவறு

  5. இடப்பெயர்ச்சி வினைகளின் வகைகள்

    (a)

    2

    (b)

    3

    (c)

    4

    (d)

    6

  6. d- எலக்ட்ரானுக்கான, ஆர்பிட்டால் கோண உந்த மதிப்பானது

    (a)

    \(\frac{\sqrt{2}h}{2\pi } \)

    (b)

    \(\frac{\sqrt{2}h}{2\pi } \)

    (c)

    \(\frac{\sqrt{2\times4 }h}{2\pi } \)

    (d)

    \(\frac{\sqrt{6}h}{2\pi } \)

  7. பின்வரும் குவாண்டம் எண்களின் தொகுப்பினைக் கருதுக

      n l m n
    (i) 3 0 0 +1/2
    (ii) 2 2 1 -1/2
    (iii) 4 3 -2 +1/2
    (iv) 1 0 -1 +1/2
    (v) 3 4 3 -1/2

    பின்வரும் எந்த குவாண்டம் எண்களின் தொகுப்பு சாத்தியமற்றது?

    (a)

    (i), (ii), (iii) மற்றும் (iv)

    (b)

    (ii), (iv) மற்றும் (v)

    (c)

    (i) மற்றும் (iii)

    (d)

    (ii), (iii) மற்றும் (iv)

  8. பின்வரும் நீல்ஸ்போரின் அணு மாதிரி கருதுகோள்கள் கவனி.
    I. எலக்ட்ரானின் ஆற்றல் வரையறுக்கப்பட்ட மதிப்புகளைப் பெற்றிருக்கும்.
    II. எலக்ட்ரான்கள் அணுக்கருவினைச் சுற்றி சில குறிப்பிட்ட ஆற்றலுடைய ஆர்பிட் எனும் வட்டப்பாதையில் மட்டும் சுற்றி வருகின்றன.
    III. ஒரு குறிப்பிட்ட வட்டப்பாதையில் சுற்றிவரும் எலக்ட்ரானின் கோண உந்த மதிப்பு ஆனது \(\frac {h }{4}\pi\)ன் முழு எண் மடங்காக இருக்கும்.
    IV. எலக்ட்ரானது ஒரு குறிப்பிட்ட நிலை வட்டப்பாதையில் சுற்றி வரும் வரையில் அதன் ஆற்றலை இழப்பதில்லை. இவற்றுள் தவறான கூற்று எது?

    (a)

    I

    (b)

    II

    (c)

    III

    (d)

    IV

  9. பின்வருவனவற்றை கவனி.
    I. எலக்ட்ரான் நுண்ணோக்கி
    II. குறைந்த ஆற்றல் எலக்ட்ரான் விளிம்பு வளைவு எலக்ட்ரான் அலைத்தன்மை உடையது என்ற கண்டுபிடிப்பானது, மேற்கண்ட எந்த சோதனை நுட்பங்களை உருவாக்க காரணமாக அமைந்தது?

    (a)

    I மட்டும் 

    (b)

    II மட்டும்

    (c)

    இரண்டும்

    (d)

    இரண்டும் இல்லை

  10. ஐகன் மதிப்புகள் என்று அழைக்கப்படுபவை

    (a)

    ஷ்ரோடிங்கர் அலைச் சமன்பாட்டின் தீர்வுகள்

    (b)

    தற்சுழற்சிக் குவாண்டம் எண் மதிப்புகள்

    (c)

    டி-பிராக்ளே சமன்பாட்டின் தீர்வுகள்

    (d)

    இவற்றுள் எதுவுமில்லை

  11. பின்வரும் வகைப்பாடுகளில் குறைவான எலக்ட்ரான் நாட்டத்திலிருந்து அதிகமான எலக்ட்ரான் நாட்டத்தினை குறிப்பிடும் வரிசை எது?

    (a)

    Al < O < C < Ca < F

    (b)

    Al < Ca < O < C < F

    (c)

    C < F < O < Al < Ca

    (d)

    Ca < Al < C < O < F

  12. கூற்று: கண்டுபிடிக்கப்பட்டுள்ள அனைத்து தனிமங்களுள் ஹீலியம் அதிக அயனியாக்கும் ஆற்றல் மதிப்பினை பெற்றுள்ளது.
    காரணம்: கண்டுபிடிக்கப்பட்டுள்ள அனைத்து தனிமங்களுள் ஹீலியம் அதிக எலக்ட்ரான் நாட்ட மதிப்பினை பெற்றுள்ளது.

    (a)

    கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரியானது, மேலும் காரணமானது கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்.

    (b)

    கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரியானது, ஆனால் காரணமானது கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.

    (c)

    கூற்று சரியானது ஆனால் காரணம் தவறானது

    (d)

    கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் தவறானது

  13. குறித்த இடைவெளியில் குறிப்பிட்ட பண்புகள் திரும்ப அமைவது

    (a)

    இயற்பியல் பண்புகள்

    (b)

    வேதிப்பண்புகள்

    (c)

    காந்தப்பண்புகள்

    (d)

    ஆவர்த்தன பண்புகள்

  14. ஆக்டினைடு தனிமங்கள் லாந்தனைடு தனிமங்களின் பண்புகளுடன் ஒத்துப்போகின்றன என்பதே சோதனை மூலம் நிரூபித்துக் காட்டியவர்

    (a)

    லவாய்சியர்

    (b)

    சீபார்க்

    (c)

    டாபரீனர்

    (d)

    டி-சான்கோர்டாய்ஸ்

  15. அணுக்கருக்களுக்கு இடைப்பட்ட தொலைவு ________ ஆய்வின் மூலம் கண்டறியப்படுகிறது.

    (a)

    மோஸ்வே ஆய்வு

    (b)

    X - கதிர் விளிம்பு விளைவு

    (c)

    தாம்சன் ஆய்வு

    (d)

    லவே ஆய்வு

  16. ஒரு மோல் அமிலம் கலந்த KMnO4யை நிறமிழக்கச் செய்யத் தேவைப்படும் H2O2ன் மோல்களின் எண்ணிக்கை

    (a)

    \(\frac {1}{2}\)

    (b)

    \(\frac {3}{2}\)

    (c)

    \(\frac {5}{2}\)

    (d)

    \(\frac {7}{2}\)

  17. H3PO2 + D2O → H2DPO2 + HDO என்ற வினையிலிருந்து ஹைப்போ பாஸ்பரஸ் அமிலம் ஒரு

    (a)

    முக்காரத்துவ அமிலம்

    (b)

    இருகாரத்துவ அமிலம்

    (c)

    ஒரு காரத்துவ அமிலம்

    (d)

    இவற்றுள் ஏதுமில்லை

  18. பின்வருவனற்றுள் கார உலோகங்களின்  ஆக்ஸிஜனேற்ற நிலை 

    (a)

    +2

    (b)

    0

    (c)

    +1

    (d)

    +3

  19. CH4 + H2O ⟶ CO + 3H2 ↑ என்ற வினையின் வெப்பநிலை எல்லை

    (a)

    600-7000C

    (b)

    700-8000C

    (c)

    800-9000C

    (d)

    900-10000C

  20. பின்வருவனவற்றை சரியான எலக்ட்ரானைக் கொண்டுள்ள ஹைட்ரைட் எது?

    (a)

    B2H6

    (b)

    NH3

    (c)

    H4O

    (d)

    SiH4

  21. பெரிலியத்தின் சூழலைப் பொருத்து , பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?

    (a)

    நைட்ரிக் அமிலம் இதை செயலற்றதாக்குகிறது

    (b)

    Be2C ஐ உருவாக்குகிறது

    (c)

    இதன் உப்புகள் அரிதாக நீராற்பகுக்கப்டுகின்றன.

    (d)

    இதன் ஹைட்ரைடு எலக்ட்ரான் குறைவுள்ளது,மற்றும் பலபடி அமைப்புடையது.

  22. CaC2 ஐ வளிமண்டல நைட்ரஜனுடன் சேர்த்து, மின்உலையில் வெப்பப்படுத்தும்போது கிடைக்கும் சேர்மம்.

    (a)

    Ca(CN)2

    (b)

    CaNCN

    (c)

    CaC2N2

    (d)

    CaNC2

  23. பின்வருவனவற்றுள் காரமண் உலோகம் எது?

    (a)

    சோடியம்

    (b)

    கால்சியம்

    (c)

    லித்தியம்

    (d)

    பொட்டாசியம்

  24. கீழ்க்கண்டவற்றுள் எது சலவை தூளின் வாய்பாடு?

    (a)

    CaCl2.H2O

    (b)

    CaOCl2.H2O

    (c)

    CaSO4.2H2O

    (d)

    CaSO4.\(\frac{1}{2}\)H2O

  25. பின்வரும் கூற்று மற்றும் காரணத்தை கவனித்து சரியான விடையைத் தேர்ந்தெடு.
    கூற்று (A) : ஏற்கனவே நிலைத்த எலக்ட்ரான் அமைப்பை அடைந்த அயனியிலிருந்து இரண்டாம் எலக்ட்ரானை நீக்குவது மிகக் கடினம்.
    காரணம் (R) : நேர்மின் அயனிகள் மந்த வாயுக்களைப் போன்ற நிலையான எலக்ட்ரான் அமைப்பைப் பெற்றுள்ளன.
    i) (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) ஆனது (A)க்கான சரியான விளக்கம் ஆகும்
    ii) (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) ஆனது (A) க்கான விளக்கம் அல்ல.
    iii) (A) மற்றும் (R) இரண்டும் தவறு
    iv) (A) சரி (R) ஆனால் தவறு

    (a)

    (i)

    (b)

    (ii)

    (c)

    (iii)

    (d)

    (iv)

  26. ஒரு சமவெப்ப அழுத்த நிலையில் CnH2n-2 என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட ஹைட்ரோகார்பன் போன்று ஹைட்ரஜன் வாயு 3\(\sqrt{3}\) மடங்கு விரவுதல் வீதம் கொண்டதெனில் 'n' ன் மதிப்பு என்ன?

    (a)

    8

    (b)

    4

    (c)

    3

    (d)

    1

  27. ஒரு கலனில் சம எண்ணிக்கையுள்ள ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் மோல்கள் ஒரு துளை வழியே வெளியேறுகின்றன.பாதியளவு ஹைட்ரஜன் வெளியேற தேவைப்படும் அதே நேரத்தில் விரவும் ஆக்சிஜனின் பின்ன அளவு 

    (a)

    3/8

    (b)

    1/2

    (c)

    1/8

    (d)

    1/4

  28. ஒரு வாயுவின் நிலைமாறு வெப்பநிலை என்பது 

    (a)

    ஒரு குறிப்பிட்ட வெப்பநிலைக்கு மேல் வாயுவானது திரவமாகும் 

    (b)

    ஒரு குறிப்பிட்ட வெப்பநிலைக்கு மேல் அழுத்தத்தை அதிகரிப்பதால் திரவமாக்க இயலாது  

    (c)

    குறிப்பிட்ட வெப்பநிலையில் திண்மமாகும் 

    (d)

    குறிப்பிட்ட வெப்பநிலையில் வாயுவின் கனஅளவு பூஜ்ஜியமாகும் 

  29. மாறா வெப்பநிலையில் 56கே நைட்ரஜன் மற்றும் 96கி ஆக்சிஜன் ஆகியவை உள்ள கலவையின் மொத அழுத்தம் 10 atm எனில் நைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் பகுதி அழுத்தங்கள் முறையே

    (a)

    4,6

    (b)

    8,2

    (c)

    6,4

    (d)

    2,8

  30. பின்வருவனவற்றை பொருத்துக.

    A 1 atm 1 6894.76 pa
    B 1 mm Hg 2 105 pa 
    C 1 bar 3 133.322 pa
    D 1 psi 4 101325 pa
    (a)
    A B C D
    1 2 3 4
    (b)
    A B C D
    2 3 4 1
    (c)
    A B C D
    3 4 2 1
    (d)
    A B C D
    4 3 2 4
  31. வெப்பம் மாறா செயல்முறையில் பின்வருவனவற்றுள் எது உண்மை?

    (a)

    q=w

    (b)

    q=0

    (c)

    ΔE=q

    (d)

    PΔV=0

  32. பின்வரும் அளவீடுகளில் பொருண்மைசாரா பண்பு

    (a)

    நிறை

    (b)

    கனஅளவு

    (c)

    என்தால்பி

    (d)

    நிறை/கனஅளவு

  33. எந்த சூழ்நிலையில் ஒரு அமைப்பின் செயல்முறை தன்னிச்சையானது? 

    (a)

    S=+Ve

    (b)

    S=-ve

    (c)

    H=+ve

    (d)

    T2>T1

  34. மாறாத வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் சூழலுடன் பரிமாற்றம் செய்யும் வெப்பத்தின் அளவு 

    (a)

    E

    (b)

    H

    (c)

    S

    (d)

    G

  35. எண்ணெய் மற்றும் நீர் அடங்கிய கலவை பின்வரும் எதற்கு உதாரணம்?

    (a)

    தனித்த அமைப்பு

    (b)

    மூடிய அமைப்பு

    (c)

    ஒருபடித்தான அமைப்பு

    (d)

    பலபடித்தான அமைப்பு

  36. N2(g) + O2(g) \(\overset { { K }_{ 1 } }{ \rightleftharpoons } \) 2NO(g)
    2NO(g)+O2(g)\(\overset { { K }_{ 2 } }{ \rightleftharpoons } \) 2NO2(g)
    மேற்கண்டுள்ள வினைகளின் சமநிலை 
    மாறிலிகளின் மதிப்புகள் முறையே K1 மற்றும்
    K2
    NO2(g)\({ \rightleftharpoons } \)1/2N2(g) + O2(g) என்ற வினையின் சமநிலை மாறிலி யாது?

    (a)

    \(\frac { 1 }{ \sqrt { { k }_{ 1 }{ K }_{ 2 } } } \)

    (b)

    (K1=K2)1/2

    (c)

    \(\frac { 1 }{ 2{ K }_{ 1 }{ K }_{ 2 } } \)

    (d)

    \({ \left( \frac { 1 }{ { K }_{ 1 }{ K }_{ 2 } } \right) }^{ 3/2 }\)

  37. Fe (OH)3 (s) ⇌ Fe3+(aq) + 3OH(aq), என்ற வினையில் OH- அயனியின் செறிவு ¼ மடங்காக குறைந்தால், Fe3+ன் சமநிலைச் செறிவானது

    (a)

    மாறாது

    (b)

    ¼ மடங்காக அதுவும் குறையும்

    (c)

    4 மடங்காக அதிகரிக்கும்

    (d)

    64 மடங்காக அதிகரிக்கும்

  38. வாயு கரைசல் சமநிலையினை விளக்குவதற்கு பயன்படும் விதி

    (a)

    வான்ட ஹாப் விதி 

    (b)

    லீ - சாட்லியர் விதி  

    (c)

    ஹென்றி  விதி 

    (d)

    ஜூல் தாம்சன் விதி 

  39. வாயு-கரைசல் சமநிலையினை விளக்குவதற்கு பயன்படுவது

    (a)

    நிறைத்தாக்க விதி

    (b)

    ஹென்றி விதி

    (c)

    லீ - சாட்லியர் தத்துவம்

    (d)

    ஹேபர் விதி

  40. Q ன் மதிப்பை உடன் Kc ஒப்பிட்டு வினையின் திசையை தீர்மானிப்பதில் சரியானதைத் தேர்ந்தெடு.

    (a)

    Q = Kc எனில் வினை சமநிலையில் உள்ளது

    (b)

    Q > Kc எனில் விளைபொருள் உருவாகிறது

    (c)

    Q < Kc எனில் வினைபடு பொருள் உருவாகிறது

    (d)

    இவை அனைத்தும் சரி

  41. பின்வருவனவற்றுள் எது எலக்ட்ரான் பற்றாக்குறைச் சேர்மம்?

    (a)

    PH3

    (b)

    (CH3)2

    (c)

    BH3

    (d)

    NH3

  42. பின்வருவனவற்றிலிருந்து தவறான கூற்றை தேர்ந்தெடு

    (a)

    Spஇனக்கலப்பு ஆர்பிட்டால்கள் சமமானவை மேலும்அவை ஒன்றுக்கொன்று 1090 28' கோணத்தில்அமைந்துள்ளன.

    (b)

    dsp2 இனக்கலப்பு ஆர்பிட்டால்கள் சமமானவை மேலும் அவற்றில் எந்த இரண்டுக்கும் இடையே உள்ள கோணம் 900

    (c)

    ஐந்து sp3d இனக்கலப்பு ஆர்பிட்டால்களும் சமமற்றவை. இந்த ஐந்து sp3d இனக்கலப்பு ஆர்பிட்டால்களில், மூன்று 1200,கோணத்திலும், மீதமுள்ள இரண்டு
    ஆர்பிட்டால்கள் மற்ற மூன்று ஆர்பிட்டால்கள் அமைந்துள்ள தளத்திற்கு செங்குத்தாகவும் அமைந்துள்ளன.

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  43. AB2L மூலக்கூறின் வடிவம் (VSEPR கொள்கை அடிப்படையில்)

    (a)

    நேர்கோடு

    (b)

    வளைந்த V வடிவம்

    (c)

    தளமுக்கோணம்

    (d)

    நான்முகி

  44. ஒரு மூலக்கூறில் உள்ள இரு அணுக்களுக்கு இடையேயான பிணைப்புகளின் எண்ணிக்கை

    (a)

    பிணைப்பு நீளம்

    (b)

    பிணைப்புக் கோணம்

    (c)

    பிணைப்புத் தரம்

    (d)

    இவற்றுள் எதுவுமில்லை

  45. கூற்று (A) : நீர் மூலக்கூறு 'V' வடிவத்தைப் பெற்றுள்ளது. ஆனால் CO2 நேர்க்கோட்டு வடிவமைப்பைப் பெற்றுள்ளது.
    காரணம் (R): வேதிப்பிணைப்பினைப் பற்றிய கொள்கையை ப் பயன்படுத்தி இவற்றை விளக்க இயலும்

    (a)

    (A) சரி, (R) சரி. (A) ஆனது (R) க்கு சரியான விளக்கம்

    (b)

    (A) சரி, (A) ஆனது (R) க்கு சரியான விளக்கம் அல்ல

    (c)

    (A) சரி, (R) தவறு

    (d)

    (A) தவறு (R) தவறு

  46. பகுதி  - II

    36 x 2 = 72
  47. ஒப்பு அணு நிறை வரையறு

  48. சமான நிறை வரையறு

  49. எளிய விகித வாய்ப்பாடு வரையறு.

  50. இணையும் வினைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  51. பின்வரும் d5 எலக்ட்ரான் அமைப்புகளைக் கருதுக.

    (i) இவற்றுள் சிறும ஆற்றல் நிலையை குறிப்பிடுவது எது?
    (ii) அதிகபட்ச பரிமாற்ற ஆற்றலைப் பெற்றுள்ள அமைப்பு எது?

  52. ஆர்பிட்டால் வரையறு. 3px மற்றும் 4\(d_{x^{2}-y ^{2} }\) ஆர்பிட்டாலில் உள்ள எலக்ட்ரானுக்கு n மற்றும் l மதிப்புகளைக் கூறுக

  53. எலக்ட்ரான் நுண்ணோக்கி உருவாக்குவதற்கு காரணமாக அமைந்தது எது?

  54. கோண உந்தக் குவாண்டம் எண் பெறும் மதிப்புகள் யாவை?

  55. ஐசோ எலக்ட்ரானிக் அயனிகள் என்றால் என்ன? உதாரணங்கள் கொடு.

  56. லாந்தனைடுகள் மற்றும் ஆக்டினைடுகளின் பொதுவான எலக்ட்ரான் அமைப்பினை தருக.

  57. ஹைட்ரஜனை விட லித்தியத்தின் அயனியாக்கும் ஆற்றல் குறைவாக க் காணப்படுகிறது. உன் விடைக்கான காரணத்தை நியாயப்படுத்துக.

  58. X, Y, Z மற்றும் A தனிமங்களின் அணு எண்கள் முறையே 4,8,7 மற்றும் 12 ஆகும். இவற்றை எலக்ட்ரான் கவர்தன்மையின் வரிசையில் இறங்கு வரிசைப்படுத்துக.

  59. மூன்று வகையான சகப்பிணைப்பு ஹைட்ரைடுகளைக் குறிப்பிடுக.

  60. HCl மற்றும் NaH ஆகியனவற்றுள் எந்த ஹைட்ரைடு திடப்பொருள் மீதான வாயு. உனது விடைக்கான காரணத்தினைக் கூறு.

  61. கனநீரை மின்னாற் பகுத்தவை விளக்குக.

  62. ஹைட்ரஜன் பற்றி சிறு குறிப்பு வரைக.

  63. ஒரு கார உலோகம் (X) அதன் நீரேற்றிய சல்பேட் X2SO4.10H2O ஐ உருவாக்குகிறது.அந்த உலோகம் சோடியமாகவோ அல்லது பொட்டாசியமாகவோ இருக்க வாய்ப்புள்ளதா?

  64. பாரீஸ் சாந்து எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

  65. பெரிலியத்தின் முரண்பட்ட பண்பிற்கு காரணம் என்ன?உன் பதிலை விளக்குக.

  66. சோடியத்தின் ஆனா ஈத்தைனின் வினையைத் தருக.

  67. ஒரு வாயுவின் கன அளவு மற்றும் மோல்களை தொடர்புபடுத்தும் கணிதமுறை வாய்ப்பாட்டினை தருக

  68. விரவுதல் மற்றும் பாய்தல் வேறுபாடு தருக.

  69. ஜூல் தாம்சன் விளைவை எழுதுக. 

  70. எந்த வெப்பநிலைக்கு மேல் ஒரு துளை வழியே வாயுவினை விரிவடையச் செய்யும் போது வெப்பமாகிறது?

  71. வெப்ப இயக்கவியலின் முதல் விதியை கூறு.

  72. கிப்ஸ் கட்டிலா ஆற்றலை வரையறு 

  73. பின்வருவனவற்றிற்கு நடைமுறைக்குறியீடுகளை எழுதுக.
    1.அமைப்பினால் வெப்பமானது உறிஞ்சப்பிடும் போது 
    2.அமைப்பிலிருந்து வெப்பமானது வெளியேறும் போது 
    3.அமைப்பினால் வேலை செய்யப்படும் போது 
    4.அமைப்பின் மீது வேலை செய்யப்படும் போது 

  74. கீழ்க்காணும் அமைப்புகளுக்கு என்ட்ரோபி மாற்றம் எவ்வாறு குறிக்கப்படுகிறது?
    1.வெப்பநிலை மாறா மற்றும் அழுத்தம் மாறா செயல்முறை 
    2.வெப்பநிலை மாறா மற்றும் கனஅளவு மாறா செயல்முறை 

  75. கீழ்கண்டுள்ள வினைகளைக் கருதுக
    a) H2(g) + I2(g) ⇌ 2 HI
    b) CaCO3 (s) ⇌ CaO (s) + CO2(g)
    c) S(s) + 3F2 (g) ⇌ SF6 (g)
    மேற்குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு வினைகளிலும், பெறப்படும் வினைவிளை பொருளின் அளவினை அதிகரிக்க கன அளவினை அதிகரிக்க அல்லது குறைக்க வேண்டுமா என்பதைக் கண்டுபிடி.

  76. 3H2(g) + N2(g) ⇌ 2NH3(g) என்ற வினையின் சமநிலை மாறிலி KP மற்றும் Kக்கான பொதுவான சமன்பாட்டினை வருவி.

  77. வினைவேகம் ∝ [வினைபடுபொருள்]x என்பது எவ்விதிக்கான சமன்பாடு?

  78. NH3, N2 மற்றும் H2 ஆகியனவற்றின் சமநிலைச் செறிவுகள் முறையே 1.8 x 10-2M, 1.2 x 10-2 M மற்றும் 3 x 10-2M. N2 மற்றும் H2 விலிருந்து NH3 உருவாகும் வினைக்கு சமநிலை மாறிலியின் மதிப்பினைக் காண்க.

  79. பின்வருவனவற்றை வரையறு
    i) பிணைப்புத்தரம் ii) இனக்கலப்பு iii) σ- பிணைப்பு

  80. CH4, NH3 மற்றும் H2O, ஆகியவற்றிலுள்ளமைய அணுக்கள் sp3 இனக்கலப்பிற்கு உட்பட்டுள்ளன. எனினும் அவற்றின் பிணைப்புக் கோணங்கள் வெவ்வேறாக உள்ளன. ஏன்?

  81. சகபிணைப்பு எவ்வாறு உருவாகிறது?

  82. எட்டு எலக்ட்ரான் விதிக்கான விதி விலக்குகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

  83. பகுதி  - III

    16 x 3 = 48
  84. 32 g மீத்தேன் எரிக்கப்படும் போது உருவாகும் நீரின் அளவினைக் கணக்கிடுக

  85. புள்ளியில் காணப்படும் ஒரு அமிலம் பகுப்பாய்வில் பின்வரும் சதவீத இயைபினைக் கொண்டுள்ளது. 32% கார்பன் 4% ஹைட்ரஜன் 64% ஆக்சிஜன். அச்சேர்மத்தின் எளிய விகித வாய்ப்பாட்டினைக் கண்டறிக.

  86. ஹைட்ரஜன் அணுவின் போர் வட்டப்பாதையின் சுற்றளவானது, அணுக்கருவினைச் சுற்றி வரும் எலக்ட்ரானுக்கான டிபிராக்ளி அலைநீளத்தின் முழு எண் மடங்கிற்குச் சமம் எனக் காட்டுக.

  87. 66.26x10-28 kgms-1 உந்தத்தை உடைய துகள் ஒன்றின் டி - பிராக்ளி அலைநீளத்தை கணக்கிடு.

  88. Z = 118 ஐக் கொண்ட தனிமம், எந்த வரிசை மற்றும் தொகுதியில் இடம் பெற்றுள்ளது?

  89. (n-1) d2, ns2 (இங்கு n =5) என்ற எலக்ட்ரான் அமைப்பினை நிறைவு செய்யும் தனிமம் தனிமைவரிசை அட்டவணையில் பெற்றுள்ள இடத்தினைக் கண்டறிக.

  90. பாரா ஹைட்ரஜனை, ஆர்த்தோ ஹைட்ரஜனாக எவ்வாறு மாற்றலாம்?

  91. பின்வருவற்றிற்கு முறையான பெயர்களைத் தருக
    (i) மெக்னீசிய பால்மம்
    (ii) கடுங்காரம்
    (iii) சுண்ணாம்பு
    (iv) எரி பொட்டாஷ்
    (v) சலவை சோடா
    (vi) சோடா சாம்பல்
    (vii) ட்ரோனா(trona)

  92. கார உலோக ஹாலைடுகள் அனைத்தும் அயனிப்படிகங்களாகும். எனினும் லித்தியம் அயோடைடு சகப்பிணைப்புப் பணப்பை காட்டுகிறது.

  93. ஏரி ஒன்றில் ஒரு சிறிய குமிழி 60 மற்றும் 4atm உள்ள அடிப்புறத்தில் இருந்து 250சி மற்றும் 1atm உள்ள மேற்பரப்பிற்கு வருகின்றது அதன் ஆரம்ப கனஅளவு 1.5ml எனில் இறுதி கனளவினை கண்டறிக.

  94. மலையேறுபவர் ஒருவரின் காதுகளில் சிறு வலி உரைப்பது ஏன்? 

  95. 33k வெப்பநிலையில் ஐம்பது சதவீதம் N2O4 சிதைகிறது எனில் அந்த வெப்பநிலையில், 1 atm அழுத்தத்தில் ஏற்படும் திட்டகட்டிலா ஆற்றல் மாற்றத்தை கணக்கீடுக.

  96. பின்வருவனவற்றிற்கு \(\triangle \)குறியீடுகளை 
    1. மீளாத தன்னிச்சையான செயல் 
    2. சமநிலையில் உள்ள மீள் செயல்முறை 
    3. துன்னிச்சையற்ற செயல் 

  97. ஒரு மூடிய ஒரு லிட்டர் கலனில், ஒரு மோல் PCl5 வெப்பப்படுத்தப்படுகிறது. சமநிலையில் 0.6 மோல் குளோரின் இருந்தால் சமநிலைமாறிலி மதிப்பினைகணக்கிடுக.

  98. சமநிலையின் மீது வினைவேக மாற்றியின் விளைவை  எழுதுக. 

  99. pH4+ ன் பிணைப்புக் கோணமானது pH3 பிணைப்புக் கோணத்தைக் காட்டிலும் அதிகம்? ஏன்?

  100. பகுதி  - IV

    9 x 5 = 45
  101. 273 K மற்றும் 1 atm அழுத்தத்தில், 11.2 L லிட்டர் HCl ஐ உருவாக்கத் தேவையான குளோரினின் கன அளவைக் கண்டறிக.

  102. 4f2 என்ற குறியீடு உணர்த்தும் பொருள் யாது? இதில் உள்ள எலக்ட்ரான்களுக்கு, நான்கு குவாண்டம் எண்களின் மதிப்புகளையும் எழுதுக.

  103. எலக்ட்ரான் நாட்டத்தை பாதிக்கும் காரணிகளை விவரித்து எழுதுக.

  104. ஹைட்ரஜன் பிணைப்பு என்றால் என்ன? மூலக்கூறுக்கு இடைப்பட்ட மற்றும் மூலக்கூறினுள் நிகழும் ஹைட்ரஜன் பிணைப்பை விளக்குக.  

  105. பெரிலியத்தின் தனித்துவனமான பண்புகளை அத்தொகுதியில் உள்ள தனிமங்களின் பண்புகளுடன் ஒப்பிடுக.

  106. குளிர்சாதனப் பெட்டிகளில் குளிர்விப்பானாக பயன்படுத்தப்படும் ஃபிரியான்-12 சேர்மமானது ஓசோன் படலம் சிதைவடைய காரணமாக அமைகிறது. தற்போது அதற்கு மாற்றாக சூழலுக்கு ஏற்ற சேர்மங்கள் பயன்படுத்தப்படுகிறது. 0.3 atm அழுத்தம் மற்றும் 1.5 dm3 கன அளவு உடைய ஃபிரியான் வாயு மாதிரியினைக் கருதுக. மாறாத வெப்பநிலையில், அழுத்தமானது 1.2 atm க்கு மாற்றப்படும் போது அதிகரிக்கும் அல்லது குறையும் கனஅளவைக் கணக்கிடுக.

  107. 298k வெப்பநிலையில் ஆக்ஸ்ஜனை ஓசோனாக மாறும் 3/2 O\(\rightarrow O_{3(g)}\)வினைக்கு \(\triangle G^0 \) காண்க , திட்டஅழுத்த அலகுகளில் இவ்வினையின் KP மதிப்பு 2.47X 10-29 

  108. 423K  வெப்பநிலையில் 1dm3 கலனில் 1 மோல் PC15 எடுத்துக்கொள்ளப்பட்டது சமநிலை அடைய அனுமதிக்கப்படுகிறது. வினைக்கலவையின் சமநிலைச் செறிவுகளைக் காண்க. (PC15 சிதைவடையும் வினைக்கும் 423K  ல் KC ன் மதிப்பு 2]
     

  109. நைட்ரிக் அமிலத்திற்கான லூயிஸ் வடிவமைப்பை படிநிலைகளுடன் விளக்குக.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு வேதியியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் ( 11th Standard Tamil Medium Chemistry All Chapter Important Question ) 

Write your Comment