+1 Public Exam Model March 2019

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிப்பொறி இயல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70
    15 x 1 = 15
  1. முதல் தலைமுறை கணிப்பொறிகளில் பயன்படுத்தப்பட்ட பகுதிப்பொருள்

    (a)

    வெற்றிடக்குழுல்

    (b)

    திரிதடையகம்

    (c)

    ஒருங்கிணைந்தசுற்றுகள்

    (d)

    நுண்செயலிகள்

  2. கீழ்க்கண்டவற்றில் எது எண்ணிலை எண் அல்ல?

    (a)

    645

    (b)

    234

    (c)

    876

    (d)

    123

  3. CD யின் குறைந்த அளவிலான தரவின் அளவு யாது ?

    (a)

    தொகுதி

    (b)

    பகுதி

    (c)

    பிட்ஸ்

    (d)

    தடங்கள்

  4. லினக்ஸ் எந்த வகை கோப்பு மேலாண்மையை பயன்படுத்துகிறது

    (a)

    ext2

    (b)

    NTFS

    (c)

    FAT

    (d)

    NFTS

  5. Ubuntu OS-ல் பின்வரும் எந்த விருப்ப தேர்வு ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கும் சாதனங்களை காண்பிக்கும்?

    (a)

    Settings

    (b)

    Files

    (c)

    Dash

    (d)

    V Box_Gas_5.2.2

  6. பணிக்குத் தகுதியற்ற விவரங்களைத் தவிர்த்து, அவசியமானவற்றை மட்டுமே குறிக்கும் பணியின் அம்சங்கள் என அழைக்கப்படுவது எது?

    (a)

    விவரக்குறிப்பு

    (b)

    சாராம்சம்

    (c)

    ஒருங்கினைத்தல்

    (d)

    பிரித்தல்

  7. C1 என்பது பொய் மற்றும் C2 என்ப து மெய் எனில், இயக்கப்படும் கூட்டு கூற்று எது?
    1   if C1
    2         S1
    3   else
    4        if C2
    5            S2
    6       else
    7             S3

    (a)

    S1

    (b)

    S2

    (c)

    S3

    (d)

    இவற்றில் ஏதுமில்லை

  8. m x a + n x b என்பது a, b := a + 8, b + 7 என்ற மதிப்பிருத்தலின் மாற்றமிலி என்றால், m, n வின் மதிப்புகள்

    (a)

    m=8, n=7

    (b)

    m=7, n=8

    (c)

    m=7, n=-8

    (d)

    m=8, n=-7

  9. C++ என பெயர் சூட்டியவர் யார்?

    (a)

    ரிக் மாஸ்கிட்டி 

    (b)

    ரிக் பிஜர்னே 

    (c)

    பில் கேட்ஸ் 

    (d)

    டென்னிஸ் ரிட்சி

  10. பின்வருவனவற்றுள் உள்ளீடு செய்யப்பட்டுள்ள குறியுறு எழுத்தை சிறிய எழுத்தாக மாற்றும் செயற்கூறு எது?  

    (a)

    islower ()

    (b)

    lower ()

    (c)

    tolower ()

    (d)

    tolowercase ()

  11. இரு பரிமாண அணியை அறிவிப்பதற்காக சரியான தொடரியலை தேர்ந்தெடுக்கவும்?

    (a)

    dtatype [row size > ] [col size] arrayname;

    (b)

    dtatype arrayname [row size] [row size];

    (c)

    dtatype arrayname [col size] [rowsize];

    (d)

    dtatypearrayname [row size] [col-size];

  12. எது வெளிப்படைத்தன்மை கொண்ட தரவுகளை உடையது?

    (a)

    மரபுரிமம் 

    (b)

    உறை பொதியாக்கம்

    (c)

    பல்லுருவாக்கம் 

    (d)

    அருவமாக்கம் 

  13. பின்னலான இனக்குழுவை எத்தனை வழிகளில் உருவாக்கலாம்?

    (a)

    1

    (b)

    4

    (c)

    2

    (d)

    3

  14. பின்வருவனவற்றுள் எந்தச் செயற்குறி ஆனது பணிமிகப்பு செய்யப்படும்? 

    (a)

    ?:

    (b)

    : :

    (c)

    .

    (d)

    = =

  15. பின்வருவனவற்றுள் எது school என்ற அடிப்படை இனக்குழுவிலிருந்து 'student' என்ற இனக்குழுவை தருவிக்கும்? 

    (a)

    school : student

    (b)

    class student : public school

    (c)

    student : public school

    (d)

    class school : public student

  16. 6 x 2 = 12
  17. முதன்மை நினைவகம் மற்றும் இரண்டாம் நிலை நினைவகம் வேறுபாடு யாது?

  18. கீழேகொடுக்கப்பட்டுள்ளகூற்றுகள் சரியா, தவறா எனக் காண்க, தவறு எனில் அதற்கான காரணத்தை கூறுக.

  19. பல பயனர் இயக்க அமைப்பு என்றால் என்ன?

  20. பிரித்தல் (Decomposition) என்றால் என்ன?

  21. ஒரு நெறிமுறைக்கும், நிரலுக்கும் உள்ள வேறுபாடு என்ன ?

  22. மடக்கு என்றால் என்ன?

  23. strlen() செயற்கூறை பற்றி எழுதுக.

  24. கீழே உள்ள நிரலின் வெளியீட்டை எழுதுக.
    #include < iostream >
    using namespace std;
    int main()
    {
    int num[5]={10, 20, 30, 40, 50};
    int t=2
    cout << num[2] << endl;
    cout <<num[3+1] << endl;
    cout << num[t=t+1];
    }

  25. இனக்குழு உறுப்புகளை எவ்வாறு அணுகுவாய்?

  26. 6 x 3 = 18
  27. தட்டாஅச்சுப்பொறிகள்  பற்றி எழுதுக.

  28. எண் முறையில் அடிமானம் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

  29. நுண்செயலி மூன்று முக்கிய பகுதிகளை விளக்கு.

  30. நெறிமுறைகள் நான்கு முக்கியமான இடங்களில் யாவை?

  31. மெய் மாறிலிகளில் (real constants)  பின்வருவனவற்றை எழுதுக.
    (i) 15.223
    (ii) 211.05
    (iii) 0.00025

  32. return கூற்றின் பயனை எழுதுக. 

  33. பெயரற்ற கட்டுரு என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

  34. செயற்கூறுகளுக்குப் பொருளை அளபுருக்களாக எத்தனை விதங்களில் அனுப்பி வைக்க முடியும்?

  35. எப்பொழுது அடிப்படை ஆக்கிகள் தாமாகவே அழைக்கப்படும்?

  36. 5 x 5 =25
  37. கணிப்பொறியின் பல்வேறு தலைமுறைகளை விளக்குக.

  38. பரவல் இயக்க அமைப்பின் கருத்துரு பற்றி விளக்குக.

  39. ஒப்பந்தவிவரக் குறிப்பு (Specification as contract) பற்றி விவரி.

  40. விவசாயி, ஆடு, புல்லுக்கட்டு மற்றும் ஓநாய் ஆகிய இந்த நான்கின் நிலையை, நான்கு மாறிகளாகவும், அவைகள் இருக்கும் ஆற்றின் பக்கங்களை அந்த நான்கு மாறிகளுக்கான மதிப்புகளாக குறிப்பிடலாம். தொக்க நிலையில், அனைத்னைத்து நான்கு மாறிகளின் மதிப்பும் L (இடது பக்கம்) என்க. இறுதி நிலையில், இந்த நான்கு மாறிகளின் மதிப்பும் R (வலது பக்கம்) என மாற வேண்டும். இந்த செயல்முறையை (அதாவது, தொடக்க நிலையிருந்து, இறுதி நிலைக்கு மாறுதல்) செய்வதற்கு, S என்ற கூற்றை கட்டமை்டமைப்பது இதன் நோக்கமாகும்.

  41. மிகுப்பு மற்றும் குறைப்பு செயற்குறிகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  42. கீழ்க்காணும் எண் போன்றவற்றை கணக்கிடுவதற்கான நிரல்களை எழுதுக 
    a) \(x-{x^2\over 2!}+{x^3\over 3!}-{x^4\over 4!}+{x^5\over 5!}-{x^6\over 6!}\)
    b)\(x+{x^2\over 2}+{x^3\over 3}+....+{x^n\over n}\)

  43. தற்சுழற்சி முறையில் ஒரு எண்ணின் காரணியை கணிக்கும் C++ நிரலை எழுதுக.   

  44. பொருள் நோக்கு நிரலாக்கத்தின் நன்மைகள் மற்றும் தீமைகளை விரிவாக எழுதுக.

  45. செயற்குறி பணிமிகுப்பை பயன்படுத்தி சரங்களை இணைக்கும் C++ நிரலை எழுதுக.

  46. பின்வரும் C++ நிரல் குறிமுறைக் கொண்டு, கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளி.
    class Personal
    {
    int Class,Rno;
    char Section;
    protected:
    char Name[20];
    public:
    personal();
    void pentry();
    voidPdisplay();
    };
    class Marks:private Personal
    {
    float M{5};
    protected:
    char Grade[5];
    public:
    Marks();
    void M entry();
    void M display();
    };
    class Result:public Marks
    {
    float Total,Agg;
    public:
    char FinalGrade, Commence[20];
    Result();
    void R calculate();
    void R display();
    }:
    1. நிரல் குறிமுறையில் எந்த வகை மரபுரிமம் குறிப்பிடப்பட்டுள்ளது?
    2. அடிப்படை இனக்குழுக்களின் காண்புநிலை பாங்கினை குறிப்பிடுக.
    3. Result இனக்குழுவிற்கு பொருள் உருவாக்கப்படும்போது, ஆக்கி, அழிப்பி இயக்கப்படும் வரிசைமுறையை எழுதுக.
    4. அடிப்படை இனக்குழு(கள்) மற்றும் தருவிக்கப்பட்ட இனக்குழு(கள்) பெயர்களை குறிப்பிடுக.
    5. பின்வரும் இனக்குழுக்களின் பொருள் எத்தனை பைட்டுகள் எடுத்துக்கொள்ளும்?
    (a) Personal  (b) Marks (c) Result
    6. Result இனக்குழுவின் பொருளால் அணுகக்கூடிய தரவு உறுப்புகளின் பெயர்களை குறிப்பிடுக.
    7. Result இனக்குழுவின் பொருளால் அணுகக்கூடிய உறுப்பு செயற்கூறுகளின் பெயர்களை குறிப்பிடுக.
    8. Result இனக்குழுவின் உறுப்பு செயற்கூறுகள் அணுகக்கூடிய தரவு உறுப்புகளின் பெயர்களை குறிப்பிடுக. 

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு கணினி அறிவியல் மாதிரி பொது தேர்வு வினா விடை 2019 ( 11th Standard Computer Science Public Exam Model Question Paper 2019 )

Write your Comment