Class 11 One Marks Interior Question

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 60

    மிகவும் சரியான விடையை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் சேர்த்து எழுதவும் :

    60 x 1 = 60
  1. கீழ் கண்டவற்றில் எது சரியான கூற்று அல்ல?

    (a)

    சமநிலையில் உள்ள ஒரு அமைப் பிற்கு Qவின் மதிப்பு எப்போதும் சமநிலை மாறிலியை விடகுறைவாக இருக்கும்.

    (b)

    இரு பக்கத்திலிருந்தும் சமநிலையினை அடையலாம்.

    (c)

    வினையூக்கியானது முன்னோக்கு மற்றும் பின்னோக்கு வினைகளை சம அளவில்
    பாதிக்கும்.

    (d)

    வெப்ப நிலையினை பொருத்து சமநிலை மாறிலி மதிப்புகள் மாறுபடும்.

  2. ஒரு வேதிச் சமநிலையில், முன்னோக்கு வினையின் வினைவேக மாறிலி 2.5\(\times\)10மற்றும் சமநிலை மாறிலி 50 எனில் பின்னோக்கு வினையின் வினைவேக மாறிலி

    (a)

    11.5

    (b)

    5

    (c)

    \(\times \) 102

    (d)

    \(\times \) 10-3

  3. பின்வருவன்வற்றுள் எது/எவை இயற் சமநிலை செயல்முறைகளின் பொதுவானபண்பு அல்ல?

    (a)

    ஒரு கொடுக்கப்பட்ட வெப்பநிலையில், சமநிலையானது, ஒரு மூடிய அமைப்பில் மட்டுமே சாத்தியம்.

    (b)

    எதிர்-எதிர் செய்முறைகள் ஒரேவேகத்தில் நடைபெறும் மேலும் இங்கு, நிலையான ஆனால் இயங்கு நிலை இருக்கும்.

    (c)

    அனைத்து இயற் செயல்முறைகளும் சமநிலையில் நடைபெறாமல் நின்றுவிடும். 

    (d)

    அமைப்பின் அனைத்து அளவிடப்படும் பண்புகளும் மாறாமலிருக்கும்.

  4. 400K வெப்பநிலையில் 20லிட்டர் கலனில் 0.4atm அழுத்தமுடைய CO(g) மற்றும் அதிகளவு SrOஉள்ளது (திண்ம SrO ன்
    கனஅளவை புறக்கணிக்க). கலனில் பொருத்தப்பட்டுள்ள உந்து தண்டினை தற்போது நகர்த்தி கலனின் கன அளவு 
    குறைக்கப்படுகிறது. CO2 ன் அழுத்தமானது அதிகபட்ச அளவினை அடையும் போது, கலனின் அதிகபட்ச கனஅளவின் மதிப்பு யாது  கொடுக்கப்பட்டவை:
    SrCO3 (s) ⇌ SrO (s) + CO2 (g)
    KP = 1.6 atm

    (a)

    2 லிட்டர்

    (b)

    5 லிட்டர்

    (c)

    10 லிட்டர்

    (d)

    4 லிட்டர்

  5. பின்வரும் சமன்பாட்டை கவனி:
    \(i){ H }_{ 2 }(g)+{ I }_{ 2 }(g)\rightleftharpoons 2HI(g)\\ (ii){ CH }_{ 3 }COOCH_{ 3(aq) }+H_{ 2 }O_{ (aq) }\rightleftharpoons CH_{ 3 }OH_{ (aq) }\\ (ii)CaCO_{ 3 }(s)\rightleftharpoons CaO(s)+CO_{ 2 }(g)\)
    இவற்றில் மாறுபட்டது எது?

    (a)

    (i) மட்டும் 

    (b)

    (ii) மட்டும் 

    (c)

    (iii) மட்டும் 

    (d)

    (i) (ii) மட்டும் 

  6. சமநிலை மாறிலிக்கான சமன்பாடு எழுதும் போது _____ கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை 

    (a)

    சாதாரண திரவங்களின் செறிவு 

    (b)

    தூய  திரவங்களின் செறிவு 

    (c)

    கரைசல்  செறிவு 

    (d)

    இவற்றில் எதுமில்லை 

  7. \({ K }_{ C }<{ 10 }^{ 3 }\) என்பது 

    (a)

    பின்னோக்கிய வினைக்கு சாதகம் 

    (b)

    முன்னோக்கிய (அ) பின்னோக்கிய வினையே விஞ்சியிருப்பதில்லை

    (c)

    முன்னோக்கிய வினைக்கு சாதகம் 

    (d)

    இவற்றில் எதுமில்லை 

  8. ஒரு மூலக்கூறின் பிணைப்புத்தரம் 2.5 மற்றும் அதன் மூலக்கூறு ஆர்பிட்டாலிலுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 8 என கண்டறியப்பட்டுள்ளது எனில், எதிர்பிணைப்பு மூலக்கூறு ஆர்பிட்டாலிலுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை

    (a)

    மூன்று

    (b)

    நான்கு

    (c)

    பூஜ்ஜியம்

    (d)

    கொடுக்கப்பட்ட தகவல்களிலிருந்து கண்டறிய முடியாது

  9. இரண்டு அயனிகள் NO3- மற்றும் H3O+ ஆகியவற்றின் சில பண்புகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் எந்த ஒன்று சரியானது

    (a)

    வெவ்வேறு வடிவங்களுடன், மைய அணுவின் இனக்கலப்பிலும் வேறுபடுகின்றன

    (b)

    ஒத்தவடிவங்களுடன், மைய அணுவின் இனக்கலப்பிலும் ஒத்துள்ளன.

    (c)

    ஒத்தவடிவங்களுடன், மைய அணுவின் இனக்கலப்பில் வேறுபடுகின்றன.

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  10. மீத்தேன், ஈத்தேன், ஈத்தீன் மற்றும் ஈத்தைன் ஆகியவற்றில் உள்ள இனக்கலப்பு ஆர்பிட்டால்களின் s- பண்பு சதவீதங்கள் முறையே

    (a)

    25, 25,33.3,50

    (b)

    50,50,33.3,25

    (c)

    50,25,33.3,50

    (d)

    50,25,25,50

  11. VSEPR கொள்கைப்படி, வெவ்வேறு வகை எலக்ட்ரான்களுக்கு இடைப்பட்ட விலக்கம் _____ வரிசையில் அமைகிறது.

    (a)

    l.p – l.p > b.p–b.p> l.p–b.p

    (b)

    b.p–b.p> b.p–l.p> l.p–b.p

    (c)

    l.p–l.p> b.p–l.p > b.p–b.p

    (d)

    b.p–b.p> l.p–l.p> b.p–l.p

  12. பின்வருவனவற்றுள், அயனி, சகப்பிணைப்பு மற்றும் ஈதல் சகப்பிணைப்பு இணைப்புகளை கொண்டுள்ள சேர்மம். 

    (a)

    NH4Cl

    (b)

    NH3

    (c)

    NaCl

    (d)

    இவற்றில் ஏதுமில்லை

  13. பின்வருவனவற்றுள் எது கார்பனின் சரியான லூயிஸ் அமைப்பு?

    (a)

    \(\overset { .. }{ \underset { .. }{ C } } \)

    (b)

    \(:\overset { . }{ \underset { . }{ C } } \)

    (c)

    \({ .\overset { . }{ \underset { . }{ C } } { . } }\)

    (d)

    \({ .\overset { . }{ C } { : } }\)

  14. AgCl3, MgCl2 மற்றும் NaCl அயனிச் சேர்மங்களின் சகப்பிணைப்புத் தன்மை வரிசை

    (a)

    NaCl > MgCl2 > AlCl3

    (b)

    AlCl3 < MgCl2 < NaCl

    (c)

    NaCl < MgCl2 < AlCl3

    (d)

    AlCl3 > MgCl2 < NaCl

  15. பின்வருவனவற்றுள் எது அமோனியாவை குறிக்கும் லூயிஸ் வடிவமைப்பு?

    (a)

    (b)

    (c)

    (d)

  16. CH3–CH=CH–C≡CHஎன்ற சேர்ம த்தின் IUPAC பெயர் is

    (a)

    பென்ட் - 4 - ஐன் -2-ஈன்

    (b)

    பென்ட் -3-ஈன் -1-ஐன்

    (c)

    பென்ட் – 2– ஈன் – 4 – ஐன்

    (d)

    பென்ட் – 1 – ஐன் –3 –ஈன்

  17. பின்வருவனவற்றுள் எதில் வினைச்செயல் தொகுதி மாற்றியம் காணப்படுகிறது?

    (a)

    எத்திலீன்

    (b)

    புரோப்பேன்

    (c)

    எத்தனால்

    (d)

    CH2Cl2

  18. 0.15g எடையுள்ள கரிமச்சேர்மம் , காரியஸ்முறையில் 0.12g சில்வர் புரோமைடை தருகிறது எனில் அச்சேர்மத்தில் உள்ள புரோமினின் சதவீதம்.

    (a)

    46%

    (b)

    34%

    (c)

    3.4%

    (d)

    4.6%

  19. கொதி நிலையில் சிதைவடையும் நீர்மத்தை தூய்மையாக்கும் முறை

    (a)

    வளி அழுத்தத்தில் வாலை வடிந்தல்

    (b)

    குறைந்த அழுத்தத்தில் வாலை வடித்தல்

    (c)

    பின்னவாலை வடித்தல்

    (d)

    நீராவி வாலை வடித்தல்

  20. சோடியம் நைட்ரோபுருசைடு, சல்பைடு அயனியுடன் வினைப்பட்டு ஊதா நிறத்தை தோற்றுவிப்பதற்கான காரணம்.

    (a)

    [Fe(CN)5 NO]3-

    (b)

    [Fe(NO)5 CN]+

    (c)

    [Fe(CN)5NOS]4-

    (d)

    [Fe (CN)5 NOS]3-

  21. கச்சா எண்ணெயிலிருந்து பகுதிப்பொருட்களை பிரிக்க பயன்படும் முறை

    (a)

    நீராவி வாலை வடித்தல்

    (b)

    பின்ன வாலை வடித்தல்

    (c)

    கொதிநிலை மாறா வாலை வடித்தல்

    (d)

    வகையீட்டு வடித்து இறக்குதல்

  22. பல்வேறுபட்ட கரிமச் சேர்மங்கள் நிலைத் தன்மையுடன் இருக்கக் காரணம்?

    (a)

    கார்பன் சங்கிலிதொடர்

    (b)

    குறைந்த கொதிநிலை

    (c)

    பலபடியாக்கல்

    (d)

    மாற்றியங்கள் உருவாதல் 

  23. 40 K வெப்பநிலைக்கு மேல் கொதிநிலையில் வேறுபாடு கொண்ட மாசுக்களை எவ்வகையில் தூய்மைப்படுத்தலாம்?

    (a)

    பதிகமாக்கல்

    (b)

    எளிய காய்ச்சி வடித்தல்

    (c)

    பின்னப் படிக்கமாக்கல்

    (d)

    பதங்கமாதல்

  24. கருக்கவர் திறனின் இறங்கு வரிசை

    (a)

    OH- > NH2- > -OCH3 > RNH2

    (b)

    NH2- > OH- > -OCH3 > RNH2

    (c)

    NH2- > CH3O- > OH- > RNH2

    (d)

    CH3O- > NH2- > OH- > RNH2

  25. ஒரு சகப்பிணைப்பின் சீரான ஒரே மாதிரியான பிளவினால் உருவாவது

    (a)

    எலக்ட்ரான் கவர் பொருள்

    (b)

    கருக்கவர் பொருள்

    (c)

    கார்பன் நேர் அயனி

    (d)

    தனி உறுப்பு

  26. பின்வருவனவற்றுள் அதிக நிலைப்புத் தன்மையைப் பெற்றுள்ள கார்பன் நேரயனி எது?

    (a)

    Ph3C-+

    (b)

    CH3-CH2-

    (c)

    (CH3)2-CH

    (d)

    CH2= CH - CH2

  27. கார்பன் நேர் அயனியில், நேர்மின்சுமை கொண்ட கார்பனின் இகைகலப் பாதல் 

    (a)

    SP2

    (b)

    SP3

    (c)

    SP3 d

    (d)

    இவற்றுள் எதுவுமில்லை

  28. பின்வருவனவற்றுள் எது பங்கிடப்படாத எலக்ட்ரான் இரட்டையினைப் பெற்றுள்ள நடுநிலை மூலக்கூறு? 

    (a)

    CO2

    (b)

    CCI2

    (c)

    H2O

    (d)

    BF3

  29. C2H5 Br + 2Na C4H10 + 2NaBr மேற்கண்டுள்ள வினை பின்வரும் எவ்வினைக்கான எடுத்துக்காட்டாகும்?

    (a)

    ரீமர் - டீமன் வினை

    (b)

    உர்ட்ஸ் வினை

    (c)

    ஆல்டா ல் குறுக்க வினை

    (d)

    ஹா ஃப்மென் வினை

  30. (A) என்ற ஆல்கைல் புரோமை டு ஈதரில் உள்ள சோடியத்துடன் வினை புரிந்து 4,5 - டை எத்தில் ஆக்டேனை த் தருகின்றது (A) என்ற சேர்மமானது.

    (a)

    CH3(CH2)3Br

    (b)

    CH3(CH2)5 Br

    (c)

    CH3(CH2)3 CH(Br)CH3

    (d)

    \({ CH }_{ 3 }-\left( { CH }_{ 2 } \right) _{ 2 }-CH(Br)\underset { \overset { | }{ { CH }_{ 3 } } }{ - } { CH }_{ 2 }\)

  31. பின்வரும் சேர்மத்தின் IUPAC பெயர் 

    (a)

    டிரான்ஸ் -2- குளோரோ  -3- அயடோ -2- பென்டீன்

    (b)

    சிஸ் -3- அயடோ -4- குளோரோ   -3- பென்டேன்

    (c)

    டிரான்ஸ் -3- அயடோ -4- குளோரோ   -3- பென்டீன்

    (d)

    சிஸ் -2- குளோரோ   3- அயடோ -2- பென் டீன்

  32. பின்வருவனவற்றுள் ஃப்ரீடல் - கிராப்ட் வினையில் ஹேலைடு  பகுதிப் பொருளாக பயன்படுவது எது?

    (a)

    குளோரோ பென்சீன்

    (b)

    புரோமோ  பென்சீன்

    (c)

    குளோரோ  ஈத்தேன்

    (d)

    ஐசோ  புரப்பைல் குளோரோடு  

  33. சோடியம் புரபியோனேட்டை கார்பாக்சில் நீக்க வினைக்கு உட்படுத்தி ஒரு ஆல்கேன் தயாரிக்கப்படுகிறது. அதே ஆல்கேனை பின்வரும் எம்முறையினைப் பயன்படுத்தி தயாரிக்கலாம்?

    (a)

    வினையூக்கி முன்னிலையில் புரப்பீனின் ஹைட்ரஜனேற்றம்

    (b)

    அயடோ  மீத்தேனுடன் உலோக  கசோடியத்தின் வினை

    (c)

    1- குளோரோ புரப்பேன் ஒடுக்கம்

    (d)

    புரோமோ மீத்தேனின் ஒடுக்கம்

  34. 2 – பியூட்டைனின் குளோரி னேற்றத்தால் பெறப்படுவது

    (a)

    1- குளோரோ பியூட்டேன்

    (b)

    1,2 - டைகுளோரோ பியூட்டேன்

    (c)

    1.1.2.2 - டெட்ரா  குளோரோ பியூட்டேன்

    (d)

    2.2.3.3 - டெட்ரா  குளோரோ பியூட்டேன்

  35. பென் சீனை முதலில் பிரித்தெடுத்தவர்      

    (a)

    ஹக்கல்   

    (b)

    பாரடே   

    (c)

    ஹாப்மன்   

    (d)

    கேகுலே   

  36. அரோமேடிக்  தன்மைக்கான புதிய தேற்றத்தை புகுத்தியவர்       

    (a)

    பாரடே   

    (b)

    ஹக்கல்    

    (c)

    ஹாப்மன்    

    (d)

    கேகுலே   

  37. பென்சீனை நைட்ரோ ஏற்றம் செய்யும்போது அடர் H2SO4 ஜ சேர்ப்பதால் வெளிப்படுவது        

    (a)

    NO2  

    (b)

    \({ NO }_{ 2 }^{ - }\)

    (c)

    \({ NO }_{ 2 }^{ + }\)

    (d)

    \({ NO }_{ 3 }^{ - }\)

  38. ஆல்கைல் பதிலீடு செய்யப்பட்ட பென்சீன்கள் தயாரிப்பதற்கான வினை         

    (a)

    டெள வினை  

    (b)

    ஃப்ரீடல் கிராப்வினை     

    (c)

    ஸ்டாக் வினை   

    (d)

    கோலிப் வினை  

  39. பின்வருவனவற்றுள் எது பென்சீனின் வடிவம்?

    (a)

    (b)

    (c)

    (d)

    இவை அனைத்தும்

  40. ன் IUPAC பெயர்

    (a)

    2-புரோமோ பென்ட் – 3 – ஈன்

    (b)

    4-புரோமோ பென்ட் – 2 – ஈன்

    (c)

    2-புரோமோ பென்ட்– 4 – ஈன்

    (d)

    4-புரோமோ பென்ட்– 1 – ஈன்

  41. Cl அணுவின் இட அமைவினைப் பொருத்து CH3– CH = CH – CH2 – Cl, சேர்மமானது பின்வருமாறு வகைப்படுத்தப்படுகிறது

    (a)

    வினைல்

    (b)

    அல்லைல்

    (c)

    ஈரிணைய

    (d)

    அர்அல்கைல்

  42. குளோரோஃபார்ம் நைட்ரிக் அமிலத்துடன் வினைபுரிந்து தருவது

    (a)

    நைட்ரோ டொலுவின்

    (b)

    நைட்ரோ கிளிசரின்

    (c)

    குளோரோ பிக்ரின்

    (d)

    குளோரோ பிக்ரிக் அமிலம்

  43. சில்வர் புரப்பியோனேட்டை கார்பன் டெட்ரா குளோரைடில் உள்ள புரோமினுடன் வினைப்படுத்த பெறப்படுவது

    (a)

    புரப்பியோனிக் அமிலம்

    (b)

    குளோரோ ஈத்தேன்

    (c)

    புரோமோ ஈத்தேன்

    (d)

    குளோரோ புரப்பேன்

  44. HCI உடன் வினைபுரிய, ஆல்கஹால் மற்றும் எச்சேர்மத்திற்கு ZnCI2 தேவையில்லை 

    (a)

    \({ CH }_{ 3 }{ CH }_{ 2 }OH\)

    (b)

    \({ CH }_{ 3 }{ CH }_{ 2 }{ CH }_{ 2 }OH\)

    (c)

    \({ CH }_{ 3 }-\underset { \overset { | }{ { CH }_{ 3 } } }{ CH } -OH\)

    (d)

    \(C({ CH }_{ 3 }{ ) }_{ 3 })-OH\)

  45. ஹேலோ ஆல்கேன்கள் நீர்த்த பொட்டாசியம் ஹைட்ராக்சைடுடன் வினைபுரிந்து தருவது   

    (a)

    அல்கேன் 

    (b)

    ஆல்கீன் 

    (c)

    ஆல்கைன் 

    (d)

    ஆல்கஹால் 

  46. அதிக அளவு ஹேலோ ஆல்கேன்களை அமோனியாவுடன் வினைப்பட்டு தருவது 

    (a)

    ஈரிணைய அமீன்  

    (b)

    மூவிணையா அமீன் 

    (c)

    நான்கிணைய அம்மோனியா உப்பு 

    (d)

    இவை அனைத்தும் 

  47. குளோரோபிக்ரின் தயாரிப்பதற்கு, நைட்ரிக் அமிலம் ______ உடன் சேர்க்கப்படுகிறது.  

    (a)

    குளோரோஃபார்ம்  

    (b)

    கார்பன் டெட்ரா குளோரைடு 

    (c)

    குளோரின் 

    (d)

    இவை அனைத்தும் 

  48. மழைநீரின் pH மதிப்பு

    (a)

    6.5

    (b)

    7.5

    (c)

    5.6

    (d)

    4.6

  49. பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி , கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் சரியானதை தேர்ந்தெடு.

    பட்டியல் I பட்டியல் II
    ஓசோன் படல சிதைவு  1 CO2
    B அமிலமழை 2 NO 
    C ஒளி வேதிப் பனிப்புகை 3 SO2
    D பசுமைக்குடில் விளைவு 4 CFC
    (a)
    A B C D
    3 4 1 2
    (b)
    A B C D
    2 1 4 3
    (c)
    A B C D
    4 3 2 1
    (d)
    A B C D
    2 4 1 3
  50. கூற்று (A): அடிவெளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் முக்கிய பங்காற்றுகிறது.
    காரணம் (R): அடிவெளிமண்டமானது அனைத்து உயிரியல் செயல்பாடுகளுக்கும் பொறுப்பாவதில்லை

    (a)

    (b)

     ii

    (c)

    iii

    (d)

    iv  

  51. குடிநீரில் காணப்படும் எதன் குறைவால் பற்சிதைவு தோன்றுகிறது ? 

    (a)

    குளோரைடு 

    (b)

    புளூரைடு 

    (c)

    கால்சியம் 

    (d)

    மெக்னீசியம் 

  52. குடிநீரில் புளூரைடு அயனிச் செறிவு எவ்வளவு இருந்தால் பற்களில் பழுப்பு நிறப்புள்ளிகள் தோன்றும்? 

    (a)

    1 ppm  மேல் 

    (b)

    2 ppm மேல் 

    (c)

    3 ppm மேல் 

    (d)

    50 ppm மேல் 

  53. பின்வருவனவற்றை பொருத்துக.[குடிநீருக்கானது]

      பண்பியல்புகள்    விரும்பத்தக்க எல்லை 
    A . pH  1. 6.5 to 8.5
    நைட்ரேட்  2. 45 ppm 
    C. குளோரைடு  3. 250 ppm 
    D. சல்பேட்  4. 200 ppm 
    (a)
    A    B    C    D  
    1 2 3 4
    (b)
    A    B    C    D  
    1 3 4 2
    (c)
    A    B    C    D  
    1 4 3 2
    (d)
    A    B    C    D  
    1 2 4 3
  54. நல்லியல்புக் கரைசலுக்கு பின்வருவனவற்றுள் எந்த ஒன்று தவறானது

    (a)

    \(\triangle H \)கலத்தல் =0

    (b)

    \(\triangle U \)கலத்தல்=0

    (c)

    \(​​\triangle P \)கண்டறியப்பட்டது=Pபிரளல்ட் விதி கணக்கிடப்பட்டது=0

    (d)

    \(\triangle G \)கலத்தல் =0

  55. கொடுக்கப்பட்ட வெப்பநிலையில், நீரில் ஆக்ஸிஜன் கரைந்த கரைசலின் KH மதிப்பு 4 × 104 atm. காற்றில் ஆக்ஸிஜனின் பகுதி அழுத்தம் 0.4 atm, எனில், கரைசலில் ஆக்ஸிஜனின் மோல் பின்னம்

    (a)

    4.6 × 103

    (b)

    1.6 × 104

    (c)

    1 × 10–5 

    (d)

    1 × 105

  56. இரண்டு திரவங்கள் X மற்றும் Y ஆகியன கலக்கப்படும்போது வெதுவெதுப்பான கரைசலைத் தருகின்றன. அந்தக் கரைசலானது

    (a)

    நல்லியல்புக் கரைசல் 

    (b)

    நல்லியல்புக் கரைசல் மற்றும் ரெளல்ட் விதியிலிருந்து நேர்க்குறி விலக்கத்தை காட்டுகிறது.

    (c)

    நல்லியல்புக் கரைசல் மற்றும் ரெளல்ட் விதியிலிருந்து எதிர்குறி விலக்கத்தை காட்டுகிறது.

    (d)

    இயல்புக் கரைசல் மற்றும் ரெளல்ட் விதியிலிருந்து எதிர்குறி விலக்கத்தை காட்டுகிறது.

  57. 92 கிராம் டொலுயீனின், ஆவிஅழுத்தத்தை 90% க்கு குறைப்பதற்கு, அதில் கரைக்கத் தேவையான எளிதில் ஆவியாகாத கரைபொருளின் நிறை (மோலார் நிறை 80 g mol–1)

    (a)

    10g

    (b)

    20g

    (c)

    9.2 g 

    (d)

    8.89g

  58. பின்வரும் சமன்பாடுகளை கவனி:

    இவ்வாற்றுள் நார்மாலிட்டியை கண்டறியும் சமன்பாடு எது ?

    (a)

    I

    (b)

    II 

    (c)

    III 

    (d)

    IV 

  59. பின்வருவனவற்றுள் எது நேர் விலக்கம் காட்டும் இயல்பு கரைசலுக்கு எடுத்துக்காட்டு?

    (a)

    CCl4 & CHCl3

    (b)

    CH3COCH3 & CHCl3

    (c)

    CHCl3 & C2H5OC2H5

    (d)

    CHCl3 & C6H6

  60. செறிவு எல்லை முழுமைக்கும் ரௌலட் விதிக்கு உட்படாத கரைசல்கள் 

    (a)

    உண்மைக் கரைசல்கள் 

    (b)

    நல்லியல்புக் கரைசல்கள்

    (c)

    தெவிட்டிய கரைசல்கள் 

    (d)

    இயல்புக் கரைசல்கள்

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு வேதியியல் முக்கிய 1 மதிப்பெண் வினா விடை 2019 ( 11th Standard Chemistry Important 1 mark Questions )

Write your Comment